ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 18 January 2009

பதிவர் சந்திப்பு - பொங்கல் திருநாளன்று

அப்பாடா - இன்னிக்கு தேதி 19 - பொங்கல் முடிஞ்சு அஞ்சு நாள் ஆச்சு - எல்லாப் பதிவர்களும் பொங்கல் வாழ்த்து சொல்லி - மாடுகளுக்கெல்லாம் மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்லி - பொங்கலப் பத்தி - மாட்டுப் பொங்கலப் பத்தி பதிவெல்லாம் போட்டு மறுமொழியெல்லாம் கேட்டு வாங்கி - அதுக்கெல்லாம் பதில் பொட்டு - பொங்கல மறந்துட்டு அவங்க அவங்க - அவங்க அவங்க வேலையப் பாக்க ஆரம்பிச்சாச்ச்ச்ச்சு.

நான் இப்பத்தான் ஆற அமர ஒரு பதிவு போடலாம்னு வந்துருக்கேன். என்ன இவ்வளவு தாமதமாப் போட்டா படிப்பீங்களா ? படிக்கணும் ஆமா சொல்லிப்புட்டேன்.

இந்தப் பொங்கல்லே என்ன விசேசம்னா - ஒரு பாசக்காரப் பய - பதிவரு தானுங்க - மீரான் அன்வர்னு ஒரு பய - அன்புடன் குழுமத்திலும் எழுதறானுங்க - மதுரைல வேலை பாக்குறான் - சம்பன்குளத்தான் - வீட்டுக்கு வரேன் வரேன்னு சொல்லி கடசில பொங்கல் அன்னிக்கு வந்துட்டான்.

பொங்கல் அன்னிக்கு நாங்க வழக்கம் போல ரொம்ப பிஸி - எங்க தங்க்ஸெ பிடிச்சுக்க முடில - அன்னிக்கு என் தம்பி குடும்பத்தோட அன்போட சென்னைலேந்து வந்திட்டான். அவன் கூடப் படிச்ச நண்பன் ஒருத்தனும் குடும்பத்தோட வந்துட்டான். ஆக மொத்தத்தில் வூடு கலகலன்னு மகிழ்ச்சியா - ரொம்ப நாளைக்கப்புறம் - இருந்திச்சி.


இது நான் தாங்கோ - நம்புங்க - கூட நிக்கற சின்னப் பய என் தம்பியோட வாரிசு.

இது தாங்க சம்பன்குளத்தான் - அன்வர் மீரான் - என்ன ஜாலியா என் கணினிலே உக்காந்து போஸ் கொடுக்கறான் பாருங்க.

இது எங்க வூட்ல எங்க தங்க்ஸ் போட்ட பொங்கக் கோலமுங்க. பொங்கல் கோலத்துடன் துவங்கிய பொங்கல் திருவிழா. இந்தக் கோலம் சாமி ரூம்ல சாமிக்கு முன்னாடி பொங்கல் படைக்கறதுக்காக போட்ட கோலம்.

இது பொங்கப்பானை வைக்கறதுக்காகப் போட்ட கோலம். ரெண்டு சக்கரப் பொங்கல் மற்றும் ஒரு வெண்பொங்கல்.
மூணு பானைலேயும் பொங்கல் பொங்கற சமயமுங்கோ
ஆகா - பொங்கல் பொங்குதுங்கோ - பொங்கலோ பொங்கல் - பால் பொங்கிச்சா - பரஸ்பரம் விசாரிச்சிக்கிட்டோம்.

அடுத்து சாமிக்குப் படைக்கணும் - கரும்பு மஞ்சக்கொத்து கண்ணுப்பிள்ள ஆவாரம்பூ, பனக்கிழங்கு, சோளக்கருது, தேங்கா, பழம், வெத்தலைப்பாக்கு, பூ, விளக்கு, பிள்ளையார் இதெல்லாம் வச்சிச் சாமி கும்பிட்டாச்சு - படைச்சாச்சு - அடுத்து என்ன - சாப்பாடு தானே !
சாப்பாடு அமர்க்களமா இருந்திச்சி - சக்கரைப்பொங்கல் - கூட பச்சரிசிச் சாதம், பருப்பு நெய், பலகாய் குழம்பு, தயிர், குழம்புலே போட்ட பல காய்கறிகள், சக்கர வள்ளிக் கிழங்கு பொறியல், பலாக்காய்க் கூட்டு --ம்ம்ம்ம்ம்ம்
இந்தப் பலகாய்க் குழம்புலே என்னன்ன காயெல்லாம் போடுவாங்க தெரியுமா -கத்தரிக்காய், முருங்கைக்காய், வாழக்காய், பலாக்காய், அவரைக்காய், மாங்காய், தேங்காய், மொச்சைக்காய், கொத்தவரங்காய், பறங்கிக்காய், சுரைக்காய், சக்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம் எட்செட்ரா !!
இந்தக் குழம்பு மறு நா காலைப் பலகாரம் வரைக்கும் சூடு பண்ணிப் பண்ணி ஊத்திக்கலாம்.
ஆக பொங்கல் வாழ்த்துகள் சொல்லி மகிழ்ச்சியா அடுத்த பிளான் போட்டோம். சாயந்திரமா மீரான் கிளம்பிட்டான்.
சாயந்திரம் மதுரைலே இருந்து 20 கிலோமீட்டர் தூரத்துலே இருக்கற ஹவாவெளி ங்கற பிக்னிக் ஸ்பாட்டுக்குப் போனோம் - அதெப்பத்தி அடுத்த பதிவுலெ (???) சொல்ரேன்.
இப்ப வர்ட்டா ....... எல்லொர்ருக்கும் அஞ்சு நாள் கழிச்சு - பொங்கல் வாழ்த்து !!!!
நட்புடன் ..... சீனா




