ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday 21 October 2008

வள்ளுவம் வாழ்வின் வழி காட்டி


மாநில அளவில் ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நடத்திய பாரதி - வள்ளுவர் விழாவின் தொடர்பாக நடந்த பேச்சுப் போட்டியில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ஆர்.வெங்கட்ராமன் அவர்களிடம், பள்ளிக்கான சுழற் கேடயமும், போட்டியாளர்க்கான பண முடிப்பும், பெற்ற என் செல்ல மகளின் பேச்சு.
( 1993)





-----------------------------------------------------------------------------------------------

நடுவர் உள்ளிட்ட அவையினரை வணங்கி மகிழ்கிறேன்.



இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனும் எதையும் எளிதில் வேதம் என்று ஒத்துக் கொள்ள மாட்டான். ஆனால் உலகம் முழுவதும் ஒன்றை பொது மறையாக ஏற்றுக் கொண்டுள்ளதென்றால் உண்மையில் அந்த மனிதனின் சிந்தனை பாராட்டுக்குரியதே ! பாயில் படுத்து நோயில் விழும் மனித வாழ்க்கையில் இன்பங்கள் சேர்க்கவும் துன்பங்கள் நீக்கவும் துணை புரிவது வள்ளுவமே ஆகும். உண்மையில் அந்நூல் வாழ்வின் வழி காட்டியே !



மனிதனாகப் பிறந்தவன், அன்போடு வாழ வேண்டும் ! அறிவோடு திகழ வேண்டும் ! பகுத்தறிவோடு பழக வேண்டும் ! பண்பில் உயர வேண்டும் ! புனிதனாய் மாற வேண்டும் ! வாழ்வில் உயர்வதற்கு இவை மட்டும் போதாது - அவன் உண்மையைப் பேச வேண்டும் ; பொய்மையை நீக்க வேண்டும் ; நட்பில் உயர வேண்டும் ; நல்லதைக் கொள்ள வேண்டும் ; அல்லதைத் தவிர்க்க வேண்டும் ; வையத்து வாழ்வாங்கு வாழ வேண்டும் !



இன்றைய சமுதாயத்தில் மனிதன் அன்பின்றி, அறிவின்றி, நட்பின்றி, நேர்மையின்றி, நன்னெறியின்றி, வாழும் முறை தவறி, வழி காட்டும் துணையின்றித் தட்டுத் தடுமாறுகின்றான். அதற்கு வள்ளுவம் காட்டும் வழி தான் என்ன ?




அன்பாயிரு - அதற்காக நீ வருந்த வேண்டியதில்லை !

இன்சொல் பேசு - இதற்காக உன் நா துன்பப்படுவதில்லை !

பொறுமையாயிரு - அது உன்னைப் பொன் போல் உயர்த்தும் !

எதிரியை எளிதில் நம்பி விடாதே !

பகைவனின் கண்ணீரைப் பார்த்து பக்கம் சாய்ந்து விடாதே !

வணங்கும் கைகளுக்குள் வாளும் மறைந்திருக்கும் !

சொல் வேறு செயல் வேறு பட்டார் தொடர்பு கொள்ளாதே !

அது கனவிலும் இன்னாது !

வலிமை அறியாது வாள் வீசாதே -அது உன்னையே வீழ்த்தி விடும் !

கூற்றத்தைக் கைதட்டி அழைத்து ஆக்கத்தை இழக்காதே !

அன்பில் உயர்ந்து நில் !

என்பும் பிறர்க்கென்று சொல் !

வெற்றுடலாய் நடமாடி வேடிக்கைப் பொருளாகி விடாதே !


என்றெல்லாம் வள்ளுவம் காட்டும் வழி நாம் வாழ்வில் உயர

நல் வழியே !




அடுத்து அறிவு ! அது அற்றங்காக்கும் கருவி ! பகைவராலும் உள்ளழிக்கலாக அரண் என்று வள்ளுவர் அதற்குத் தரும் விளக்கம் அழகானது ! எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு ! எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லை அதிர வருவதோர் நோய் - என்பதெல்லாம் அறிவிற்கு வள்ளுவர் தரும் முடிவு !




சிந்தித்துச் செயல்படு ! வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் ! அதனால் வெள்ளம் வருமுன் அணை போடு ! என்று அவர் நம் வாழ்க்கைக்குத் தரும் எச்சரிக்கை - நல்வாழ்வுப் பாதைக்கோர் பச்சை விளக்கு ! இன்னும் அவர் கூறும் வாழ்க்கை விளக்கங்கள் நம்மை எல்லாம் மெய் சில்ர்க்க வைக்கின்றன !



கற்றதைச் சொல்லாதவன் காகிதப்பூ ! அறிவில்லாதவனின் அழகு மண்ணால் செய்த மாண்புறு பாவை ! கற்றறிவின்றி ஆன்றோர் அவைபுகல் எல்லைக் கோடின்றி விளையாடும் விளையாட்டு ! கற்றிருந்தால் நீ மனிதன் ! இல்லையெனில் விலங்கு ! நெஞ்சுரம் இருந்தால் நீ மனிதன் ! இல்லையெனில் மரம். இப்படி அவர் அறியாமையைச் சாடி அறிவைப் புகட்டி வாழ்வுக்குத் தரும் விளக்கம் - அது மனித வாழ்க்கைக்கோர் கலங்கரை விளக்கம் !




அடுத்து அன்பு - அது வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை. அந்த அன்பில்லாதாவன் என்புதோல் போர்த்திய விலங்கு ! அவனால் பயன் ஒன்றுமில்லை ! மனிதனின் அன்பு விருந்தினை மென்மையாக நோக்க வேண்டும் ! அது உலகத்தோடு ஒட்டி உறவாட உதவ வேண்டும் ! உள்ளத்தே பொங்கி எழும் சினத்தை அடக்க வேண்டும் ! இன்னா செய்தார்க்கும் இனியவே செய்தல் வேண்டும் ! இன்பத்துள் இன்பம் விழையாது துன்பத்துள் துன்பம் துடைக்க வேண்டும் ! அன்பால் ஆண்டவனைப் பணிய வேண்டும் ! அவன் ஆதி பகவன் ! அறவாழி அந்தணன் என்று அவர் ஆன்மீகத்திற்குத் தரும் விளக்கம் ஒன்றே போதும் அவர் சாதிச் சளுக்கறுக்கும் சான்றோர் என்பதற்கு ! சமயப் பிணக்கறுக்கும் ஆன்றோர் என்பதற்கு ! இதை விடச் சிறந்த வாழ்க்கை வழிகாட்டி வேறென்ன இருக்க முடியும் !




மனித வாழ்க்கையில் கொடுத்து வாழும் பண்பு உயர்வானது ! எனவே உன்னால் முடிந்தால் கொடு ! இல்லை எனில் அடுத்தவன் கொடுப்பதைத் தடுக்காதே ! அது பாவம் ! அந்தப் பாவம் தீர்க்க வழியே இல்லை !




சினம் கொள்ளாதே !

அது சேர்ந்தாரைக் கொல்லும் !

அறம் செய்ய நீ ஆன்றோனாக வேண்டாம் !

மனத்துக்கண் மாசிலனாகு - அது போதும் !

கொல்லா நலத்தது நோன்பு !

பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு !

எதையும் ஏற்றுக் கொள் !

தோல்விகள் இயற்கை !

எவரிடமும் கை ஏந்தாதே - அது இழிவு !

முடியாதென்று முடங்கிக் கிடக்காதே !

தக்க காலமும் இடமும் அறிந்து செயல்படு - இந்த உலகத்தையே உன்னால் பெற முடியும் !

இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடு !

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் !

எனைவகையான் தேரியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் !




சிந்தித்துச் செயலாற்று !

ஒழுக்கம் தவறாதே !

சொன்ன சொல் பிறழாதே !

அன்பாயிரு !

அறிவாயிரு !

பண்பாயிரு !

வெற்றி கொள் !

வேடந்தவிர் !

செய்தொழில் போற்று !

சோம்பலை அகற்று !

கொடுத்து வாழ் !

கெடுத்து வாழாதே !

உண்மை பேசு !

உயர்ந்து வாழ் !

அச்சமே கீழ்களது ஆசாரம் !

தன்மானம் இழக்காதே !

தன்னிலையில் தாழாதே !

தாழ்வு வந்துழி உயிர் வாழாதே !

வறுமையை நினைத்து துவளாதே !

வாய்ப்புகள் இருக்கு தயங்காதே !




இப்படி எல்லாம் வள்ளுவன் காட்டும் என்னை எங்கேயோ இழுத்துச் செல்கின்றது !




நீ ஒராண்டு திட்டமிட்டால் தானியங்களை விதை !

நீ பத்தாண்டுகள் திட்டமிட்டால் மரங்களை நடு !

நீ நூறாண்டுகள் திட்டமிட்டால் மனிதர்களை உருவாக்கு - என்றான் ஓர் அறிஞன். ஆனால் வள்ளுவனோ ஆயிரம் ஆண்டுகள் திட்டமிட்டு ஆன்றோர்களை அல்லவா உருவாக்கி உள்ளான். அதனால் தான் அவன் தெய்வப்புலவன் திருவள்ளுவன். அவன் வள்ளுவமும் குன்றின் மேலிட்ட விளக்கு ! இந்தக் குன்றின் மேலிட்ட விளக்குக்கு நம் குவலயமே சாட்சி ! இந்த ஒரு மாட்சிமை போதாதா தெய்வப் புலவரின் திருவள்ளுவத்திற்கு !




வாருங்கள் தீபத்தை ஏற்றுவோம் ! திருக்குறள் போற்றுவோம் ! உள்ளிருள் நீக்குவோம் !




வருகிறேன் !

வாய்ப்பிற்கு நன்றி !

வணக்கம் !


--------------------------------------------------------

ஆக்கம் : செல்வி ஷங்கர்


ஒலிவடிவம் :





------------------------------------------------------

69 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

தருமி said...

பெருமைப்படும் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.
பெருமைப்படுத்திய தங்கள் மகளுக்கும் வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

ஆஹா.....

புலிக்குட்டியைப் பெற்ற பூனையா நீங்க!!!!

மகளுக்கும், பெற்றோருக்கும் இனிய வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.

நிகழ்ச்சி சமீபத்துலேதானே நடந்துருக்கு:-)

15 எல்லாம் ஜுஜுபி.

சதங்கா (Sathanga) said...

பாராட்டுக்கள், பதக்கம் வாங்கிய தங்கள் மகளுக்கு.

இப்போதைக்கு அட்டென்டன்ஸ் போட்டுக்கறேன். பதிவு பெரிசா இருக்கு, பிறகு படித்து விரிவாய் மறுமொழி இடுகிறேன் :)

நாமக்கல் சிபி said...

ஆஹா! அருமையான பேச்சு!

அன்புடன் அருணா said...

மிக அருமையான பதிவு.....ம்ம் எனக்கும் மேலோட்டமாக இல்லாமல் இப்படியெல்லாம் கருத்துச் செறிவோடு எழுதவேண்டும் என்று ஆசைதான்....
அன்புடன் அருணா

ஆயில்யன் said...

//மனிதனாகப் பிறந்தவன், அன்போடு வாழ வேண்டும் ! அறிவோடு திகழ வேண்டும் ! பகுத்தறிவோடு பழக வேண்டும் ! பண்பில் உயர வேண்டும் ! புனிதனாய் மாற வேண்டும் ! வாழ்வில் உயர்வதற்கு இவை மட்டும் போதாது - அவன் உண்மையைப் பேச வேண்டும் ; பொய்மையை நீக்க வேண்டும் ; நட்பில் உயர வேண்டும் ; நல்லதைக் கொள்ள வேண்டும் ; அல்லதைத் தவிர்க்க வேண்டும் ; வையத்து வாழ்வாங்கு வாழ வேண்டும் !//

நினைவில் கொண்டால் பெயர் நிலைத்து - நிலைக்க- வாழலாம்!

