ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 23 November 2014

வலைச்சர வரலாறு - பகுதி -003 - 20.11.2014

அன்பின் பதிவர்களே !

வலைச்சரம் துவங்கிய நாளில் இருந்து இன்று வரை வலைச்சர ஆசிரியப் பொறுப்பில் இருந்தவர்கள் பற்றிய கீழ்க்கண்ட தகவல்கள் ஒரு EXCEL கோப்பில் சேமித்து வைக்கப் பட்டுள்ளது.

click here to download the excel file

வலைச்சரம் துவங்கிய நாளில் இருந்து இன்று வரை வரிசை எண், ஆசிரியப் பொறுப்பேற்ற தேதி, அவர்களீன் பெயர், அவர்களின் தளத்தின் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி, விதி முறைகள் அவர்களூக்கு அனுப்பப் பட்ட தகவல் ஆகியவை சேமிக்கப் பட்டிருக்கிறது


Thursday 13 November 2014

வலைச்சர வரலாறு - பகுதி 002 - 13.11.2014

அன்பின் சக பதிவர்களே !

வலைச்சரத்தின் முதல் ஆசிரியர் சிந்தா நதி 11.11.2006 அன்று வலைஞன் என்ற புனைப் பெயரில் தனது முதல் பதிவினை எழுதி இருக்கிறார். 22.02.2007ல் அடுத்த பதிவினை எழுதி இருக்கிறார். 26.02.2007 அன்று வலைச்சரம் துவங்கியது குறித்தும் வலைச்சர முதல் ஆசிரியராக பொன்ஸ் நியமிக்கப்
பட்டது பற்றியும் எழுதி இருக்கிறார்.

முத்துலெட்சுமி 30.04.2007 முதல் ஆசிரியப் பொறுப்பினை ஏற்றிருக்கிறார்.

04.05.2008 முதல் நான் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கிறேன்.
பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்த நிமிடம் வரை
வலைச்சரக் குழு உறுப்பினராக சக பதிவர் தமிழ்வாசி பிரகாஷினை நியமித்திருக்கிறேன்.

வலைச்சரத்தின் முதல் ஆசிரியர் சிந்தாநதி வலைச்சர ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து சில விதி முறைகளைஏற்படுத்தினார்.

பல  பதிவர்களிடம் இருந்து, வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறி ஒரு பதிவு இட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் விண்ணப்பங்களைப் பெற்று அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவ்வார வலைச்சர ஆசிரியராக நியமிப்பது என்பது சரியான முறையல்ல எனவும் பதிவர்களின் தளங்களை ஆராய்ந்து ஒர் பதிவரை மட்டுமே தேர்நெதெடுத்து ஒரு வாரத்திற்கு அவரை வலைச்சர ஆசிரியராக நியமிக்க வேண்டும் எனவும் விதிமுறைகளை ஏற்படுத்தினார்.

இந்த விதிகள் கடைப்பிடிக்கப் படுகின்றன.

இருப்பினும் விண்ணப்பங்களைப் பெறுவது இன்னும் நிறுத்தப் பட வில்லை,

ஓரிரு நாட்களில் நிறுத்தப் படவேண்டும் என வலைச்சரக் குழுவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.

நிறுத்தி விடுவோம் என உறுதி அளிக்கிறேன்.தற்பொழுது பதிவர்களின் தளங்களை ஆராய்ந்து ஒருபதிவரை  மட்டும் தேர்ந்தெடுத்து அவரை வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க அழைக்கும் முறையும் இருக்கின்றது. இவ்விதியை மட்டுமே கடைப்பிடிக்குமாறு வலைச்சரக் குழுவினரை அறிவுறுத்தி இருக்கிறேன்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Monday 10 November 2014

வலைச்சர வரலாறு - பகுதி -01 - 10.11.2014

வலை உலகில் வாரந்தோறும் தொடர்ச்சியாகப் பதியப் பட்ட பதிவுகள் வலைப் பதிவர்கள் பலரை அறிமுகப் படுத்தி வலைப்பூவாக மலர்ந்தது. பூக்களைக் கொண்டு தொடுக்கப்படுகின்ற பூமாலை போல் வலைக் கதம்பமாக வலைஞன் என்ற பதிவரால் 11.11.2006ல் பொது என்ற பிரிவில் வலைப் பூக் கதம்பம் தொடங்கப் பட்டது.

