ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday 2 July 2008

நானானியிடம் தாமரையின் வேண்டுகோள் - பானைக்கதை


அன்பின் பதிவர்களே !

சகோதரி நானானி யானைக்கதை, பூனைக்கதை என எழுதினாலும் எழுதினார். தாமரை என்ற பதிவர் பானைக்கதை வேண்டுமென மறு மொழியில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ராமலக்ஷ்மியோ நானானிக்குத் தெரியாத கதையா - எந்தப் பொருளைக் கொடுத்தாலும் கதை எழுதும் திறமை படைத்தவர் எனச் சான்றிதழ் வழங்கி உசுப்பேத்தி விட்டிருக்கிறார். நானானி எழுதும் முன்னர் நான் எழுதி விடலாம் என ஒரு விருப்பம்.

பானையைப் பற்றி கதை எழுத வேண்டுமெனில் - கதையில் பானை வர வேண்டுமா, பானையைப் பற்றி வரவேண்டுமா, பானையைப் பயன்படுத்தி எழுத வேண்டுமா, பானை தான் கதாநாயகனாக ( நாயகியாகவும் ??) இருக்க வேண்டுமா என பலப்பல ஐயப்பாடுகள் மனத்திலே வந்தன. தாமரை என்ன எதிர்பார்க்கிறார் - ராமலக்ஷ்மி என்ன பரிந்துரைக்கிறார் - நானானி என்ன எழுதப் போகீறார் - எனப் பலப்பல எண்ணங்கள்

அப்புறம் கதை எழுதுவதென்பது அவ்வளவு எளிதா என்ன ? இது வரை ஒரூ கதை கூட எழுதியதில்லையே ( கதை விட்டிருக்கிறேன்) - என்ன செய்வது ? மனம் தடுமாறுகையில், எனதருமைப் பெயர்த்திக்கு, அவள் உறங்கச் செல்லும் முன், நான் வழக்கமாகச் சொல்லும் கதையினை, அவளுக்கு மிகவும் பிடித்த, ரசித்த, திரும்பத் திரும்பக் கூறச் சொல்லி, நான் கூறிய கதையினை இங்கு அப்படியே எழுதி விடலாமென எழுதி விட்டேன்.

சொந்தக்கதையா - சொந்தக்கற்பனையா - படித்ததா - கேட்டதா - சுட்டதா - தெரியாது - நினைவில்லை. ( பரிசு கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா இதெல்லாம் நினைக்காதீங்க - எனக்கு, கதை சொன்ன எனக்கு பரிசு கொடுங்க).

அய்யா அய்யா கதெ சொல்லுங்க

அடப் போடி - தூக்கம் தூக்கமா வருது

அம்மம்மா கிட்டே சொல்லிடுவேன் - நீங்க கதெ சொல்ல மாட்டேங்கறீங்கன்னு !

அம்மம்மா கிட்டே எனக்கென்ன பயமா ? போய்ச் சொல்லேன் !

ஏங்க கதெ தானே கேக்குறா - சொல்லுங்களேன் ( தங்க்ஸின் அன்புக் கட்டளை)

ம்ம்ம்ம்ம் - வா வா - இங்கே உக்காரு இப்படி

நானும் நானும் ( அடுத்த பெயர்த்தி)

ஆக படுக்கையில் இரு பக்கமும் இருவரையும் அமர்த்தி கதை சொல்ல ஆரம்பிப்பேன்.

அந்தக் காலத்துலே கிருஷ்ண தேவ ராயர்னு ஒரு ராசா இருந்தாராம். அவர் கிட்டே தெனாலி ராமன்னு ஒரு விகடகவி இருந்தாராம். ஒரு நா அரசவையிலே தெனாலி ராமன் சோகமா இருந்தாராம். ராசா கேட்டாராம் - என்ன சோகம்னு ? - இவரு சொன்னாராம் - என் மக சின்னப்பொண்ணு- குழந்தை - அழுது கிட்டே இருக்கா ன்னாராம் - ராசா உடனே இங்கே அழச்சிட்டு வா - நான் அவளைச் சிரிக்க வைக்கிறேன் அப்படின்னாராம்.

மறு நாள், அரசவைக்கு தெனாலி ராமன் தன் சிறு குழந்தையை அழைத்து வந்தாராம்.