அருமையாய் தெளிவாய் தங்குதடையின்றி வரும் பேச்சுகலை ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது அய்யா உங்களின் புதல்விக்கு!

வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்!

நன்றி!

Thamiz Priyan said...

நல்ல இனிமையான குரல். எங்கேயோ கேட்ட குரலாக இருக்கின்றது....;))
வள்ளுவம் பற்றிய பேச்சுப் போட்டிக்கு சிறந்த கட்டுரை... அதைவிட வாழ்க்கை பாடத்திற்கு சிறந்த விடயங்கள்!

சிவமுருகன் said...

அருமையான பேச்சு! நல்லா இருக்கு!

ஆக்கியவருக்கும், பேசியவருக்கும், பதித்தவருக்கும் நன்றிகள் பல.

குசும்பன் said...

// நூறாண்டுகள் திட்டமிட்டால் மனிதர்களை உருவாக்கு - என்றான் ஓர் அறிஞன். ஆனால் வள்ளுவனோ ஆயிரம் ஆண்டுகள் திட்டமிட்டு ஆன்றோர்களை அல்லவா உருவாக்கி உள்ளான். //

அருமை!

பேச்சுப்போட்டிக்கானவை எல்லாம் எழுதியது உங்கள் மகளா? அருமையாக இருக்கிறது.

சிவசுப்பிரமணியன் said...

தங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்..மிக அருமையான பதிவு

நந்து f/o நிலா said...

சீனா சார் உங்கள் மகளின் குரலும் பேச்சும் கண்டிப்பாக பெரும் சொத்து. இதை மேடைப்பேச்சை வைத்து சொல்லவில்லை.

வண்டு சிண்டிலும், நேரில் பேசியதிலும் இதை உணர்ந்தேன். அன்று மதுரையிலிருந்து திரும்பும்போது சசி உங்கள் மகள் பேச்சையும் பேசும்விதத்தையும் பற்றியேதான் பேசிக்கொண்டு வந்தாள்.

குரல் தானாக அமைவதாக இருக்கலாம் ஆனால் அழுத்தம் திருத்தமாக பேசுவது நாமாக பழக்கப்படுத்திக்கொள்வதுதான்.

ம்ஹூம் நானெல்லாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறய இருக்கு

இளைய கவி said...

பெருமைப்படும் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.
பெருமைப்படுத்திய தங்கள் மகளுக்கும் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்

இளையகவி

புதுகை.அப்துல்லா said...

புலிக்குட்டியைப் பெற்ற பூனையா நீங்க!!!!

//

haa..haa...ha.. speach VERY SUPER :)

சதங்கா (Sathanga) said...

பதிவு நீளமென முதலில் கருதினேன். ஆனால் அநேக குறள்களையும் கோர்த்து எழுதிய விதம் பாராட்டத்தக்கது. புகைப்படங்களில், நடுவர்களின் ஈடுபாட்டையும் காணமுடிகிறது.

Anonymous said...

வாவ்....

தந்தையின் பெருமையும்
மகளின் திறமையும்

ஒருசேர வெளிப்பட்டிருக்கிறது பதிவில்...

வாழ்த்துக்கள்
நங்கைக்கும், மங்கையைப் பெற்ற நல்லார்க்கும்.

cheena (சீனா) said...

அன்பின் தருமி அண்ணே

எங்களையும் எங்கள் மகளையும் வாழ்த்தியமை நன்று - நன்றி

cheena (சீனா) said...

ஆம் துளசி,

15 என்பதெல்லாம் சும்மா ஜுஜூபி
உண்மை
நான்க பூனையும் இல்ல - யானையும் இல்ல

cheena (சீனா) said...

சதங்கா - பாராட்டுகளுக்கு நன்றி

வருகை சரி - சீக்கிரமே படியுங்க - கருத்து மழை பொழியுங்க !

cheena (சீனா) said...

ஆம் சிபி - அருமையான பேச்சு - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிபி

cheena (சீனா) said...

அன்பின் அருணா,

ஆசைகள் நிறைவேற ஆசிகளூம் வாழ்த்துகளூம்

cheena (சீனா) said...

நினைவில் வைத்தால் பெயர் நிலைக்க - நிலைத்து வாழலாம் - உண்மை உண்மை ஆயில்ஸ்

வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆயில்ஸ்

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் பிரியன்,

வாழ்க்கையும் பேச்சும் இணைந்ததுதானே !

நீ அடிக்கடி கேட்கும் குரல் தான் இது

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிவமுருகன்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குசும்பன்

ஆக்கம் : செல்வி ஷங்கர்
பேசியது : என் புதல்வி
பதிவு : என்னுடையது

cheena (சீனா) said...

அன்பின் சிவா

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிவா

cheena (சீனா) said...

நந்து - தமிழும் பேச்சும் குரலும் அவளோடு கூடப் பிறந்தவை. இறைவன் கொடுத்த வரம். பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டவை அவை.

சசி நிலா விடம் அன்பினைத் தெரிவிக்கவும்.

cheena (சீனா) said...

அன்பின் இளைய கவி

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் அப்துல்லா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்துல்லா

cheena (சீனா) said...

அன்பின் சதங்கா - நடுவர்களின் கவனம் முழுவதும் அவள் பேச்சினில் தான் இருந்தது. அவையே அவளின் பேச்சினைக் கேட்டது.

கருத்துக்கு நன்றி சதங்கா

cheena (சீனா) said...

அன்பின் சேவியர்,

வருகைக்கும் கருத்தினிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சேவியர்

NewBee said...

உள்ளேன் ஐயா! :)

ஜுஜுபி (நன்றி: டீச்சர்) 15 வருடங்கள் கழித்துப் படிக்கும் போது, செல்வி அம்மா இன்னும் இன்னும், நிரைய எழுத வேண்டும் என்றெண்ணுகிறது மனம் :)

அதே வேகம், அதே சிந்தனை, அதே அருவியெனப் பொழியும் தங்கு தடையில்லா நடை, அதே (தமிழின் பால்)அத்தனை ஆழ்ந்த ஈடுபாடு

எங்களுக்கு இன்னும் இன்னும் வேண்டும்.

இந்த இனிய மலரும் நினைவுக்கு, சீனா ஸார்! உங்களுக்கு ஒரு சல்யூட் :). நிரம்ப மகிழ்ச்சி :))

NewBee said...
This comment has been removed by a blog administrator.
+Ve அந்தோணி முத்து said...

//மனிதனாகப் பிறந்தவன், அன்போடு வாழ வேண்டும் ! அறிவோடு திகழ வேண்டும் ! பகுத்தறிவோடு பழக வேண்டும் ! பண்பில் உயர வேண்டும் ! புனிதனாய் மாற வேண்டும் ! வாழ்வில் உயர்வதற்கு இவை மட்டும் போதாது - அவன் உண்மையைப் பேச வேண்டும் ; பொய்மையை நீக்க வேண்டும் ; நட்பில் உயர வேண்டும் ; நல்லதைக் கொள்ள வேண்டும் ; அல்லதைத் தவிர்க்க வேண்டும் ; வையத்து வாழ்வாங்கு வாழ வேண்டும் !//

எத்தனைக் கருத்துச் செறிவு மிகுந்த, ஆழ்ந்த அர்த்தமுடைய வரிகள்...!

வாழ்வுக்கு அதி முக்கியமாய், உதவும்...
எழுத்துக்களை வாசிக்கத் தந்தமைக்கு,
மனம் நிறைந்த நன்றிகள் அப்பா.

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

இவள் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்லைப் தங்களுக்குப் பெற்றுத் தந்த புதல்விக்கு என் வாழ்த்துகளும் ஆசியும்

நானானி said...

