ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Friday 31 July 2009

சிறந்த நண்பருக்கு விருது

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

குறளாசான் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே நட்பின் இலக்கணம் வகுத்துச் சென்றிருக்கிறான்.

நட்பென்பது அழகானது. அன்புணர்ச்சி உடைய மனக்கசிவே நட்பு. இறுக்கமற்றது. நினைக்குந்தோறும் நிம்மதி தருவது. நட்புக் கொண்டால் நிலைத்து நிற்கப் பாடுபடவேண்டும். நட்பின் நினைவே மகிழ்வூட்டுவதாய் நிற்க வேண்டும். ஆராய்ந்து கொள்ளும் நட்பே உயர்வானது. உள்ளும் புறமும் தூய்மையுடைய மனமே நல்ல நட்பை உருவாக்க முடியும். தோளோடு தோள் தட்டி வாய் விட்டுச் சிரிப்பது மட்டும் நட்பல்ல. இன்னல்கள் தீர்க்க தட்டிக்கொடுத்து தலை நிமிரச் செய்வதே நட்பு.

இன்பத்தில் கூடி மகிழ்வது இயற்கை. தேனின் எறும்புகள் சொல்லிக் கொடுத்து அழைத்து வரப்படுபவை அல்ல. மனத்தின் மறுமொழிகள் வாய்ச்சொற்களாக வந்தால் நட்பு மணம் பெறும். நட்பில்லாத உலகம் அழகின்றி அன்பின்றி வாடும். முகம் மட்டும் மலர்தலின்றி அகமும் மகிழ்ந்து கண்கள் மலரும் கனிவே நட்பு. நட்பு இருக்குமிடம் நம் மனமே ! மனத்தில் நாளும் நல்ல நட்பை வளர்ப்போம்.

நட்பு - நட்பெனில் யாது : பள்ளி நட்பு, கல்லூரி நட்பு, அலுவலக நட்பு, புகைவண்டி நட்பு, இணைய நட்பு என பல்வேறு பட்ட நட்புகளில் முன் பின் தெரியாத - முகமறியாத நட்பெனப்படுவது இணைய நட்பாகும்.

இணையத்தில் - பதிவர்கள் -வலைஞர்கள் நட்பு என்பது மிகச்சிறந்த நட்பாகும். பதிவர்கள் இடும் இடுகையைப் படித்துப் படித்து - ரசித்து ரசித்து - மறுமொழிகள் இட்டு - அவர்களது எழுத்துகளில் மயங்கி - எழுத்தின் மூலம் நண்பர்களானவர்கள் பலர் இருக்கிறார்கள்.

பதிவர் சந்திப்பு - ஒரே இடத்தில் வசிக்கும் பதிவர்கள் - எளிதில் நண்பர்களாகி விடுகின்றனர்.

நட்பிற்கு இலக்கணம் படைப்பவர்கள் பதிவர்களே.

பதிவர்களிடையே சிறந்த நண்பர்களைத் தேடிப்பிடித்து விருது வழங்கும் செயல் தொடர்ந்து வருகிறது. அருமை நண்பர் - காரைக்குடி மருத்துவர் தேவன் மாயம் ( புனைப்பெயர் தான்) ஒரு இடுகை இட்டு இவ்விருதினை எனக்கு வழங்கி உள்ளார். விருதின் விதி முறைகள் படி நான் எனக்குப் பிடித்த சிறந்த நண்பர்களுக்கு இத்தொடர் விருதினை வழங்க வேண்டும்.

விதி முறைகள் :

1.
நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம். 2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம். 3. அவர்களிடம் உங்களுக்கு பிடித்த செயல் - ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும். 4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்படக் கூடாது. அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.


நான் விருது வழங்கத் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் :

01 : தருமி - இவர் தான் நான் சந்தித்த முதல் வலைஞர் - நான் வலைப்பூ ஆரம்பித்த காலத்தில், மின்னஞ்சல்கள் மற்றும் மறுமொழிகள் மூலமாக நான் அதிகம் உரையாடியது இவரிடம் தான்.என்னை விட வயதில் மூத்தவர். ஓய்வு பெற்ற பேராசிரியர்.

02 : மீறான் அன்வர் :
நான் சந்தித்த இரண்டாவது பதிவர். பாசக்காரப் பயபுள்ள - சம்பன்குளத்தான் - கப்பலூரில் பணி புரிகிறான்.

03 : சிவசுப்பிரமணியன் : மூன்றாவது பதிவர் - மணப்பாறையைச் சேர்ந்தவர் - பெங்களூருவில் பணி புரிகிறார் - மிகச்சிறந்த நண்பர்.

04 : மங்களூர் சிவா : பழகுவதற்கு இனியவர் - புதிதாய்த் திருமணம் ஆனவர் - புது வரவினை எதிர்பார்ப்பவர்.

05 : நந்து - நிலா : ஈரோட்டினைச் சார்ந்த தொழிலதிபர் - நட்பு மற்றும் அன்பின் இலக்கணம்.

06 : வால் பையன் : அறிமுகம் தேவை இல்லாத அருமை நண்பர்

07 : தமிழ் பிரியன் : அருமை நண்பர் - அமீரகத்தில் பணி புரிகிறார் - வத்தலக்குண்டினைச் சார்ந்தவர்

08 : கோவி கண்ணன் : சிங்கையில் பணி புரியும் நண்பர் - ஆத்திகரா அல்லது நாத்திகரா - விவாதத்திற்குரிய கேள்வி

09 : துளசி கோபால் : மூத்த பதிவர் - அனைவரும் அறிந்த பதிவர் - உலகம் சுற்றும் பதிவர்

10 : நானானி : நல்ல குணமுடைய அமைதியான பதிவர்.

11 : சதங்கா : அமெரிக்க நாட்டில் பணி புரிகிறார் - சிறந்த நண்பர்

12 : பாசமலர் : மதுரையைச் சார்ந்தவர் - ரியாத்தில் வசிக்கிறார் - ஆங்கிலப் பேராசிரியை - தமிழில் கலக்குகிறார்

இரண்டாண்டு காலமாக பதிவராக இருக்கிறபடியால் எனக்கு நண்பர்கள் அதிகம். நேரில் கண்ட முகமறிந்த நண்பர்களில் அதிகம்தெரிந்தவர்களை மேலே குறிப்பிட்டுள்ளேன். மற்ற நண்பர்கள் வருந்த வேண்டாம்.

கடந்த மே மாதம் மதுரையில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. அதில் அதிகமாக பதிவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை சில நிமிடங்கள் சந்தித்துப் பேசினேன். பிறகு அவர்களில் பலர் நண்பர்களாகி விட்டனர். அவர்களைப் பற்றி இங்கு குறிப்பிட வில்லை. மனம் வருந்த வேண்டாம்.

நல்வாழ்த்துகள் நண்பர்கள் அனைவருக்கும்

சீனா