ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Monday 9 June 2008

சிவாஜி வாயிலே ஜிலேபி

சி வா ஜி
வா யி லே
ஜி லே பி

இது நாங்க ஆரம்பப் பள்ளியிலே படிச்சது
எப்படிப் படித்தாலும் ROW ROW வாகப் படித்தாலும் சரி
COLUMN COLUMN ஆகப் படித்தாலும் சரி
சிவாஜி வாயிலே ஜிலேபி தான்

ஜிலேபி சிவாஜி வாய்க்கு எப்படிப் போனது ?
யாருக்குத் தெரியும் ? அவரே மறுபடி வந்து சொன்னாத்தான் தெரியும். நாங்களும் இந்தக் கேள்விய 50 வருசமாக் கேக்குறோம் - ஒரு பாவியும் பதில் சொல்ல மாட்டேங்குறான். என்ன செய்வது ?

சிவாஜிலே ஜி இருக்கு
ஜிலேபிலே ஜி இருக்கு
அதனாலே சிவாஜிக்கும் ஜிலேபிக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கணும். சிவாஜிலே கடைசிலே இருக்கற ஜி - ஜிலேபில்லே மொதல்லே வந்துடுச்சு - எப்படி - எவனுக்குத் தெரியும்.

பின்னாலே இருந்தது முன்னாலே போனா அது பின்னவீனத்துவமா ? இல்ல முன்னாலே இருந்தது பின்னாலே போன அது பின்னவீனத்துவமா ? இந்தக் கேள்விக்கும் ஒருத்தனும் பதில் சொல்ல மாட்டேங்குறானுங்கய்யா .

சிவாஜி நடிச்ச படத்துலே எத்தனை படத்துலே ஜிலேபி நடிச்சுது ?
ஜிலேபி செய்யுற ஓட்டல்லே எத்தனை ஓட்டல்லெ சிவாஜி படம் இருந்திச்சி ? இது இன்னொரு பதில் தெரியாத கேள்வி .

நம்ம மங்களூர் சிவாவை ஒருத்தன் வட இந்தியாவிலே மரியாதை நிமித்தம் சிவா ஜீ ன்னு சொல்லிட்டான்யா - அவ்ளோ தான் - சிவாவுக்கு தானும் நடிகர் திலகம்னு ஒரு நெனப்பு வந்துடுச்சி. எங்கே ஹோட்டலுக்குப் போனாலும் ஜிலேபி தான் மொத ஆர்டராம்.

நெசமா நல்லவன்னு ஒருத்தன் இருக்கான்யா - சிவாவோட பதிவ அப்படியே சுட்டுப் போட்டுட்டான்யா ஒரு பதிவு - ஜிலேபிலேந்து ஜி யைச் சுட்டு சிவாஜி போட்டுக்கிட்ட மாதிரி - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வர்ட்டா - நான் யாரையும் கூப்பிடலேப்பா - இதெல்லாம் தொடர வேணாம்

Tuesday 3 June 2008

வைகையில் வந்திறங்கிய வள்ளல் அழகர்

ஐயிரண்டு அவதாரம் அவணியில் எடுத்த

அழகரவர் ஆடிவருவார் !

அரிதாரம் பூசிவரும் அன்பர்களின்

கூட்டத்திலே அழகரவர் ஆடிவருவார் !நான்மாடக் கூடலிலே திருமணமாம் !

நாள்தோறும் வீதியிலே தேர்வருமாம் !

அழகர்மலை அழகனவன் சீர்வருமாம் !

அதைக்காண கோடிசனம் ஊர்வருமாம் !வாராறு வாராறு மலையை விட்டு

வாராறு வாராறு அழகரவர் வாராறு !தங்கையவள் திருமணத்தை

தமையனவர் நடத்திவைக்க

தங்கக்குதிரையிலே வாராறு !

அடவாராறு அழகரவர் ! வாராறு !சித்திரையில் வைகறையில்

வைகைநதி பொன்கரையில்

பொற்பாதம் நனைக்க வாராறு !

அடவாராறு அழகரவர் ! வாராறு !தீவினைகள் அத்தனையும்

தீர்த்துவைக்க அழகரவர்

தீர்த்தங்கள் கொண்டு வாராறு !

அடவாராறு அழகரவர் !

வாராறு ! வாராறு !


http://www.imeem.com/people/opAOIMP/music/Epo8etQv/cheena3wave/

சீனா .... (Cheena)----------------------