ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday 9 October 2013

இன்பச் சுற்றுலா - 6, 7 மற்றும் 8 ம் நாள் அக்டோபர் 2013

அன்பின் நண்பர்களே ! 

2013 அக்டோபர் 6, 7 நாட்களில் ஒரு இன்பச் சுற்றுலாவாக நானும் எனது அருமைத் துணைவியாரும் திருச்சி - பதிவர் சந்திப்பு -  மற்றும் தஞ்சை மாநகரில் உள்ள  கோவில்கள் - வைத்தீஸ்வரன் கோவில் மற்றும்  தஞ்சையில் நான் 1950ல் பிறந்து வளர்ந்து தவழ்ந்த வீட்டினையும், ஓடி விளையாண்ட சஙகர மடத்தினையும் மேல வீதியில் உள்ள சங்கர நாராயணர் கோவிலையும், காமாட்சி அம்மன் கோவிலையும், பெரிய கோவிலையையும்,  மாரியம்மன் கோவிலையும் கண்டு மகிழ்ந்தோம். 

மறு நாள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்து மகிழ்ச்சியோடு மதுரை திரும்பினோம். 

06.10.2013 : 

திருச்சியில் பதிவர் வை.கோபால கிருஷ்ணன் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் எதிர் பாராத விதமாக நவராத்திரி கொலு வந்து விட்ட படியால் பெண் பதிவர்கள் பலரால் கலந்து கொள்ள இயலவில்லை. விடுவோமா நாங்கள் . நண்பர்கள் வை.கோவும் தமிழ் இளங்கோவும் நாங்கள் தங்கி இருந்த பெமினா ஹோட்டலுக்கே வந்து சேர்ந்தனர். மாலை 5 மணீ அளவில் பதிவர் சந்திப்பைத் துவக்கினோம். 

ஏறத்தாழ இரண்டு மணீ நேரம் அளவளாவி மகிழ்ந்தோம்.

புகைப் படங்கள் கீழ்க்கண்ட பதிவுகளில் உள்ளன்.

இருவரும் பதிவர் சந்திப்பினைப் பற்றி எழுதிய பதிவுகள் : பிறகு பெண் பதிவர்களைச் சந்திக்க அவர்கள் வீட்டிற்கே நாங்கள் வைகோவின் துணையோடு சென்று சந்தித்து பேசி மகிழ்ந்து திரும்பினோம்.  திருமதி கீதா சாம்பசிவம், திருமதி ஆதி இலட்சுமி மற்றும் ரிஷபன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இரவு நெடு நேரமாகி விட்டது. 

07.10.2013

அயர்ந்து தூங்கிய பின்னர் மறு நாள் காலை 8 மணி அளவில் தஞ்சை புறபட்டோம். தஞ்சையில் முதலில் சென்ற இடம் அகத்தியர் குடில். அங்கே அருள் வள்ளலார் வீற்றிருக்கிறார்.  அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை என்று நாம் அறிந்தோ அறியாமலோ அனைவரும் இத்தொடரை உச்சரித்து உள்ளோம். இந்த இடத்தில் அமர்ந்து அகத்தியர் குடிலின் தலைவரோடு உரையாடிய போது அதன் பொருளை உணர்ந்தோம். பிறர் துன்பம் போக்க மனம் கசிந்துருகலே கருணை என்று ஒரு ஒருமைப் பாட்டியக்கத்தைத் தோற்றுவித்த வள்ளலாரின் உருவச் சிலையோடு அந்த மடம் திகழ்கிறது. மடம் உண்மையில் நம் மடமை போக்குகின்ற இடம்தான் - அதை உணர்ந்தவற்கு !

மனமும் மருந்தும் மலரும் நம் நோய் தீர்க்குமென்பதை அங்கு உரையாடிய அந்த நேரங்களில் உணர்ந்தோம். உள்ளத்தில் ஓர் இடத்தை ஏற்படுத்தி  - அங்கே உன் நினைவை இறைவனாக வீற்றிருக்கச் செய் என்ற தத்துவம் செய்முறை விளக்கம் போல் காட்சி தந்தது. ஓர் உயர்ந்த பீடம் அதன் மேல் ஓர் அழகிய சிம்மாசனம். அதன் நேர் மேல் ஓர் ஒளிவிளக்கு.  அந்த விளக்கொளியில் நம் மனத்தைக் கொண்டு போய் வீற்றிருக்கச் செய்தால் இறையன்பு தோன்றும். 

