ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday 27 May 2008

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்

நண்பர்களே, பேசும் பொழுது சிறிது நேரம் மட்டுமே பேசி, அதற்குள் சில கருத்துகளையோ, எண்ணங்களையோ மற்றவர்க்குப் புரியும் வண்ணம் எடுத்துரைப்பது எவ்வளவு கடினம் தெரியுமா ?

ஒரு புகழ் பெற்ற பேச்சாளர் ஒரு பொதுக்கூட்டத்துக்குச் சென்றார். அங்கு அவர் பேச்சாளராக அழைக்கப் படவில்லை. பார்வையாளராகத் தான் சென்றிருந்தார். கூட்ட மேடை நெருங்கிய உடன், அங்கு குழுமியிருந்த மக்கள் இவரை அடையாளம் கண்டு, இவரைப் பேசுமாறு வேண்ட, மேடை ஏறி, தாம் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என வினவினார். மக்களோ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள் எனக் கூற, பேச்சாளரோ, அதிக நேரம் பேச அழைத்தீர்கள் என்றால் நான் எளிதாகப் பேசி விடுவேன். ஒரு பிரச்னையுமில்லை. ஆனால் பத்து மணித்துளிகள் மட்டுமே பேசவேண்டுமெனில், அதற்கு நான் ஒரு மாத காலம் சிந்தித்து, பிறகு தான் மேடை ஏற வேண்டும் எனக் கூறினார். காரணம் என்ன வெனில், என்ன வேண்டுமானாலும் பேசலாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் என்றால் அது எளிது. கை வந்த கலை. ஆனால் குறிப்பிட்ட நேரமே, அதுவும் குறைந்த நேரமே பேச வேண்டுமெனில், அது கடினமான செயல்.

ஏனெனில் குறைந்த நேரத்தில் ஒரு கருத்தினை, ஒரு எண்ணத்தை, ஒரு பொருளினைப் பற்றிப் பேச வேண்டுமெனில், அதற்கு அதிகம் பயிற்சி வேண்டும். குறித்த காலத்தில், பேச வேண்டியவைகளை எல்லாம் பேச வேண்டும். பொருள் புரியப் பேச வேண்டும். கேட்பவர் மனதில் தைக்குமாறு பேச வேண்டும். அது அனுபவத்தில் தான் வரும். திட்டமிட்டால் தான் வரும்.

நண்பர்களே !! பேசிப்பழகுக !! பொருள் புரியப் பேசுக !!

அன்புடன் ..... சீனா
------------------------

25 comments:

cheena (சீனா) said...

நண்பர்களே !! வருக - கருத்துகளைத் தருக

சதங்கா (Sathanga) said...

சீனா ஐயா,

அருமையான, சுருக்கமான பதிவு. பேச்சு உண்மையிலேயே ஒரு கலை தான். மற்ற விலங்குகளில் இருந்து மனிதன் மாறுபட்டு நிற்கும் குணங்களில், பேச்சு முதன்மை பெறுவதும் கூட அல்லவா.

cheena (சீனா) said...

சதங்கா

பேச்சு என்பது மனிதனுக்கு மட்டுமே தெரிந்த கலை. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

பிரேம்ஜி said...

வணக்கம் சீனா சார்! சுருங்க சொல்லி விளங்க வைத்தலை அழகாக சுருங்க சொல்லி விளக்கிவிட்டீர்கள்.

சென்ஷி said...

:))

நல்ல சுவையான கருத்து...

நிலா said...

இப்ப இருந்தே இந்த மாதிரி பழகிக்கிறேன் தாத்தா :)

cheena (சீனா) said...

பிரேம்ஜி

வருகைக்கும் கரூத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

சென்ஷி,

நான் மறு மொழி போடலே - என்ன எழுதுவேன்னு உங்களுக்குத் தான் தெரியுமே

cheena (சீனா) said...

நிலாச் செல்லம், நல்லது - பழகிக்க - ஆமா வூட்லே நந்து, சசி கிட்டே நெரெயப் பேசனும் - ஆமா சொல்லிப்புட்டேன்

jeevagv said...

எழுதுவதிலும் சுருக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன் ! :-)

cheena (சீனா) said...

வருகைக்கு நன்றி ஜீவா

பேசுவது மட்டுமல்ல - எழுதுவதும் சுருக்கமாக இருப்பின் நலம் தானே !!

துளசி கோபால் said...

நன்றி. வணக்கம்

cheena (சீனா) said...

நன்றி வணக்கம் - இது என்ன மறுமொழியோ தெரிய வில்லை துளசி

NewBee said...

சீனா ஸார்,

நலமா?

சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது.

சுருங்கச்சொல்லுதலும் 'சொலல் வல்லனில்' அடக்கம் தானே.

தங்களின் அடுத்த பதிவு படிக்க நாளை வருகிறேன். :D ;)

cheena (சீனா) said...

புது வண்டே

65ம் அதிகாரம் என்பது நான் முதன் முதலில் கற்ற அதிகாரம்.

அனைவரும் கற்க வேண்டிய அதிகாரம்

நல்வாழ்த்துகள்

குமரன் (Kumaran) said...

உண்மை தான் ஐயா.

cheena (சீனா) said...

குமரன் - இவ்வறிவுரை ஆன்மீகப் பதிவர்களான - குமரன், கேயாரெஸ், மௌளி ஆகியோருக்குப் பொருந்துமா ? சுருங்கச் சொன்னால் விளங்குமா ?

குமரன் (Kumaran) said...

எங்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் முறை செய்யுள்களிலும் வடமொழி சூத்திரங்களிலும் பயிலப்பட்டு வந்திருக்கின்றன. திருக்குறளும் அப்படித் தானே. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் மிக முக்கியம்; ஆனால் மிகக் கடினமானது.

cheena (சீனா) said...

குமரன் - உண்மை - இலக்கியங்களிலே சுருங்கச்சொல்லி இருக்கிறார்கள். - கடைப்பிடிக்கலாம் - பழக வேண்டும் .

ஆயில்யன் said...

//cheena (சீனா) said...
நன்றி வணக்கம் - இது என்ன மறுமொழியோ தெரிய வில்லை துளசி
//

நான் சொல்றேன்
நான் சொல்றேன்

பதிவுக்கு நன்றி!

பதிவர்க்கு வணக்கம் !


துளசியக்கா கரெக்ட்டாஆ!

பரிசல்காரன் said...

எனக்கு வராத, நான் வியக்கும் விஷ்யம் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்..

பல ஞாபகங்களை வர வைத்துவிட்டீர்கள்!

cheena (சீனா) said...

அன்பு நண்ப பரிசல்காரன்
//
பல ஞாபகங்களை வர வைத்துவிட்டீர்கள்!
//

நினைவுகளை பதிவுகளாக்குங்களேன்

குடுகுடுப்பை said...

என்னமோ புரியுது

Thekkikattan|தெகா said...

ஆமாம் ஆனா, கேட்பவர்கள் ரொம்ப புத்திசாலியாகவும், அலெர்ட் ஆகவும் இருக்கணும் இல்லன்னா , வடை போயிடும் 10 நிமிஷத்திற்குள்ளர :)

cheena (சீனா) said...

உண்மை தெகா


கேட்பவர்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தி கேட்க வேண்டும் - இல்லை எனில் பயனில்லை

நல்வாழ்த்துகள் தெகா