ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Friday 18 January 2008

எழுதுனதுலே பிடிச்சது (யாருக்கு)

எல்லோருக்கும் வணக்கம்.

நம்ம கண்மணி பெஸ்ட் கண்ணா பெஸ்ட் னு ஒரு பதிவுலே - எல்லாப் பதிவர்களையும் அழைச்சு எழுதுனதிலேயே சிறந்தது எதுன்னு கேட்டிருந்தாங்க. சர்வேசன் வேற அந்தப் பதிவெல்லாம் கட்டம் கட்டிப் போடப் போறாராம். இருக்கட்டும்.

நான் 2007 ஆகஸ்டு மாசம் தான் வலைப்பூக்கள் பக்கமே வந்தேன். என்னுடைய இளமைக்கால மலரும் நினைவுகளை அசைபோடுவது என்று ஆரம்பித்தேன். ஆரம்பித்ததில் இருந்த வேகம் பின்னர் இல்லை. இன்னும் எழுத நினைத்தது ஏராளம் இருக்கிறது.

அடுத்து படித்ததில் பிடித்தது என ஒரு பதிவு ஆரம்பித்து நான் படித்தவைகளில் என் மனதுக்குப் பிடித்தவைகளை அப்படியே எழுதி வந்தேன். அதிலும் படித்தவை ஏராளம் - பிடித்தவை ஏராளம். எழுதியதோ கொஞ்சம் தான்.

நண்பர் தருமியின் தயவால் நண்பர் ராம் தலைமையில் மதுரை மாநகரம் என்ற குழுப்பதிவிலும் எழுதி வந்தேன்.

ஏனோ தெரியவில்லை. எழுதுவதில் இருந்த விருப்பம் பதிவுகளைப் படித்து மறுமொழி இடுவதற்கு மாறியது. அதிக மறுமொழி இட்டவர்கள் பட்டியலில் முதலில் எனது பெயர் தொடர்ந்து இருந்த வண்ணம் அதிகப் பதிவுகளைப் படித்தேன். அதிக மறுமொழிகள் இட்டேன். ஒரு சமயம் அனானிமஸ்ஸையும் தாண்டி எனது பெயர் முதலில் இருந்தது.

எனக்கு எழுதியதில் இருந்த இன்பத்தை விட பதிவுகளைப் படித்ததிலும், பொருள் பொதிந்த மறு மொழிகள் எழுதியதிலும் அதிக இன்பம் பெற்றேன். அதிக நேரம் செலவிட்டேன். அதிக நண்பர்களைப் பெற்றென்.

இப்போது கண்மணி கேட்டதால், எழுதியதைத் திரும்பப் படித்தேன். எழுதியதே குறைவு. அதில் சிறந்தது எது ? தாய்க்கு எல்லாக் குழந்தைகளையுமே சமமாகப் பாவித்துத் தான் பழக்கம். இருப்பினும் ஒரு குழந்தையிடம் சற்றே அன்பு அதிகம் இருக்கத்தானெ செய்யும்.

அதைப்போல , நான் மதுரை மாநகரத்தில் எழுதிய " மலரும் தீபத் திருவிழா நினைவுகள் " என்ற பதிவு மனதுக்குப் பிடித்த பதிவும் அதிக மறுமொழிகள் பெற்ற பதிவுமாகும். எனவே அப்பதிவினையே எனக்குப் பிடித்த - நான் எழுதியதில் சிறந்த - பதிவாகத் தேர்ந்தெடுக்கிறென்.

அழைத்த கண்மணிக்கு நன்றி. சர்வேசனுக்கும் நன்றி.

27 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

துளசி கோபால் said...

// தாய்க்கு எல்லாக் குழந்தைகளையுமே சமமாகப் பாவித்துத் தான் பழக்கம். இருப்பினும் ஒரு குழந்தையிடம் சற்றே அன்பு அதிகம் இருக்கத்தானெ செய்யும்.
//

அதுவும் அந்தக் குழந்தை சவலையா இருந்தா அன்பு இன்னும் கூடிப்போகும். இல்லையா?

