ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Monday 10 November 2014

வலைச்சர வரலாறு - பகுதி -01 - 10.11.2014

வலை உலகில் வாரந்தோறும் தொடர்ச்சியாகப் பதியப் பட்ட பதிவுகள் வலைப் பதிவர்கள் பலரை அறிமுகப் படுத்தி வலைப்பூவாக மலர்ந்தது. பூக்களைக் கொண்டு தொடுக்கப்படுகின்ற பூமாலை போல் வலைக் கதம்பமாக வலைஞன் என்ற பதிவரால் 11.11.2006ல் பொது என்ற பிரிவில் வலைப் பூக் கதம்பம் தொடங்கப் பட்டது.

2007 பிப்ரவர் 22ல் தமிழ்ப் பதிவுகள் என்ற தலைப்பில் பொது என்ற பிரிவில் சிந்தா நதி தமிழ் வலைபதிவுலகம் பற்றி பதிவிட்டிருக்கிறார். அதில் 2003  ஜனவரி முதல் நாள் கார்த்திக் ராம் என்ற பதிவரால் துவங்கப் பட்ட தமிழ் வலைப் பதிவுலகம் 2007ல் சில ஆயிரம் பதிவுகளுடன் முன்னேறி இருக்கிறது.
ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு எழுதிக் கொண்டிருந்த பதிவர்கள் தமிழிலும் எழுதலாம் என்று தெரிய வந்த உடன் ஆர்வத்துடன் எழுதத் தொடங்கினர்.

26.02.2007ல் வலைச்சரம் தொடங்கப்பட்டது.

தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பக் காலத்தில்வலைப்பதிவுகளின் பட்டியலை உருவாக்கி தமிழ் வலைப் பதிவாளர்களை ஒருங்கிணைத்த சந்திரமதி கந்தசாமி இன்னொரு அற்புதமான முயற்சியையும் செய்திருந்தார். அதுதான் வலைப்பூ இதழ். இதில் வாரம் ஒரு வலைப்பதிவர் வலைப்பூ ஆசிரியராகப் பங்கேற்று மற்றவர்களுடைய வலைப்பதிவுகளை விமர்சனம் செய்து அறிமுகம் செய்து வைப்பார்கள். நிறைய புதிய வலைப்பதிவாளர்கள் அதன்மூலம் அறிமுகப்  படுத்தப் பட்டனர்.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக வலைச்சரத்தின் முதலாவது ஆசிரியர் பொறுப்பை பதிவர் பொன்ஸ்மேற்கொண்டார்.

வலைச்சரத்தின் 50வது பதிவினை முத்து இலட்சுமி எழுதி இருக்கிறார்.
அதன் சுட்டி : http://blogintamil.blogspot.in/2007/05/50.html

தொடரும்.......... பகுதி : 02

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா