ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Monday 16 June 2014

தந்தையர் தின வாழ்த்து !

அன்பின் அப்பா !

அடியெடுத்து வைக்கையில்
         விரல் பிடித்தாய் !
மடியமர்த்தி எண்ணெழுத்து
         எழுத வைத்தாய் !
படிப்படியாய் வாழ்க்கைப்பாடம்
          பயிற்றுவித்தாய் !
நொடிப்பொழுதும் கலங்காமல்
          துணை நின்றாய் !
தோள் நின்ற தந்தைக்கு
          துணை நிற்க ஆசை !
விரல் பிடித்த தந்தைக்கு
          வழி காட்ட ஆசை !
தனித்திருக்கும் போதிலும்
           நினைத்து மகிழ ஆசை !
மாறும் பிறவி யாவினிலும்
           மகளாய்ப் பிறக்க ஆசை !


இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் !

                                        - சுஜா -

17 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தந்தையர் தின வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

sury siva said...

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
என்று கேட்டு இருக்கிறோம்.

இன்று இருக்கும் அவசர உலகிலே
கூட்டுக் குடும்பங்கள் உடைந்த நிலையிலே

தந்தையும் குழந்தையும் கொண்டாடும் இடத்திலே என்று தான்
சொல்ல வேண்டி இருக்கிறது.

தந்தையும் தாயும் முதியோர் இல்லம்.
தான் பெற்ற மகவும் க்ரீச் சில் அடைக்கலம்.

இந்த நிலையில் ஒரு பெண் தன தந்தையை
நினைத்துப் பார்க்கிறாள் என்ற செய்தியே
இதயத்தைக் கனியச் செய்கிறது.

அழகான கவிதை.
உடன் பாடி விட்டேன். உங்களுக்கு மடலில் அனுப்புகிறேன்.

சுப்பு தாத்தா.

இராஜராஜேஸ்வரி said...

மாறும் பிறவி யாவினிலும்
மகளாய்ப் பிறக்க ஆசை !

இதனை விட இனிய வாழ்த்து இருக்கமுடியுமா ஒரு தந்தைக்கு ..!

இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமை ஐயா. உங்களுக்கு என் தந்தையர் தின வாழ்த்துக்கள்!
நேரமிருக்கும்பொழுது என் கவிதையைப் பாருங்கள், http://thaenmaduratamil.blogspot.com/2013/06/en-anbu-thandhaai.html

Vignesh L'Narayan said...

அன்பு ஐயா...

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்..

வணக்கம்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

வணக்கம் ஐயா.

தங்களின் மகளின் வரிகளில் பாசமும் நேசமும் அன்பும் கலந்து அழகாக உள்ளது.

இதனை விட இனிய வாழ்த்து இருக்கமுடியுமா ஒரு தந்தைக்கு ..!

இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

unmaiyanavan said...

தந்தையர் தின வாழ்த்துக்கள் ஐயா.

வெங்கட் நாகராஜ் said...

இனிய கவிதை.....

தந்தையர் தின நல்வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

எனதருமை மகள் சுஜா தந்தையர் தின வாழ்த்துகள் எழுதி எனக்கு அனுப்பியது - அவ்வாழ்த்து என்னை மெய் சிலிர்க்க வைத்தது.

இவ்வாழ்த்தினைப் படித்த சூரி சிவா ( சுப்பு தாத்தா ) அவ்வாழ்த்தினை அழகிய இராகத்தில் பாடலாகப் பாடி எனக்கு அனுப்பியும் உள்ளார்.

அவரின் குரலில் பாட்டாக வந்து இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே !

அன்பின் நண்பர் சுப்பு தாத்தா அவர்களுக்குப் பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்.

அன்பின் கரந்தை ஜெயக்குமார், திண்டுக்கல் தனபாலன், இராஜ இராஜேஸ்வரி, தேன் மதுரத் தமிழ் கிரேஸ், இல.விக்னேஷ், வை.கோ, சொக்கன் சுப்ரமணியன், மற்றும் ஆதி வெங்கட் அனைவருக்கும் இங்கு வருகை தந்து, கருத்தினைப் பதிந்தமைக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நட்புடன் சீனா

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சிறப்பான கவிதை.
சுப்புத் தாத்தாவுக்கு பாராட்டுக்கள்

ruthraavinkavithaikal.blogspot.com said...

அன்பின் திரு சீனா அவர்களே

விரல் வழியே
தந்தையும் மகளும்
தந்தியில்லாமல்
வீணை மீட்டிய‌
அன்பின் ராகம்
கவிதை நரம்பில்
உயிர்த்தது.
துடித்தது.
கவிதை அருமை.

அன்புடன் ருத்ரா

cheena (சீனா) said...

அன்பின் ருத்ரா

எழுதிய மறுமொழியினை வெள்ளைக் காக்காய் தூக்கிக் கொண்டு பறந்து விட்டது.

மற்றுமொரு மறுமொழி இது

தங்களின் கருத்துக் கூறும் வண்ணம் , தங்கள் கை வண்ணத்தில் வழக்கம் போல் அழகிய கவிதை இயற்றி பாராட்டி வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சியினத் தந்தது - அனைவரும் மகிழ்ந்தோம் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

மகிழ்நிறை said...

அன்பின் அய்யா,
சுஜா அவர்களின் கவிதை நெகிழ்த்துகிறது! உங்கள்;உங்களுக்கு கண்கள் பனித்திருக்கும் இல்லையா!! அருமை! தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். தாங்கள் கொடுத்த பணியை முழு பொறுப்போடு செய்ய நினைக்கும் இந்த சின்னவளுக்கு அனுபவம் போதவில்லை:) ஆகவே இந்த தாமதம்
நட்புடன்
மைதிலி

cheena (சீனா) said...

அன்பின் மைதில் கஸ்தூரி ரெங்கன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

மணவை said...

அன்புள்ள தந்தைக்கு மகள் எழுதிய கவிதை,

மகளின் தாலாட்டு தந்தைக்கு மகிழ்வூட்டும்...
அடியெடுத்து வைக்கையில்
விரல் பிடித்தாய் !
மடியமர்த்தி எண்ணெழுத்து
எழுத வைத்தாய் !
படிப்படியாய் வாழ்க்கைப்பாடம்
பயிற்றுவித்தாய் !

-அருமையான வரிகள். வாழ்த்துகள்.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in

KILLERGEE Devakottai said...

Arumai