ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Friday 5 June 2009

மாட்டிக்கிட்டேனே

அன்பின் ரங்கா - பழகலாம் வாங்கன்னு சொல்லி தொடர் இடுகைலே மாட்டி வுட்டுட்டான்.

என்ன செய்யறது ..... பதில் சொல்வோமே

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் தாய்வழித் தாத்தாவின் பெயர் எனக்கு என் அம்மா ஆசையாக வைத்தார்கள். எனக்கு மிகவும் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

என் தாய் இறந்த போது -

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ஆமாம்.. பிடிக்கும், ஆனா நான் எழுதற்தே இல்லையே - பேனா திறப்பதே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடத்தான்


4).பிடித்த மதிய உணவு என்ன?

வெஜிடேரியன் .. அதனால் தக்காளி சூப் - உருளைக் கிழங்கு அவியல் - பூசனிக்காய் சாம்பார் - தயிர் - சாதம்5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஆமா யாராச்சும் பழக ஆரம்பிச்சா உடனே நட்பு தான்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியில் குளிக்கப் பிடிக்கும் - ஆனல் சந்தர்ப்பங்கள் குறைவு

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

தோற்றம் - கண்கள்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

என் திறமை - என் முன் கோபம்


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

அதிக அன்பு- என்னைச் சோம்பேறியாக்கும் வகையில் என் வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டு செய்வது

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

பெற்ற மக்கள் அயலகத்தில் - அவர்கள் இல்லாதது வருத்தத்தினை அளிக்கிறது


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ஊதா - நீலம்

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

கணினியின் திரை பார்க்கிறேன் - ஒன்றும் கேட்கவில்லை

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம்,

14.பிடித்த மணம்?

மல்லிகைப்பூ மற்றும் மலர்களின் மணம்


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அண்ணன் தருமி
நானானி
துளசி

இவர்கள் என் சம வயதினர்

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

சின்னப்பையன் ரங்காவின் பதிவுகளில் - அவனது அப்பாவினைப் பற்றிய பதிவு எனக்குப் பிடிக்கும். நல்ல கவிதை

17. பிடித்த விளையாட்டு?

செஸ் - ரம்மி - ஃப்ரீசெல்


18.கண்ணாடி அணிபவரா?

ஆம்

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?


நகைச்சுவை - த்ரில்லர் - புராணப்படங்கள்

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க, - சூபர் படம்

21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்

ஏனெனில் அந்த மாதங்களில் நல்லா தூங்கலாம் பாருங்க.. அதான்.


22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

இப்பொழுதா - இரா.முருகனின் சிறுகதைத் தொகுப்பு

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாற்றுவதே இல்லை

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் :அம்மாக்களின் தாலாட்டு

பிடிக்காதது :சாலையில் ஹாரன்கள்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அயலகம் - இலண்டன்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஓ.. இருக்கே!!

கணினியில் மென்பொருள் - கோபால் நிரலி - கை வந்த கலை
ஸ்கோயூனிக்ஸ் - எம் எப் கோபால் -


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என் செயல்களில் குற்றம் கண்டு பிடிப்பது

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அந்தரங்கம் புனிதமானது

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம். ஆக்ரா, மதுரா

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்.... ..

நாள் பூரா தூங்குவது - எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல்

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழு ! வாழ விடு !இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

தருமி, நானானி, துளசி

45 comments:

cheena (சீனா) said...

சோதனை ஓட்டம்

ப்ரியமுடன் வசந்த் said...

ரொம்ப நாளா உங்க பிளாக்கத்தேன் தேடிட்டு இருந்தேன் இன்னைக்கு சிக்கிருச்சு

Thamiz Priyan said...

சுறுக்கென்று நறுக்கென்று எழுதி விட்டீர்கள்.. :)

தேவன் மாயம் said...

எவ்வளவு செய்திருக்கீங்க!! உங்களுக்கு ஒரு பின்னூட்டம் போடமாட்டமா?
ஓட்டுத்தான் போடமாட்டமா?

தேவன் மாயம் said...

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஓ.. இருக்கே!!

கணினியில் மென்பொருள் - கோபால் நிரலி - கை வந்த கலை
ஸ்கோயூனிக்ஸ் - எம் எப் கோபால் -//

எனக்கும் தெரியுமே!! கோபால் பல்பொடி!!!ஹி!! ஹி!! ஹி!!!

தேவன் மாயம் said...

1.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்

ஏனெனில் அந்த மாதங்களில் நல்லா தூங்கலாம் பாருங்க.. அதான்.
///

சூப்பர்!! வெளிப்படையா இருக்கு பதில்!!

ஆயில்யன் said...

//வெஜிடேரியன் .. அதனால் தக்காளி சூப் - உருளைக் கிழங்கு அவியல் - பூசனிக்காய் சாம்பார் - தயிர் - சாதம்
///


ஹைய்ய்ய்ய் எனக்கும் ரொம்ப்ப புடிச்ச ஐட்டங்கள் :))

Anbu said...

பதில்கள் நன்றாக உள்ளது ஐயா..

Anonymous said...

ரொம்ப அருமையாக இருக்கு சார்.

cheena (சீனா) said...

அன்பின் வசந்த்

தேடுனீங்களா - கேட்டிருந்தா கொடுத்திருப்பேனே

வருகைக்கு நன்றி

cheena (சீனா) said...

சுறுக் நறுக் - அதுதான் சீனா - தமிழ்பிரியன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் தேவன்மயம்

ஓட்டுப் போட்டீங்களா - நன்றி

பதில் எல்லாம் வெளிப்படையாத்தான் இருக்கணும்

cheena (சீனா) said...

ஆயில்ஸ் - உங்களுக்கும் பிடிக்குமா - சரி சரி - நன்றி

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆனந்த்

தருமி said...

அண்ணன் தருமி
நானானி
துளசி

இவர்கள் என் சம வயதினர்

!!!!!!!!!!!

சதங்கா (Sathanga) said...

//அதிக அன்பு- என்னைச் சோம்பேறியாக்கும் வகையில் என் வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டு செய்வது//

கண்ணு பட்டுறப் போவுது. டக்குனு வேற பதில போட்ருங்க.

பதில்கள் அத்தனையும் ரத்தினங்கள்.

நானானி said...

கொஞ்ச நாளா கணினி பக்கமே வரமுடியவில்லை. இந்நிலையில் மாட்டி விட்டுடீங்க, சீனா! உங்களுக்காக...உங்களுக்காகவே இதைச் செய்கிறேன். சிறிது அவகாசம் கொடுப்பீர்கள்தானே?

cheena (சீனா) said...

அன்பின் அண்ணன் தருமி

சம வயதினர் என்றால் ஒன்று இரண்டு கூடவோ குறைத்தோ கூட இருக்கலாம்
தவறில்லை

cheena (சீனா) said...

அன்பின் சதங்கா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் நானானி

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்

எனக்காக எனக்காகவே எழுதுவது மகிழ்ச்சியினை தருகிறது. இப்படி ஒரு சகோதரி கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ

பழமைபேசி said...

//இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது//

இந்த தொடர் இடுகைக்கு நான் அழைப்பது....

இஃகிஃகி!

cheena (சீனா) said...

சாரி பழமைபேசி - நான் இடுகைன்னு எழுத ஆரம்பிச்சுட்டேன் - சில நேரங்களீல் பழைய பழக்கம் வந்துடுது ..... ம்ம்ம்ம்ம்

அன்புடன் அருணா said...

அடடா நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா????

cheena (சீனா) said...

ஆமாம் அருணா - மாட்டிக்கிட்டேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா பதில் சொல்லி இருக்கீங்க ஐயா..:-))))))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பதில்கள்.அருமை.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - கா.பாண்டியன்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீதர்

KARTHIK said...

// அண்ணன் தருமி
நானானி
துளசி

இவர்கள் என் சம வயதினர்.//

அண்ணன் எப்படிங்க மாப்பி சம வயசாவாரு.லாஜிக் இடிக்குதே

cheena (சீனா) said...

அதுவா - அவரு சும்மா 2 வயசு பெரியவரு - அதனாலே அண்ணன் - ஆனா 2 வயசெல்லாம் சம வயது தான் - புரிஞ்சுதா மச்சான்

நையாண்டி நைனா said...

arumai...
nandraaka irukkirathu.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நைனா

Noddykanna said...

பூசனிக்காய் சாம்பார், அவியல்,தயிர் சாதம் - தூக்கம் - எனக்கும் பிடிக்குமே!

சூப்பர் கேள்விகள், சூப்பர் பதில்கள்!

அய்யாவுக்கு வாழ்த்துக்கள்!

-- நாடிக்கண்ணா

குமரன் (Kumaran) said...

இந்த மாதிரி வலைப்பின்னல் இடுகைகளால ஒரு நன்மை - ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் கொஞ்சமாவது தெரிஞ்சுக்க முடியுது. உங்களைப் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டேன்.

நசரேயன் said...

நல்லா இருக்கு ஐயா

ஆ.ஞானசேகரன் said...

சுருக்கமா நல்லா எழுதி இருக்கிங்க.

cheena (சீனா) said...

நாடிக்கண்ணா

அருமை அருமை - எனக்குப் பிடித்தவை அனைத்தும் உனக்கும் பிடித்ததாக இருப்பது கண்டு மகிழ்ச்சி

நல்வாழ்த்துகள் நாடிக்கண்ணா

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நசரேயன்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஞான சேகரன்

cheena (சீனா) said...

அன்பின் குமரன்

ஆம் - உண்மை - ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இவை உதவும்

நன்றி குமரன்

வால்பையன் said...

//நாள் பூரா தூங்குவது - எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல்//

எப்படி இதெல்லாம்!

cheena (சீனா) said...

வாலு அதான் உண்மையே

agaram said...

என் வலைப்பூவினை தங்களது விமர்சனங்களாலும் எண்ணங்களாலும் மெருகுபடுத்தும் முயற்சிக்கும் எனது நன்றிகள் பல.
http://agaram-thirukkural.blogspot.com/

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அகரம்