ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Thursday 22 May 2014

மதுரையில் ஓர் பதிவர் சந்திப்பு

அன்பின் சக  பதிவர்களே ! 

அறிவது நலனே ! விழைவதும் அஃதே !

மதுரைப் பதிவர்களீன் நீண்ட நாள் விருப்பப்படி, மதுரையில் ஒரு பதிவர் சந்திப்பு வருகிற அக்டோபர்த் திஙகளில் நிகழ்த்த விரும்புகிறோம். 
இதன் அடிப்படையில் நேற்றைய தினம் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் எங்கள் இல்லத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில்   திரு தமிழ் வாசி பிரகாஷ், திரு ரமணி, திரு பாலகுமார், திரு சரவணன், திரு பகவான் ஜீ ஆகிய பதிவர்கள் கலந்து கொண்டனர். 

அக்டோபரில் நடக்க விருக்கும் பதிவர் சந்திப்பில் அனைத்துப் பதிவர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

இச்சந்திப்பின் நோக்கம் ஏதெனும் ஒரு பயன் கருதியதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.  எனவே பதிவர்கள் அனைவரும் அது பற்றிய தங்களின்  மேலான கருத்துகளை முன் கூட்டியே தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  அக்கருத்துகள்  விழாவினைச் சிறப்பிக்க உதவும்.   

இச்சந்திப்பின் நடைமுறைகள் பற்றி - மதுரைப் பதிவர்கள் அனைவரும் அடிக்கடி கூடிப் பேசி முடிவெடுப்போம். 

அனைத்துப் பதிவர்களும் தங்களது கருத்துகளை அனுப்ப வேண்டிய முகவரி : cheenakay@gmail.com

தொடர்புக்கு :  கா.சிதம்பரம் - cheenakay@gmail.com
                                 தமிழ்வாசி பிரகாஷ் - thaiprakash1@gmail.com

மேலே உள்ள தொடர்புகள் தவிர பல்வேறு குழுக்கள் அமைக்கப் பட இருக்கின்றன -  அக்குழு  உறுப்பினர்கள் பெயர்கள் - மின்னஞ்சல் முகவரிகள் ஒரிரு நாட்களில் இங்கு அறிவிக்கப்படும். 

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா  
67 comments:

துரை செல்வராஜூ said...

மதுரையில் பதிவர் சந்திப்பு இனிதே நிகழ - நல்வாழ்த்துக்கள்..

அம்பாளடியாள் said...

மிக்க மகிழ்ச்சியானதொரு தகவல் இந்த சந்திப்பு எங்கள் பதிவர்கள் குழுமத்திற்கு
மிகவும் பயனளிக்கத் தக்க நிகழ்வாகவும் பலராலும் போற்றத் தக்க நிகழ்வாகவும்
ஈடேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சீனா ஐயா .அழைப்பிற்கு மிக்க நன்றி .

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிமையான செய்தி.

மதுரை மாநகரமே விழாக்கோலம் காணப்போகிறது ! ;)

வெற்றிபெற வாழ்த்துகள்.

unmaiyanavan said...

அடுத்த பதிவர்கள் மாநாடா. மிக்க மகிழ்ச்சி.
சென்ற வருடத்து சென்னை பதிவர்களின் மாநாட்டின் தொடர்ச்சியா இது?

மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா.

தி.தமிழ் இளங்கோ said...

மதுரையில் பதிவர் சந்திப்பு! மகிழ்ச்சியான செய்தி! சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

அன்பின் துரை செல்வராஜ் - வாழ்த்துகளுக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் அம்பாளடியாள் - வருகைக்கும் வாழ்த்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் வை.கோ

வருகைக்கும் வாழ்த்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் சொக்கன் சுப்ரமணியன் - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி - சென்னை பதிவர்கள் மாநாட்டின் தொடர்ச்சி அல்ல - மதுரையில் மாநாடு நடத்த ஒரு சிறு முயற்சி - அவ்வளவுதான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் இளங்கோ - வருகைக்கும் வாழ்த்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சீனு said...

அக்டோபர் வரை காத்திருக்க வேண்டுமே என்பதைத் தவிர்த்து மிகவும் மகிழ்ச்சியான செய்தி...

தேன் நிலா said...

தமிழ் சங்கம் வளர்த்த மாநகராம் மதுரையில் வலைப்பதிவர்கள் கூட்டம் நடைபெறவிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

வெற்றிபெற வாழ்த்துகள்..!

முனைவர் இரா.குணசீலன் said...

மகிழ்வான செய்தி ஐயா.
சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

மிக மகிழ்ச்சியான செய்தி! ஆனால் அக்டோபர் வரை தள்ளிப்போட்டது ஏன்? அதுதான் வருத்தம்!

ஜீவா said...

சூப்பர்

வெங்கட் நாகராஜ் said...

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்.

அக்டோபர் என்பதால் முன்னரே திட்டமிட வசதியாக இருக்கும். தேதி முடிவு செய்தபின் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அக்டோபரில் பதிவர் சந்திப்பு மதுரையில் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கின்றது. வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் சீனு

வருகைக்கும் மகிழ்ச்சிக்கும் நன்றி -

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் சுப்புடு - வருகைக்கும் வாழ்த்தினிற்கும் மகிழ்ச்சிக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் குண சீலன் - வருகைக்கும் வாழ்த்தினிற்கும் மகிழ்ச்சிக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் காயத்ரி தேவி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட் நாகராஜ் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - விரைவினில் அனைத்துத் தகவல்களும் பல் பதிவுகளில் பகிர்ந்து கொள்ளப் படும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் முகமது நிஜாமுத்தீன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

கரந்தை ஜெயக்குமார் said...

மதுரையில் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இன்றே தயாராகிவிட்டேன் ஐயா.

இராஜராஜேஸ்வரி said...

மதுரையில் பதிவர் சந்திப்பு கோலாகலமாய் நடைபெற வாழ்த்துகள்..!

வவ்வால் said...

வெகு சிறப்பாக பதிவர் பட்டறை மற்றும் மாநாடு நடைப்பெற வாழ்த்துக்கள்!

வவ்வால் said...

வெகு சிறப்பாக பதிவர் பட்டறை மற்றும் மாநாடு நடைப்பெற வாழ்த்துக்கள்!

KILLERGEE Devakottai said...


விழாக்கோலாகலமாய் நடைபெற வாழ்த்துகள்..!மட்டுமல்ல பிரார்த்தனைகளும் ஐயா.
Killergee
www.killergee.blogspot.com

அபயாஅருணா said...

வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்துவோம் ஐயா...

Sivakumar said...

சீனா ஐயா, தளபதி பிரகாஷ் உள்ளிட்ட மதுரை பதிவர்களின் முன்னணியில் தமிழகத்தில் மீண்டும் ஒரு பதிவர் விழா வெற்றிகரமாக நடக்க வாழ்த்துகள்!!

- இப்படிக்கு,
வானத்தைப்போல பிரதர்ஸ்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

மிகச் சிறப்பாக நடத்துவோம் ஐயா....

99Likes said...

பதிவர் சந்திப்புக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்.

-அன்புடன்-
S.முகம்மது நவ்சின் கான்.

தனிமரம் said...

மதுரையில் பதிவர் சந்திப்பு இனிதே நடக்க - என் நல்வாழ்த்துக்கள்.

SNR.தேவதாஸ் said...

பயனுள்ள நிகழ்வாக நடைபெற வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

துளசி கோபால் said...

ரொம்ப மகிழ்ச்சி!

ஆமாம்... சந்திப்பை நவம்பர் மாதம் வச்சுக்க முடியாதா?

நானும் அங்கிருப்பேனே!

நவம்பர் நாலாம் தேதி, ப்ளீஸ்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
பதிவர் சந்திப்பு நிகழ்வுசிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வே.நடனசபாபதி said...


கூடல் நகரில் நடக்க இருக்கும் பதிவர்களின் சந்திப்பு வெற்றிபெற நல் வாழ்த்துக்கள்!

லதானந்த் said...

நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள்

லதானந்த் said...

அலைபேசி எண்ணை மாற்றிவிட்டீர்களா? இயன்றால் தொடர்பு கொள்ளவும்

வலிப்போக்கன் said...

நல்லது. சங்கம் இல்லையென்றால் சங்கடங்கள் தீராது. சங்கமாய் சந்திப்போம்.--சிந்திப்போம். நன்றி!

Unknown said...

கூடல் மாநகரில் கூடும் பதிவர் விழா!
அறிவிப்பு கண்டு அகம் மகிழ்ந்தேன்!
நன்றி! சீனா ஐயா! விழா சிறக்க வாழ்த்து!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சமீபத்தில்தான் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்
ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. இந்நிகழ்வில் கலந்துகொள்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். மதுரையில் சந்திக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

கூடல் பாலா said...

இனிப்பான செய்தி!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

MaduraiGovindaraj said...

மதுரையில் வலைப்பதிவர்கள் கூட்டம் நடைபெறவிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது

இராய செல்லப்பா said...

கூடல் நகரமல்லவா? கூடி மகிழ்வோம்!

அ.பாண்டியன் said...

வணக்கம் ஐயா
இனிப்பான ஒரு செய்தியைப் பகிர்ந்திருக்கிறீர்கள். வலைப்பதிவர்கள் கூட்டத்திற்கு முன்னின்று பணிபுரியும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நான் மணப்பாறை என்பதால் கண்டிப்பாக கலந்து கொள்ள ஒரு வாய்ப்பினை வழங்கியிருக்கிறீர்கள் அதற்கும் அன்பான நன்றிகள்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

தகவலுக்கு நன்றி அய்யா. கலந்து கொண்டு பணியாற்றவும் விரும்புகிறேன். மதுரைக்குக் கூடல் என்றும் ஒரு பெயருண்டு அல்லவா?
கூடலில் பதிவர் கூடலா? நல்லது. இனிதே நடக்க இனிய வாழ்த்துகள்.

Iniya said...

பதிவர்கள் ஒன்று கூடல் இனிதே நடைபெற என் இனிய வாழ்த்துக்கள் ஐயா!

Thenammai Lakshmanan said...

பதிவர் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். அடுத்து ஒரு சங்கம் அமைக்கலாமா நாம். :)

Anonymous said...

பதிவர் மாநாடு சிறப்பாய் நடத்திடவும், நடந்திடவும் வாழ்த்துக்கள்.

vimalanperali said...

குறைந்த பட்சம் பத்து நூல்களாவது வெளியிட்டால் பதிவர் சந்திப்பு ஒரு தனி முகம் கொள்ளும்/

ayyavin kavithaikal said...

வாழ்த்துக்கள் .
அன்பன் கொ.பெ.பி.அய்யா.

எம்.ஞானசேகரன் said...

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். முன்கூட்டியே அறிவித்திருப்பதால் பலர் திட்டமிட வசதியாக இருக்கும். ஹூம்... என்னாலதான் கலந்துக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.

'பரிவை' சே.குமார் said...

மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா.

Thulasidharan V Thillaiakathu said...

பதிவர் சந்திப்பு இனிமையான செய்தி! முன்னதாகவே தெரிவித்திருப்பதால் திட்டமிட வசதிதான்! நிச்சயமாக ஒரு நல்ல நிகழ்வு, வெற்றியும் அடையும்!

ஒரு குடும்பமாகி மகிழ்வோம்!

வாழ்த்துக்கள்!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஆஹா இனிதான செய்தி..கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். நன்றி ஐயா ரொம்ப தள்ளி இருக்கே என்பது தான் கொஞ்சம் வருத்தம்..ஆனால் ஏற்பாடுகளும் செய்ய வேண்டுமல்லவா?

aavee said...

நல்லது ஐயா.. தமிழ் சங்கம் அமைத்த ஊரில் தமிழ் பதிவர்கள் மாநாடு.. அருமை.. அக்டோபரை எதிரிநோக்கி காத்திருக்கிறேன்..

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்.

RajalakshmiParamasivam said...

பதிவர் மாநாடு சிறப்பாக நடைபெற இனிய வாழ்த்துக்கள்......

ராமலக்ஷ்மி said...

மாநாடு சிறப்பாக நடைபெற என் வாழ்த்துகளும்.

ezhil said...

மதுரை சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் . அங்கே சந்திப்போம் நட்புகளே....

ப.கந்தசாமி said...

சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துக்கள். சூழ்நிலை சரியாக அமைந்தால் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

Anonymous said...

பதிவர் மாநாடு பற்றி சற்று முன்னதாகவே தெரிவித்தால் ரயிலில் முன்பதிவு செய்ய சௌகரியமாக இருக்கும்.மதுரையில் மாநாடு என்பதைக் கேட்க மிக்க மகிழ்ச்சி.
--

duraix said...

மதுரை சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் . அங்கே சந்திப்போம் நட்புகளே....