ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Friday 9 January 2009

முடிவெடுங்கள்

அன்பர்களே !

திரு மாறன் என்பவர் எழுதிய வெற்றி மாலை என்ற நூலிலிருந்து .....

முடிவெடுங்கள் :
-----------------------
வெற்றியாளனாக வேண்டுமென்றால் இன்றே இப்பொழுதே முடிவெடுங்கள். எக்காரணத்தை முன்னிட்டும் முடிவெடுப்பதைத் தள்ளிப் போடாதீர்கள்.

தள்ளிப்போடும் எண்ணத்தைக் கிள்ளிப் போட்டு விடுங்கள். ஜப்பானியர்கள்
உயர் நிலையை அடைய முக்கிய காரணமாக அவர்கள் சொல்வது DO IT NOW - இப்பொழுதே செய்து முடி என்பதே !

நாம் பெரும்பாலும் காரியங்களைச் செய்வதில் தாமதம் செய்து, சாதாரணமாக முடிவெடுக்க வேண்டிய செயல்கள் தாமதமாகி, அவசரச் செயலாகவும், அவசரச் செயல்களை மீண்டும் தாமதம் செய்து, மிக மிக அவசரச் செயல்களாக, அரைகுறையாய்ச் செய்து முடிப்போம்.

எனவே முடிவெடுத்து விட்ட நிலையில் சிறிதும் தாமதிக்காமல் உங்கள் செயல்களைச் செய்யத் திட்டமிடுங்கள்.

காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை. காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை.

எனவே காரணங்களைத் தவிர்த்து காரியம் கைகூட இப்பொழுதே முடிவெடுங்கள்.

நட்புடன் ... சீனா

13 comments:

cheena (சீனா) said...

சொல்வதைச் செய் - செய்ததைச் சொல்லாதே !

நட்புடன் ஜமால் said...

"ஒன்றே செய்,
ஒன்றும் நன்றே செய்,
அதுவும் இன்றே செய்"

cheena (சீனா) said...

அருமையான பொன்மொழி ஜமால்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜமால்

சதங்கா (Sathanga) said...

//"ஒன்றே செய்,
ஒன்றும் நன்றே செய்,
அதுவும் இன்றே செய்"//

ரிப்பீட்டேய்ய்ய்ய்.

cheena (சீனா) said...

வருகைக்கும் மறுமொழிதலுக்கும் நன்றி சதங்கா

பாச மலர் / Paasa Malar said...

நல்லாருக்கு சீனா சார்.

cheena (சீனா) said...

நன்றி மலர் - வருகைக்கும் கருத்துக்கும்

அபி அப்பா said...

மாறன் அய்யா சொன்னது இப்போ இந்த சூழ்நிலைக்கு நல்லா பொருந்துது!

cheena (சீனா) said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு நாம் வலைப்பூவினில் சந்திக்கிறோம் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - அபிக்கு அன்பினைத் தெரிவிக்கவும் - அடுத்த தொலைபேசி அழைப்பினில்

அன்புடன் அருணா said...

//காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை. காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை. //
அருமையான வார்த்தைகள்.
அன்புடன் அருணா

cheena (சீனா) said...

அருணா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

goma said...

சமயத்தில் பல திறமைசாலிகள் முயல் போல் தூங்கி விடுகின்றனர்,அதுவும் எத்தனை தவறு என்பதையும் உணரவேண்டும்.ஆமை எங்கொ வருகிறது அதற்குள் நாம் இளைப்பாறலாம் என்றிருந்தால் முயல்கள் வெற்றியைக் கோட்டை விட்டு விடும்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி