ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Thursday, 29 May 2008

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 6

நான் தஞ்சையிலிருந்து Third form படித்து விட்டு மதுரைக்கு மாற்றலாகி (??) Nineth standard படிப்பதற்கு வந்து சேர்ந்தேன். 1963ம் ஆண்டு மதுரையில் அடி எடுத்து வைத்தேன். 1972ம் ஆண்டு வரை மதுரையில் படித்தேன்.

கோசாகுளம் புதூர் எனப்படும் கே.புதூரில், 3, மாரியம்மன் கோயில் தெரு என்னும் முகவரியில் வசித்தோம். ஒரு சிறிய வீடு. முன் பக்கம் நல்ல திறந்த வெளி. மண் ரோடு. அமைதியான சூழ்நிலை. வீட்டின் முன்புறம் ஒரு வேப்ப மரம். அதனில் கட்டப்பட்டிருக்கும் கன்றுடன் கூடிய பசு. பின்புறம் ஒரு தோட்டம் எனச் சொல்லப்பட்ட வெற்றிடம். ஹைஜம்ப், லாங்ஜம்ப், சடுகுடு, கிட்டிப்புள், எனப் பல விளையாட்டுகள் விளையாடிய இடம்.

வீட்டின் முன்பக்க அறையில் ஒரு சிறு மளிகைக் கடை வைத்திருந்தோம். அது காய்கறிக் கடையோடு இணைந்த மளிகைக்கடை. வியாபாரம் நன்றாகவே நடந்தது. காலை 4 மணிக்கு நானும் என் தந்தையும் சைக்கிளில் சென்று மீனாட்சி அம்மன் கோவில் அருகே இருந்த சென்ட்ரல் மார்க்கெட்டில் இருந்து அனைத்துக் காய்கறிகளையும் மொத்த விலையில் வாங்கிக் கொண்டு வருவோம். கீழ மாசி வீதியிலும் வீதி முழுவதும் உள்ள தேங்காய்க் கடைகள், பழக்கடைகள், அனைத்திலும் கொள்முதல் செய்து, புதூர் வரும் போது காலை 6 மணி ஆகிவிடும். காலையிலேயே தினந்தினம் புதுசு புதுசா காய்கறிகள் வியாபாரம் களை கட்டும். ஏழு ஏழரைக்கெல்லாம் முடிச்சிட்டு மளிகைக் கடையில் உக்காந்தா எட்டரை வரைக்கும் இருப்பேன். அப்புறம் அவசர அவசரமா எல்லா வேலையும் முடிச்சிட்டு பள்ளி செல்லும் பாலகன் நானே - பள்ளிக்கூடம் போகனும்.

வீட்டிலே இருந்து நாங்க நண்பர்கள் புடை சூழ நடந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்தேதேதேதே தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே இருக்கும் அமெரிக்கன் கல்லூரி உயர் நிலைப்பள்ளிக்குச் செல்வோம். பள்ளிக்குச் செல்லும் வழி இரண்டு உண்டு. புதூர் பஸ் ஸ்டாண்டில் அனைவரும் கூடி அரட்டை அடித்துவிட்டு அழகர் கோயில் மெயின் ரோட்டிலேயே நடந்து ஐடிஐ, ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட், தல்லாகுளம் என நடந்து செல்வதற்குள், வீடு, பள்ளி, ஊர், மாவட்டம், மாநிலம், தேசம், உலகம் என அத்தனை இடங்களைப் பற்றியும், நிகழ்வுகள் பற்றியும், பேசிப் பேசி, விவாதித்து, ஆமோதிக்கும் கட்சி, மறுக்கும் கட்சி எனப் பட்டி மன்றம் நடத்தி ( அதில் சில நண்பர்கள் பார்வையாளர்களே) - பள்ளி சென்ற நாட்கள் - இன்பமாகக் கவலையின்றி கழிந்த நாட்கள் - வாழ்க்கையின் சுவையான நாட்கள் - திரும்பக் கிடைக்காத நாட்கள் - அசை போட்டு ஆனந்திக்கும் நாட்கள். கவலைப் படுகின்ற சில நாட்களில் ஆறுதலுக்கு நட்பே கை கொடுக்கும். மேலும் பெருமாள் கோவிலுக்கு எதிரில் உள்ள இரட்டைப் பிள்ளளயாரிடம் சொல்லி விட்டால் கவலைகள் பறந்து போகும் - மறந்து போகும்.

