ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Saturday, 30 August 2014

வலைப் பதிவர் சந்திப்பு - திருவிழா - மதுரை - 26.10.2014

தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... 
கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்..... 

மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டன... 

நாள் : அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை.

வாருங்கள் வலைப்பதிவர்களே... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பினால் போதும்... 

படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2014 ஏதேனும் சந்தேகங்கள், விவரங்கள் தேவைப்பட்டால் :- 
திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com
 தமிழ்வாசி பிரகாஷ் -9080780981 - thaiprakash1@gmail.com

நூல் வெளியீடு : பதிவர்கள் தங்களின் நூல்களை இந்த மாபெரும் நிகழ்ச்சியில் வெளியிடலாம். அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014 க்குள் விவரங்களை கீழ்கண்ட நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். 
சீனா ஐயா (வலைச்சரம்) cheenakay@gmail.com
திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com

அன்பளிப்பு : இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பதிவர்கள், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்துத் தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும். 


மேலும் தகவல்கள் / விபரங்கள் அடுத்தப் பதிவில் வெளியாகும். பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. சந்திப்போம்.
வலைப்பதிவர் விழா நிர்வாகக் குழு - மதுரை

Monday, 16 June 2014

தந்தையர் தின வாழ்த்து !

அன்பின் அப்பா !

அடியெடுத்து வைக்கையில்
         விரல் பிடித்தாய் !
மடியமர்த்தி எண்ணெழுத்து
         எழுத வைத்தாய் !
படிப்படியாய் வாழ்க்கைப்பாடம்
          பயிற்றுவித்தாய் !
நொடிப்பொழுதும் கலங்காமல்
          துணை நின்றாய் !
தோள் நின்ற தந்தைக்கு
          துணை நிற்க ஆசை !
விரல் பிடித்த தந்தைக்கு
          வழி காட்ட ஆசை !
தனித்திருக்கும் போதிலும்
           நினைத்து மகிழ ஆசை !
மாறும் பிறவி யாவினிலும்
           மகளாய்ப் பிறக்க ஆசை !


இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் !

                                        - சுஜா -

Thursday, 22 May 2014

மதுரையில் ஓர் பதிவர் சந்திப்பு

அன்பின் சக  பதிவர்களே ! 

அறிவது நலனே ! விழைவதும் அஃதே !

மதுரைப் பதிவர்களீன் நீண்ட நாள் விருப்பப்படி, மதுரையில் ஒரு பதிவர் சந்திப்பு வருகிற அக்டோபர்த் திஙகளில் நிகழ்த்த விரும்புகிறோம். 
இதன் அடிப்படையில் நேற்றைய தினம் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் எங்கள் இல்லத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில்   திரு தமிழ் வாசி பிரகாஷ், திரு ரமணி, திரு பாலகுமார், திரு சரவணன், திரு பகவான் ஜீ ஆகிய பதிவர்கள் கலந்து கொண்டனர். 

அக்டோபரில் நடக்க விருக்கும் பதிவர் சந்திப்பில் அனைத்துப் பதிவர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

இச்சந்திப்பின் நோக்கம் ஏதெனும் ஒரு பயன் கருதியதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.  எனவே பதிவர்கள் அனைவரும் அது பற்றிய தங்களின்  மேலான கருத்துகளை முன் கூட்டியே தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  அக்கருத்துகள்  விழாவினைச் சிறப்பிக்க உதவும்.   

இச்சந்திப்பின் நடைமுறைகள் பற்றி - மதுரைப் பதிவர்கள் அனைவரும் அடிக்கடி கூடிப் பேசி முடிவெடுப்போம். 

அனைத்துப் பதிவர்களும் தங்களது கருத்துகளை அனுப்ப வேண்டிய முகவரி : cheenakay@gmail.com

தொடர்புக்கு :  கா.சிதம்பரம் - cheenakay@gmail.com
                                 தமிழ்வாசி பிரகாஷ் - thaiprakash1@gmail.com

மேலே உள்ள தொடர்புகள் தவிர பல்வேறு குழுக்கள் அமைக்கப் பட இருக்கின்றன -  அக்குழு  உறுப்பினர்கள் பெயர்கள் - மின்னஞ்சல் முகவரிகள் ஒரிரு நாட்களில் இங்கு அறிவிக்கப்படும். 

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா