அன்பின் நண்பர்களே !
அருமை நண்பர் தி.தமிழ் இளங்கோ என்னை எனது முதல் கணினி அனுபவம் என்ற தொடர் பதிவினில் எழுத அழைத்திருந்தார். ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆகி விட்டனவே - ஒன்றும் நினைவில் இல்லையே எனச் சிந்தித்தேன். பிறகு மலரும் நினைவுகளாக இருந்த நிகழ்வுகளை அசை போட்டு ஆனந்தித்து எழுதலாமெ என நினைத்தேன் . சிந்தித்து சிந்தித்து - தலையைச் சொறிந்து சொறிந்து எழுத ஆரம்பித்தேன்.
வங்கியில் 1974 - 2010 பணி புரிந்து 2010ல் பணி நிறைவு செய்து தற்போது ஓய்வாக, மதுரையில் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு இருக்கிறேன்.
வங்கியில் கணினி அறிமுகப் படுத்த வேண்டும் என்ற கொள்கையினை எடுத்து பல்வேறு கணினி நிபுணர்களிடம் ஆலோசித்து வங்கி ஒரு முக்கியமான முடிவினை எடுத்தது.
எந்த ஒரு வங்கியிலும் இல்லாத புதிய கொள்கையினை எங்கள் வங்கி எடுத்தது. 1984ல் எடுத்த கொள்கை இன்று வரை கடைப் பிடிக்கப் படுகிறது.
அக்கொள்கை என்னவெனில் - கணினியில் பயன் படுத்தப் படும், வங்கி கணினி மயமாக்கப்படத் தேவைப்படும் மென்பொருட்களை சந்தையில் கொடி கட்டிப் பறந்த பல் நிறுவனங்களிடம் இருந்து, மற்ற வங்கிகளைப் போல, விலைக்கு வாங்கிப் பயன் படுத்துவது இல்லை என்ற முக்கியமான கொள்கை.
அதற்குப் பதிலாக வங்கிக்குத் தேவைப்படும் மென்பொருட்களை, வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பணியாளர்களை வைத்துத் தயாரிப்பது என்ற முக்கியமான கொள்கையும் எடுக்கப் பட்டது.
அதன் படி வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பணியாளர்களை ஒரு தேர்வு வைத்துத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சியினை 90 நாட்களுக்கு அளித்து, பிறகு மென்பொருள் எழுதும் பொறுப்பினை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
அப்படித் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் 25 அலுவலர்களீல் நானும் ஒருவன்.
இந்த 25 அலுவலர்களில் ஒரிருவரைத் தவிர மற்றவர்களுக்கு கணினி பற்றிய ஸ்னானப்ராப்தி கூட கிடையாது.
முதல் மூன்று மாதங்களுக்கு - சென்னையில் நடக்கும் கணினித்துறையின் மென்பொருள் / வன்பொருள் கண்காட்சிகள், கணினி நிறுவனங்கள் நடத்தும் கூட்டங்கள், கணினித்துறையில் பணியாற்றும் நிபுனர்கள் வங்கிக்கு வந்து நடத்தும் கூட்டங்கள், அததனையிலும் இந்த 25 அலுவலர்கள் கலந்து கொண்டு கணினி பற்றிய அறிவு பெற வங்கி ஏற்பாடு செய்தது.
முதல் 90 நாட்களில் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சி - கோபால் புரொகிறாம் எழுதுவது எப்படி என்பது தான். அனைவருக்கும் கோபால் பற்றிய புத்தகம் வழங்கப் பட்டது - ராய் & தஸ்திதார் எழுதிய புத்தகம்.
பிறகு கப்யூட்டர் வாங்கும் பணி நடந்தது - அதுவும் இந்த முதல் மூன்று மாதங்களீலேயே நடந்தது. 25 பேருக்கு முதல் மாதம் 4 அல்லது 5 கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது. போட்டா போட்டி. CPM - ஆபரேட்டிங்க் சிஸ்டம், கறுப்பு வெள்ளை மானிட்டர் ஸ்கிரீன், எட்டு இன்ச் ஃப்ளாப்பி ட்ரைவ், தோசைக்கல் மாதிரி ஃப்ளாப்பி, இத்துடன் இருவிரல் மட்டுமே பயன் படுத்தி அக்கணினியினைப் பயன் படுத்தி ப்ரொகிராம் எழுதினோம்.
10 விரலும் பயன்படுத்த தட்டச்சு தெரியாது - இப்பல்லாம் புகுந்து வெளயாடுவோம்ல.
கோபாலில் புரொகிறாம், லோட்டஸ் தற்போதைய எக்செல் ஷீட்டின் முன்னோடி, டிபேஸ் தற்போதைய டேட்டா பேஸ்களீன் முன்னோடி, இப்பொழுது நினைத்துப் பார்த்தால் கூட சிரிப்பு வருகிறது. செக்ரட்டரி என்றொரு வேர்ட் பிராஸஸர். ஸ்விட்ச் தட்டிய உடன் 5 நிமிடங்களுக்கு " லோடிங் செக்ரட்டரி - பிளீஸ் வெயிட் " அப்படின்னு ஒரு மெசேஜ் ஸ்கீரின்ல நிக்கும் - நாம பொறுமையாக் காத்துக் கிட்டு இருக்கணூம்.
இப்ப இருக்கற மெயின் ஃப்ரேம் கம்பியூட்டர் அக்காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா ? 9 / 10 அடி உயரம் 3 /4 அடி அகலம் - டேப் ட்ரைவ் - கார்ட் ரீடர்..... இப்படி என்னவெல்லாமோ இருக்கும் - முழுவதும் குளிரூட்டப் பட்ட பெரிய அறையில் இருக்கும்.
அனைத்துப் புரொகிராம்களும் கார்டில் எழுதப்படும். கார்ட் பஞ்சிங் மெஷினில் ப்ரொகிராம் எல்லாம் கட்டளை கட்டளையாக பஞ்ச் செய்யப்பட்டு - கார்ட் ரீடரில் படிக்கப் பட்டு மெயின் ஃப்ரேம் கம்பியூட்டருக்கு அனுப்பப் படும். கணினி அறை கர்ப்பக் கிரகம் மாதிரி - குறிப்பீட்ட 3 அல்லது 4 அலுவலர்கள் தான் உள்ளே செல்லும் தகுதி பெற்றவர்கள். பல வண்ண விளக்குகள் மின்சாரத்தின் உதவியால் மின்னிக் கொண்டு இருக்கும்.
இது போதும்னு நினைக்கிறேன். போரடிக்கக் கூடாது.
இந்தியாவிலேயே எங்கள் ஒரு வங்கிதான் துணிந்து முடிவெடுத்து - கணினியின் மென்பொருள் - வங்கியின் அலுவலர்களால் எழுதப்பட்டு - 2650 கிளைகள் முழுவதையும் கணினி மயமாக்கி - அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து எந்தக் கிளையில் வேண்டுமானாலும் - மற்ற ஒரு கிளையில் கணக்கு வைத்திருப்பவர் இங்கு பரிமாற்றம் செய்து கொள்ள வசதி செய்து வாடிக்கையளர்களுக்குப் பல வித வசதிகள் செய்து கொடுத்திருக்கிறது.
எங்கள் வங்கி கணினி மயமானதில் - இன்றைய முன்னேற்றத்திற்குக் காரணமானவர்களீல் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
விடை பெறுகிறேன் நண்பர்களே !
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
தமிழ் கற்றவனின் மலரும் நினைவுகள் ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !! ..........................
Sunday, 28 July 2013
Sunday, 16 June 2013
வலைச்சரத்தின் தகவல்கள் தொகுப்பு
அன்பின் நண்பர்களே !
வலைச்சரம் பற்றி அறிந்திருக்கலாம்
இப்பொழுது வலைச்சரத்தில் பதிவுகளின் எண்னிக்கை இரண்டாயிரத்தினைத் தாண்டி விட்டது.
ஆகவே வலைச்சரத்தில் - பதிவுகள் பற்றிய தகவல்கள் தொகுக்கப் பட வேண்டும் என சிந்தனை ஓடியது.
தொகுக்கப் படத்
தேவையான் தகவல்கள் :
வலைச்சரப் பதிவின் தேதி
வலைச்சர ஆசிரியர் பெயர்
இவரது மின்னஞ்சல் முகவரி
இவரது வலைத்தள முகவரி
இவரது அலைபேசி எண்
வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப் படும் பதிவர் பெயர்
அவரது வலைத்தள முகவரி
அறிமுகப் படுத்தப் படும் பதிவின் தலைப்பு
அப்பதிவின் முகவரி
ஆகியவை தொகுக்கப் பட வேண்டும்
தொகுப்பில் ஆசிரியர் பெயரோ, அவர் தொடர்பான தகவல்களோ, அறிமுகப் படுத்தப்படும் பதிவர் தொடர்பான தகவல்களோ, எந்த ஒரு தகவலைக் கொடுத்துத் தேடினாலும், அனைத்துத் தகவல்களும் திரையில் வர வேண்டும்.
இத்தொகுப்பில் தகவல் தேடும் வசதி வேண்டும்.
எப்படித் தொகுக்கலாம்
எவ்வளவு நாட்கள் ஆகும்
மென்பொருள், கணினி - தேவைப்படும் மற்ற உபகரணங்கள் - ஆகும் செலவு
தொகுத்த பின்னர் தினந்தினம் நிரந்தரமாக அன்றையத் தினத் தகவல்கள் பதியப் பட வேண்டும்.