35 comments:

cheena (சீனா) said...

மக்களே !! படிங்க - கருத்து சொல்லுங்க - என்னா சேரியா ?

ராமலக்ஷ்மி said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

மெளலி (மதுரையம்பதி) said...

அழகிய படங்களுடன், சிறு விஷயங்களையும் விடாம எழுதியிருக்கீங்க...நல்லாயிருக்கு சீனா சார்.

சதங்கா (Sathanga) said...

//ஆக மொத்தத்தில் வூடு கலகலன்னு மகிழ்ச்சியா - ரொம்ப நாளைக்கப்புறம் - இருந்திச்சி.//

படிக்கவே சந்தோஷமா இருக்கு. இதுக்கு முன்னே நாங்க வந்ததுனு சொல்லுங்க :)))

அழகான கோலம், பொங்கல் பானைகள், சுவாமிக்கு படையல் ... அருமை. அருமை.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சீனா சார், அருமை!
பொங்கல் நடு நாயகமாக இருந்தால், இலை மூக்கு இடது கை பக்கம் தானே வரும்.
தங்களுக்கு இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்!

ஆயில்யன் said...

//அன்னிக்கு என் தம்பி குடும்பத்தோட அன்போட சென்னைலேந்து வந்திட்டான். அவன் கூடப் படிச்ச நண்பன் ஒருத்தனும் குடும்பத்தோட வந்துட்டான். ஆக மொத்தத்தில் வூடு கலகலன்னு மகிழ்ச்சியா - ரொம்ப நாளைக்கப்புறம் - இருந்திச்சி.//

ஹைய்ய்ய்ய்!

சூப்பரா என் ஜாய் பண்ணியிருக்கீங்க :))))

ஆயில்யன் said...

// பலாக்காய்க் கூட்டு --ம்ம்ம்ம்ம்ம் இந்தப் பலகாய்க் குழம்புலே என்னன்ன காயெல்லாம் போடுவாங்க தெரியுமா -கத்தரிக்காய், முருங்கைக்காய், வாழக்காய், பலாக்காய், அவரைக்காய், மாங்காய், தேங்காய், மொச்சைக்காய், கொத்தவரங்காய், பறங்கிக்காய், சுரைக்காய், சக்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம் எட்செட்ரா !!//


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பாடா!

பின்னே இம்புட்டு வேலை செய்யற அம்மா பிசியா இல்லாம டிவியில ஸ்பெஷல் நிகழ்ச்சிகளா பாக்க முடியும் ! :)))))))

cheena (சீனா) said...

வாங்க வாங்க ராமலக்ஷ்மி -மொத ஆளா வாந்து வாழ்த்துச் சொல்லீட்டிங்க - நன்னி - சேரியா

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுடன் கூடிய நன்றி - எங்கே மதுரைப்பக்கமே காணோம் - உங்க வலைப்பதிவிற்கும் வரணும் நான் - வருகிறேன்.

cheena (சீனா) said...

சதங்கா - ஆமா ஆமா - வந்ததுக்கும் கருத்துச் சொன்னதுக்கும் நன்றிப்பா

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோதிபாரதி - இலை மூக்கு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

cheena (சீனா) said...

சூப்பரா எஞ்சாய் பண்றதுக்குத்தானே பொங்கலே ஆயில்ஸ் -உண்மைலேயே சந்தோசமா இருந்திச்சி

cheena (சீனா) said...

ஆயில்ஸ் - உண்மைலேயே தங்க்ஸ் பயங்கர பிஸீ - வந்திருந்த பெண்களும் கூடமாட ஒத்தாச பண்ணாங்க - இருந்தாலும் பொறுப்பு இல்லத்தரசி - இல்லத்தின் தலைவி கிட்டே தானே !! நானும் நானும் கூட மாட வேலெ செஞ்சேன்ல !!

அத்திரி said...

அண்ணாச்சிக்கு பொங்கல் வாழ்த்துக்கள். அப்புறம் சம்பன்குளத்தான்னு சொன்னீங்களே.... அது எத ஊர் பக்கம் இருக்கு. எங்க ஊர் பக்கத்துலையும் சம்பன்குளம்ன்னு ஒரு ஊர் இருக்கு அதான்

cheena (சீனா) said...