எனக்கும் எழுதுனதில் பிடிச்சது எதுன்னு தெரிவு செய்யும் கஷ்டம் இருக்கு. அதான் பேசாம இருக்கேன்

Baby Pavan said...

நன்றி நன்றி, உங்க ஆதரவு, அறிவுரை இருப்பதால் தான் தொடர்ந்து நாங்க எழுதறோம்...

கோவி.கண்ணன் said...

//தாய்க்கு எல்லாக் குழந்தைகளையுமே சமமாகப் பாவித்துத் தான் பழக்கம். இருப்பினும் ஒரு குழந்தையிடம் சற்றே அன்பு அதிகம் இருக்கத்தானெ செய்யும்.
//
நல்லா சொல்லி இருக்கிங்க. ஒரு குழந்தை மீது அதிக அன்பு காட்டினாலும் எந்த குழந்தையையும் இழக்க ஒரு தாய் முன்வரமாட்டாள். அவள் விரும்பி இருக்காவிட்டாலும் கூட தாய்க்கு பெருமை சேர்க்கிற குழந்தைதான் நல்ல குழந்தை

காட்டாறு said...

//எனக்கு எழுதியதில் இருந்த இன்பத்தை விட பதிவுகளைப் படித்ததிலும், பொருள் பொதிந்த மறு மொழிகள் எழுதியதிலும் அதிக இன்பம் பெற்றேன்.//

இது.... இது.... அறிந்தோ அறியாமலோ எத்தனை பேரை இது ஊக்குவித்திருக்கும் தெரியுமா?

என்னோட பதிவில் உங்கள் சின்சியர் மறுமொழி தான் உங்கள் பதிவை ரீடரில் சேர்க்க வைத்தது. :-)

cheena (சீனா) said...

துளசி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. குழந்தை சவலையா இருந்தா இன்னும் அன்பு நிச்சயம் கூடத்தான் செய்யும்.

cheena (சீனா) said...

பவன் என்னுடைய ஆதரவும் அன்பும் அறிவுரையும் என்றும் உண்டு பவன் - நன்றி வருகைக்கு பவன்

cheena (சீனா) said...

நன்றி டாக்டர் டெல்ஃபைன் - வருகைக்கும் கருத்துக்கும்

cheena (சீனா) said...

நன்றி கோவி கண்ணன் - வருகைக்கும் கருத்துக்கும். அருமையாச் சொல்லி இருக்கீங்க

cheena (சீனா) said...

நன்றி காட்டாறு - வருகைக்கும் கருத்துக்கும் - மறு மொழி எழுதும் போது பொறுமையுடன், பொருள் பதிய எழுதுவேன். மொக்கை மறு மொழி இட மாட்டென். ( விதி விலக்கு உண்டு)

ரசிகன் said...

சீனா ஜயா.. பதிவுல குடுத்திருந்த சுட்டியும் அருமையா இருக்கு..
ஏற்கனவே படிச்ச பதிவாயிருந்தாலும் மறுபடியும் படிக்க நல்லா இருந்துச்சு..
நன்றிகள்...

(எனக்கு நம்ம டீச்சர் கூப்பிட்டிருக்காங்க.. பதிவு போட... செய்யனும்..)

cheena (சீனா) said...

நன்றி ரசிகன் - வருகைக்கும் கருத்துக்கும்

Sanjai Gandhi said...

எனக்கு நீங்க எழுதின பின்னூட்டம் எல்லாமே பிடிக்கும். :)

cheena (சீனா) said...

நன்றி சஞ்ஜய் - வருகைக்கும் கருத்துக்கும்

கண்மணி/kanmani said...

சீனாசார்
உங்க பின்னூட்டத்தின் மகிமை பார்த்து பயந்து போயிதானே நான் 'புற்றீசல் போல கிளம்பும் பதிவுகள் கணமணி மயம்' னு பதிவு போட்டேன்.
மியூஸியத்துல இருக்கிறத கூட தூசி தட்டி எழுப்புமே உங்க பின்னூட்டம் ஹாஹா
[சுட்டி குடுக்க கத்துக்கங்க]

காட்டாறு சொன்னதுபோல உங்க பின்னூட்டம் பலருக்கு பூஸ்ட் மாதிரி

துளசியக்கா ஜல்தி கரோ தூஸ்ரா டேக் ஜாவூங்கா [சரியா?தப்புன்னா எச்சூஸ்மீ சாப்]

குசும்பன் said...

தாத்தா கும்மி அடிப்பதில் இருக்கும் சுகம் வேறு எதிலும் கிடைக்காது!!!

வாங்க வாங்க சங்கத்தில் இனையுங்கள்:)))

cheena (சீனா) said...

கண்மணி - சுட்டி கொடுத்துருக்கேனே - பாக்கலியா - பதிவே ஒழுங்கா படிக்கணும் - கடைசிப் பாரா மட்டும் படிச்சிட்டு பின்னூட்டம் போடப்படாது. - புரிஞ்சுதா

cheena (சீனா) said...

கோட்டு சூட்டு போட்ட பேராண்டி, கும்முறதுலே சுகம் குசும்பனுக்குத் தான் - இருக்கட்டும் - எந்த சங்கத்துலே இணையணும்

கண்மணி/kanmani said...

நான் சொன்னதூ என் பதிவுக்கான சுட்டி [பெஸ்ட் கண்ணா பெஸ்ட்] அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் என்ன அபி அப்பாவா?படிக்காம பின்னூட்டம் போட?
அது சரி குசும்பன் எந்த சங்கத்துல சேரச் சொல்லுது வீக் என்ட் ஜொல்லு சபாவா?;)
கும்மி னா எங்கிட்ட இல்ல அப்ளிகேஷன் குடுக்கனும்:))

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனய்யா.

cheena (சீனா) said...

கண்மணி , சுட்டி கொடுத்துட்டேன் - முன்னாலே கொடுக்கத் தெரில - இப்பக் கத்துகிட்டேன்.

அப்புறம் அபி அப்பா பத்தின தகவலுக்கு நனறி

குசும்பன் எதுலே சேரச் சொல்றாரு தெரில - இருந்தாலும் உங்க கிட்டேயும் விண்ணப்பம் போட்டுடறேன். சேத்துக்குங்க

cheena (சீனா) said...

மௌளி, அதென்ன அட்டெடன்ஸ் மட்டும் - படிங்க - கருத்து சொல்லுங்க

பாச மலர் / Paasa Malar said...

ஓ..இந்தப் பதிவு எனக்கும் பிடிக்கும் சீனா சார்..அதேபோல்தான் உங்கள் ஊக்குவிக்கும் மறுமொழிகளும்..

cheena (சீனா) said...

பாசமலர் - பாசமான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

குமரன் (Kumaran) said...

பாத்தீங்களா நீங்க எழுதுனதை எல்லாம் படிச்சிரணும்ன்னு இருக்கிற நான் இன்னும் நீங்க எழுதுனதுலயே சிறந்ததுன்னு சொன்னதைப் படிக்கலை. அடுத்து அதைப் படிக்கத் தான் போறேன். :-)

cheena (சீனா) said...

குமரன், நீங்க எல்லாப் பதிவெயும் படிச்சிருப்பீங்க - நன்றி

இராஜராஜேஸ்வரி said...

அதிக மறுமொழி இட்டவர்கள் பட்டியலில் முதலில் எனது பெயர் தொடர்ந்து இருந்த வண்ணம் அதிகப் பதிவுகளைப் படித்தேன். அதிக மறுமொழிகள் இட்டேன்.//

அருமையான ஊக்குவிப்புபணிக்கு நமஸ்காரங்கள் ஐயா..

தங்கள் வலைச்சரத்திலேயே தங்களை சிறப்பாக அறிமுகம் செய்தது மனம் மகிழ்விக்கிறது .. பாராட்டுக்கள் ஐயா..