நேற்றைய தினம் 26.10.2014 மதுரையில் சீரும் சிறப்புடனும் நடந்த மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப் பதிவர் திருவிழாவில் தலைமை தாங்கி பேசிய என் தலைமை உரையின் சாரம் :
மதுரையில்
மூன்றாம் ஆண்டு
தமிழ்
வலைப் பதிவர் திரு விழா
26.10.2014
மேடையில்
அமர்ந்திருக்கும் அனைத்துப் பதிவர்கள் உள்ளிட்ட, இங்கு திரளாக வந்திருந்து இத் திருவிழாவினைச்
சிறப்பித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பதிவர்களையும் வணங்கி மகிழ்கிறேன்.
இது போன்ற
திருவிழா நடப்பது மதுரைக்கு இதுவே முதல் முறை.
நாமெல்லாம்
இங்கு கூடி மகிழ்வது அனைத்துப் பதிவர்களுக்குமே முதல் முறையாக இருக்கும்.
இங்கு
இத்திருவிழா சிறப்புடன் நடைபெற பிள்ளையார் சுழி போட்டதில் இருந்து இன்றுவரை அனைத்துப்
பணீகளையும் அயராது செய்ததில் பெரும் பங்காற்றியவர் நமது நண்பர் - சக பதிவர் - தமிழ் வாசி பிரகாஷ்
தான் என்பதைப் பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
அவருக்குத் துணையாக இருந்து அவருடன்
பணியாற்றியவர் மற்றொரு நண்பர் - சக பதிவர் திண்டுக்கல் தனபாலன்.
அனைத்துப்
பதிவர்களையும் ஒருங்கிணைத்ததில் இருந்து இத்திருவிழா எவிவிதத் தடங்கலும் இல்லாமல் சிறப்புடன்
நடை பெற பெரும்பாலான பணிகளைச் சிறப்புடன் செய்தவரும் பிரகாஷ் தான்.
இன்றைய
தினம் நமக்கெல்லாம் ஒரு திருவிழா தான். தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் இருந்து சக பதிவர்கள் வந்திருக்கிறார்கள்.
திருவிழாவினைச்
சிறப்புடன் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
மதுரையில் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் சித்திரைத் திருவிழா போன்று இத்திருவிழாவும் நடந்து கொண்டிருக்கிறது.
இன்று மாலை வரை இத்திருவிழாவினை நடத்தி மகிழ்வோம்.
இத்துடன்
சிற்றுரையை முடித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.