ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 23 November 2014

வலைச்சர வரலாறு - பகுதி -003 - 20.11.2014

அன்பின் பதிவர்களே !

வலைச்சரம் துவங்கிய நாளில் இருந்து இன்று வரை வலைச்சர ஆசிரியப் பொறுப்பில் இருந்தவர்கள் பற்றிய கீழ்க்கண்ட தகவல்கள் ஒரு EXCEL கோப்பில் சேமித்து வைக்கப் பட்டுள்ளது.

click here to download the excel file

வலைச்சரம் துவங்கிய நாளில் இருந்து இன்று வரை வரிசை எண், ஆசிரியப் பொறுப்பேற்ற தேதி, அவர்களீன் பெயர், அவர்களின் தளத்தின் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி, விதி முறைகள் அவர்களூக்கு அனுப்பப் பட்ட தகவல் ஆகியவை சேமிக்கப் பட்டிருக்கிறது






















Thursday 13 November 2014

வலைச்சர வரலாறு - பகுதி 002 - 13.11.2014

அன்பின் சக பதிவர்களே !

வலைச்சரத்தின் முதல் ஆசிரியர் சிந்தா நதி 11.11.2006 அன்று வலைஞன் என்ற புனைப் பெயரில் தனது முதல் பதிவினை எழுதி இருக்கிறார். 22.02.2007ல் அடுத்த பதிவினை எழுதி இருக்கிறார். 26.02.2007 அன்று வலைச்சரம் துவங்கியது குறித்தும் வலைச்சர முதல் ஆசிரியராக பொன்ஸ் நியமிக்கப்
பட்டது பற்றியும் எழுதி இருக்கிறார்.

முத்துலெட்சுமி 30.04.2007 முதல் ஆசிரியப் பொறுப்பினை ஏற்றிருக்கிறார்.

04.05.2008 முதல் நான் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கிறேன்.
பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்த நிமிடம் வரை
வலைச்சரக் குழு உறுப்பினராக சக பதிவர் தமிழ்வாசி பிரகாஷினை நியமித்திருக்கிறேன்.

வலைச்சரத்தின் முதல் ஆசிரியர் சிந்தாநதி வலைச்சர ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து சில விதி முறைகளைஏற்படுத்தினார்.

பல  பதிவர்களிடம் இருந்து, வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறி ஒரு பதிவு இட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் விண்ணப்பங்களைப் பெற்று அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவ்வார வலைச்சர ஆசிரியராக நியமிப்பது என்பது சரியான முறையல்ல எனவும் பதிவர்களின் தளங்களை ஆராய்ந்து ஒர் பதிவரை மட்டுமே தேர்நெதெடுத்து ஒரு வாரத்திற்கு அவரை வலைச்சர ஆசிரியராக நியமிக்க வேண்டும் எனவும் விதிமுறைகளை ஏற்படுத்தினார்.

இந்த விதிகள் கடைப்பிடிக்கப் படுகின்றன.

இருப்பினும் விண்ணப்பங்களைப் பெறுவது இன்னும் நிறுத்தப் பட வில்லை,

ஓரிரு நாட்களில் நிறுத்தப் படவேண்டும் என வலைச்சரக் குழுவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.

நிறுத்தி விடுவோம் என உறுதி அளிக்கிறேன்.தற்பொழுது பதிவர்களின் தளங்களை ஆராய்ந்து ஒருபதிவரை  மட்டும் தேர்ந்தெடுத்து அவரை வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க அழைக்கும் முறையும் இருக்கின்றது. இவ்விதியை மட்டுமே கடைப்பிடிக்குமாறு வலைச்சரக் குழுவினரை அறிவுறுத்தி இருக்கிறேன்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா




Monday 10 November 2014

வலைச்சர வரலாறு - பகுதி -01 - 10.11.2014

வலை உலகில் வாரந்தோறும் தொடர்ச்சியாகப் பதியப் பட்ட பதிவுகள் வலைப் பதிவர்கள் பலரை அறிமுகப் படுத்தி வலைப்பூவாக மலர்ந்தது. பூக்களைக் கொண்டு தொடுக்கப்படுகின்ற பூமாலை போல் வலைக் கதம்பமாக வலைஞன் என்ற பதிவரால் 11.11.2006ல் பொது என்ற பிரிவில் வலைப் பூக் கதம்பம் தொடங்கப் பட்டது.