அன்புள்ள சீனா, செல்வி சங்கர்!
அருமையான ,திறமையான, துள்சி சொன்னா மாதிரி புலிக்குட்டியைதான் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் எத்தனை அடிகள் பாய்ந்தீர்களோ தெரியாது..ஆனால் குட்டி சும்மா அறுபதடி பாய்ந்திருக்கிறது. நியூபீ தானே அவள்? உங்கள் மூவருக்கும் என் வாழ்த்துக்கள்!!

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

இவள் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்லைப் தங்களுக்குப் பெற்றுத் தந்த புதல்விக்கு என் வாழ்த்துகளும் ஆசியும்

Noddykanna said...

"சினம் கொள்ளாதே !
அது சேர்ந்தாரைக் கொல்லும் !
அறம் செய்ய நீ ஆன்றோனாக வேண்டாம் !
மனத்துக்கண் மாசிலனாகு - அது போதும் !
கொல்லா நலத்தது நோன்பு !
பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு !
எதையும் ஏற்றுக் கொள் !
தோல்விகள் இயற்கை !
எவரிடமும் கை ஏந்தாதே - அது இழிவு !
முடியாதென்று முடங்கிக் கிடக்காதே !"
-- ஆஹா அருமை, வள்ளுவனின் வான்மறையை, ஈரடியை ஓரடியாய், யாவர்க்கும் விளங்கும் வண்ணம் இயற்றியது அருமை! அதை யாவரும் கண்டு, படிக்க, படைத்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்! வாழ்த்துகள்!

வால்பையன் said...

திருக்குறள் உலகபொது மறை என்பதில் சந்தேகமில்லை.

எந்த செயலுக்கும் என் மனதில் ஏதாவது ஒரு குரல் ஓடிக்கொண்டே இருக்கும்.
அந்த பேச்சை அப்படியே பதிவிட்டதுக்கு நன்றி.

உங்களது மகளுக்கு லேட்டாக வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.. :)

cheena (சீனா) said...

புது வண்டே !

ஆம். நம் இயக்கமே குறளின் இயக்கம் தான். நாம் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே இது சொல்லப்பட்டதா ? என்று நான் பல நேரங்களில் வியந்திருக்கிறேன். அதற்கு மேடை வடிவம் கொடுத்த எம் மழலையரை என்றுமே நினைத்தால் என் நினைவுகள் பொங்கும். குறள் வழி நடந்தால் குவலயமே நம் வழி நடக்கும். நல்வாழ்த்துகள்

செல்விஷங்கர் said...

புது வண்டே !

ஆம். நம் இயக்கமே குறளின் இயக்கம் தான். நாம் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே இது சொல்லப்பட்டதா ? என்று நான் பல நேரங்களில் வியந்திருக்கிறேன். அதற்கு மேடை வடிவம் கொடுத்த எம் மழலையரை என்றுமே நினைத்தால் என் நினைவுகள் பொங்கும். குறள் வழி நடந்தால் குவலயமே நம் வழி நடக்கும். நல்வாழ்த்துகள்

செல்விஷங்கர் said...

அன்பின் அந்தோணி முத்து

நாம் அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை ஒழுக்கங்கள் தான் வேதம் என்கின்றார். வள்ளுவன் இந்த வேதத்தை வாழ்ந்து காட்டியவனாய் இருந்திருக்கலாம். அக்குறளைப் படிக்கும் போதெல்லாம் நாம் அப்படி வாழ வேண்டுமென்ற எண்ணம் நமக்குள் தோன்றுவது நம்மை இயல்பிலேயே வியக்க வைக்கிறது.

நல்வாழ்த்துகள்

செல்விஷங்கர் said...

அன்பின் மௌளி,

ஒவ்வ்வ்ரு மேடைப்பேச்சைக் கேட்கின்ற போதும் நான் இந்தக் குறளை நினைந்து மகிழ்வதுண்டு. சொல்லால் சுவை தந்த மழலையர் என்றும் எம்மை மயக்குவர்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வால்பையன் said...