பள்ளிக்குச் சென்ற மற்ற வழி - வீட்டிற்குப் பின்புறம் இருந்த பெரிய கம்மாக்கரை வழியா நடந்து போனது. கம்மாயிலே இடுப்பளவு தண்ணி இருந்த காலத்திலே குளிக்கிறோம்னு சொல்லி கூத்தடிச்ச காலங்கள் உண்டு. தண்ணிக்குள்ளே வந்து கோமணத்தே உருவிட்டுப் போய்டுவானுங்க! . காலைலே சுகமா கம்மாக் கரையிலே பசங்களோட அப்பிடியே வெளீயே போய்ட்டு கம்மாலெயெ காலைக் கழுவிட்டு வந்த சுகம் இப்போ பெரிய வீட்லே WC டாய்லெட்லே கிடைக்குறதா ??

தற்போதைய DRO காலனி, சர்வேயர் காலனி ன்னு கம்மா பூரா வீடுகளா மாறிடிச்சி. கம்மாக்கரையிலேயே நடந்து நத்தம் ரோட்டைப் பிடிச்சா - கலக்டர் பங்களா, ரிசர்வ் லைன், எஸ்பி பங்களா, பிடபுள்யூடி ஈஈ பங்களா, கெஸ்டவுசுன்னு பல பங்களாக்கள் கடந்து அவுட்போஸ்ட் வந்து மெயின் ரோட்லே ஜாயின் பண்ணுவோம்.

அப்பல்லாம் ஏதாவது அதிக ஆசைப்பட்டு வீட்லே கேட்டா, அப்பா வந்து "பெரிய சேஷய்யன்னு மனசிலே நினைப்பா" ன்னு திட்டுவாங்க. யாரந்த சேஷய்யன்னு ரொம்ப நாள் தெரியாம இருந்திச்சி. அப்புறம் தான் ஒரு நா அவர் தான் பெரிய, மதுர ஜில்லாக் கலெக்டர்னு தெரிஞ்சுது. (T.N.Seshan).

சில சமயம் பேச்சிலே சண்டை வந்து காய் விட்டுட்டு பசங்களெப் பிரிஞ்சு நாங்க ரெண்டு மூணு பேரு நத்தம் ரோட்லெந்து பிரிஞ்சு சொக்கிகுளம், பீபீகுளம், லேடி டோக் காலேஜ், ஓசிபிஎம் வழியா தல்லாகுளம் போவோம். சொக்கிகுளத்திலே வடமலையான் பங்களா, பிடிஆர் பங்களா, டிவிஎஸ் பங்களான்னு பெரீஈஈஈஈஈஈய வீடெல்லாம் வேடிக்கை பாத்துட்டே போவோம். பள்ளிக்கூடம் போனாப் போவோம் இல்லேன்னா தமுக்கம் மைதானம் சுவர் ஏறிக் குதிச்சுப் போய் சாயந்திரம் வரைக்கும் அங்கேயே இருப்போம். சாயந்திரம் அப்பிடியே வந்தோம்னா, பசங்க எல்லாம் காலைலேந்து காணோமேன்னு அலை பாஞ்சுகிட்டுருப்பானுங்க. அப்பிடி கெத்தா வந்து, சேந்து வீடு போவோம். திட்றவன் திட்டுவான். அழுவறவன் அழுவான். அப்புறம் பழம் விட்டுடுவோம்.

நண்பர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த - சிவானந்தம், பவானந்தம், நித்யானந்தம், பரமானந்தம் ஆகியோர் நல்ல நண்பர்கள். மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்திலும், மீன் வளத்துறையிலும், கனரா வங்கியிலுமாக பணிக்குச் சென்றவர்கள். நீண்ட காலமாக தொடர்பு விட்டுப் போய் விட்டது. மற்ற நண்பர்கள் மின்வாரியத்திலும் பொதுப்பணித்துறையிலுமாக பணிக்குச் சென்றார்கள்.

மூன்றாண்டு காலம் பள்ளி வாழ்க்கை இன்பமயமாகச் சென்றது. XIth standard வரை அங்கு படித்தேன். அக்காலக் கட்டத்தில் தான் பாண்டியன் ஹோட்டல் அஸ்திவாரம் போட்டு செங்கல் செங்கலாக உயர்ந்தது. அதற்கு முன்னால் சர்க்கியூட் ஹவுஸ் மட்டும் தான் இருந்தது.