இதுதான் இரண்டாம் நாள் இன்பச் சுற்றுலாவில் நாங்கள் தஞ்சையில் முதலில் கண்ட இடம். 

உடனே எங்கள் உள்ளத்தில் காணும் இறைவனைக் காணத் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ( பெரிய கோவில்) நோக்கிச் சென்றோம். காலால் நடந்து கைகளால் தவழ்ந்து தலையால் நகர்ந்து உடல் தேய்ந்து எலும்புவாய் உருண்டு பிரண்டு கைலாயம் சென்ற காரைக்கால் அம்மையாரின் காட்சியைக் கண்ணிலும் மனத்திலும் தேக்கி கால்கள் சுட்டெரிக்கும் உச்சிப் பொழுதிலே ஓடிச் சென்று பெருவுடையாரைக் கண்ட காட்சி பெரிதும் மகிழ்வினைத் தந்தது. ( பெரிய கோவிலைக் காண காலையிலும் மாலையிலும் செல்லுதல் வேண்டும் )

அடுத்து மதிய உணவிற்குப் பின் நான்  - 1 முதல் 5 வரை படித்த நாயணக்காரத் தெருவில் உள்ள டி.கே.சுப்பையா நாயுடு துவக்கப் பள்ளி சென்று தலைமை ஆசிரியை மற்ற ஆசிரியர்களுடன் கலந்துரையாடி என்னுடைய 1955 ஏப்ரல் முதல் -1960 மார்ச் வரை   எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்தோம். 

பள்ளியினைச் சுற்றிப் பார்த்து பழைய நினைவினை மனதிற்குக் கொண்டு வந்தேன்.  

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆண்டு விழாவிற்கு அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொண்டனர். அழைப்பு அனுப்புக - வருகிறோம் எனக் கூறி அலைபேசி எண், முகவரி, ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டோம்.  

1960 ஏப்ரல் முதல் 1963 மார்ச் வரை - 6,7 மற்றும் 8ம் வகுப்பு வரை படித்த - தஞ்சை தெற்கு வீதியில் உள்ள வீரராகவ உயர் நிலைப் பள்ளி இயங்கிக் கொண்டிருக்கும் மங்கள விலாஸ் கட்டிடத்திற்குச் சென்று ஆசிரியப் பெருமக்களைக் கண்டு அறிமுகப் படுத்திக் கொண்டு வகுப்பறைகளுக்கும் சென்று மகிழ்ந்தோம். 

வகுப்பறையில் சென்று மாணவச் செல்வங்களைக் கண்டு - உரையாடி வந்தேன். இப்பள்ளியில் படித்துத் தான் வங்கியில் முதனமை மேலாளராகப் பணியாற்றும் அளவிற்கு நான் பண்பு பெற்றேன். நீங்களும் நன்றாகப் படித்து நல்ல பிள்ளைகளாக வளருங்கள் என்று வாழ்த்தினேன். 

அன்பால் மாணவச் செல்வங்கள் என்னிடம் கையொப்பம் கேட்டு வண்டுகளாய் என்னை மொய்த்துக் கொண்டனர். நானும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் அன்புடனும் வாழ்த்துகளுடனும் கூடிய கையொப்பம் இட்டேன். 

படித்தது வீரராகவ உயர்நிலைப் பள்ளி என்றாலும் விளையாடச் சென்றது எல்லாம் கல்யாண சுந்தரம் உயர் நிலைப் பள்ளி தான். ஆகவே அங்கும் சென்று ஆசிரியப் பெருமக்களைக் கண்டு பேசி மகிழ்ந்து வந்தோம். 

பிறகு நான் பிறந்த, மேல வீதியில் சங்கர மடத்திற்கு அருகில் உள்ள வான்மாமலை மடத்தின் வீட்டினைத் தேடிக் கண்டு பிடித்து வீட்டினில் உள்ளவர்களிடம் என் பிறந்த வீடு இது ( 1950 ) எனப் பெருமை பேசி வீட்டினைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தேன். அன்றைக்கு இருந்தது போலவே இன்றும் பழமை மாறாமல் உள்ளது. 

அதே தெருவில் அருகில் உள்ள சங்கர நாராயணர் கோவில் அன்று அடிக்கடி நான் சென்று வந்த இடம். நான் சுற்றி வந்த கோயில் வளாகம் அப்படியே என் நினைவிற்கு வந்தது. 

அதனால் தான் என்னையும் அந்த இறைவன் பெயரால் - வீட்டில் சங்கர் என்றே அழைத்தார்கள். 

மதிய உணவிற்குப் பின் சென்ற இடம் தஞ்சையில் சிறப்பு வாய்ந்த அரண்மனையில் உள்ள பெரியதொரு பழம் பெருமை வாய்ந்த நூலகம்.
இதன் வரலாற்றைக் கேட்ட பொழுதினிலேயே நாமறிந்த வரலாற்றில் எத்த்னை இடைச் செருகல்கள் என்பதனை அறிந்து பெருமூச்செறிந்தோம். 

வரலாறு எப்படிக் காக்கப் பட வேண்டுமென்ற அரசு நடை முறைகள் -. எத்தனை செயல்முறைகள் - அத்தனைக்கும் செப்பேடுகள் - ஓலைச் சுவடிகள் - கையெழுத்துச் சுவடிகள் - ஆவணங்கள் - அறிவியல் மருத்துவம் ஓவியம் அரசியல் வரலாறு என்று வகை வகையாய் எண்ணற்ற நூற் பதிவுகள் . இவற்றை பாதுகாத்த அறிஞர்கள்.
   
அடுத்து நாங்கள் சென்று வந்த காமாட்சி அம்மன் கோவில் தெருக்கோடியில் அமைந்த பெரிய கோவில். அக்கோவிலுக்கும் சென்று அம்மனை நவராத்ரிக் கோலத்தில் கண்டு மகிழ்ந்தோம்.

தஞ்சையைச் சார்ந்த மிகவும் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவிலுக்கும் சென்று வந்தோம். பெரியதென்றால் மிகவும் பெரியதாய் இருந்தது. 

08.10.2013

அடுத்த நாள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று திவ்ய தரிசனம் கண்டு இறை யருள் பெற்று மகிழ்வுடன் மதுரை திரும்பினோம். 

தஞ்சையில் எங்களீன் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அழைத்துச் சென்று இடங்களைப் பார்த்து மகிழ அன்புடன் வந்து உதவிய பண்பாளர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள். இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் உமா மகேசுவரனார் மேல் நிலைப் பள்ளியில் முதுநிலைக் கணித ஆசிரியராகப் பணியாற்றுபவர். தஞ்சையில் நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் இவர் அறிமுகமானவராக இருந்தது எங்களுக்கு மிகவும் உதவியாய் இருந்தது. 

கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன் முதலிய மூன்று நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர். தமிழ்ப் பொழில் இதழில் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகள், சாதனைகள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகின்றார்.

அவர் இல்லத்திலேயே எங்களைத் தங்க வைத்து விருந்தோம்பிய அவரின் அன்பு எங்களைத் திக்கு முக்காட வைத்தது. அவர் பெற்றோரும் துணவியாரும பிள்ளைகளும் அருமையாய் எங்களை வரவேற்றனர்.   

அனைவருக்கும் நல்வாழ்த்துகள் 
நட்புடன் சீனா 51 comments:

cheena (சீனா) said...

அன்பின் நண்பர்களே - தஞ்சை நிகழ்வுகளின் புகைப் படங்கள் நாளை வெளியிடப் படும். பொறுத்தருள்க.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உங்கள் சுற்றுலா பற்றிய தகவல் அனைத்தும் பகிர்ந்தமைக்கு நன்றி..நல்ல அனுபவமாக இருக்கிறதே...பிறந்த இடத்தையும், படித்த இடத்தையும் எவ்வலு மகிழ்ச்சி தரும் ஒன்று! அதோடு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும்..அருமை ஐயா!

cheena (சீனா) said...

அன்பின் கிரேஸ் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்பின் திரு. சீனா ஐயா,

வணக்கம் ஐயா.

தங்களின் பயணக்கட்டுரை அருமை, எளிமை, இனிமை.

தங்களை திருச்சியில் சந்திக்கும் வாய்ப்பு பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளித்தது ஐயா.

பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

>>>>>

துரை செல்வராஜூ said...

நல்லதொரு அனுபவம். மலரும் நினைவுகளில் மலர்ந்த மகிழ்ச்சி வெள்ளம். வாழிய பல்லாண்டு!.. திரு. கரந்தை ஜெயகுமார் அவர்களை நான் நேரில் அறிவேன். உயர்ந்த பண்பாளர். தஞ்சை மண்ணின் விருந்தோம்பல் இங்கே கண்டேன். மீண்டும் நல்லதொரு நாளில் சந்திக்க இறைவன் அருள் புரியட்டும்!..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அன்பால் மாணவச் செல்வங்கள் என்னிடம் கையொப்பம் கேட்டு வண்டுகளாய் என்னை மொய்த்துக் கொண்டனர். நானும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் அன்புடனும் வாழ்த்துகளுடனும் கூடிய கையொப்பம் இட்டேன்.//

ஆஹா, நான் தங்களிடம் கையொப்பம் பெற மறந்து விட்டேனே ஐயா !

ஆனாலும் தாங்கள், நான் நீட்டிய தாள் ஒன்றில் தங்கள் துணைவியாரின் வலைத்தளத்தினைப் பற்றிய இணைப்பினை எழுதிக் கொடுத்தீர்களே, அதை பத்திரமாக வைத்துள்ளேன் ஐயா. அதுவே மகிழ்ச்சியாக உள்ளது ஐயா.

>>>>>

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய சந்திப்பு... மகிழ்ச்சி ஐயா... நாளையும் ஒரு சந்திப்பு என்று கேள்விப்பட்டேன்... முடிந்தால் வருகிறேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவர் இல்லத்திலேயே எங்களைத் தங்க வைத்து விருந்தோம்பிய அவரின் அன்பு எங்களைத் திக்கு முக்காட வைத்தது. அவர் பெற்றோரும் துணவியாரும பிள்ளைகளும் அருமையாய் எங்களை வரவேற்றனர்.//

அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

இனிய பயணத்தைப் பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள் + நன்றிகள்.

அன்புடன் VGK

r.v.saravanan said...

நீங்கள் தஞ்சை வருவது தெரிந்திருந்தால் நானும் தங்களை காண வந்திருப்பேன். சமீபத்தில் நான் தஞ்சாவூர் சென்றிருந்த போது திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களை கண்டு பேசி மகிழ்ந்தது ஒரு இனிய அனுபவம்

Anonymous said...

வணக்கம்
ஐயா

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு இனிய சந்திப்பு.... பற்றிய பதிவை படிக்கும் பாக்கியம் கிடைத்தமைக்கு மிக நன்றி ஐயா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இளமதி said...

பதிவர்கள் இப்படிச் சந்தித்துக்கொள்வதைப் பார்க்கும்போது மட்டற்ற மகிழ்வாயுள்ளது ஐயா!

தங்களின் படங்களையும் பார்த்தேன். மிகவும் அருமை!

sury siva said...

அதே னானயக்காரச்செட்டி தெரு வில் நான் 1962 முதல் 1968 வரை இருந்தேன்.பிறகு ராஜப்ப நகர் சென்றுவிட்டேன். அதற்குப்பின் தி. பி. எஸ். நகர் க்கு சென்றேன்.

மேலவீதியில் சங்கர மடம் இன்னமும் இருக்கிறதா ? ஓரியண்டல் பள்ளி அங்கு இருந்தது.

சுப்பு தாத்தா.

இராஜராஜேஸ்வரி said...

இன்பச் சுற்றுலா -மணக்கும் நினைவுகள் பகிர்வுகள் அருமை..பாராட்டுக்கள்..!

துளசி கோபால் said...

சிறப்பான சுற்றுலா.

எனெக்கென்னமோ..... பழகிய பழைய இடங்களைப் போய்ப் பார்க்கும் போதெல்லாம் , க்ரிமினல்கள், க்ரைம் நடந்த இடத்தைப்போய் பார்ப்பார்கள் என்பது நினைவுக்கு வரும்.

இப்போதும் வந்தது:-)))))))))))

அசைபோடுவதை மீண்டும் இப்படியே ஆரம்பிச்சு எழுதுங்க. எழுத்தை விட்டால் கஷ்டம்,ஆமா!

மகேந்திரன் said...

சுற்றுலா கட்டுரை
இதயம் நிறைத்தது ஐயா...

கீதமஞ்சரி said...

பிறந்து வளர்ந்த இடங்களையும் படித்தப் பள்ளிகளையும் பல வருடங்களுக்குப் பின்பு பார்த்து மகிழ்வது ஒரு வரம். பலருக்கும் அந்த வரம் கிடைப்பதில்லை. பழகிய இடங்கள் இடிக்கப்பட்டு புதிய நகர்களின் நிர்மாணிப்பில் நம் நினைவுகள் சிதைந்துவிடும் துயரம். தங்கள் பயண அனுபவமும் பகிர்வும் அருமை. பல அரிய தகவல்களையும் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி ஐயா.

ADHI VENKAT said...

தாங்களும், தங்கள் துணைவியாரும் எங்கள் இல்லத்திற்கே வந்து சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி ஐயா...

சரியாகத் தான் உபசரிக்க முடியவில்லை...

மலரும் நினைவுகளை அசை போடுவதே மிகந்த மகிழ்ச்சியைத் தரும்...

தொடார்கிறேன்.

Anonymous said...

aiyya antha theruvin peyar naanayakkara theru enru allava ithanai naatkalaaga ninaithu irunthen....

தி.தமிழ் இளங்கோ said...

அன்பின் சீனா அவர்களுக்கு வணக்கம்! திருச்சிக்கு வந்தது குறித்த விவரத்தில் திரு VGK அவர்களின் பதிவினைப் பற்றியும் எனது பதிவினைப் பற்றியும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

சிறு வயதில் நான் அடிக்கடி தஞ்சைக்கு உறவினர்கள் வீடு செல்வதுண்டு. அப்போது தெரு பெயர் தெரியாமலேயே நான் தஞ்சையில் சுற்றிய இடங்கள் நீங்கள் வசித்த இடங்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி!

// பிறகு நான் பிறந்த, மேல வீதியில் சங்கர மடத்திற்கு அருகில் உள்ள வான்மாமலை மடத்தின் வீட்டினைத் தேடிக் கண்டு பிடித்து வீட்டினில் உள்ளவர்களிடம் என் பிறந்த வீடு இது ( 1950 ) எனப் பெருமை பேசி வீட்டினைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தேன். அன்றைக்கு இருந்தது போலவே இன்றும் பழமை மாறாமல் உள்ளது. //

தஞ்சையின் பழமை இன்னும் மாறவில்லை. இப்போதைக்கு மாறாது. அன்றைக்கு இருந்தது போலவே இன்றும் பழமை மாறாமல் இருந்த நீங்கள் பிறந்த வீட்டைக் கண்டு மகிழ்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!

தஞ்சை செல்லும்போது ஒருநாள் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களைச் சந்திக்க வேண்டும்.

G.M Balasubramaniam said...

அன்பின் சீனா அவர்களுக்கு வணக்கம். இந்தப் பதிவைக் காணும்போது எனக்கு நாங்கள் மதுரை வந்தபோது உங்களை சந்தித்தது நினைவுக்கு வந்தது. சென்ற ஜூலை மாதம் நாங்களும் திருச்சி பதிவர்களைச் சந்தித்ததும் கரந்தை ஜெயக்குமாரின் அன்பில் மூழ்கியதும் நினைவுக்கு வந்தது. முகங்காணா பதிவர்களை நேரில் சந்தித்து அளவளாவுவது மகிழ்ச்சிதரும் செய்தியே. வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆஹா பிறந்த படித்த இடங்களை இவ்வளவு ஆவலுடன் சென்று கண்டு களித்து மகிழ்ந்து வந்ததை பரவசத்துடன் எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள்.
படங்களையும் எதிர்பார்க்கிறோம்.

'பரிவை' சே.குமார் said...

நீங்கள் ரசித்த சுற்றுலாவை எங்களையும் ரசிக்க வைத்து விட்டது உங்கள் பகிர்வு.

வாழ்த்துக்கள் ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் பதிவு எங்களை நெகிழச் செய்து விட்டது ஐயா. நாங்கள் செய்தது பெரிதாய் ஒன்றுமில்லை. அதற்கு ஈடாக தங்களின் அன்பு கிடைத்தது பாருங்கள், அதற்கு ஈடுஇணையில்லை.
எனது வலைப் பூவில் தங்களது வருகை பற்றி பதிவிட்டுள்ளேன் ஐயா.
http://karanthaijayakumar.blogspot.com/2013/10/blog-post_12.html

ரிஷபன் said...

தங்களையும் துணைவியாரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி !

மதுரை சரவணன் said...

அருமையான நிகழ்வுகள். தாம் படித்த பள்ளியை நினைவு வைத்து சென்று பார்த்தமை நெகிழ்ச்சி அடைய வைக்கிறது.. முதல்வரையே கொலை செய்யும் காலத்தில் வாழும் தமிழ் மாணவர்கள் மத்தியில் நீங்கள் முன் உதாரணமாக இருந்தமைக்கு வாழ்த்துக்கள். உங்களை போன்ற பெரியவர்கள் பள்ளிகளுக்கு சென்று உரையாடல் நிகழ்த்துவது மாணவர்களின் மன ஓட்டத்தை முறைப்படுத்த உதவும். வாழ்த்துக்கள்.. பகிர்ந்தமைக்கு நன்றி

நிகழ்காலத்தில்... said...

விரிவான கட்டுரை .. மகிழ்ச்சி.. அதிலும் ஆசிரியப் பெருமக்களைச் சந்தித்தது நெகிழ்ச்சி....பிறந்த வளர்ந்த வீட்டினை பார்த்து பால்யகால நினைவுகளை மீட்டெடுத்ததில் உங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி..:)

அன்புடன் புகாரி said...

அன்பினிய சீனா,

தஞ்சை வரும்போது நானும் ஊரில் இல்லையே என்று ஏக்கமாக இருக்கிறது. இந்த சுகங்களையெல்லாம் இழந்துதான் இங்கே கணினிக் குப்பை கொட்டிக்கொண்டு....

உங்களை மதுரையில் சந்திக்க வேண்டும் என்ற என் ஆசையும் இன்னும் நிறைவேறவில்லை!

அன்புடன் புகாரி

சித்திரவீதிக்காரன் said...

மூன்று நாட்களில் படித்த பள்ளி, மாணவர்கள், முக்கிய கோயில்கள், பதிவர்கள் எல்லாரையும் சந்தித்ததை வாசித்த போது மிகவும் மகிழ்ச்சியாகயிருக்கிறது. திரும்பிப் பார்ப்பதும், மீண்டும் இளமைக்காலத்தை நோக்கி பயணிப்பதும் அற்புதமான அனுபவம். வீட்டில் என்னையும் சங்கர் என்றுதான் அழைப்பார்கள்.

பகிர்விற்கு நன்றி அய்யா.

- அன்புடன்,
சித்திரவீதிக்காரன்.

Unknown said...

அற்புதம் நல்ல தகவல் அற்புதம் நல்வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்

அ.பாண்டியன் said...

நல்லதொரு பயணம் அய்யா. பிறந்த இடம், படித்தப் பள்ளியை 50 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது தங்களின் மனம் ஆனந்தப்பட்ட நிகழ்வை எவ்வளவு விவரித்தாலும் முழுமையாகச் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். வலைப்பக்கம் நல்ல மனிதர்களின் நட்பை நாளும் கொடுப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களைப் போன்ற பெரியோரின் நட்பு என்னைப் போன்ற இளைஞர்களை வழிநடத்தும். நன்றி அய்யா.

Geetha Sambasivam said...

அருமையான இன்பச் சுற்றுலா. எங்க வீட்டிற்கு வந்தப்போ ரொம்பவே நேரம் ஆகிவிட்டபடியால் சரியானபடி உபசரிக்கவில்லை. ஏன், ஒண்ணுமே தரவில்லை. :( இன்னொரு முறை கட்டாயம் வருவீங்கனு எதிர்பார்க்கிறோம்.

Geetha Sambasivam said...

நீங்க படிச்ச பள்ளி, பிறந்த வீடு எல்லாம் மாறாமல் இருப்பது ஆச்சரியமாகவே இருக்கு. மதுரையில் நான் படித்த பள்ளி மாறிவிட்டது. :( அதோடு அங்கே போனால் ஏதோ புது இடம் போன மாதிரி ஒரு உணர்வு. :(

cheena (சீனா) said...

அன்பின் கீதா சாம்பசிவம் - கவ்லை வேண்டாம் - வெங்கட் நாகராஜ் தீபாவளி சமயத்தில் வ்ருகிறேன் என்று கூறி இருக்கிறார். அச்சந்தர்ப்பத்தில் தகவல் தாருங்கள் - நாங்களூம் ஓடோடி வருகிறோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கோவை2தில்லி - கவலை வேண்டாம் - வெங்கட் நாகராஜ் தீபாவளி சமயம் வருகீறேன் எனக் கூறீ இருக்கிறார். தகவல் தருக - ஓடோடி வருகிறோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் நண்பர்களே !

பல் அன்பர்கள் தஞ்சை நிகழ்வுகளின் புகைப்படஙகள் பகிரப் பட வில்லையே என வருந்தினர். அவர்களின் வருத்தத்தைப் போக்கும் இதமாக அருமை ந்ண்பர் கரந்தை ஜெயக்குமார் அவருஅது ப்திவில் பல படங்களை இணைத்துள்ளார். சென்று பார்க்க வேண்டுகிறேன்.

http://karanthaijayakumar.blogspot.com/2013/10/blog-post_12.html

அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Rathnavel Natarajan said...

அற்புதமான பதிவு.
நன்றி சார்.

வே.நடனசபாபதி said...

ஏற்கனவே தங்களின் திருச்சி பயணம் பற்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் மற்றும் திரு தி.தமிழ் இளங்கோ ஆகியோரின் வலைப்பதிவைப் படித்து அறிந்துகொண்டேன். தான் படித்த பள்ளியை சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரும் என்றாலும் அநேகர் அதை செய்வதில்லை. தாங்கள் படித்த ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று ஆசிரியர்களைப் பார்த்து உரையாடியதும், மாணவர்களுக்கு அறிவுரை கூறியதும் கேட்டு மிக்க மகிழ்ச்சி. திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தங்களின் தஞ்சை விஜயம் பற்றி மிக அருமையாக எழுதியுள்ளார். நிச்சயம் தஞ்சை சென்று வந்ததும் வயது குறைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்.

ஜோதிஜி said...

தமிழ் இளங்கோ பதிவில் போட்ட பின்னூட்டத்தையும் இங்கே பதிய வைக்க விரும்புகின்றேன்

என்னுடைய நான்கு வருட வலையுலக அனுபவத்தில் நான் ஆச்சரியப்பட்ட, வியந்த, பாராட்டக்கூடிய, கற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ள வலையுலக ஆளுமைகளில் திரு சீனா தானா அவர்கள் முக்கியமானவர்கள்.

பல சமயம் இவரின் வயதில் நம்மால் இது போன்று சுறுசுறுப்பாக செயல்பட முடியுமா? மற்றவர்களை வழிநடத்த முடியுமா? எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இளையோர்களுக்கு வழிகாட்ட முடியுமா? என்று யோசித்ததுண்டு. அதற்கு மேலாக சீனா தானா அவர்கள் என் டாலர் நகரம் புத்தக அறிமுக விழாவில் இருவரும் சேர்ந்து வந்ததும், அவர்களின் ஆசிர்வாதம் கிடைத்ததும் எனக்கு கிடைத்த அங்கீகாரம்.

தமிழ்மணம் சிறப்பு விருந்தினர் மூலம் பலருக்கும் ஒரு புதிய வீச்சு கிடைத்தது என்றால் என்னைப் போன்றவர்களுக்கு சீனா தானா நடத்தும் வலைச்சரம் என்பதன் மூலம் பலரின் பதிவுகளும் நட்பும் கிடைத்ததென்னவோ உண்மை.

உள்ளத்தில் நேர்மையுடன், அவர் பல தான தர்ம காரியங்களில் ஈடுபடுவதும், அது வெளியே தெரியாத அளவுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிக் கொண்டு இருப்பதையும் பார்க்கும் வாழ்க்கை என்பது எப்படி வாழ வேண்டும் என்பதையும் மாற்றம் என்பதை தன்னில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதையும் தம்பதிஇருவரும் தன் வாழ்க்கையின் மூலம் இன்று வரையிலும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை.

அவர் மனம் போல அவரின் குழந்தைகளும் புலம் பெயர்ந்து வாழ்ந்தால் எந்நாளும் ஆரோக்கியத்துடன் வாழ எங்கள் வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

துளசி கோபால் சொன்னது முற்றிலும் சரியே.

வாழ்ந்த இடத்தை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது, மாறிப்போன வளர்ச்சி, வளர்ச்சியினால் உருவான இழப்புகள், பழகியவர்களின் எண்ண மாறுதல்கள் போன்றவற்றை கவனிக்குபோது உள்ளுற உருவாகும் இயலாமை ஆச்சரியம் எல்லாவற்றையும் எழுத்தில் எழுதி முடியாது.

தொடர்ந்து எழுதுங்க.

துளசி கோபால் said...

ஜோதிஜி,

ஒருமுறை நான் இருந்த ஊரையும் படிச்ச பள்ளியையும் தேடிப்போனபதிவு இங்கே.

அது ஆச்சு 7 வருசங்களுக்கு முன்பு.

http://thulasidhalam.blogspot.co.nz/2006/03/blog-post_30.html

cheena (சீனா) said...

அன்பின் நண்பர்களே

இப்பதிவு அசை போட்டு ஆனந்தித்து கலந்துரையாடி மகிழ்ந்து - எழுதப்பட்டு 5 நாட்களாகி விட்டது. 40 மறுமொழிகள் வது விட்டன. ஆனால் நான் எதற்காக காத்திருக்கிறேன். ஒரு மறுமொழிக்குக் கூட நான் இன்னும் பதில் எழுத வில்லையே - ஏன் ? தெரியவில்லை. இன்று எப்படியாவது அனைவருக்கும் நன்றி கூறி மறுமொழி எழுதி விட இருக்கிறேன்.

அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பகிர்வு. சந்தித்த பதிவர்கள், சென்ற இடங்கள் என அனைத்தும் தெரிவித்தமைக்கு நன்றி ......

settaikkaran said...

அன்பின் சீனா ஐயா, சுவாரசியமான நண்பர்களுடனான சந்திப்பு குறித்த, சுவையான இடுகை! பகிர்வுக்கு நன்றி ஐயா!

16-10-2013 அன்று பிறந்த நாள் காணும் உங்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் ஐயா!

ADMIN said...

பிறந்து வளர்ந்த இடத்தை நீண்ட நாட்கள் கழித்துப் பார்வையிடும்பொழுது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

சிறுவயது பருவத்தில் ஆடிப் பாடித்திருந்த காலங்கள் மனதில் வந்துபோகும் அத்தருணங்கள் மனதை மேலும் மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் தருணங்கள்....

சுற்றுலா சென்ற இடங்களையும், வணங்கிய இடங்களையும் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. அதோடு மட்டுமல்லாமல் அந்தப் பகுதியில் உள்ள பதிவர்களையும் சந்திப்பது என்பது சிரமமான காரியம்தான். அதையும் செய்திருக்கிறீர்கள்.

ஒவ்வொன்றையும் நினைவு வைத்து சரியான நேரத்தில் அவற்றை செய்வதென்பது சரியான திட்டமிடல் இருந்தால் மட்டுமே சாத்தியமானது..

அனைத்தையும் அமைதியாக செய்து முடித்திருக்கிறீர்கள்..

கற்றோருக்கு சென்றவிடத்தெல்லாம் சிறப்பு...

சீனா ஐயாவிற்கும் சென்றவிடத்தெல்லாம் சிறப்பு தான்..

சுற்றுலா பயணத்தூடே கிடைக்கப்பெற்ற அனுபவத்தை அழகுற தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி ஐயா.. !!

தொடர்ந்து தங்களுடைய அனுபவங்களை எழுதுங்கள்... வாசிக்க காத்திருக்கிறோம்.. !!!

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் ஐயா,...
திருச்சி வந்தீகளா! சொல்லியிருந்தால் நானும் கலந்திருப்பேன்....

திருச்சி பதிவர்களின் தொடர்பு எனக்கு கிடைக்கவில்லை

பகிர்வுக்கு நன்றி ஐயா

தி.தமிழ் இளங்கோ said...

எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உங்கள் பயணம் பற்றி படித்ததில் மகிழ்ச்சி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. கோவை வந்தால் எங்கள் வீட்டிற்கு வாருங்கள்

நிஜமா நல்லவன் said...

வணக்கம் சீனா ஐயா. தங்களின் தஞ்சைப்பயணம் பற்றி கரந்தை திரு.ஜெயக்குமார் அவர்களின் பதிவில் முன்பே வாசித்திருந்தேன். தாங்கள் வழமை போல அசை போட்டு எழுத வெகு நாட்கள் ஆகும் என்ற நினைப்பில் உங்கள் வலைப்பூ பக்கம் வராமல் இருந்துவிட்டேன்:)

cheena (சீனா) said...

அன்பின் ஞானசேகரன் - அடுத்த முறை வரும் போது நிச்சயம் சந்திக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் நிஜமா நல்லவன் - மொத்தத்தில என்ன சோம்பேறின்னு சொல்லிட்டே - பரவா இல்ல - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

Thenammai Lakshmanan said...

தஞ்சைக்கே சென்று வந்தது போலிருந்தது. :)