//எந்த செயலுக்கும் என் மனதில் ஏதாவது ஒரு குரல் ஓடிக்கொண்டே இருக்கும்.//

இது என் மனதில் ஓடிகொண்டிருப்பது

//அந்த பேச்சை அப்படியே பதிவிட்டதுக்கு நன்றி.//

இது உங்கள் மகளின் பேச்சை பதிவாக இட்டதற்கு

என்டர் பட்டன் அடிக்க மறந்து விட்டேன்

செல்விஷங்கர் said...

அன்பின் நானானி,

வாழ்த்துகளால் மகிழ்கின்றோம். ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கின்ற போது அது குறளடியாக இருக்க வேண்டுமென்று நான் நினைத்ததுண்டு. அந்நினைவுகளை அப்ப்டியே ஏம் மழலையர் செயலாக்கிக் காட்டுவர். அது தான் இவ்வுலகத்தில் எம் பெரும் சொத்து

தங்கள் ஊகம் தவறாகும ? ( அவள் யார் ?)

செல்விஷங்கர் said...

அன்பின் நாடிக்கண்ணா,

வள்ளுவத்தைப் படித்தால் நம் வாழ்வு சிறக்கும். வாழ வரும் பெண்களுக்கு வள்ளுவன் வாழ்க்கை அறத்தை வகுத்துள்ளான் என்று தாலாட்டுப் பாடும் போதெல்லாம் மழலையர் குறள் வழி நடக்க வேண்டும் என்று மனத்தில் தோன்றும்.

வழி நடந்தால் வாழ்வு சுவையாகும்.

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

வால்பையா - உண்மை உண்மை - மனத்தில் ஓடுவது குரலா ( மனச்சாட்சியா ) அல்லது குறளா ?

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கயல்விழி முத்துலட்சுமி

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் அக்கா (அக்கா தானே?? இல்ல தங்கச்சிக்காவா?? )

மங்களூர் சிவா said...

இந்த குரலை எங்கியோ கேட்டிருக்கேனே
:)))))))))))))))))

cheena (சீனா) said...

அய்ம்பதாவது மறுமொழியிட்ட சிவா - நன்றி நல்வாழ்த்துகள்.

அக்காவிற்கோ தங்கைக்கோ நல்வாஅழ்த்து கூறி விட்டாய். நன்றி

இக்குரல் நீ கேட்ட குரல் தான்

Sanjai Gandhi said...

சூப்பர்.. சூப்பர்.. :)
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன? :)

அன்று விதைத்த விதை இன்று அழகாய் கதை சொல்வதில் தொடர்ந்துக் கொண்டிருக்கிறதே.. :)) வண்டாய் பறந்துக் கொண்டிருக்கிறதே.. :))

பாச மலர் / Paasa Malar said...

மீண்டும் வாழ்த்துகள் சீனா சார்..

M.Rishan Shareef said...

மிக அருமையான பேச்சு. உங்கள் அன்பு மகளுக்கு எனது பாராட்டுக்கள்!
தொடரும் அவரது முயற்சிகளனைத்தும் வெற்றிகளை ஈட்டித்தர வாழ்த்துக்கள் !

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாசமலர்

cheena (சீனா) said...

அன்பின் ரிஷான்

வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி

Geetha Sambasivam said...

அருமையாக ஆக்கிய அம்மாவிற்கும், பேசிய மகளிற்கும், அதை இங்கே பகிர்ந்த தந்தைக்கும் வாழ்த்துகள். மகளுக்கு ஆசிகளும், வாழ்த்துகளும். தமிழாசிரியையின் மகள் என்பதை நிரூபித்திருக்கின்றாள் உங்கள் மகள். அனைத்தையும் விட உங்கள் ஊக்கமே பெரும் சிறப்புக்கு உரியது. பெற்றோரின் பங்கும், அதை உணர்ந்த மகளின் பாங்கும் சிறப்பாகவே உள்ளது.

