ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Thursday 25 June 2009

மண விழாவில் பதிவர் சந்திப்பு

அன்பு நண்பர்களே

நேற்றைய தினம் - 24-6-2009 புதன் கிழமை மதுரையில் அருமை நண்பர் - சக பதிவர் கார்த்திகைப் பாண்டியனின் தங்கை திருமணம் சிறப்பாக நடந்தது. நண்பரோ அனைத்து நண்பர்களையும் நேரிலும் தொலைபேசியிலும் மண விழாக் காண
அன்புடன் அழைத்திருந்தார்.

திருமண மண்டபம் முழுவதும் மக்கள் வெள்ளம். அதில் சிறு தீவாக நமது பதிவர் வட்டம். நானும் எனது துணைவியும் ( அவர்களும் பதிவர் தான்) சென்றிருந்தோம். மண்டப வாசலிலேயே காரைக்குடியில் இருந்து வந்திருந்த மருத்துவர் தேவகுமாரும் சிவகாசியிலிருந்து வந்திருந்த அன்புமதியும் மதுரையில் இருக்கும் தேனி சுந்தரும் வரவேற்றனர்.

தேவன்மயம் எங்களை அன்புடன் அழைத்துச் சென்று காலை உணவு ஏற்பாடு செய்தார். சாப்பிட்டு முடிக்கும் வரை பக்கத்திலேயே நின்று அவரது வீட்டுத் திருமணம் போல் உபசரித்தார். நன்றி நல்ல உள்ளத்தினிற்கு.

திருப்பூரிலிருந்து ஆதவனும் சொல்லரசனும், மதுரையில் இருந்து ஸ்ரீதரும் தருமியும் பாலகுமாரும் ஜாலி ஜம்பரும் வந்திருந்தனர். களை கட்டியது சந்திப்பு.

மண விழா முடிந்ததும், என்னுடைய அலுவலக அவசர அலுவல் காரணமாக நாங்களூம் விடை பெற்றோம். நண்பர்களும் மாலை வரை இருந்து நீண்டதொரு சந்திப்பாக மாற்றி விடை பெற்றதாக அறிந்தேன்.

புகைப்படங்கள் - வீடியோ எல்லாம் மற்ற பதிவர்களீன் இடுகைகலில் பார்க்கலாம். ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

நல்லதொரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்த கா.பாவினிற்கு நன்றி