ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 4 January 2009

புத்தாண்டு வாழ்த்துப் பா !!

அருமை நண்பர்களே !

எனது நண்பர் ஒருவர் புத்தாண்டு வாழ்த்தாக இக்கவிதையை எழுதி மடல் வரைந்திருந்தார். படித்தேன் - ரசித்தேன் - கடைப்பிடிக்க வேண்டுமென நினைத்தேன். நீங்களும் படியுங்களேன் !
---------------------------------------------------------
அழகாய் மௌனமாய் வீற்றிருக்கும்
பழகப் பழக
புதுப்புது செய்திகள் சொல்லும்
இரவைப் பகலாக்கும்
விடிந்தாலும் இரவாய் பயணிக்கும்
தூக்கம் கலைக்கும்
தொடர்ந்து நித்திரைக்கும்
தூது செல்லும்.

படர்ந்த சிந்தனைகளை
மெதுவாய் அசைபோடும்
புதியன தேடவைக்கும்
புதிராய் அலையவைக்கும்
தாயாய் - தாரமாய்
தலைமுறை போற்றும் சேயாய்
விரலைப் பற்றி
நிழலாய் வலம்வரும்..............

புத்தகமே - நம்
புது அகம் !!
புத்தகமே - நம்
புது யுகம் !!

வாசிப்பே சுவாசிப்பு !
வாசிப்பவரே வசிப்பவர் !
வாசித்தல் நேசிப்போம் !!
வாழ்தலில் வசந்தம் சேர்ப்போம் !!
============================
நட்புடன் .... சீனா .......
--------------------------------------------

9 comments:

cheena (சீனா) said...

பாவினைப் படித்து மகிழுங்களேன் !

செல்விஷங்கர் said...

புத்தகம் புத்தாக்கம் தருவதால் நாம் வாசிப்பை சுவாசிப்பாய்த்தான் கொள்ள வேண்டும். நல்ல கவிதை. நல்ல படைப்பு

செல்விஷங்கர் said...

புத்தகம் புத்தாக்கம் தருவதால் நாம் வாசிப்பை சுவாசிப்பாய்த்தான் கொள்ள வேண்டும். நல்ல கவிதை. நல்ல படைப்பு

பாச மலர் / Paasa Malar said...

குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் சீனா சார்..

புத்தாண்டில் ஒரு நல்ல செய்தி தந்தது இந்தப்பா..

cheena (சீனா) said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் பாசமலர். குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கவும். புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற ஒரு நல்ல செய்தி புத்தாண்டில் பரவச் செய்வது நல்ல செயல்.

கோவி.கண்ணன் said...

//வாசிப்பே சுவாசிப்பு !
வாசிப்பவரே வசிப்பவர் !
வாசித்தல் நேசிப்போம் !!
வாழ்தலில் வசந்தம் சேர்ப்போம் !!
//

முத்தாய்ப்பு வரிகள் நன்றாக இருக்கிறது.

கோவி.கண்ணன் said...

//cheena (சீனா) said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் பாசமலர். குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கவும். புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற ஒரு நல்ல செய்தி புத்தாண்டில் பரவச் செய்வது நல்ல செயல்.
//

உப்பில்லாதா சாப்பாடு வேண்டுமா ?
இரண்டாவது மூன்றாவது பின்னூட்டங்கள் போட்டவருக்கு நன்றி சொல்ல மாட்டிங்களா ?

cheena (சீனா) said...

கோவி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி

cheena (சீனா) said...

அருமை நண்ப கோவி

ஏற்கனவே உப்பில்லாத சாப்படு தான் - இனி வேறு தங்க்ஸ் பண்ணனுமா என்ன ? - சரி சரி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வி ஷங்கர்.

போதுமா கோவி