ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Friday 31 July 2009

சிறந்த நண்பருக்கு விருது

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

குறளாசான் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே நட்பின் இலக்கணம் வகுத்துச் சென்றிருக்கிறான்.

நட்பென்பது அழகானது. அன்புணர்ச்சி உடைய மனக்கசிவே நட்பு. இறுக்கமற்றது. நினைக்குந்தோறும் நிம்மதி தருவது. நட்புக் கொண்டால் நிலைத்து நிற்கப் பாடுபடவேண்டும். நட்பின் நினைவே மகிழ்வூட்டுவதாய் நிற்க வேண்டும். ஆராய்ந்து கொள்ளும் நட்பே உயர்வானது. உள்ளும் புறமும் தூய்மையுடைய மனமே நல்ல நட்பை உருவாக்க முடியும். தோளோடு தோள் தட்டி வாய் விட்டுச் சிரிப்பது மட்டும் நட்பல்ல. இன்னல்கள் தீர்க்க தட்டிக்கொடுத்து தலை நிமிரச் செய்வதே நட்பு.

இன்பத்தில் கூடி மகிழ்வது இயற்கை. தேனின் எறும்புகள் சொல்லிக் கொடுத்து அழைத்து வரப்படுபவை அல்ல. மனத்தின் மறுமொழிகள் வாய்ச்சொற்களாக வந்தால் நட்பு மணம் பெறும். நட்பில்லாத உலகம் அழகின்றி அன்பின்றி வாடும். முகம் மட்டும் மலர்தலின்றி அகமும் மகிழ்ந்து கண்கள் மலரும் கனிவே நட்பு. நட்பு இருக்குமிடம் நம் மனமே ! மனத்தில் நாளும் நல்ல நட்பை வளர்ப்போம்.

நட்பு - நட்பெனில் யாது : பள்ளி நட்பு, கல்லூரி நட்பு, அலுவலக நட்பு, புகைவண்டி நட்பு, இணைய நட்பு என பல்வேறு பட்ட நட்புகளில் முன் பின் தெரியாத - முகமறியாத நட்பெனப்படுவது இணைய நட்பாகும்.

இணையத்தில் - பதிவர்கள் -வலைஞர்கள் நட்பு என்பது மிகச்சிறந்த நட்பாகும். பதிவர்கள் இடும் இடுகையைப் படித்துப் படித்து - ரசித்து ரசித்து - மறுமொழிகள் இட்டு - அவர்களது எழுத்துகளில் மயங்கி - எழுத்தின் மூலம் நண்பர்களானவர்கள் பலர் இருக்கிறார்கள்.

பதிவர் சந்திப்பு - ஒரே இடத்தில் வசிக்கும் பதிவர்கள் - எளிதில் நண்பர்களாகி விடுகின்றனர்.

நட்பிற்கு இலக்கணம் படைப்பவர்கள் பதிவர்களே.

பதிவர்களிடையே சிறந்த நண்பர்களைத் தேடிப்பிடித்து விருது வழங்கும் செயல் தொடர்ந்து வருகிறது. அருமை நண்பர் - காரைக்குடி மருத்துவர் தேவன் மாயம் ( புனைப்பெயர் தான்) ஒரு இடுகை இட்டு இவ்விருதினை எனக்கு வழங்கி உள்ளார். விருதின் விதி முறைகள் படி நான் எனக்குப் பிடித்த சிறந்த நண்பர்களுக்கு இத்தொடர் விருதினை வழங்க வேண்டும்.

விதி முறைகள் :

1.
நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம். 2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம். 3. அவர்களிடம் உங்களுக்கு பிடித்த செயல் - ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும். 4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்படக் கூடாது. அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.


நான் விருது வழங்கத் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் :

01 : தருமி - இவர் தான் நான் சந்தித்த முதல் வலைஞர் - நான் வலைப்பூ ஆரம்பித்த காலத்தில், மின்னஞ்சல்கள் மற்றும் மறுமொழிகள் மூலமாக நான் அதிகம் உரையாடியது இவரிடம் தான்.என்னை விட வயதில் மூத்தவர். ஓய்வு பெற்ற பேராசிரியர்.

02 : மீறான் அன்வர் :
நான் சந்தித்த இரண்டாவது பதிவர். பாசக்காரப் பயபுள்ள - சம்பன்குளத்தான் - கப்பலூரில் பணி புரிகிறான்.

03 : சிவசுப்பிரமணியன் : மூன்றாவது பதிவர் - மணப்பாறையைச் சேர்ந்தவர் - பெங்களூருவில் பணி புரிகிறார் - மிகச்சிறந்த நண்பர்.

04 : மங்களூர் சிவா : பழகுவதற்கு இனியவர் - புதிதாய்த் திருமணம் ஆனவர் - புது வரவினை எதிர்பார்ப்பவர்.

05 : நந்து - நிலா : ஈரோட்டினைச் சார்ந்த தொழிலதிபர் - நட்பு மற்றும் அன்பின் இலக்கணம்.

06 : வால் பையன் : அறிமுகம் தேவை இல்லாத அருமை நண்பர்

07 : தமிழ் பிரியன் : அருமை நண்பர் - அமீரகத்தில் பணி புரிகிறார் - வத்தலக்குண்டினைச் சார்ந்தவர்

08 : கோவி கண்ணன் : சிங்கையில் பணி புரியும் நண்பர் - ஆத்திகரா அல்லது நாத்திகரா - விவாதத்திற்குரிய கேள்வி

09 : துளசி கோபால் : மூத்த பதிவர் - அனைவரும் அறிந்த பதிவர் - உலகம் சுற்றும் பதிவர்

10 : நானானி : நல்ல குணமுடைய அமைதியான பதிவர்.

11 : சதங்கா : அமெரிக்க நாட்டில் பணி புரிகிறார் - சிறந்த நண்பர்

12 : பாசமலர் : மதுரையைச் சார்ந்தவர் - ரியாத்தில் வசிக்கிறார் - ஆங்கிலப் பேராசிரியை - தமிழில் கலக்குகிறார்

இரண்டாண்டு காலமாக பதிவராக இருக்கிறபடியால் எனக்கு நண்பர்கள் அதிகம். நேரில் கண்ட முகமறிந்த நண்பர்களில் அதிகம்தெரிந்தவர்களை மேலே குறிப்பிட்டுள்ளேன். மற்ற நண்பர்கள் வருந்த வேண்டாம்.

கடந்த மே மாதம் மதுரையில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. அதில் அதிகமாக பதிவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை சில நிமிடங்கள் சந்தித்துப் பேசினேன். பிறகு அவர்களில் பலர் நண்பர்களாகி விட்டனர். அவர்களைப் பற்றி இங்கு குறிப்பிட வில்லை. மனம் வருந்த வேண்டாம்.

நல்வாழ்த்துகள் நண்பர்கள் அனைவருக்கும்

சீனா


65 comments:

cheena (சீனா) said...

சோதனை மறு மொழி

Radhakrishnan said...

விருது பெற்றமைக்கும், விருதுகள் பெறுபவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நட்பினை பற்றி அழகாக எழுதி இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் சார்... தொடர்புடைய அனைவருக்கும்.

வால்பையன் said...

மிக்க நன்றி என்னையும் உங்கள் நண்பராக சேர்த்து கொண்டதற்கு!

திங்கள்கிழமை என் விநியோகம் ஆரம்பமாகும்!

அத்திரி said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்............

Thamiz Priyan said...

விருதுக்கு வாழ்த்துக்கள்!
நன்றி!

சகாதேவன் said...

முகமது தெரிந்த பதிவர்களுக்கு
அகமது மகிழ விருது தந்தீர்கள்.

அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

கோவி.கண்ணன் said...

//04 : மங்களூர் சிவா : பழகுவதற்கு இனியவர் - புதிதாய்த் திருமணம் ஆனவர் - புது வரவினை எதிர்பார்ப்பவர்.//

ஹலோ ஐயா,

சிவா வுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டுக்கு மேல ஆச்சு, இன்னும் புதுமாப்பிள்ளைன்னு சொல்லச் சொல்லி உங்களுக்கு லஞ்சம் எதுவும் கொடுத்தாரா ?

வன்மையாகக் கண்டிக்கிறேன்

கோவி.கண்ணன் said...

//08 : கோவி கண்ணன் : சிங்கையில் பணி புரியும் நண்பர் - ஆத்திகரா அல்லது நாத்திகரா - விவாதத்திற்குரிய கேள்வி//

நான் கடவுள் இல்லை எனக்கு தெரியும். ஆனால் உண்மையான கடவுள் ஆத்திகரா? நாத்திகரா ? அவரு ஆத்திகர் என்றால் எந்த சாமியைக் கும்பிடுவார் ?

அவர் எந்த சாமியையும் கும்பிடவில்லை என்றால் நாத்திகரா ?

புரியல தயவு செய்து விளக்கவும்.

cheena (சீனா) said...

அன்பின் வெ.ரா

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் பீர்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் வால்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் அத்திரி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் தமிழ்பிரியன்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் சகாதேவன்

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் கோவி

ம்.சி கடந்த செப்டம்பரில் மணம் புரிந்த்தாக நினைவு - ஒரு ஆண்டு ஆக வில்லையே

ம்ம்ம்ம் - எதுவும் வேணா கொடுக்கச்சொல்லி கேட்கிறேன்

cheena (சீனா) said...

அவர் அவரையே கும்பிடுவார் - அவர் ஆத்திகர்தான் - கடவுளைக் கும்பிடுபவர்கள் ஆத்திகர் எனில் கடவுள் யாரெனக் கேட்டால் என்ன சொல்வது.

எங்கள் அலுவலகத்தில் அனைவரும் மேலதிகாரிக்குக் கட்டுப்பட்டவர்கள் எனில் மேலதிகாரி யாருக்குக் கட்டுப்பட்டவர் என்றால் என்ன சொல்வது ....

புதசெவி - கேயாரெஸ் குமரன் யாராச்சும் வாங்கப்பா - இந்தக் கோவிய என்னான்னு கேளுங்கப்பா

தேவன் மாயம் said...

விருது பெற்றமைக்கும், விருதுகள் பெறுபவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

தேவன் மாயம் said...

பதிவுலக மார்க்கண்டேயர் சீனா அய்யாவுக்கு வாழ்த்துக்கள்!!

cheena (சீனா) said...

அன்பின் தேவன் மாயம்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மர்கண்டேயரா - நான் இன்னும் வயதுக்கு வர வில்லையா - வாலினை விட சின்னப்பையனா

RAMYA said...

விருது பெற்ற சீனா ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

உங்களிடம் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

அன்பின் ரம்யா

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரம்யா

சதங்கா (Sathanga) said...

//தேவன் மாயம் said...
பதிவுலக மார்க்கண்டேயர் சீனா அய்யாவுக்கு வாழ்த்துக்கள்!!
//

அதேய் ! அதேய்ய்ய்ய்ய் !!

பெறுவதை விட கொடுப்பதில் தான் ஆனந்தம் அடைவார்கள் பெரியோர்கள். அந்த வகையில் சீனா ஐயாவின் ஆனந்தத்தில் பங்கு கொள்கிறேன்.

விருதுக்கு நன்றிகளும், பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களும்.

cheena (சீனா) said...

அன்பின் சதங்கா

வருகைக்கும் வாழ்த்துக்கும் பங்கு கொண்டதற்கும் நன்றி

நிஜமா நல்லவன் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

/கோவி.கண்ணன் said...

//04 : மங்களூர் சிவா : பழகுவதற்கு இனியவர் - புதிதாய்த் திருமணம் ஆனவர் - புது வரவினை எதிர்பார்ப்பவர்.//

ஹலோ ஐயா,

சிவா வுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டுக்கு மேல ஆச்சு, இன்னும் புதுமாப்பிள்ளைன்னு சொல்லச் சொல்லி உங்களுக்கு லஞ்சம் எதுவும் கொடுத்தாரா ?

வன்மையாகக் கண்டிக்கிறேன்/


எக்கசக்கமா ரிப்பீட்டிக்கிறேன்:)

cheena (சீனா) said...

எப்பா பாரதி - வன்மையாக் கண்டிக்காதேப்பா - மென்மையாச் சொல்லு - சிவா கல்யானம் பண்ணி ஒரு ஆண்டு முடியல இன்னும் - சரியா

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாரதி

ஆ.ஞானசேகரன் said...

விருது பெற்றமைக்கும், விருதுகள் பெறுபவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

Suresh Kumar said...

விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் .

Anbu said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்த்துக்கள் சார்...

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் ஐயா!


தங்களுக்கும் பெற்ற அனைவருக்கும்.

cheena (சீனா) said...

அன்பின் சுரேஷ் குமார்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Raju said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

அன்பின் டக்ள்ஸ்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் ஜமால்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

குசும்பன் said...

//04 : மங்களூர் சிவா : பழகுவதற்கு இனியவர் - புதிதாய்த் திருமணம் ஆனவர் - புது வரவினை எதிர்பார்ப்பவர்.//

அவ்வ்வ்வ் இன்னுமும் சிவா புது மாப்பிள்ளையா? என்ன கொடுமை சீனா இது?

cheena (சீனா) said...

அன்பின் ஞான சேகரன்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் குசும்பன்

நீ கூட இன்னும் புது மாப்பிள்ளை தான்

ஏதாச்சும் ரூல்ஸ் இருக்கா என்ன - இளமையா இருக்கற வரை எல்லாரும் மாப்ளேதான்

Anonymous said...

சீனா சார்,

வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் அண்ணாச்சி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மீறான் அன்வர் said...

என்னுடன் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அந்த விருதை 'வாங்கி' கொடுத்த சீனா அய்யாவுக்கும் வாழ்த்துக்கள் :)

எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்

அனைவருக்கும் தித்திக்கும் நண்பர்கள்தின வாழ்த்துக்கள் :)

cheena (சீனா) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மீறான் அன்வர்

KARTHIK said...

வாழ்துக்கள்.

// முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

குறளாசான் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே நட்பின் இலக்கணம் வகுத்துச் சென்றிருக்கிறான்.//

மாப்பி எனக்கெல்லாம் இந்த குறள் பாய்ஸ்படத்துல பாய்ச ஏங்க வைக்காதே பாட்டுல தான் இப்படி ஒரு குறள் இருக்குரதே தெரியும்.

cheena (சீனா) said...

மச்சி கார்த்தி

குறள் கத்துக்கக் கூட சினிமா மூலமாத்தானா

நல்லாருங்கடே

Iyappan Krishnan said...

இதுல என் பேரு இல்லவே இல்ல.. அதனால நான் கோச்சுக்கிட்டேன் :((

cheena (சீனா) said...

அன்பின் ஜீவ்ஸ்

விருதெல்லாம் கொடுத்து நம் நட்பினை கேலிப்பொருளாக்கக் கூடாது. இதயத்திலிருக்கு ஜீவ்ஸிற்கு தனியாக ஒரு விருது வேண்டுமா என்ன

அப்ப்பாடி சரியாச் சொல்லித் தப்பிச்சிட்டேனா இல்லையா

தருமி said...

//பதிவர்கள் இடும் இடுகையைப் படித்துப் படித்து - ரசித்து ரசித்து - மறுமொழிகள் இட்டு - அவர்களது எழுத்துகளில் மயங்கி - எழுத்தின் மூலம் நண்பர்களானவர்கள் பலர் இருக்கிறார்கள்.
பதிவர் சந்திப்பு - ஒரே இடத்தில் வசிக்கும் பதிவர்கள் - எளிதில் நண்பர்களாகி விடுகின்றனர்.//

ஓ! இப்படி ரெண்டு டைப் இருக்கா.. சரி.. எப்படியோ நான் ரெண்டாவது டைப்பில் வந்திட்டேன் போலும் :)

மிக்க நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் தருமி அண்ணே

எந்த டைப்ல வந்தா என்ன - நண்பரெனில் நண்பர் தானே

நாம் நண்பர்கள் தான்

சரியா

Sanjai Gandhi said...

நல்வாழ்த்துகள் நண்பர்கள் அனைவருக்கும்

cheena (சீனா) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சஞ்செய்

பாச மலர் / Paasa Malar said...

Nanri Cheena sir...sorry no tamil font right now..I am in Madurai..will call u...

cheena (சீனா) said...

வருகைக்கு நன்றி பாசமலர்

நல்வாழ்த்துகள்

கோவி.கண்ணன் said...

//அவர் அவரையே கும்பிடுவார் - அவர் ஆத்திகர்தான் - கடவுளைக் கும்பிடுபவர்கள் ஆத்திகர் எனில் கடவுள் யாரெனக் கேட்டால் என்ன சொல்வது.

எங்கள் அலுவலகத்தில் அனைவரும் மேலதிகாரிக்குக் கட்டுப்பட்டவர்கள் எனில் மேலதிகாரி யாருக்குக் கட்டுப்பட்டவர் என்றால் என்ன சொல்வது ....

புதசெவி - கேயாரெஸ் குமரன் யாராச்சும் வாங்கப்பா - இந்தக் கோவிய என்னான்னு கேளுங்கப்பா//

இந்த மழுப்பல் வேண்டாம் !

கடவுளுக்கு (இன்னொரு) கடவுள் நம்பிக்கை உண்டா ?
:)

சாம் தாத்தா said...

ஆஹா...! என் நண்பருக்கு விருதா? சபாஷ்! இப்பத்தான் அந்த விருதுக்கு பெருமை கிடைச்சிருக்கு. மேலும்... மேலும்... பலப்பல விருதகள் பெற வேணு,மாய் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிப் பிரார்திக்கிறேன்.

சாம் தாத்தா said...

வெகு நாளாய் வலைப் பூக்கள் பக்கம் வர முடியவில்லை. மன்னிக்கவும்.
வந்தேன். சும்மா ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு வைப்போமே- ன்னு போட்டு இருக்கிறேன். நேரமம், அனுமதித்தால் நீங்களும் வந்து சும்மா ஒரு பார்வையிடவும். :-)

cheena (சீனா) said...

வாங்க வாங்க சாம் தாத்தா - பாத்து ரொம்ப நாளாச்சு - உடல் நலம் பரவாய் இல்லையா - உங்க வூட்டுக்கும் வரேனே

தருமி said...

பாத்து ரொம்ப நாளாச்சு சாம் தம்பி .. எப்படி இருக்கீங்க?

அப்பப்ப தலை காட்டுங்க ...

cheena (சீனா) said...

வாங்க வாங்க தருமி அண்ணே - சாம் தங்களுக்குத் தம்பியா - அவர் 65ன்னு நினைக்கிறேன்

தருமி said...

ஏற்கெனவே ஒருதடவை கணக்குப் போட்டு தம்பின்னு கூப்பிட்டாச்சே ... அவரும் ஒத்துக்கிட்டாரே.

நாங்களும் இந்த டிசம்பரோடு 65 முடிக்கிறோம்ல ...

நானானி said...

ஆஹா! கணினி பிரச்சனைகள் தீர்ந்து இன்றுதான் பார்க்கிறேன்!
நல்ல நண்பரிடமிருந்து நல்லதோர் விருது!!
நன்றி சொல்ல வார்த்தைகளில்லை. ஆனாலும் சொல்கிறேன்.
நன்றி!
அன்புடன்
நானானி

நானானி said...

உங்களை சதங்காவின் “சிறப்புத் தீபாவளி 2009” தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் நானானி,

வருகைக்கும் மகிழ்ச்சிக்கும் நன்றி

நான் ஒரு பதிவுக்கு அழிஅத்தால் பழிக்குப் பழியா - எனக்கும் ஒரு அழைப்பா - வந்துடறேன் கலக்கிடலாம்

நல்வாழ்த்துகள் நானானி

ரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்) said...

அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு வணக்கங்கள் பல. உங்களின் வலை தளத்தில் சின்னதாய் சுற்றுலா சென்றேன்.. அனைத்தும் அற்புதமாய் இருந்தன... நன்றிகள் பல

அன்புடன் இளங்கோவன்

cheena (சீனா) said...

அன்பின் இளங்கோவன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்