தோராயமாக எவ்வளவு செலவு ஆகும்
இணையத்தில் உள்ள பதிவர்கள், முக நூல் நண்பர்கள், மற்றைய கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்கள் அனைவரையும் அவரவர்கள் கருத்தினைப் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சிந்தித்து - விபரமாக - மடல் எழுதவும். முகவரி : cheenakay@gmail.com
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Friday, 8 March 2013
ஜோதிஜியின் டாலர் நகரம் - ஒரு பார்வை
ஜோதிஜியின் டாலர் நகரம் :
ஒரு தனிமனிதனின் வாழ்க்கைப் போராட்டமும் முன்னேற்றமும் எப்படி இருக்குமென்பதை இந்நூல் வெளிப்படுத்தி உள்ளது. அதில் ஆங்காங்கே சமுதாயப் பார்வையும் சற்றே தலை தூக்குகிறது. பொதுவாக திருப்பூரில் வாழ்பவர்களுக்கு இந்நூலில் கூறப்பட்டிருப்பவை இயல்பானதாக இருக்கலாம். ஆனால் திருப்பூரைப் பற்றி புதிதாக அறிபவர்களுக்கு வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கலாம்.
ஒரு வளர்ந்து வருகின்ற ஊர் - ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை செய்கின்ற ஒரு ஊர் - உழைப்பையும் உழைப்பின் பயனையும் அடுத்த மாநிலத்திற்கும் அயல் நாட்டிற்கும் தருகின்ற ஒரு ஊர் - வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதற்குத் தயங்காத மக்களைப் பெற்றிருக்கின்ற ஒரு ஊர் - முன்னேற்றமடைவதற்கு முட்டுக் கட்டையாக இருக்கின்ற சூழ்நிலைகள் உழைப்பாளிகளை வெறுப்படையச் செய்கின்றன எனபதை ஆதங்கத்தோடு எடுத்துரைத் திருக்கின்றார் ஆசிரியர்.
அயல் நாட்டின் வளர்ச்சிக்கும் பொருள் வரும் வழிக்கும் வழி வகுத்துக் கொடுக்கத் தயாராக இருக்கின்ற நாட்டாமைகள், உழைக்கின்ற ஊருக்கு உதவி வரத் தடுக்கின்ற வழி முறைகளை உள்ளத்தின் நெருடலோடு ஆங்காங்கே உணர்த்துகிறது இந்நூல்.
இயற்கை வளத்தை அழிக்கின்றது சாயக் கழிவுகள் என்றால் அதை நீக்கித் தொழில்வளம் பெறுவதற்கும், தனி ஒரு மனிதனுக்கும், அதனையே தொழிலாய்க் கொண்ட ஊருக்கும் வழி வகைகளைச் செய்வதற்கு ஆளுகின்ற அரசு உதவ வேண்டுமே என்ற ஆதங்கம் கருத்துக்களாய் வெடிக்கின்றது இந்நூலில்.
நூலின் துவக்கத்தில் வேலையின் அடிப்படை நிலையில் எல்லாம் தன் திறமையை மட்டுமே ஊன்றுகோலாய்க் கொண்டு உழைப்பில் போராடி
முன்னேறிய வரலாற்றைச் சோர்வின்றி ஒரு எழுத்தாளனின் பார்வையில் கொண்டு சென்றிருப்பது ஆசிரியரின் எழுத்தாற்றலை வெளீப்ப்டுத்துகிறது. தொழில் - வளர்ச்சி - போராட்டம் - பொருள் - வாழ்க்கை என்ற நிலைகளை எல்லாம் சொல்லும் போது ஆசிரியர் பாரம்பரியம் - கலாச்சாரம் - தாய் மொழிப் பற்று என்பதனை எல்லாம் ஆங்காங்கே சொல்லி இருப்பதும் நமமை எல்லாம் சிந்திக்க வைக்கிறது.
ஒரு ஊருக்கு உயிர் கொடுக்கின்ற தொழிலை, வளர்வதற்கு வழி வகை செய்ய வேண்டும். செய்தால் அது நாட்டின் நலத்திற்குத் துணை செய்யும் வளர்ச்சி தானே ! என்பதனை நூல் சொல்லாமல் சொல்கிறது.
எண்ணங்களை எழுத்தாக்குவதென்பது எல்லாராலும் இயலாது. ஆனால் அது ஜோதிஜிக்கு கை வந்த கலையாக வாய்த்திருப்பது நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. பாராட்டும் தகுந்த நேரத்தில் இருப்பது அதற்கு இன்னும் மேன்மை சேர்க்கும்.
நல்வாழ்த்துகள் ஜோதிஜி
நல்ல சிந்தனைகளை இன்னும் தாருங்கள்.
ஆக்கம் செல்வி ஷங்கர்.
அன்புடன் சீனா

Subscribe to:
Posts (Atom)