ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 16 June 2013

வலைச்சரத்தின் தகவல்கள் தொகுப்பு

அன்பின் நண்பர்களே ! 

வலைச்சரம் பற்றி அறிந்திருக்கலாம்

இப்பொழுது வலைச்சரத்தில் பதிவுகளின் எண்னிக்கை இரண்டாயிரத்தினைத் தாண்டி விட்டது.

ஆகவே வலைச்சரத்தில் - பதிவுகள் பற்றிய தகவல்கள் தொகுக்கப் பட வேண்டும் என சிந்தனை ஓடியது.

தொகுக்கப் படத் 
தேவையான் தகவல்கள் ​:

வலைச்சரப் பதிவின் தேதி 
வலைச்சர ஆசிரியர் பெயர்
இவரது மின்னஞ்சல் முகவரி
இவரது வலைத்தள முகவரி
 
இவரது அலைபேசி எண்

வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப் படும் பதிவர் பெயர்
அவரது வலைத்தள முகவரி
அறிமுகப் படுத்தப் படும் பதிவின் தலைப்பு
அப்பதிவின் முகவரி

​ஆகியவை தொகுக்கப் பட வேண்டும்

தொகுப்பில் ஆசிரியர் பெயரோ, அவர் தொடர்பான தகவல்களோ, அறிமுகப் படுத்தப்படும் பதிவர் தொடர்பான தகவல்களோ, எந்த ஒரு தகவலைக் கொடுத்துத் தேடினாலும், அனைத்துத் தகவல்களும் திரையில் வர வேண்டும்.

இத்தொகுப்பில் தகவல் தேடும் வசதி வேண்டும். 

எப்படித் தொகுக்கலாம்

எவ்வளவு நாட்கள் ஆகும் 

மென்பொருள், கணினி - தேவைப்படும் மற்ற உபகரணங்கள் - ஆகும் செலவு

தொகுத்த பின்னர் தினந்தினம் நிரந்தரமாக அன்றையத் தினத் தகவல்கள் பதியப் பட வேண்டும்.

தோராயமாக எவ்வளவு செலவு ஆகும் 

இணையத்தில் உள்ள பதிவர்கள், முக நூல் நண்பர்கள், மற்றைய கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்கள் அனைவரையும் அவரவர்கள் கருத்தினைப் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன். 

சிந்தித்து - விபரமாக - மடல் எழுதவும். முகவரி : cheenakay@gmail.com

நல்வாழ்த்துகள் 

நட்புடன் சீனா




14 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

வணக்கம் ஐயா...

நல்ல ஐடியா..

அனைவரது தகவல்களும் கண்டிப்பாக தொகுக்க வேண்டும்.

கணினி தொழில்நுட்ப வழியில் தகவல் தொகுப்பில் அனுபவம் உள்ள நண்பர்கள் யோசனை சொல்லுங்கள்...

நிலாமகள் said...

பயனுள்ள யோசனை. தான் தனது என்றில்லாமல் 'நாம் நமது' எனும் நோக்கம் உயரியது.

இராஜ முகுந்தன் said...

எனது முகப்பக்கதிலும் பகிர்ந்துள்ளேன். விபரங்கள் கிடைத்தால் உங்களுக்கு மின்னஞ்சல் செய்கின்றேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் ஐயா...

நல்ல முயற்சி... அனைவரும் ஒத்துழைத்து தொகுத்து வழங்க வேண்டும்... அறிந்ததை தங்களுக்கு விரைவில் தெரிவிக்கிறேன்... நன்றி... வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு முயற்சி. வெற்றிபெற வாழ்த்துகள், ஐயா.

r.v.saravanan said...

அருமையான முயற்சி வாழ்த்துக்கள் சீனா அய்யா

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு முயற்சி! இது வெற்றிபெற்றால் நன்றாக இருக்கும்! தொழில்நுட்ப பதிவர்கள் இது குறித்து கருத்தும் ஆலோசனையும் விரைவில் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்! நன்றி!

இராஜராஜேஸ்வரி said...


"வலைச்சரத்தின் தகவல்கள் தொகுப்பு"
பயனுள்ள முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்...

கோமதி அரசு said...

நல்ல பயனுள்ள முயற்சி வாழ்த்துக்கள்.

படைப்பாளி said...

தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகளும், நன்றிகளும்...

Unknown said...


நல்ல முயற்சி! வெற்றிபெற வாழ்த்து!

துரை செல்வராஜூ said...

நல்ல முயற்சி!.. மகத்தான வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்!..

Anonymous said...

உங்களைப்பற்றி வைகோ ஐயா அவர்கள் அறிந்துகொண்டேன்...தங்கள் தளத்தில் இணைவதில் மகிழ்கிறேன்...

Thenammai Lakshmanan said...

இது பற்றி எனக்கு சரிவரத் தெரியவில்லை சார்.

ஒவ்வொரு இடுகையாகப் பிரித்துப் படித்து லேபிள் போட்டால்தான் சாத்யம் என்று தோன்றுது.

அதுவும் அது 200 வார்த்தைக்கு மேல ஒத்துக்காதே. சிரமம்தான்.