ராசாவிற்கும் குழந்தைக்கும் இடையே நடந்த உரையாடல் :

பாப்பா பாப்பா - ஏம்மா சோகமா இருக்கறே - இங்க பாரு - எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருக்கணும் தெரியுமா

ராசா ராசா எனக்கு ஒண்ணு வேணும் அப்பா வாங்கித்தர மாட்டேங்குறார்.

அப்படியா - என்ன வேண்டும் சொல் - பொன்னா ? பொருளா ? நாடா ? நகரமா ? யானையா ? குதிரையா ? விளையாடும் பொருளா ? சொல் சொல்
ம்ம்ம்ம்ம்ம் அதெல்லாம் ஒண்ணுமில்ல - எனக்கு எனக்கு எனக்கு

தயங்காமல் கேள் குழந்தாய்

ஒரே ஓரே ஒரு ஆனை வேணும் .....ம்ம்ம்ம்ம்ம்.......

ஹா ஹா ஹா ஹா இவ்வளவுதானா ? இதற்கென்ன மறுப்பு ? இதோ வருகிறது யானை. யாரங்கே !! ( கை தட்டி) உடனே பட்டத்து யானையை அழைத்து வா !

அய்யா அயயா - ஜாலி ஜாலி - ஆனை வந்துடுச்சி ஆனை வந்துடுச்சி -
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மறு படி ஏன் அழுகிறாய் குழந்தாய்

எனக்கு எனக்கு எனக்கு எனக்கு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அழாமல் தயங்காமல் கேள் குழந்தாய்

எனக்கு எனக்கு ஒரு பானை வேணும் ....... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஹா ஹா ஹா ஹா இதென்ன கூத்து - யாரங்கே - உடனே உடனே உடனே ஒரு அழகான புதுப் பானை கொண்டு வா !!

பானையும் வந்தது

அய்யா அய்யா அய்யா ஜாலி ஜாலி ஜாலி பானை ஆனை ரெண்டும் வந்துடுச்சி - ஹெ ஹெ ஹெ ஹெ - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மறு படி ஏனம்மா அழுகிறாய்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சொல்லி விட்டு அழம்மா - என்ன வேண்டும் கேளம்மா !

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ( அழுகை பெரிதாகிறது)

யாரங்கே இக்குழந்தையின் அழுகையை நிறுத்துபவர்களுக்கு ஆயிரம் பொற்காசு பரிசாகத் தரப்படும்.

( திருவிளையாடல் - தருமி - எவ்வளவு ? ஆயிரமா ஆயிரமாச்சே ஆயிரமாச்சே - எனக்கு இல்லே - இல்லே - இலே - இனி உங்கள் கற்பனைக் குதிரையை இவ்விடத்தில் தட்டி விட்டு உங்கள் மகன் மகள் பேரன் பேத்திக்கு கதை சொல்லும் போது கதை விடுங்கள்)

கடைசியில் யாரும் முன் வராத காரணத்தினாலும், குழந்தை அழுகையை நிறுத்தாத காரணத்தினாலும், மன்னவனே மண்டியிட்டு, குழந்தாய் - கேளம்மா கேள் -என்ன வேண்டும் சொல்லம்மா சொல் எனக் கேட்க,

எனக்கு எனக்கு ----------------- எனக்கு எனக்கு

இப்பவே இப்பவே - இந்த ஆனையெ இந்தப் பானைக்குள்ளே போச்சொல்லு - போகணும் - ஆமா - பானைக்குள்ளே ஆனை வேணும் - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - அழுகை தொடர - அனைவரும் அவையை விட்டு தப்பித்து ஓட, மன்னவனோ மயங்கி விழ ...........

அப்புறமென்ன - கதெ முடிஞ்சிடுச்சி - எல்லோரும் வீட்டுக்குப் போங்க
அவ்ளோ தான் !

சீனா ... 02.07.2008

74 comments:

cheena (சீனா) said...

ஹா ஹா ஹா யாருக்கெல்லாம் எதப்பத்தி கத வேணும் - தொடர்பு கொள்ளுங்கள்

pudugaithendral said...

இந்தக் கதையைக் கேட்டு உங்க பேத்திங்க தூங்கினாங்களா சார்?!!!

நிஜமா நல்லவன் said...

ஒரு யானை தம்மாத்தூண்டு ஊசியில தன்னோட தும்பிக்கையால நூலை கோர்த்து மதுரை பக்கம் இருக்கிற ஐயா வாயை தைத்த கதை வேண்டும்:)

ராமலக்ஷ்மி said...

மன்னவனோடு சேர்ந்து நாங்களும் மயங்கி விழு வேண்டியதுதான் சீனா சார்:)))! அருமை அருமை.

நிலா said...

எல்லாகதையும் இந்த பேத்திக்கும் வேணும்.சொல்லலன்னா ஆச்சிகிட்ட சொல்லிடுவேன்.

Anonymous said...

நான் இன்னும் பதிவு எழுத தொடங்கவில்லை.
நானானியின் பதிவுகளின் வாசகி.
பின்னூட்டம் எழுதும் போது சும்மா
புனை பெயருடன் எழுதினேன்.
நீங்கள் யானையையே பானைக்குள்
வைத்து விட்டீர்களே. கதை அருமை.
தாமரை.

Noddykanna said...

ஹை! ஐயா கதை super!

எனக்கு வேணும் பானைக்குள்ள யானை! பிள்ளைகள் இரசிக்கும்படி கதை சொல்லும் அய்யாவுக்கு ஜே!

-- நாடிக்கண்ணா

நிலா said...

எல்லாகதையும் இந்த பேத்திக்கும் வேணும்.சொல்லலன்னா ஆச்சிகிட்ட சொல்லிடுவேன்.

cheena (சீனா) said...

புதுகைத் தென்றல் - எங்கே தூங்கினாங்க - எத்தன தடவ சொல்றது - எத்தன தடவ கேப்பாங்க தெரியுமா ?

cheena (சீனா) said...

நிஜமா நல்லவனே !! நீ மெய்யாலும் நல்லவனா ? இந்தப் பாடு படுத்தறே

cheena (சீனா) said...

ராமலக்ஷ்மி

மன்னவனோடு சேர்ந்து மயங்கினால் பணிப்பெண்கள் வந்து நீர் தெளித்து எழுப்பி விடுவார்கள்

cheena (சீனா) said...

நிலாச்செல்லம்

உனக்கில்லாத கதையாடா செல்லம் - எத்தனி வேணும் - சொல்லு - சொல்லுறேன்

cheena (சீனா) said...

தாமரையின் விருப்பம் நிறைவேறியது அல்லவா - அது போதும்

cheena (சீனா) said...

தாமரையின் விருப்பம் நிறைவேறியது அல்லவா - அது போதும்

cheena (சீனா) said...

தாமரையின் விருப்பம் நிறைவேறியது அல்லவா - அது போதும்

cheena (சீனா) said...

நாடிக்கண்ணா ! புள்ளங்களுக்கு புரியற மாதிரி கத சொல்லணும்றது தான் இங்கே கருப்பொருள்

NewBee said...

ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்..:(( பானைக்குள்ள ஆனை போகணும்.இப்பவே போகணும்!

பேத்திகள் , அய்யா அழும் அழகைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருப்பார்களே. :))))

நீங்கள் கதை சொன்ன விதம் அருமை.ம்ம்ம்ம்ம்ம்ம், பானைக்குள்ள ஆனை போகணும்.இப்பவே போகணும்! :(((((

NewBee said...

//நிலா said...
எல்லாகதையும் இந்த பேத்திக்கும் வேணும்.சொல்லலன்னா ஆச்சிகிட்ட சொல்லிடுவேன்.
//

அப்படி போடு நிலாக் குட்டி! ஆச்சி சொன்னா அப்பீலே இல்லையே! சரி தானே சீனா ஸார்?

இதுக்கு தங்ஸ் பதில் சொன்னா நல்லா இருக்கும்.எனக்கும் பதிவு போட மேட்டர் தேரும். :D.. ;D...:-0

நானானி said...

பானைக்குள் யானை போகணும். ப்பூ!
இவ்வளவுதானே! இதுக்குப் போயி
அலட்டிக்கலாமா? சீனா?
எனக்குத் தெரியுமே!!!
ஆங்! சொல்லுங்களேன்...சொல்லுங்களேன்!!!