வாங்க அத்திரி - சம்பன்குளம் திருநெல்வேலி ஜில்லாவுலே இருக்கு

சேரியா

இராம்/Raam said...

ஐயா,

ஒரே ஊருக்காரவுக நாமே இன்னும் சந்திச்சுக்கலே.. பெப்ரவரி'லே ஊருக்கு வாறேன்.. ஒங்களுக்கு நேரமிருந்தா சந்திக்கலாங்களா ஐயா?

cheena (சீனா) said...

அன்பின் ராம் - நாம் சந்திப்பதற்கு என்ன தடை - எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம் - தொடர்பு கொள்க - சந்திப்பதில் மகிழ்ச்சி எனதே

அத்திரி said...

//வாங்க அத்திரி - சம்பன்குளம் திருநெல்வேலி ஜில்லாவுலே இருக்கு//


சரிதான் என் ஊருதான் . எனக்கு சம்பன் குளம் பக்கத்துல சிவசைலம்-புதுக்குடியிருப்பு

cheena (சீனா) said...

அப்படியா அத்திரி - சம்பன்குளத்தானுக்கு ஒரு ஊர்க்காரனா - தொடர்பு கொள்ளச் சொல்றேன் - சரியா

நானானி said...

பொங்கல் விழா அமர்க்களமா இருந்துச்சு போல! குழம்பில் போட்ட காய்கறிகளின் லிஸ்டே கண்ணைக்கட்டுதே! அப்படியே இலை முன் வந்து ஒக்காந்துக்கலாம் போல இருந்துச்சு. எனக்கும் சேத்து நல்ல ஒரு கட்டு...ஒரு வெட்டு வெட்டினீங்களா சீனா? செல்வியை அந்த மெனுக்களையெல்லாம் பதிவிடச் சொல்லுங்களேன்.
இனிய போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் வாழ்த்துக்கள்!!!
காணும்பொங்கலுக்குத்தான் பிக்னிக் போனீர்களா? அது பத்தியும் பதிவிடுங்கள்.

நானானி said...

என்னோட முந்தய பின்னோட்டம் வரவில்லையா?

cheena (சீனா) said...

அன்பின் நானானி - இணையத் தொடர்பு ஒரு வார காலமாக இல்லை - அதனால் தான் தாமதம் - அருமையான பிண்ணூட்டம் - வாங்க மதுரைக்கு - தங்க்ஸை ஒரு விருந்து படைக்க ஏற்பாடு செஞ்சிடுவோம் - அத்தனை வாழ்த்துகளுக்கும் நன்றி -

Unknown said...

புகைப்படத்தில் சீனா சாரைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. என் தாத்தா பாட்டியுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலத்தை நினைவுபடுத்தியது இந்தப் புகைப்படங்கள்.

cheena (சீனா) said...

நன்றி விஜயகோபால் - அக்கால நிகழ்வுகளை நினைப்பதே பசுமை தான்.நல்வாழ்த்துகள்

பாச மலர் / Paasa Malar said...

தாமதமான...பொங்கல் வாழ்த்துகள்..புகைப்படங்கள்ளைப் பார்த்த்போது உங்கள் வீட்டுக்கு வந்து பொங்கல் சாப்பிட்ட திருப்தி..

cheena (சீனா) said...

அன்பின் மலர், எங்கள் வீட்டிற்கு வந்து திருப்தியாக உண்டு மகிழ்ந்ததற்கு நன்றியுடன் கூடிய நல்வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

மதுரையிலும் gas stove பொங்கல்தானா???
அன்புடன் அருணா

cheena (சீனா) said...

அன்பின் அருணா

மதுரையில் அடுக்ககத்தில் மூண்றாவது மாடியில் சமையல் வாயு அல்லாது விறகு அடுப்பு பயன் படுத்த முடியுமா என்ன ?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நட்புடன் ஜமால் said...

மிக்க நன்றி சீனா அவர்களே.

மிக்க நன்றி.

cheena (சீனா) said...

நண்ப ஜமால் - வருகைக்கு நன்றி

நானானி said...

அன்பு சீனா!
இந்த மாத போட்டிக்கு பதிவுகள்...ஆமா!பதிவுகள் இட்டிருக்கிறேன். பார்த்து கருத்து சொல்லவும்.

பழமைபேசி said...

//cheena (சீனா) said...
முழிக்கறதுலே இவ்ளோ முழிப்பு இருக்கா - திருட்டு முழி முழிப்பும்பாங்களே - இன்னும் ஒரு பதுவு போட்டு எல்லாத்தெயும் விலாவாரியாச் சொல்றது .....
//

http://maniyinpakkam.blogspot.com/2009/03/blog-post_14.html

cheena (சீனா) said...

வருகைக்கும் செயலுக்கும் நன்றி பழமை பேசி

Anonymous said...

vanakam thamilar thirunaal pongal pongum photos arumai.paaratukkal
era.eravi,editor www.kavimalar.com

cheena (சீனா) said...

வணக்கம் இரவி

வருகைக்கும்ம் கருத்துக்கும் நன்றி இரவி