ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Saturday, 2 May 2009

பட்டாம் பூச்சி விருது - பகுதி 2

பட்டாம்பூச்சி விருது - இதனைப் படித்து விட்டு இங்கே வரவும் :

ஆமா - இதென்ன பெரிய இடுகையா - கருத்துள்ள கதையா கவிதையா கட்டுரையா இலக்கியமா - என்ன இது சின்னப்புள்ளத்தனமா பகுதி இரண்டாமில்ல - கேக்கறதுக்கு ஆளில்லப்பா

யார்யா இது - இங்கே வந்து கத்தறது ......

சரி சரி தொலைஞ்சு போ - யாரெல்லாம் விருது வாங்கறாங்கன்னு சொல்லித் தொலை

முதல்வர் : பதிவுலகின் செல்லப் பிள்ளை - அனைவராலும் ரசிக்கப்படுபவள் - படங்களாகவே மயக்குபவள் - எல்லோரையும் கவர்ந்தவள் - நேரில் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் - தேவதை - நிலா

இரண்டாமவர் : அருமை அண்ணனின் - தருமியின் - மதுரை என்றாலே நினைவுக்கு வரக்கூடிய மூத்த பதிவர் தருமியின் - அருமைப் பேத்தி ஜெசிகா

மூன்றாமவர் : பப்பு - சந்தன முல்லையின் செல்ல மகள் - குறும்புக்காரி - அம்மாவினை அதிகம் தொந்தரவு செய்யாதவள் - எனக்குப் பிடித்தவள்
நல்வாழ்த்துகளுடன் கூடிய விருது.

எப்பா அறிவிச்சாச்சுப்பா

அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்வாழ்த்துகள்

இப்ப விதி முறைகள்:

இந்த விருது - ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கிட்டு போறது போல - அதனால, பின்பற்றவேண்டிய சில விதி முறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

அதனால மூணுபேருமே என்னைப்போல தாமதிக்காமல் பட்டாம்பூச்சி போல பறந்து பறந்து விருதைக் கொடுத்துடுங்க:)

வணக்கம்.

அன்புடன் .... நட்புடன் .... சீனா

Friday, 1 May 2009

பட்டாம் பூச்சி விருது


அன்பின் பதிவர்களே !

நான் இடுகைகள் இடுவதை விட மறுமொழிகள் இடுவதையே அதிகம் விரும்புபவன். இருப்பினும் அன்பின் காரணமாக எனதருமை நண்பர் கோவி கண்ணன் எனக்கும் சில நாட்கள் முன்னதாக (19.03.2009) பட்டாம்பூச்சி விருதினை அளித்து விட்டார். நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து - எழுதுவதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்து - இன்று ஒரு முடிவுடன் எழுதுகிறேன்.

காரணம் - எனது துணைவியார் இன்று அவருக்குக் கிடைத்த விருதின் விதிகள் படி செயலாற்றி விட்டார். இனி பொறுப்பதில்லை என பொங்கி எழுந்து விட்டேன்.

கோவியாரோ அகவை ஐம்பதைக் கடந்த மூவரைத் தேர்ந்தெடுத்தார். நானோ மழலைகளைத் தேர்ந்தெடுக்கிறேன். ஏனெனில் பேரன் பேத்திகளைக் கொஞ்சும் காலமல்லவா இது !

முதல்வர் : நான் விரும்பிப் படிக்கும் பதிவர். பதிவு துவங்கிய காலம் முதல் அனைத்து இடுகைகளையும் படித்தவன் என்ற முறையில் அவருக்கு விருதினை அளித்து அவரை மகிழ்வித்து நான் பெருமைப் படுகிறேன். அருமை நண்பரின் மகள் - அவர் யாரென மண்டையை உடைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டாமவர் : புதிய பதிவர் - மூன்றே இடுகைகள் தான் இட்டிருக்கிறார். வரைவதில் கெட்டிக்காரர். நினைவாற்றல் மிக்கவர். அருமை நண்பரின் பேத்தி. அமெரிக்காவில் வசிப்பவர் - வாழ்பவர். யாரெனக் கண்டு பிடியுங்கள்

மூன்றாமவர் : சித்திரக்கூடத்தின் இளவரசி - பொம்மைக்குக் கூட ஓவியம் கற்பிப்பவர். மழலையாய் உதிர்க்கும் மனமுத்துக்கள் நம்மை மயக்கும்.

ஆக வரட்டா - போதும் இன்னிக்கு - நாளை அறிவிக்கிறேன் - விருது பெற்ற பெரும் பேறு பெற்ற பதிவர்களை.

சரியா - பை பாஃர் நௌ

சீனா