ஹூஹும்!! ஷொல்லமாட்டேனே!!!

cheena (சீனா) said...

புது வண்டே !!

பானைக்குள்ளே ஆனை போற அழகெப் பாக்கணூமே !!

அய்யா அழறதப் பாத்து பேரன் பேத்திகள் விழுந்து விழுந்து சிரிச்சாங்க - ஆமா

cheena (சீனா) said...

புது வண்டே !!

நிலாச்செல்லத்துக்கு நானே கதெ சொல்லிடுவேனே !! ஆச்சி ரெகமண்டேஷன்லாம் ஒண்ணும் வேணாம் - தங்க்ஸ் அதெல்லாமில்லன்னு சொல்றாங்க - இங்க சிதம்பரந்தான் - மதுர இல்ல

cheena (சீனா) said...

நானானி மறு மொழி அருமை - என் பேரன் பேத்திகளை உங்க கிட்டே அனுப்பிடறேன் - நீங்க ஷொல்லுங்க
சேரியா

Thamiz Priyan said...

கதை சூப்பரா இருக்கு...ஆனா யானைக்குள்ள பானை போகனுமா... மன்னிக்கவும் பானைக்குள்ள யானை போகனுமா?... நல்ல பாப்பாவா இருக்கே இந்த பொண்ணு!........ :)))))

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...

ஒரு யானை தம்மாத்தூண்டு ஊசியில தன்னோட தும்பிக்கையால நூலை கோர்த்து மதுரை பக்கம் இருக்கிற ஐயா வாயை தைத்த கதை வேண்டும்:)///
அண்ணே! எப்படின்னே இப்படி எல்லாம் ஐடியா கிடைக்குது... எங்களுக்கும் கொஞ்ச ஜொல்லிக் கொடுங்களேன்... :))))

சதங்கா (Sathanga) said...

ஆஹா கதை அருமை சீனா ஐயா. ஆனை பானை, எதுகை மோனை கொண்ட அழகிய கதை.

ம்ம்ம்ம்ம் அப்புறம் ?

தருமி said...

இதுனாலதான் நான் இந்த மாதிரி ரிஸ்க்கான முயற்சிகளில் இறங்கிறதில்லை
:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

யானை பூனை பானை ..ம்.. இது ஒரு தொடராகுது போலயே..
@நானானி நல்லா மாட்டினீங்களா..

ராமலக்ஷ்மி said...

நானானி said...
//பானைக்குள் யானை போகணும். ப்பூ! இவ்வளவுதானே!//

நான் சொன்னது சரியாப் போச்சு பார்த்தீர்களா சீனா சார். மயங்கி விழுந்த மன்னனையும் மற்றவரையும் எழுப்ப நானானியே பராக் பராக், வித் பானைக்குள் யானை:))!

ராமலக்ஷ்மி said...

பதிவுக்கான படம் அருமை. பானைக்குள் போக முயலும் ஆனை.

வல்லிசிம்ஹன் said...

நல்ல ஆனை. நல்ல பானை:)

அய்யா நீங்க கில்லாடிதான். பேத்திகளை இப்படிச் சமாளிச்சுட்டீங்களே.
என் பேரனுக்கு டிடெக்டிவ் கதை சொல்லி அத்தியாயம் நம்பர் போட்டு எழுதிக் கொடுக்கணும்.:)
நல்லா இருந்தது ராயர் கதை..

வல்லிசிம்ஹன் said...

எங்க ரெண்டு வயசுப் பேத்திக்கு மயில் கதை வேணுமாம்.
நீங்க சொன்னா நான் அவகிட்ட சொல்லறேன்.:)

ரசிகன் said...

.//இப்பவே இப்பவே - இந்த ஆனையெ இந்தப் பானைக்குள்ளே போச்சொல்லு - போகணும் - ஆமா - பானைக்குள்ளே ஆனை வேணும் - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - அழுகை தொடர - அனைவரும் அவையை விட்டு தப்பித்து ஓட, மன்னவனோ மயங்கி விழ ...........

//

ஹா..ஹா.. நல்ல நகைச்சுவைதான்:))

Natchathraa said...

ஹைய்ய்ய்ய்ய்யா இந்த தாத்தா சூப்ப்ப்ப்ப்பரா கதை சொல்லுறாங்களே....

cheena (சீனா) said...

அன்பின் தமிழ்ப்பிரியன்

குழந்தைகளின் எண்ணங்கள் எப்பொழுதுமே வித்தியாசமாய்த் தான் இருக்கும். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது கடினம்.

cheena (சீனா) said...

தமிழ்ப்பிரியன், இந்த நிஜமா நல்லவர் இருக்காரே !! அவர் இப்படித்தான் யோசிப்பாரு - வேற வழி இல்ல -

cheena (சீனா) said...

சதங்கா,

ரசிப்பிற்கு நன்றி - அப்புறமென்ன ? தொடருங்களேன் - யார் வேணாமுன்னது

cheena (சீனா) said...

தருமி,

அருமைப் பேரன்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு இப்படி ரிஸ்க் எடுக்கலேன்னா எப்படி - ம்ம்ம்ம்

cheena (சீனா) said...

கயல்விழி,

நானானிய மாட்டி விடாதீங்க - பாவம் - எப்படி யானையே பானைக்குள்ளே போடறதுன்னு யோசிச்சிட்டிருக்காங்க இப்ப

cheena (சீனா) said...

ராமலக்ஷ்மி

நானானிய உசுப்பேத்தாதீங்க - பராக் பராக் எல்லாம் சொல்லி - நெசமாவே அப்புறம் எழுதிடுவாங்க இதோட தொடரே !! ஆமா

cheena (சீனா) said...

பானைக்குள் புக முயலும் யானைப்படம் ஒரு சக பதிவர் அனுப்பினார் - போடச் சொல்லி அன்பாக - அவ்ளோ தான் - அதுக்கு நான் பொறுப்பல்ல

cheena (சீனா) said...

வல்லிம்மா,

பேரங்களுக்கு பேத்திகளுக்கு கதெ அவங்களுக்குப் பிடிச்ச் மாதிரி சொல்லணூம் - அதான்

துப்பாரியும் கதை தானே - சொல்லுங்களேன்

cheena (சீனா) said...

உங்க ரெண்டு வயசுப்பேத்திக்கு மயிலு கத வேணும் அவ்ளோ தானே !! சொன்னாப் போச்சு - வல்லிம்மா

cheena (சீனா) said...

வாய்யா ரசிகன், தாய் நாடா - அயல் நாடா - விடுப்பு முடிஞ்சிடுச்சா இல்லையா - ம்ம்ம்ம் - ரசிப்புக்கு நன்றி

cheena (சீனா) said...

அருமைப் பேத்தி நட்சத்திரா (???) - தாத்தா நல்லவே கதெ வுடுவேன் தெரியுமா

Geetha Sambasivam said...

சூப்பருங்கோ, ஏற்கெனவே படிச்சிருந்தாலும் இப்போ இன்னும் நல்லா இருக்கு!! ஆனால் பேத்தி தூங்கினாளா, இல்லை பானை வாங்கி யானையை அடக்கிக் கொடு தாத்தானு கேட்டாளா புரியலை! :P

Geetha Sambasivam said...

அது சரி, இந்த யானை, பானையும் ஒரு சங்கிலித் தொடரா என்ன???

cheena (சீனா) said...

கீதா, பேத்தி அவ்வளவு எளிதாகத் தூங்கி விடுவாளா என்ன ? ஹா ஹா ஹா ஹா ன்னு சிரிச்சு, பாப்பாக்கு ஒண்ணுமே தெரில, எங்கேயாச்சும் இத்துணூண்டு பானைக்குள்ளே அவ்ளோ பெர்ய யானை போகுமா என்னன்னு சிரிச்சிட்டு சரி சரி அடுத்த கதெ சொல்லு ஐயாம்பா !

cheena (சீனா) said...

கீதா, இது சங்கிலித் தொடரென்றால் சங்கிலித் தொடர் - இல்லையேன்றால் இல்லை - விதி முறைகள் ஒன்றும் இல்லை

cheena (சீனா) said...

