ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Thursday 29 May 2008

அவை அடக்கம் - நா அடக்கம்

அன்பர்களே !!

அவை அடக்கம் என்பது நமக்கெல்லாம் தெரியாத / தெரிந்த ஒன்று. தெரிந்திருப்பின் அதைக் கடைப்பிடிக்கிறோமா என்பது விடையில்லாத வினா.

அவையினிலே, அது அலுவலகமாய் இருக்கட்டும் - உறவின் கூட்டமாக இருக்கட்டும் அல்லது நட்பின் கூட்டமாக இருக்கட்டும் - அவையறிந்து பேச வேண்டும். மற்றவர்கள் மனங்கோணாமல் பேச வேண்டும். மனம் மட்டுமல்ல சற்றே முகம் சுளிக்கும் வண்ணம் கூடப் பேசக் கூடாது. இதைக் கடைப்பிடிப்பது ஒரு கலை. நட்பின் மத்தியிலே ஒரு நண்பனைக் கிண்டல் செய்யும் வண்ணம் - அவன் மனது புண்படுமா என்ற கவலை சிறிதேனுமின்றிப் பேசுவது தவறல்லவா. அவன் செய்த சிறு தவறைக்கூட மற்றவர்கள் முன்னிலையில் சுட்டிக்காட்டுவது நாகரிகமில்லை அல்லவா. எபோழுதும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது தனிப்பட்ட முறையில் இருப்பின் தவறுகள் வருந்தவும்/திருந்தவும் வாய்ப்புண்டு. அவையிலே சுட்டினால், அத்தவறு மேன்மேலும் வளரவும் வழியுண்டு.

குறாளாசான் கூறுவான்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

இக்குறள் அவை அடக்கத்திற்கும் பொருந்தும். எதை எங்கு பேசுவது எப்படிப்பேசுவது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு பாராட்டுக் கூட்டத்தில், பாராட்டப்படுபவனைப் பற்றி ஒரு பேச்சாளர் பேசும் போது, சிறு வயது முதலே அவனைப் பற்றி அறிந்தவராக, அதிக உரிமை உடையவராக எண்ணிக் கொண்டு, அவன் சிறு வயதில் செய்த தவறுகளைப் பெரிது படுத்திப் பேசுவது எவ்வளவு தவறான செயல் என்பதை எண்ணிப் பாருங்கள். அவன் மனது எவ்வளவு புண்படுமென்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா ?

நண்பர்களே ! காக்க வேண்டியவற்றில் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவை மட்டுமாவது அடக்கியாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நா காக்க !

அன்புடன் ..... சீனா

-------------------------

19 comments:

cheena (சீனா) said...

நா அடங்குமா ?

ராமலக்ஷ்மி said...

அவையிலே நா காக்க வேண்டியதின் அவசியத்தை அருமையாக உணர்த்தியிருக்கிறீர்கள் சீனா!

மெளலி (மதுரையம்பதி) said...

உண்மைதான்...பதிவு சிறிதாக இருந்தாக, சிறப்பான கருத்து சீனா சார்.

ஆயில்யன் said...

//அதிக உரிமை உடையவராக எண்ணிக் கொண்டு, அவன் சிறு வயதில் செய்த தவறுகளைப் பெரிது படுத்திப் பேசுவது எவ்வளவு தவறான செயல் என்பதை எண்ணிப் பாருங்கள். அவன் மனது எவ்வளவு புண்படுமென்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா//

உண்மைதான் !

நாவும் அடங்கவேண்டும் ”நான்” னும் அடங்கவேண்டும்! அப்பொழுதுதான் வாழ்க்கை நாளும் நலமாக இருக்கும்!

cheena (சீனா) said...

ராமலக்ஷ்மி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

மௌளி, நன்றி கருத்துக்கும் வருகைக்க்கும்

cheena (சீனா) said...

ஆயில்யன்,

வாழ்க்கை நாளும் நலமாக இருக்க "நான்" அடங்க வேண்டும் நாவுடன்.

அருமையான மறு மொழி

நன்றி

குசும்பன் said...

அருமையான பதிவு.

வல்லிசிம்ஹன் said...

நா அடங்க நாளாகும் சீனா சார்.

இடம் ஏவல் தெரிந்தவர்களே, வேண்டுமென்று மற்றவரை வருத்தும்போது என்ன செய்வது.
அவையிலே நாவடக்கம் செய்தவர்களை வணங்கலாம்.

நானானி said...

நாவடக்கம் பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!!
சீனா!
ரொம்ப நாளாச்சு வந்து.

cheena (சீனா) said...

பதிவு அருமையா குசும்பன் - நன்றீ

cheena (சீனா) said...

ஆமாம் வல்லி - அவையிலே நாவடக்கத்துடன் நடப்பவர்களை உண்மையிலேயே வணங்கலாம்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நானானி - அடிக்கடி வாங்களேன் - நானும் அடிக்கடி வரேனே

குமரன் (Kumaran) said...

புரிவதற்கு மிக எளிதான ஒன்று; கடைபிடிப்பதற்கு மிக அரிதான ஒன்று. முடிந்த வரையில் கடைபிடிக்கிறேன் ஐயா.

cheena (சீனா) said...

குமரன் - நீணட நாட்களுக்குப் பிறகு நமது சந்திப்பு - கடைப்பிடிக்க நினைத்ததே பெரிய செயல் - நன்றி - நல்வாழ்த்துகள்

NewBee said...

யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர்
சொல் லிழுக்குப் பட்டு.

உள்ளேன் அய்யா! :) :).

மனப்பாடப் பகுதி நல்லா நினைவிருக்கு அய்யா! நன்றி! நன்றி!

cheena (சீனா) said...

புது வண்டே

மனனம் செய்தது மறக்காது

என்ன

Thekkikattan|தெகா said...

அவை நாவடக்கம் செய்வது ரொம்ப முக்கியம், வளரணும்னு நினைச்சா. அதே நேரத்தில் பேச வேண்டிய நேரத்தில வாய திறக்கலைன்னா வளர்ச்சிக்கு தேவையான இடி'த்தல் கிடைக்காது ;-)

cheena (சீனா) said...

அன்பின் தெகா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - அருமையான மறுமொழி

நல்வாழ்த்துகள் தெகா