ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday, 30 September 2015

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.

அன்பின் பதிவர்களே

அனைவருக்கும் வணக்கம்

புதுக்கோட்டையில் வருகிற 11.10.2015ல் நடக்க இருக்கும் வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா தமிழுக்கு வளம் சேர்க்கும் நல்விழா.  இது பற்றிய தகவல்கள் கவிஞர் முத்து நிலவன் பதிவிலும் ( https://mail.google.com/mail/u/0/#search/muthunilavanpdk%40gmail.com/14fd97baa86170f7)

பதிவர் திண்டுக்கல் தனபாலின் பதிவிலும் (http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html ) விளக்கமாகக் கூறப் பட்டிருக்கிறது.

ஒன்றை எடுத்துக் கூட்டி ஏற்றமுடன் செயல் படுத்துவது என்பது எல்லாருக்கும் கை வந்த கலையன்று. முத்து நிலவன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகிய இருவரும் செயல் படுத்தும் முறை சிறப்புடையது.

பதிவர்கள் இத்தளங்களுக்குச் சென்று செய்திகளை அறிந்து விழா சிறப்புற துணை செய்ய வேண்டும். தமிழை வளப் படுத்தவும், நிகழ்காலத்தினருக்கு நினைவு படுத்தவும் செய்தால் எதிர் காலைத்தில் வலைத் தமிழ் தமிழை வளர்க்கும். அத்தமிழ் வளர்க்கும் பணியை இப்பதிவர் சந்திப்பு செயலாக்கும் என்று நினைக்கிறேன்.

அனைத்துப் பதிவர்களையும்  இவ்வலைத் தளங்கள் பக்கம் வருகை தருமாறு வேண்டுகிறேன்.

திருவிழா சீரும் சிறப்புடன் நிகழ நல்வாழ்த்துகள்

வாழ்க வளமுடன் - வளர்க தமிழுடன்.


நட்புடன் சீனா