//எங்க ரெண்டு வயசுப் பேத்திக்கு மயில் கதை வேணுமாம்.
நீங்க சொன்னா நான் அவகிட்ட சொல்லறேன்.:)
//


வல்லிம்மா - கதெ ரெடி - போய்ப் பாருங்க = பாப்பான்னா உடனே கதே போட்டுடுவோம்ல

தாங்க்ஸ் டு தங்க்ஸ்

cheena (சீனா) said...

வல்லிம்மா

சுட்டி கொடுக்க மறந்துட்டேனே

http://pattarivumpaadamum.blogspot.com/2008/07/blog-post_06.html

மங்களூர் சிவா said...

/
ஏங்க கதெ தானே கேக்குறா - சொல்லுங்களேன் ( தங்க்ஸின் அன்புக் கட்டளை)
/

அன்புக்கட்டளையா ஆணையா!?!?!!?

புரியலை தயவுசெய்து விளக்கவும்!!!

:)))))))))))))))))

மங்களூர் சிவா said...

இந்தக் கதையைக் கேட்டு உங்க பேத்திங்க தூங்கினாங்களா சார்?!!!

மங்களூர் சிவா said...

மன்னவனோடு சேர்ந்து நாங்களும் மயங்கி விழு வேண்டியதுதான் சீனா சார்:)))! அருமை அருமை.

cheena (சீனா) said...

அன்புக்கட்டளைக்கும் ஆணைக்கும் வேறுபாடு தெரிய வேண்டுமென்றால் சீக்கிரமே திருமணம் செய்து கொள் - சிவா - தன்னாலே புரியும்

cheena (சீனா) said...

சிவா,

ஒரு கதையில் பேத்திகள் தூங்கியதாகச் சரித்திரமே இல்லை. அய்யா அய்யா இன்னொரு கதெ வேணும்ம்பாங்க

அது ஒரு தொடர் கதை.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா

புதுகை.அப்துல்லா said...

சீனாண்ணே உண்மையைச் சொல்லுங்க! சின்னப்புள்ளையா இருக்கயில நீங்க தானே ஒங்க அய்யாகிட்ட யானைய பானைக்குள்ள போக சொன்னீங்க? உனக்கு எப்படி தெரியும்னு கேக்கரீங்களா? இந்த மாதிரி அருமையான யோசனைக்கெல்லாம் ஒட்டு மொத்த காப்பிரைட்டும் ஒங்ககிட்ட தான இருக்கு :))

புதுகை.அப்துல்லா said...

ஒரு யானை தம்மாத்தூண்டு ஊசியில தன்னோட தும்பிக்கையால நூலை கோர்த்து மதுரை பக்கம் இருக்கிற ஐயா வாயை தைத்த கதை வேண்டும்:)//

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?

cheena (சீனா) said...

வாங்க வாங்க புதுக்கோட்டை அப்துல்லா - ஒட்டு மொத்த காப்பிரைட்டும் என் கிட்ட இருக்கறபோவே - அந்தப் பாப்பா இந்த யோசனையெ சொல்லி இருக்கு - என்ன செய்யலாம் அந்தப் பாப்பாவை

cheena (சீனா) said...

வாங்க வாங்க அப்துல்லா - நி.ந ரூம் போட்டு யோசிக்கிறாரா தெரில - கேளுங்களேன் அவருகிட்டேயெ

புகழன் said...

கதை சூப்பர் ஆனால் கொஞ்சம் பழைய கதை

சிறில் அலெக்ஸ் said...

யானையும் உனக்கே பானையும் உனக்கே நீயே உள்ள போட்டுக்கமாண்னு சொல்லிவிடவேண்டியதுதான் :)

cheena (சீனா) said...

புகழன்

கதை என்றாலே பழையது தானே - அதிலே தான் சுகமே

cheena (சீனா) said...

சிறில் அலெக்ஸ்

இப்படி ஒரு தீர்வு இருக்கிறதா - தெரியாமல் போய் விட்டதே ! - பாப்பாவைச் சமாளிச்சுருக்கலாமே

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிறில்

+Ve அந்தோணி முத்து said...

படித்தவுடன் குபீர் சிரிப்பை வர வழைக்கக் கூடிய கதை.

இந்தக் கதை எனக்கு என் இளவயதில், என் அப்பா சொல்லிக் கேட்டது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது.


கொடுத்து வைத்த பேத்திகள்.

கதையை சொன்ன பாங்கு ஆஹா. அருமை.


இன்னும் இது போல நிறைய நகைச் சுவையாக எழுதலாமே அப்பா.

மனிதர்கள் தவிர்த்து, நாய், பூனை போன்ற மிருகங்களை வைத்து ஒரு நகைச் சுவைக் கதை சொல்லுங்களேன் அப்பா.

:-)

நானானி said...

சீனா!
உங்கள் பேரன், பேத்திகளை இங்கு
அனுப்பிவையுங்கள். கதைசொல்ல நான் ரெடி! (கேக்க அவங்க ரெட்டியா?)அதைவிட வேறென்ன சந்தோசம் இருக்கமுடியும்.

நானானி said...

சீனா! உங்கள் பேரன் பேத்திகளை இங்கு அனுப்பி வையுங்கள். கதை சொல்ல நான் ரெடி!(கேக்க அவங்க ரெடியா?)அதைவிட வேறென்ன சந்தோசம் இருக்க முடியும்?
கதை சொல்லி சும்மா மெரட்டிருவம்ல!

A said...

இந்த கதை நான் ஏற்கனவே படித்தது.மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி.

இந்த கதை இன்னும் முடிவு பெறவில்லை.அனைவரும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் தவிக்கும்போது தெனாலி ராமன் பானையில் தண்ணீர் ஊற்றும்படி கூறுவார்.பின் யானையின் பிம்பம் அந்த தண்ணீரில் தெரியும்படி யானையை நிறுத்த சொல்லுவார்.அந்த பிம்பத்தை குழந்தைக்கு காண்பிப்பார்.குழந்தையும் யானை பானைக்குள் வந்துருச்சுன்னு அழுகையை நிறுத்திரும்.

தெனாலிராமன் கதைகளில் பிரச்சினையை ஆரம்பிப்பதும் அவரே அதை தீர்த்து வைப்பதும் அவரே.

cheena (சீனா) said...

அந்தோணி முத்து - ஆகா - கத தானே சொல்லிடுவோம் - என்ன வேணா சொல்லலாம்ல

cheena (சீனா) said...

அன்பின் நானானி
பேரன் பேத்தி எல்லோரையும் அனுப்பிடறேன் - கதயாச் சொல்லுங்க - கேப்பாங்க

cheena (சீனா) said...

ஆனந்த குமார் - இப்படி ஒரு தீர்வு இருக்கறது தெரியாமப் போச்சே !

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

ராமலக்ஷ்மி said...

சிறில் அலெக்ஸின் நழுவல் தீர்ப்பு நல்லாயிருகே என [ஆனா இந்தக் காலப் பசங்க நம்மைப் போல ஈஸியா ஏத்துப்பாங்களா:)] பார்த்துக் கொண்டே வந்தால், தெனாலி ராமன் போல வந்து ஆனந்த் குமார் பிரச்சனையை தீர்த்து விட்டார். இதை ஏத்துக்க வச்சிடலாம் பசங்களை! சரி உங்க பேத்திகள் எப்போ நானானி அம்மா வீட்டுக்கு கிளம்பறாங்க. அதே தேதியில் நானும் டிக்கெட் வாங்கிடறேன். நானானி அம்மாவிடம் நேரில் கதை கேட்ட மாதிரியும் ஆச்சு. உங்க பேத்திகளை பார்த்த மாதிரியும் ஆச்சு:)!

cheena (சீனா) said...

ராமலக்ஷ்மி

வாங்க வாங்க - பிள்ளங்க நானானி வீட்டுக்குப் போகணும்னு ஆசப்படறாங்க

பாக்கலாம் - நீங்க எங்க வீட்டுக்கு வாங்க - மதுர தானே ! பெங்களூருலேந்து டிரெயின் இருக்கே - மதுர சுத்திட்டுப்போங்க - என்னா நான் சொல்றது சேரியா

ஆமா வெள்ளக் காக்கா விரட்ட வழியே இல்லையா - எப்படி பேசறது நாம -

Valentin said...

Hrát online zdarma a za peníze, oficiální webové stránky - Fortuna casino