வலைச்சரத்தின் முதல் ஆசிரியர் சிந்தா நதி 11.11.2006 அன்று வலைஞன் என்ற புனைப் பெயரில் தனது முதல் பதிவினை எழுதி இருக்கிறார். 22.02.2007ல் அடுத்த பதிவினை எழுதி இருக்கிறார். 26.02.2007 அன்று வலைச்சரம் துவங்கியது குறித்தும் வலைச்சர முதல் ஆசிரியராக பொன்ஸ் நியமிக்கப்
பட்டது பற்றியும் எழுதி இருக்கிறார்.
முத்துலெட்சுமி 30.04.2007 முதல் ஆசிரியப் பொறுப்பினை ஏற்றிருக்கிறார்.
04.05.2008 முதல் நான் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கிறேன்.
பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்த நிமிடம் வரை
வலைச்சரக் குழு உறுப்பினராக சக பதிவர் தமிழ்வாசி பிரகாஷினை நியமித்திருக்கிறேன்.
வலைச்சரத்தின் முதல் ஆசிரியர் சிந்தாநதி வலைச்சர ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து சில விதி முறைகளைஏற்படுத்தினார்.
பல பதிவர்களிடம் இருந்து, வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறி ஒரு பதிவு இட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் விண்ணப்பங்களைப் பெற்று அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவ்வார வலைச்சர ஆசிரியராக நியமிப்பது என்பது சரியான முறையல்ல எனவும் பதிவர்களின் தளங்களை ஆராய்ந்து ஒர் பதிவரை மட்டுமே தேர்நெதெடுத்து ஒரு வாரத்திற்கு அவரை வலைச்சர ஆசிரியராக நியமிக்க வேண்டும் எனவும் விதிமுறைகளை ஏற்படுத்தினார்.
இந்த விதிகள் கடைப்பிடிக்கப் படுகின்றன.
இருப்பினும் விண்ணப்பங்களைப் பெறுவது இன்னும் நிறுத்தப் பட வில்லை,
ஓரிரு நாட்களில் நிறுத்தப் படவேண்டும் என வலைச்சரக் குழுவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.
நிறுத்தி விடுவோம் என உறுதி அளிக்கிறேன்.தற்பொழுது பதிவர்களின் தளங்களை ஆராய்ந்து ஒருபதிவரை மட்டும் தேர்ந்தெடுத்து அவரை வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க அழைக்கும் முறையும் இருக்கின்றது. இவ்விதியை மட்டுமே கடைப்பிடிக்குமாறு வலைச்சரக் குழுவினரை அறிவுறுத்தி இருக்கிறேன்.
நட்புடன் சீனா
18 comments:
சோதனை மறுமொழி
விரிவான தகவல்களைக் கண்டு மகிழ்ச்சி ஐயா..
இன்னும் பல தகவல்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா...
தொடருங்கள் ஐயா. தொடர்கிறேன்.
பதிவர்களின் தளங்களை ஆராய்ந்து வலைச்சர ஆசிரியர் பணியை வழங்க போதுமான நேரம் தேவை. விண்ணப்பிப்பவர்களின் தளங்களுக்கு சென்று திருப்தி ஏற்படின் ஆசிரியர் பணியை ஒப்படைக்கலாம்.
வலைச்சரத்தில் நிறைய மாற்றங்கள் வரும் என்று நினைக்கிறேன்.
த.ம.3
சிறப்பான ஒரு பணி! வலைச்சரத்தின் வரலாறு சுவையாகவும் இருக்கிறது! நன்றி!
அருமையான புதுப்புது தகவல்கள். நன்றி. தொடரட்டும் இந்தப்பணிகள்.
சுவையான வரலாறு...
தொடருங்கள் ஐயா...
தொடர்ந்து (சு)வாசிக்கிறோம்...
அறிந்திராத தகவல்கள்
- தொடருங்கள்... வருகிறோம்!
படித்து வருகிறேன் ஐயா.
வரலாறு இன்னும் தொடர்கின்றேன் ஐயா!
தங்களின் பணி சீரிய பணி ஐயா
நன்றி
ஒவ்வொரு பதிவிலும் தங்களின் உழைப்பினையும் ஈடுபாட்டினையும் அறியமுடிகிறது. பல புதிய செய்திகளை நாங்கள் அறியப்படுத்தியமைக்கு நன்றி.
வணக்கம் ஐயா...
தங்களை ஒரு தொடர்பதிவில் மாட்டி விட்டிருக்கேன்... கோபப்பட மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை...
நேரம் இருக்கும் போது எழுதுங்க....
விவரம் அறிய...
http://vayalaan.blogspot.com/2014/11/blog-post_17.html
அருமை.....
தொடர்ந்து எழுதுங்கள் ஐயா..... காத்திருக்கிறோம்!
அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (17/06/2015)
தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
super your post
Post a Comment