2007 பிப்ரவர் 22ல் தமிழ்ப் பதிவுகள் என்ற தலைப்பில் பொது என்ற பிரிவில் சிந்தா நதி தமிழ் வலைபதிவுலகம் பற்றி பதிவிட்டிருக்கிறார். அதில் 2003  ஜனவரி முதல் நாள் கார்த்திக் ராம் என்ற பதிவரால் துவங்கப் பட்ட தமிழ் வலைப் பதிவுலகம் 2007ல் சில ஆயிரம் பதிவுகளுடன் முன்னேறி இருக்கிறது.
ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு எழுதிக் கொண்டிருந்த பதிவர்கள் தமிழிலும் எழுதலாம் என்று தெரிய வந்த உடன் ஆர்வத்துடன் எழுதத் தொடங்கினர்.

26.02.2007ல் வலைச்சரம் தொடங்கப்பட்டது.

தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பக் காலத்தில்வலைப்பதிவுகளின் பட்டியலை உருவாக்கி தமிழ் வலைப் பதிவாளர்களை ஒருங்கிணைத்த சந்திரமதி கந்தசாமி இன்னொரு அற்புதமான முயற்சியையும் செய்திருந்தார். அதுதான் வலைப்பூ இதழ். இதில் வாரம் ஒரு வலைப்பதிவர் வலைப்பூ ஆசிரியராகப் பங்கேற்று மற்றவர்களுடைய வலைப்பதிவுகளை விமர்சனம் செய்து அறிமுகம் செய்து வைப்பார்கள். நிறைய புதிய வலைப்பதிவாளர்கள் அதன்மூலம் அறிமுகப்  படுத்தப் பட்டனர்.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக வலைச்சரத்தின் முதலாவது ஆசிரியர் பொறுப்பை பதிவர் பொன்ஸ்மேற்கொண்டார்.

வலைச்சரத்தின் 50வது பதிவினை முத்து இலட்சுமி எழுதி இருக்கிறார்.
அதன் சுட்டி : http://blogintamil.blogspot.in/2007/05/50.html

தொடரும்.......... பகுதி : 02

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா




Saturday 8 November 2014

வலைச்சர வரலாறு

அன்பின் சக பதிவர்களே

அனைவருக்கும் வணக்கம்

நீங்கள் அனைவரும் வலைச்சரம் பற்றி  அறிந்திருக்கலாம் !

இந்த வலைச்சரத்தின் வரலாற்றினை எழுதலாம் என நினைக்கிறேன்.

இதன் வரலாறு என்ன  ?

இதனை முதன் முதலில் யார் தொடங்கினார்கள் ? எப்படி நடத்தினார்கள்  ?

எப்பொழுது தொடங்கப் பட்டது இந்த வலைச்சரம் ?

வலைச்சரத்தின் நோக்கம் என்ன ?

நோக்கம் எப்படி நிறைவேறியது ?

வரவேற்பு எப்படி இருந்தது ?

இன்றைய வலைச்சரம் எவ்வாறு இயங்குகிறது ?

என இத்தனையையும் உள்ளடக்கி பல பதிவுகளாக - தொடரலாம் என எண்ணுகிறேன்.  என்னுடைய எண்ணத்தினை எழுத்தாக 10.11.2014 திங்கட்கிழமை முதல் நீங்கள் அனைவரும் காணலாம்.

பொறுத்திருங்கள் - வலைச்சரம் ஒரு வரலாறாகும்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா