ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Friday, 31 July 2009

சிறந்த நண்பருக்கு விருது

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

குறளாசான் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே நட்பின் இலக்கணம் வகுத்துச் சென்றிருக்கிறான்.

நட்பென்பது அழகானது. அன்புணர்ச்சி உடைய மனக்கசிவே நட்பு. இறுக்கமற்றது. நினைக்குந்தோறும் நிம்மதி தருவது. நட்புக் கொண்டால் நிலைத்து நிற்கப் பாடுபடவேண்டும். நட்பின் நினைவே மகிழ்வூட்டுவதாய் நிற்க வேண்டும். ஆராய்ந்து கொள்ளும் நட்பே உயர்வானது. உள்ளும் புறமும் தூய்மையுடைய மனமே நல்ல நட்பை உருவாக்க முடியும். தோளோடு தோள் தட்டி வாய் விட்டுச் சிரிப்பது மட்டும் நட்பல்ல. இன்னல்கள் தீர்க்க தட்டிக்கொடுத்து தலை நிமிரச் செய்வதே நட்பு.

இன்பத்தில் கூடி மகிழ்வது இயற்கை. தேனின் எறும்புகள் சொல்லிக் கொடுத்து அழைத்து வரப்படுபவை அல்ல. மனத்தின் மறுமொழிகள் வாய்ச்சொற்களாக வந்தால் நட்பு மணம் பெறும். நட்பில்லாத உலகம் அழகின்றி அன்பின்றி வாடும். முகம் மட்டும் மலர்தலின்றி அகமும் மகிழ்ந்து கண்கள் மலரும் கனிவே நட்பு. நட்பு இருக்குமிடம் நம் மனமே ! மனத்தில் நாளும் நல்ல நட்பை வளர்ப்போம்.

நட்பு - நட்பெனில் யாது : பள்ளி நட்பு, கல்லூரி நட்பு, அலுவலக நட்பு, புகைவண்டி நட்பு, இணைய நட்பு என பல்வேறு பட்ட நட்புகளில் முன் பின் தெரியாத - முகமறியாத நட்பெனப்படுவது இணைய நட்பாகும்.

இணையத்தில் - பதிவர்கள் -வலைஞர்கள் நட்பு என்பது மிகச்சிறந்த நட்பாகும். பதிவர்கள் இடும் இடுகையைப் படித்துப் படித்து - ரசித்து ரசித்து - மறுமொழிகள் இட்டு - அவர்களது எழுத்துகளில் மயங்கி - எழுத்தின் மூலம் நண்பர்களானவர்கள் பலர் இருக்கிறார்கள்.

பதிவர் சந்திப்பு - ஒரே இடத்தில் வசிக்கும் பதிவர்கள் - எளிதில் நண்பர்களாகி விடுகின்றனர்.

நட்பிற்கு இலக்கணம் படைப்பவர்கள் பதிவர்களே.

பதிவர்களிடையே சிறந்த நண்பர்களைத் தேடிப்பிடித்து விருது வழங்கும் செயல் தொடர்ந்து வருகிறது. அருமை நண்பர் - காரைக்குடி மருத்துவர் தேவன் மாயம் ( புனைப்பெயர் தான்) ஒரு இடுகை இட்டு இவ்விருதினை எனக்கு வழங்கி உள்ளார். விருதின் விதி முறைகள் படி நான் எனக்குப் பிடித்த சிறந்த நண்பர்களுக்கு இத்தொடர் விருதினை வழங்க வேண்டும்.

விதி முறைகள் :

1.
நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம். 2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம். 3. அவர்களிடம் உங்களுக்கு பிடித்த செயல் - ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும். 4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்படக் கூடாது. அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.


நான் விருது வழங்கத் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் :

01 : தருமி - இவர் தான் நான் சந்தித்த முதல் வலைஞர் - நான் வலைப்பூ ஆரம்பித்த காலத்தில், மின்னஞ்சல்கள் மற்றும் மறுமொழிகள் மூலமாக நான் அதிகம் உரையாடியது இவரிடம் தான்.என்னை விட வயதில் மூத்தவர். ஓய்வு பெற்ற பேராசிரியர்.

02 : மீறான் அன்வர் :
நான் சந்தித்த இரண்டாவது பதிவர். பாசக்காரப் பயபுள்ள - சம்பன்குளத்தான் - கப்பலூரில் பணி புரிகிறான்.

03 : சிவசுப்பிரமணியன் : மூன்றாவது பதிவர் - மணப்பாறையைச் சேர்ந்தவர் - பெங்களூருவில் பணி புரிகிறார் - மிகச்சிறந்த நண்பர்.

04 : மங்களூர் சிவா : பழகுவதற்கு இனியவர் - புதிதாய்த் திருமணம் ஆனவர் - புது வரவினை எதிர்பார்ப்பவர்.

05 : நந்து - நிலா : ஈரோட்டினைச் சார்ந்த தொழிலதிபர் - நட்பு மற்றும் அன்பின் இலக்கணம்.

06 : வால் பையன் : அறிமுகம் தேவை இல்லாத அருமை நண்பர்

07 : தமிழ் பிரியன் : அருமை நண்பர் - அமீரகத்தில் பணி புரிகிறார் - வத்தலக்குண்டினைச் சார்ந்தவர்

08 : கோவி கண்ணன் : சிங்கையில் பணி புரியும் நண்பர் - ஆத்திகரா அல்லது நாத்திகரா - விவாதத்திற்குரிய கேள்வி

09 : துளசி கோபால் : மூத்த பதிவர் - அனைவரும் அறிந்த பதிவர் - உலகம் சுற்றும் பதிவர்

10 : நானானி : நல்ல குணமுடைய அமைதியான பதிவர்.

11 : சதங்கா : அமெரிக்க நாட்டில் பணி புரிகிறார் - சிறந்த நண்பர்

12 : பாசமலர் : மதுரையைச் சார்ந்தவர் - ரியாத்தில் வசிக்கிறார் - ஆங்கிலப் பேராசிரியை - தமிழில் கலக்குகிறார்

இரண்டாண்டு காலமாக பதிவராக இருக்கிறபடியால் எனக்கு நண்பர்கள் அதிகம். நேரில் கண்ட முகமறிந்த நண்பர்களில் அதிகம்தெரிந்தவர்களை மேலே குறிப்பிட்டுள்ளேன். மற்ற நண்பர்கள் வருந்த வேண்டாம்.

கடந்த மே மாதம் மதுரையில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. அதில் அதிகமாக பதிவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை சில நிமிடங்கள் சந்தித்துப் பேசினேன். பிறகு அவர்களில் பலர் நண்பர்களாகி விட்டனர். அவர்களைப் பற்றி இங்கு குறிப்பிட வில்லை. மனம் வருந்த வேண்டாம்.

நல்வாழ்த்துகள் நண்பர்கள் அனைவருக்கும்

சீனா


Thursday, 25 June 2009

மண விழாவில் பதிவர் சந்திப்பு

அன்பு நண்பர்களே

நேற்றைய தினம் - 24-6-2009 புதன் கிழமை மதுரையில் அருமை நண்பர் - சக பதிவர் கார்த்திகைப் பாண்டியனின் தங்கை திருமணம் சிறப்பாக நடந்தது. நண்பரோ அனைத்து நண்பர்களையும் நேரிலும் தொலைபேசியிலும் மண விழாக் காண
அன்புடன் அழைத்திருந்தார்.

திருமண மண்டபம் முழுவதும் மக்கள் வெள்ளம். அதில் சிறு தீவாக நமது பதிவர் வட்டம். நானும் எனது துணைவியும் ( அவர்களும் பதிவர் தான்) சென்றிருந்தோம். மண்டப வாசலிலேயே காரைக்குடியில் இருந்து வந்திருந்த மருத்துவர் தேவகுமாரும் சிவகாசியிலிருந்து வந்திருந்த அன்புமதியும் மதுரையில் இருக்கும் தேனி சுந்தரும் வரவேற்றனர்.

தேவன்மயம் எங்களை அன்புடன் அழைத்துச் சென்று காலை உணவு ஏற்பாடு செய்தார். சாப்பிட்டு முடிக்கும் வரை பக்கத்திலேயே நின்று அவரது வீட்டுத் திருமணம் போல் உபசரித்தார். நன்றி நல்ல உள்ளத்தினிற்கு.

திருப்பூரிலிருந்து ஆதவனும் சொல்லரசனும், மதுரையில் இருந்து ஸ்ரீதரும் தருமியும் பாலகுமாரும் ஜாலி ஜம்பரும் வந்திருந்தனர். களை கட்டியது சந்திப்பு.

மண விழா முடிந்ததும், என்னுடைய அலுவலக அவசர அலுவல் காரணமாக நாங்களூம் விடை பெற்றோம். நண்பர்களும் மாலை வரை இருந்து நீண்டதொரு சந்திப்பாக மாற்றி விடை பெற்றதாக அறிந்தேன்.

புகைப்படங்கள் - வீடியோ எல்லாம் மற்ற பதிவர்களீன் இடுகைகலில் பார்க்கலாம். ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

நல்லதொரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்த கா.பாவினிற்கு நன்றி


Friday, 5 June 2009

மாட்டிக்கிட்டேனே

அன்பின் ரங்கா - பழகலாம் வாங்கன்னு சொல்லி தொடர் இடுகைலே மாட்டி வுட்டுட்டான்.

என்ன செய்யறது ..... பதில் சொல்வோமே

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் தாய்வழித் தாத்தாவின் பெயர் எனக்கு என் அம்மா ஆசையாக வைத்தார்கள். எனக்கு மிகவும் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

என் தாய் இறந்த போது -

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ஆமாம்.. பிடிக்கும், ஆனா நான் எழுதற்தே இல்லையே - பேனா திறப்பதே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடத்தான்


4).பிடித்த மதிய உணவு என்ன?

வெஜிடேரியன் .. அதனால் தக்காளி சூப் - உருளைக் கிழங்கு அவியல் - பூசனிக்காய் சாம்பார் - தயிர் - சாதம்



5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஆமா யாராச்சும் பழக ஆரம்பிச்சா உடனே நட்பு தான்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியில் குளிக்கப் பிடிக்கும் - ஆனல் சந்தர்ப்பங்கள் குறைவு

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

தோற்றம் - கண்கள்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

என் திறமை - என் முன் கோபம்


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

அதிக அன்பு- என்னைச் சோம்பேறியாக்கும் வகையில் என் வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டு செய்வது

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

பெற்ற மக்கள் அயலகத்தில் - அவர்கள் இல்லாதது வருத்தத்தினை அளிக்கிறது


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ஊதா - நீலம்

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

கணினியின் திரை பார்க்கிறேன் - ஒன்றும் கேட்கவில்லை

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம்,

14.பிடித்த மணம்?

மல்லிகைப்பூ மற்றும் மலர்களின் மணம்


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அண்ணன் தருமி
நானானி
துளசி

இவர்கள் என் சம வயதினர்

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

சின்னப்பையன் ரங்காவின் பதிவுகளில் - அவனது அப்பாவினைப் பற்றிய பதிவு எனக்குப் பிடிக்கும். நல்ல கவிதை

17. பிடித்த விளையாட்டு?

செஸ் - ரம்மி - ஃப்ரீசெல்


18.கண்ணாடி அணிபவரா?

ஆம்

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?


நகைச்சுவை - த்ரில்லர் - புராணப்படங்கள்

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க, - சூபர் படம்

21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்

ஏனெனில் அந்த மாதங்களில் நல்லா தூங்கலாம் பாருங்க.. அதான்.


22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

இப்பொழுதா - இரா.முருகனின் சிறுகதைத் தொகுப்பு

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாற்றுவதே இல்லை

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் :அம்மாக்களின் தாலாட்டு

பிடிக்காதது :சாலையில் ஹாரன்கள்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அயலகம் - இலண்டன்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஓ.. இருக்கே!!

கணினியில் மென்பொருள் - கோபால் நிரலி - கை வந்த கலை
ஸ்கோயூனிக்ஸ் - எம் எப் கோபால் -


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என் செயல்களில் குற்றம் கண்டு பிடிப்பது

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அந்தரங்கம் புனிதமானது

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம். ஆக்ரா, மதுரா

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்.... ..

நாள் பூரா தூங்குவது - எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல்

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழு ! வாழ விடு !



இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

தருமி, நானானி, துளசி