தாமதமாய்த் தான் பார்க்க நேர்ந்தது மடலை! :((((

வல்லிசிம்ஹன் said...

அன்பு மகள் பேசிப் பரிசும் வாங்கியதை விட வேறு என்ன பெருமை வேண்டும். வள்ளுவன் குறள் தங்கள் மகளின் குரலில் கணீரென்று,கேஎட்கிறது. ஆணித்தரமான வார்த்தைகள். அழகான எழுத்துக் கோர்வை. அசந்துவிட்டேன். தங்கள் மனைவிக்கும் தங்களூக்கும் வாழ்த்துகள் சொன்னால் மட்ட்டும் போதாது. வள்ளுவத்தைநம்பி வெற்றியும் பெற்றாள், உங்கள் மகள் என்றும் இனிய நல் வாழ்க்கை பெறவேண்டும்.

cheena (சீனா) said...

மகளுக்கு ஆசிகளும், வாழ்த்துகளும். தமிழாசிரியையின் மகள் என்பதை நிரூபித்திருக்கின்றாள் உங்கள் மகள். அனைத்தையும் விட உங்கள் ஊக்கமே பெரும் சிறப்புக்கு உரியது. பெற்றோரின் பங்கும், அதை உணர்ந்த மகளின் பாங்கும் சிறப்பாகவே உள்ளது.


அன்புச் சகோதரி கீதா,

தாமதமாய் பார்த்தாலும் அருமையான மறு மொழி - நன்றி

குடும்பத்தினர் அனைவரையும் வாழ்த்தியது நன்று - பிள்ளைகள் ஒரு பருவம் வரை பெற்றோரையே சுற்றிச் சுற்றி வருவார்கள். அப்படிப்பட்ட காலத்தில் நாம் அன்பால் அவர்களை அறவழிப் பாதைக்கு அழைத்துச் செல்வது அனவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். வளர்ந்த பின்னரும் அது பசு மரத்தாணி போல் பதிந்து விடும்.

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Thekkikattan|தெகா said...

அடேங்க் சாமீஈஈ, என்ன குரல் வளம். கனீர் கனீர்னு... இவ்வளவு நாள் கழிச்சு கிடைச்சிருக்கு கேக்க.

நன்றி சீனா, பகிர்ந்து கொண்டமைக்கு! இந்த குரலுக்கு சொந்தக்கரரை திரும்ப தளத்தில இறக்கி விடணுமுங்க. :-)

சேலம் தேவா said...

ஆக்கமும்,பேச்சும் அருமை அய்யா..!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

வள்ளுவத்தின் வலிமையை..
வாழ்வில் அதன் அவசியத்தை..
ஆக்கமாய் அழகாய் தந்த செல்விக்கும்...
அருமையாய் ஒலிவடிவம் தந்த உங்கள் புதல்விக்கும்..

அதை எம்முடன் பகிர்ந்த உங்களுக்கும்
மனமார்ந்த நன்றிகள். :)

dheva said...

மிக அருமையான பகிர்வு ஐயா....! வள்ளுவரின் சிறப்பினையும், திருக்குறளின் பெருமையையும் மிக அருமையான மேடைத் தமிழில்....

மிக அருமை ஐயா..! வீட்டில் அனைவருமாய் இதைக் கேட்டோம்...!

பகிர்வுக்கு நன்றிகள்!

cheena (சீனா) said...

அன்பின் சேலம் தேவா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் ஆன்ந்தி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் தேவா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

அன்பின் சீனா ஐயா...

செல்வி என்பது உங்கள் துணைவியார் என்று அறியாமல், அந்த புகைப்படத்தில் இருந்த பெண் என்று எண்ணி விட்டேன்..

தயவுசெய்து மன்னிக்க.

//ஆக்கமாய் அழகாய் தந்த செல்விக்கும்...
அருமையாய் ஒலிவடிவம் தந்த உங்கள் புதல்விக்கும்.. //


...ஆக்கமாய் அழகாய் எழுதித் தந்த செல்வி அம்மாவிற்கு மிக்க நன்றி!!!!

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.