அன்பின் சக பதிவர்களே !
வலைச்சரத்தின் முதல் ஆசிரியர் சிந்தா நதி 11.11.2006 அன்று வலைஞன் என்ற புனைப் பெயரில் தனது முதல் பதிவினை எழுதி இருக்கிறார். 22.02.2007ல் அடுத்த பதிவினை எழுதி இருக்கிறார். 26.02.2007 அன்று வலைச்சரம் துவங்கியது குறித்தும் வலைச்சர முதல் ஆசிரியராக பொன்ஸ் நியமிக்கப்
பட்டது பற்றியும் எழுதி இருக்கிறார்.
முத்துலெட்சுமி 30.04.2007 முதல் ஆசிரியப் பொறுப்பினை ஏற்றிருக்கிறார்.
04.05.2008 முதல் நான் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கிறேன்.
பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்த நிமிடம் வரை
வலைச்சரக் குழு உறுப்பினராக சக பதிவர் தமிழ்வாசி பிரகாஷினை நியமித்திருக்கிறேன்.
வலைச்சரத்தின் முதல் ஆசிரியர் சிந்தாநதி வலைச்சர ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து சில விதி முறைகளைஏற்படுத்தினார்.
பல பதிவர்களிடம் இருந்து, வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறி ஒரு பதிவு இட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் விண்ணப்பங்களைப் பெற்று அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவ்வார வலைச்சர ஆசிரியராக நியமிப்பது என்பது சரியான முறையல்ல எனவும் பதிவர்களின் தளங்களை ஆராய்ந்து ஒர் பதிவரை மட்டுமே தேர்நெதெடுத்து ஒரு வாரத்திற்கு அவரை வலைச்சர ஆசிரியராக நியமிக்க வேண்டும் எனவும் விதிமுறைகளை ஏற்படுத்தினார்.
இந்த விதிகள் கடைப்பிடிக்கப் படுகின்றன.
இருப்பினும் விண்ணப்பங்களைப் பெறுவது இன்னும் நிறுத்தப் பட வில்லை,
ஓரிரு நாட்களில் நிறுத்தப் படவேண்டும் என வலைச்சரக் குழுவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.
நிறுத்தி விடுவோம் என உறுதி அளிக்கிறேன்.தற்பொழுது பதிவர்களின் தளங்களை ஆராய்ந்து ஒருபதிவரை மட்டும் தேர்ந்தெடுத்து அவரை வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க அழைக்கும் முறையும் இருக்கின்றது. இவ்விதியை மட்டுமே கடைப்பிடிக்குமாறு வலைச்சரக் குழுவினரை அறிவுறுத்தி இருக்கிறேன்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா