ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Monday 27 October 2014

மதுரை - மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா -

அன்பின் சக பதிவர்க்ளே 

நேற்றைய தினம் 26.10.2014 மதுரையில் சீரும் சிறப்புடனும் நடந்த மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப் பதிவர் திருவிழாவில் தலைமை தாங்கி பேசிய என் தலைமை உரையின் சாரம் :

மதுரையில் மூன்றாம் ஆண்டு
தமிழ் வலைப் பதிவர் திரு விழா
26.10.2014

மேடையில் அமர்ந்திருக்கும் அனைத்துப் பதிவர்கள் உள்ளிட்ட, இங்கு திரளாக வந்திருந்து இத் திருவிழாவினைச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பதிவர்களையும் வணங்கி மகிழ்கிறேன்.

இது போன்ற திருவிழா நடப்பது மதுரைக்கு இதுவே முதல் முறை.

நாமெல்லாம் இங்கு கூடி மகிழ்வது அனைத்துப் பதிவர்களுக்குமே முதல் முறையாக இருக்கும்.

இங்கு இத்திருவிழா சிறப்புடன் நடைபெற பிள்ளையார் சுழி போட்டதில் இருந்து இன்றுவரை அனைத்துப் பணீகளையும் அயராது செய்ததில் பெரும் பங்காற்றியவர் நமது நண்பர் - சக பதிவர் - தமிழ் வாசி பிரகாஷ் தான் என்பதைப் பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். 

அவருக்குத் துணையாக இருந்து அவருடன் பணியாற்றியவர் மற்றொரு நண்பர் - சக பதிவர்  திண்டுக்கல் தனபாலன்.

அனைத்துப் பதிவர்களையும் ஒருங்கிணைத்ததில் இருந்து இத்திருவிழா எவிவிதத் தடங்கலும் இல்லாமல் சிறப்புடன் நடை பெற பெரும்பாலான பணிகளைச் சிறப்புடன் செய்தவரும் பிரகாஷ் தான்.
இன்றைய தினம் நமக்கெல்லாம் ஒரு  திருவிழா தான். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சக பதிவர்கள் வந்திருக்கிறார்கள்.

திருவிழாவினைச் சிறப்புடன் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

மதுரையில் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் சித்திரைத் திருவிழா போன்று இத்திருவிழாவும் நடந்து கொண்டிருக்கிறது. 

இன்று மாலை வரை இத்திருவிழாவினை நடத்தி மகிழ்வோம்.


இத்துடன் சிற்றுரையை முடித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.  

21 comments:

Geetha said...

வணக்கம் அய்யா,
விழா சிறப்புடன் இருந்தது அய்யா...விழா பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி..இவ்விழாவில் என் நூலை வெளியிட்டது குறித்து பெரு மகிழ்ச்சி கொள்கின்றேன்...நன்றி

unmaiyanavan said...

விழா சிறப்பாக நிடந்தேறியதை கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா.

துரை செல்வராஜூ said...

வலைப்பதிவர் விழா மிகச் சிறப்பாக நடந்தேறிய செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி ஐயா.

sury siva said...

நீங்கள் பேசியது நானும் நேரடி ஒளிபெயர்ப்பில் கண்டேன்.
மிக்க மகிழ்ச்சி.

ஒலி மட்டும் விட்டு விட்டு கேட்டது. நிகழ்ச்சி முழுதுமே.
விழா நடக்கையிலேயே திண்டுகல் தனபாலன் சாருக்கு
கைப்பேசியில் சொன்னேன்.

விழா சிறப்புற நடைபெற்றது குறித்து பெரு மகிழ்ச்சி.
டி.டி. பிரவாசி ,ஆவி, ரமணி, மற்றும் விழாவினைச் சிறப்பாகக கொண்டாட உழைத்த அனைவருக்கும்
எல்லோருக்கும் நன்றி.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் சிற்றுரை சிறப்பாக உள்ளது.

சாதித்துக்காட்டி விட்டீர்கள், ஐயா.

மிக்க மகிழ்ச்சி ஐயா.

பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

விழா சிறப்பாக நடைபெற்றதில் தங்களின் உற்சாக தூண்டுதல் மிகவும் முக்கியமானது ஐயா...

KILLERGEE Devakottai said...


மிக்க மகிழ்ச்சி ஐயா.

தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...

விழா சிறப்புற நடைபெற்றது
மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள்.!

தி.தமிழ் இளங்கோ said...

வலைப் பதிவர்களின் சந்திப்பினை சிறப்பாக நடத்திக் காட்டிய அன்பின் சீனா அவர்களுக்கு நன்றி! உங்களோடு உங்கள் நோக்கம் அறிந்து செயலாற்றிய தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகிய இருவருக்கும் ஏனைய நண்பர்களுக்கும் நன்றி! அதிலும் கீழே விழுந்ததால் கையில் அடிபட்டும் வெளியே காட்டாமல் ஆர்வத்துடன் பணியாற்றிய திண்டுக்கல் தனபாலன் உறுதியையும் ஆர்வத்தையும் என்னவென்று சொல்வது? விடாது பெய்த மழை வலைப்பதிவர்கள் சந்திப்பிற்காக சற்றே ஒதுங்கி வழி விட்டது போலிருக்கிறது! மாமழை போற்றுதும்! மழைக்கு நன்றி!

இந்த வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்!

த.ம.1

UmayalGayathri said...

விழா சிறப்பாக நடந்தேறியதை அறிந்து மிக்க மகிழச்சி ஐயா

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உங்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி ஐயா..பேசுவதற்குத்தான் நேரம் அமையவில்லை..விழாவில் உங்கள முன்னிலையில் என் நூல் வெளியானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..நன்றி ஐயா.

வே.நடனசபாபதி said...

முக்கிய பணி இருந்ததால் மதுரைக்கு வந்து வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் தங்களைப் போன்ற நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுவிட்டேன். விழா சிறப்பாக நடைபெற்றமை அறிந்து மகிழ்ச்சி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

விழா சிறப்புடன் நடந்ததை அறிந்து மிக மகிழ்ச்சி!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மதுரை வலைப்பதிவர் விழாவில்
தங்களையும் நண்பர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி. ஒரு பெரிய நிகழ்வை அமைதியாகவும், அருமையாகவும் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளீர்கள். தங்களுக்கும் குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். வலையுலக நட்பைத் தொடர்வோம். நன்றி.

கீதமஞ்சரி said...

விழா இனிதே நடந்தேறியமை குறித்து மிகுந்த மகிழ்ச்சி ஐயா. முனைப்புடன் ஏற்பாடு செய்த மதுரைப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய பாராட்டுகள். கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்துப் பதிவர்களுக்கும் அன்பான வாழ்த்துகள்.

லதானந்த் said...

பாராட்டுகள்

Thulasidharan V Thillaiakathu said...

ஐயா சீனா அவர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! நாங்கள் நேரில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் பதிவுகளிலிருந்து அறிந்தவையும் நண்பர்களும் சொன்னது... விழாவைமிகச் சிறப்பாக தங்களுக்கும், அதன் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா!

'பரிவை' சே.குமார் said...

கலந்து கொள்ள முடியாத வருத்தம் நிறைய இருக்கு ஐயா...

வெற்றிகரமாக முடிந்ததில் சந்தோஷம்...

தனிமரம் said...

விழா சிறப்பாக நிடந்தேறியதை கண்டு மிக்க சந்தோஷம் ஐயா.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அய்யா, பணிவான வணக்கம். தொடர்மழை, தீபாவளியை ஒட்டிய விடுமுறைச்சிரமம் தூரம் ஆகிய எல்லாவற்றையும் கடந்து, மதுரை வலைநண்பர்களின் அயராத உழைப்பில் விழா சிறப்பாகவே நடந்தது. விழாக்குழு நண்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். தங்களிடம் உரையாடச் சிறிது நேரமே வாய்த்தாலும், மகிழ்வளிக்கிறது.விழா நிகழ்வில் இன்னும் நேரமேலாண்மை, பதிவர் வருகை இன்னும் மேம்பட என்ன செய்யலாம் என்பது பற்றிய தங்கள் அனுபவத்தை எங்களுக்குத் தாருங்கள் அய்யா.அடுத்த விழாவை புதுக்கோட்டையில் நடத்திடத் தங்களின் அனுபவம் பயன்படத் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொன்றிலும் கற்றுக்கொண்டு முன்னேறுவோம் அ்ய்யா. வணக்கம்.