2007 பிப்ரவர் 22ல் தமிழ்ப் பதிவுகள் என்ற தலைப்பில் பொது என்ற பிரிவில் சிந்தா நதி தமிழ் வலைபதிவுலகம் பற்றி பதிவிட்டிருக்கிறார். அதில் 2003  ஜனவரி முதல் நாள் கார்த்திக் ராம் என்ற பதிவரால் துவங்கப் பட்ட தமிழ் வலைப் பதிவுலகம் 2007ல் சில ஆயிரம் பதிவுகளுடன் முன்னேறி இருக்கிறது.
ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு எழுதிக் கொண்டிருந்த பதிவர்கள் தமிழிலும் எழுதலாம் என்று தெரிய வந்த உடன் ஆர்வத்துடன் எழுதத் தொடங்கினர்.

26.02.2007ல் வலைச்சரம் தொடங்கப்பட்டது.

தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பக் காலத்தில்வலைப்பதிவுகளின் பட்டியலை உருவாக்கி தமிழ் வலைப் பதிவாளர்களை ஒருங்கிணைத்த சந்திரமதி கந்தசாமி இன்னொரு அற்புதமான முயற்சியையும் செய்திருந்தார். அதுதான் வலைப்பூ இதழ். இதில் வாரம் ஒரு வலைப்பதிவர் வலைப்பூ ஆசிரியராகப் பங்கேற்று மற்றவர்களுடைய வலைப்பதிவுகளை விமர்சனம் செய்து அறிமுகம் செய்து வைப்பார்கள். நிறைய புதிய வலைப்பதிவாளர்கள் அதன்மூலம் அறிமுகப்  படுத்தப் பட்டனர்.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக வலைச்சரத்தின் முதலாவது ஆசிரியர் பொறுப்பை பதிவர் பொன்ஸ்மேற்கொண்டார்.

வலைச்சரத்தின் 50வது பதிவினை முத்து இலட்சுமி எழுதி இருக்கிறார்.
அதன் சுட்டி : http://blogintamil.blogspot.in/2007/05/50.html

தொடரும்.......... பகுதி : 02

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Saturday 8 November 2014

வலைச்சர வரலாறு

அன்பின் சக பதிவர்களே

அனைவருக்கும் வணக்கம்

நீங்கள் அனைவரும் வலைச்சரம் பற்றி  அறிந்திருக்கலாம் !

இந்த வலைச்சரத்தின் வரலாற்றினை எழுதலாம் என நினைக்கிறேன்.

இதன் வரலாறு என்ன  ?

இதனை முதன் முதலில் யார் தொடங்கினார்கள் ? எப்படி நடத்தினார்கள்  ?

எப்பொழுது தொடங்கப் பட்டது இந்த வலைச்சரம் ?

வலைச்சரத்தின் நோக்கம் என்ன ?

நோக்கம் எப்படி நிறைவேறியது ?

வரவேற்பு எப்படி இருந்தது ?

இன்றைய வலைச்சரம் எவ்வாறு இயங்குகிறது ?

என இத்தனையையும் உள்ளடக்கி பல பதிவுகளாக - தொடரலாம் என எண்ணுகிறேன்.  என்னுடைய எண்ணத்தினை எழுத்தாக 10.11.2014 திங்கட்கிழமை முதல் நீங்கள் அனைவரும் காணலாம்.

பொறுத்திருங்கள் - வலைச்சரம் ஒரு வரலாறாகும்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Monday 27 October 2014

மதுரை - மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா -

அன்பின் சக பதிவர்க்ளே 

நேற்றைய தினம் 26.10.2014 மதுரையில் சீரும் சிறப்புடனும் நடந்த மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப் பதிவர் திருவிழாவில் தலைமை தாங்கி பேசிய என் தலைமை உரையின் சாரம் :

மதுரையில் மூன்றாம் ஆண்டு
தமிழ் வலைப் பதிவர் திரு விழா
26.10.2014

மேடையில் அமர்ந்திருக்கும் அனைத்துப் பதிவர்கள் உள்ளிட்ட, இங்கு திரளாக வந்திருந்து இத் திருவிழாவினைச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பதிவர்களையும் வணங்கி மகிழ்கிறேன்.

இது போன்ற திருவிழா நடப்பது மதுரைக்கு இதுவே முதல் முறை.

நாமெல்லாம் இங்கு கூடி மகிழ்வது அனைத்துப் பதிவர்களுக்குமே முதல் முறையாக இருக்கும்.

இங்கு இத்திருவிழா சிறப்புடன் நடைபெற பிள்ளையார் சுழி போட்டதில் இருந்து இன்றுவரை அனைத்துப் பணீகளையும் அயராது செய்ததில் பெரும் பங்காற்றியவர் நமது நண்பர் - சக பதிவர் - தமிழ் வாசி பிரகாஷ் தான் என்பதைப் பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். 

அவருக்குத் துணையாக இருந்து அவருடன் பணியாற்றியவர் மற்றொரு நண்பர் - சக பதிவர்  திண்டுக்கல் தனபாலன்.

அனைத்துப் பதிவர்களையும் ஒருங்கிணைத்ததில் இருந்து இத்திருவிழா எவிவிதத் தடங்கலும் இல்லாமல் சிறப்புடன் நடை பெற பெரும்பாலான பணிகளைச் சிறப்புடன் செய்தவரும் பிரகாஷ் தான்.
இன்றைய தினம் நமக்கெல்லாம் ஒரு  திருவிழா தான். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சக பதிவர்கள் வந்திருக்கிறார்கள்.

திருவிழாவினைச் சிறப்புடன் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

மதுரையில் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் சித்திரைத் திருவிழா போன்று இத்திருவிழாவும் நடந்து கொண்டிருக்கிறது. 

இன்று மாலை வரை இத்திருவிழாவினை நடத்தி மகிழ்வோம்.


இத்துடன் சிற்றுரையை முடித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.  

Saturday 30 August 2014

வலைப் பதிவர் சந்திப்பு - திருவிழா - மதுரை - 26.10.2014

தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... 
கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்..... 

மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டன... 

நாள் : அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை.

வாருங்கள் வலைப்பதிவர்களே... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பினால் போதும்... 

படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2014 ஏதேனும் சந்தேகங்கள், விவரங்கள் தேவைப்பட்டால் :- 
திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com
 தமிழ்வாசி பிரகாஷ் -9080780981 - thaiprakash1@gmail.com

நூல் வெளியீடு : பதிவர்கள் தங்களின் நூல்களை இந்த மாபெரும் நிகழ்ச்சியில் வெளியிடலாம். அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014 க்குள் விவரங்களை கீழ்கண்ட நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். 
சீனா ஐயா (வலைச்சரம்) cheenakay@gmail.com
திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com

அன்பளிப்பு : இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பதிவர்கள், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்துத் தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும். 


மேலும் தகவல்கள் / விபரங்கள் அடுத்தப் பதிவில் வெளியாகும். பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. சந்திப்போம்.
வலைப்பதிவர் விழா நிர்வாகக் குழு - மதுரை

Monday 16 June 2014

தந்தையர் தின வாழ்த்து !

அன்பின் அப்பா !

அடியெடுத்து வைக்கையில்
         விரல் பிடித்தாய் !
மடியமர்த்தி எண்ணெழுத்து
         எழுத வைத்தாய் !
படிப்படியாய் வாழ்க்கைப்பாடம்
          பயிற்றுவித்தாய் !
நொடிப்பொழுதும் கலங்காமல்
          துணை நின்றாய் !
தோள் நின்ற தந்தைக்கு
          துணை நிற்க ஆசை !
விரல் பிடித்த தந்தைக்கு
          வழி காட்ட ஆசை !
தனித்திருக்கும் போதிலும்
           நினைத்து மகிழ ஆசை !
மாறும் பிறவி யாவினிலும்
           மகளாய்ப் பிறக்க ஆசை !


இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் !

                                        - சுஜா -

Thursday 22 May 2014

மதுரையில் ஓர் பதிவர் சந்திப்பு

அன்பின் சக  பதிவர்களே ! 

அறிவது நலனே ! விழைவதும் அஃதே !

மதுரைப் பதிவர்களீன் நீண்ட நாள் விருப்பப்படி, மதுரையில் ஒரு பதிவர் சந்திப்பு வருகிற அக்டோபர்த் திஙகளில் நிகழ்த்த விரும்புகிறோம். 
இதன் அடிப்படையில் நேற்றைய தினம் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் எங்கள் இல்லத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில்   திரு தமிழ் வாசி பிரகாஷ், திரு ரமணி, திரு பாலகுமார், திரு சரவணன், திரு பகவான் ஜீ ஆகிய பதிவர்கள் கலந்து கொண்டனர். 

அக்டோபரில் நடக்க விருக்கும் பதிவர் சந்திப்பில் அனைத்துப் பதிவர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

இச்சந்திப்பின் நோக்கம் ஏதெனும் ஒரு பயன் கருதியதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.  எனவே பதிவர்கள் அனைவரும் அது பற்றிய தங்களின்  மேலான கருத்துகளை முன் கூட்டியே தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  அக்கருத்துகள்  விழாவினைச் சிறப்பிக்க உதவும்.   

இச்சந்திப்பின் நடைமுறைகள் பற்றி - மதுரைப் பதிவர்கள் அனைவரும் அடிக்கடி கூடிப் பேசி முடிவெடுப்போம். 

அனைத்துப் பதிவர்களும் தங்களது கருத்துகளை அனுப்ப வேண்டிய முகவரி : cheenakay@gmail.com

தொடர்புக்கு :  கா.சிதம்பரம் - cheenakay@gmail.com
                                 தமிழ்வாசி பிரகாஷ் - thaiprakash1@gmail.com

மேலே உள்ள தொடர்புகள் தவிர பல்வேறு குழுக்கள் அமைக்கப் பட இருக்கின்றன -  அக்குழு  உறுப்பினர்கள் பெயர்கள் - மின்னஞ்சல் முகவரிகள் ஒரிரு நாட்களில் இங்கு அறிவிக்கப்படும். 

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா  
Monday 24 March 2014

அருமை நண்பர் வை.கோ வின் சிறுகதை விமர்சனப் போட்டி

அன்பின் சக பதிவர்களே ! 

                                                              அருமை நண்பர் 
திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் 
என்ற தனது வலைத்தளத்தினில் 
வாரந்தோறும் நடத்திவரும்

 “சிறுகதை விமர்சனப் போட்டி” யில் 
அனைவரும் பெரும் திரளாகக் கலந்துகொண்டு 
பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். 
வாரம் ஒரு போட்டி. 

உடனுக்குடன் போட்டி முடிவுகள் பற்றி 

சுடச்சுட அறிவிப்பு. 

ஆண்டு முழுவதும் பரிசுகள். 

அள்ளிச்செல்ல வாருங்கள்.

மேலும் விபரங்களுக்கும் 

விதிமுறைகளுக்கும் இணைப்பு:


நல்வாழ்த்துக்ள்
நட்புடன் சீனா