ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 9 March 2008

தந்தையர் தின வாழ்த்து - அசை போட்டது

இது எனது அருமைச் செல்வம் - அயலகத்தில் இருந்து எனக்கு அனுப்பிய தந்தையர் தின வாழ்த்து. பழைய கோப்பிலிருந்து தற்செயலாகக் கண்ணில் பட்டது. படித்து ரசித்து அசை போட்டது.

--------------------------------------------------------------------------

அன்பில் பண்பில் ஆற்றலில் என்றும்
அமைதிப் பெருங்கடல் எங்கள் அப்பா !
அலைகடல் ஒலிக்கும் ஆயினும் அமைதியாய் !
வந்தார் மகிழ வழங்கி மகிழ்வார் !
வழித்துணை இருந்து வாழ்த்தி மகிழ்வார் !
சென்றார் சிந்தனை சிறிதும் வேண்டார் !
சிறந்தார் என்றும் சேர்ந்தே இருப்பார் !
சொல்லில் செயலில் சோர்ந்தார் இல்லை !
செய்தொழில் சிறந்தே செழித்தவர் என்றும் !
அவர்துணை ஆனார் என்றும் அம்மா !
சொன்னது செய்தது சேர்த்தது சிறந்தது
எதிலும் என்றும் இசைந்தே நின்று
ஏற்றம் தேடி இணைந்தே இருந்து
போற்றும் பெயரோடு பொருந்தி வாழும்
அம்மா அப்பா என்றும் சிறக்க
எல்லாம் வல்ல இறையடி தொழும்
தந்தையர் தினத்தில் தலைமகள் வாழ்த்திது !
--------------------------------------------------------------------------------

25 comments:

தருமி said...

ம்..ம்ம்..

ஜீவி said...

குண்ச்சான்றோரை---
நாங்களும் சேர்ந்து வாழ்த்துகிறோம்.
வாழ்க, பல்லாண்டு!
அன்புடன்,
ஜீவி

நிஜமா நல்லவன் said...

பண்பான மகளை பெற்றெடுத்த
பாக்கியசாலிகள் சீனா தம்பதியர்.

அப்பப்ப ஏதாவது பதிவு போடுங்க சார். அடிக்கடி வந்து பார்ப்பேன். புதுசா ஏதும் இருக்கிறது இல்லை. அனுராதா மேடம் நல்லா இருக்காங்களா? அவங்கள பற்றிய பதிவ உங்க ப்ளாக்ல தான் முதல்ல படிச்சேன்.

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள் சீனா சார்..நினைவுகளை அசை போட்டுக் கொண்டே படித்தது அவர்கள் கூட இருந்தது போலவே இருந்திருக்கும்..

cheena (சீனா) said...

என்ன தருமி அண்ணே

என்னா ம்ம்ம்ம்ம் னா என்னா அர்த்தம்

சொல்லுங்க சொல்லுங்க சொல்லிக்கிட்டே இருங்க

cheena (சீனா) said...

நண்பரே ஜீவி,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஜமா நல்லவன். அனுராதா பற்றிய அப்டேட் சீக்கிரமே போடுறேன்.

cheena (சீனா) said...

மலர், மகளுடைய மடல்களைப் படித்துக் கொண்டிருந்த போது இது கிடைத்தது. இருவருமாக சிறிது நேரம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தோம். இப்போதெல்லாம் மயில் தான் - ஆங்கிலத்தில்.

சேதுக்கரசி said...

உங்களுக்கும் உங்கள் செல்வத்துக்கும் (செல்வங்களுக்கும்?) வாழ்த்துக்கள் :-)

cheena (சீனா) said...

வாழ்த்துக்கு நன்றி சேது

நானானி said...

சீனா!
பெற்றவரை தந்தையர்தினத்தில் நினைவு கூர்ந்து வாழ்த்தும் அதுவும் நல்ல தமிழ் கவிதையில்(நூலைப் போல சேலையோ?)வாழ்த்தும் உங்கள் அருமை மகளுக்கு என் வாழ்த்துக்கள்.
கூடிய சீக்கிரம் 'தாத்தா தினமும்' வரும் அப்போது உங்கள் பேரப் பிள்ளைகளின் வாழ்த்துக்களும் மழலைக் கவிதையில் கிடைக்க இப்போதே வாழ்த்துகிறேன்.

ரசிகன் said...

அருமையா எழுதியிருக்காங்க... இப்படி பாடல் எழுதற அளவு குழந்தைகளுக்கு நல்லா தமிழ் ஆர்வத்தை கற்றுக்கொடுத்ததற்க்கு உங்களுக்கும் அக்காவிற்க்கும் பாராட்டுகள் சீனா சார்.:).

ரசிகன் said...

பிள்ளைகளின் பாசமும்,அதை படிச்சுட்டு மகிழ்ச்சியுடன் வெளியிட்ட உங்க நெகிழ்வும் ...நம்ம நாட்டுக்காரங்களுக்கே உள்ள வரம் அது:)

குமரன் (Kumaran) said...

வாழ்த்து நல்லா இருக்குங்க சீனா ஐயா.

cheena (சீனா) said...

சகோதரி நானானி, - மிக்க் அமகிழ்ச்சி - படித்தமைக்கும், வாழ்த்தியமைக்கும். தாத்தா தினம் வர வேண்டும் - பேரன் பேத்திகள் வாழ்த்த வேண்டும் - மழலையில் - மனம் மகிழ்வோம் நாங்கள் .

cheena (சீனா) said...

ஆம் ஸ்ரீ, அவள் கணினிக்கும் தமிழுக்கும் பிறந்தவள் - ஆகவே அது இயல்புதான்

cheena (சீனா) said...

உண்மை ஸ்ரீ, மக்கட் செல்வங்கள் வாழ்த்தும் போது நெஞ்சம் நெகிழும்.
ம்ம்ம்ம்ம்ம்ம்

cheena (சீனா) said...

படித்தமைக்கும் நன்று எனக் கூறியமைக்கும் நன்றி குமரன்.

நந்து f/o நிலா said...

மனம் நெகிழும் எழுத்தை படிக்கும்போது எப்போதும் பழைய நினைவுகள்தான் வரும்.

ஆனால் சீனா உங்கள் மகளின் இந்த வாழ்த்து படிக்கும்போது நெகிழும் மனத்தோடு எதிர்காலம்தான் மனதுக்குள் வந்தது. :)

நன்றி

cheena (சீனா) said...

நந்து,

நன்றி நந்து

நெகிழ்விற்கு மீண்டும் நன்றி

NewBee said...

வணக்கம் சீனா sir,

என்னைத் தெரியுமாஆஆஆஆஆ?
நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகன்.என்னைத் தெரியுதாஆஆஆஆஆ?

ok..ok..தலைமகள் வாழ்தோட எங்க வலைப்பூவுக்கும் ஒரு visit கொடுங்க..

http://naanpudhuvandu.blogspot.com/

புதுசா ஒரு doubt வந்துச்சு? பதில் சொல்லுறீங்களா? pls....

ரூபஸ் said...

முதன்முதலா தந்தையர்தின வாழ்த்தைப்பற்றி கேள்விப்படுகிறேன்..

கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்

cheena (சீனா) said...

ரூபஸ் - நன்றி - கேள்விப்பட்டதற்கு

cheena (சீனா) said...

புதுவண்டே - உனது வீட்டிற்கு வந்து ஐயம் களைகிறேன்.

NewBee said...

சீனா ஸார்,

வணக்கம்! நலமா?

இங்கு தினமும் பதிவு பார்க்க வந்து ஏமாந்து போகிறேன்.

வலைச்சரம் பார்த்தேன் -பொறுப்பாசிரியர் 'சீனா.....cheena'.
நின்று படித்தேன். உங்கள் புத்தாண்டு சபதம் பிடித்தது. என் பதிவுக்கு உங்களின் பின்னூட்டம், எனக்கு உற்சாகம்.

பின்னூட்டமே பிடித்தது என்றால், உங்கள் 'பதிவு' எப்படி இருக்கும்? எழுதுங்கள் அய்யா. ஆபீஸ் என்பது நம்மை விடாத ஒன்று. நாம் தான் அதை அப்போ அப்போ விடணும்.

-காத்திருக்கும்
புது வண்டு

பி.கு.: தஞ்சையில் வாங்கிய மாம்பழம், மதுரையில் கற்ற சைக்கிள், தங்கமணிக்குத் தெரியாமல் 'கேரள நன்நாட்டிளம் பெண்களுடன் ஆடிய'.......................................உரையாடல் :), சென்னை மவுண்ட் ரோட் டிராபிக்...மதுரை தேர்த் திருவிழாப் படங்கள் எதை வேண்டிமானாலும் கொடுங்களேன்.

தங்கமணிய கேட்டதாச் சொல்லுங்க. வ.வா.ச. போட்டி பதிவு நல்லா இருந்ததுன்னு சொல்லுங்க.

----------------------------------
இந்தப் பின்னூட்டம் பிரசுரிக்க வேண்டாம்...பதிவு போடுங்கள். :).