பள்ளியில் தலைமையாசிரியராக அந்தக் காலத்தில் அமெரிக்கா சென்று வந்த திரு சுந்தர்ராஜ் இருந்தார். எங்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்துவார். பொறுமையின் திலகம். கணித ஆசிரியராக திரு நரசிம்மன் ஒன்பதாம் வகுப்பிலே முழு ஆண்டுத்தேர்விலே 100 மதிப்பெண் கொடுத்து பத்தாம் வகுப்பினிலே அல்ஜீப்ரா கணிதம் எடுக்க வைத்து கணிதத்தின் மேல் ஒரு காதலை ஏற்படுத்தியவர். தமிழாசான்களாக, திரு நடராஜன், கோவிந்தன், அலங்காரம் என்னும் பெருமக்கள் கற்றுத்தந்த தமிழ்தான் இன்றைக்கும் சிறிதளவாவது தமிழ் பேச வைக்கிறது. திரு அலங்காரம் அவர்கள் நடத்திய ந-சூ (நன்னூல் சூத்திரம்) மறக்க முடியுமா - தமிழிலக்கணத்தை கரைத்துக் குடிக்க வைத்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வித்வான் பட்டம் பெற்றவர்கள். விஞ்ஞான ஆசிரியர் திரு ஜான்சன் சுவாமிப் பிள்ளை. பாடம் நடத்தும் பொழுது திடீரென "பள்ளிதனில் தூங்கியவன் கல்வி இழந்தான்" என்று கூறினாரென்றால் - எவனோ ஒரு மாணவன் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று பொருள். சக மாணவர்கள் அக்கம் பக்கம் பார்த்து அவனை எழுப்பி விடுவர். ஆசிரியரோ கவலைப் படாமல் தொடர்ந்து பாடம் நடத்துவார். சமூக இயல் ஆசிரியர் திரு Eddie. உடற் பயிற்சி ஆசிரியர் திரு டெய்லர். ஹிந்தி ஆசிரியர் திரு சீனிவாசன்.

அக்கால கட்டத்தில் தான் இந்தி எதிர்ப்பு பலமாக இருந்த காலம். காளிமுத்து, சீனிவாசன் போன்றவர்கள் கல்லூரிகளில் படித்த காலம் - சட்ட எரிப்பு நடத்திய காலம். பக்தவக்சலம் முதல்வராகவும் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகவும் இருந்த காலம். இன்றும் இந்தி தெரியாமல் துயரப் படுவதற்கு வழி வகுத்த காலம். முதல் மந்திரியையும், பிரதம மந்திரியையும் எதிர்த்து எழுப்பிய கோஷங்கள் இன்றும் நினைவிலிருக்கின்றன.

தமுக்கம் மைதானம், அடுத்துள்ள பூங்கா, காந்தி மியூசியம், ரேஸ்கோர்ஸ் மைதானம் இவை தான் எங்களது பொழுதுபோக்கும் இடங்கள்.

முழங்கால் வரை நீண்ட டிரவ்சர்( வளர்ற புள்ளே - நல்லாத் தையுங்க) - காமராஜர் மாதிரி முழங்கை வரை தொள தொள சட்டை - ஒரு கையில் பை நிறைய புத்தகங்கள் - நோட்டுகள் - எப்போதும் கசியும் ஒரு பவுண்டன் பேனா - ஜாமெட்ரி பாக்ஸ் - இத்துடன் ஒரு பெரிய அலுமினிய / எவெர்சில்வர் தூக்குச் சட்டி. அதனுள் தயிர் சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், புளி சாதம் என வகை வகையாக தினத்துக்கொன்று என பலவகை சாதங்கள் - உடன் துவையல் ஊறுகாய் வெஞ்சனம் என - படிக்குற புள்ளே - பாவம்னு - அம்மா ஆசை ஆசையாக கட்டிக்குடுக்கும் மதிய சாப்பாடு - மறுபடி சிறு பையனாக மாறி பள்ளி செல்ல வேண்டும்.

பள்ளியின் அருகிலேயே தமுக்கம் மைதானத்தின் சுற்றுச் சுவர் இருந்தது. ஏறிக் குதித்து சாப்பிட அங்கு செல்வோம் - அனைத்து தூக்குச் சட்டிகளும் திறக்கப்பட்டு கூட்டாஞ்சோறு உண்ணுவோம். வெள்ளைச் சாமி உதயணன் என்ற வகுப்புத் தோழர்களுடன் அடித்த கூத்துகள் மறக்க முடியாதவை.

தொடர்கிறேன் அடுத்த இடுகையாக

அன்புடன் ..... சீனா
-----------------------------------------

76 comments:

cheena (சீனா) said...

அசை போட வாருங்களேன்

சதங்கா (Sathanga) said...

வந்திட்டேன். பிறகு படிச்சிட்டு மறுமொழி இடுகிறேன்.

SP.VR. SUBBIAH said...

அந்தக் காலம் எல்லாம் திரும்ப வராது மிஸ்டர் சீனா! அதுதான் சோகம்!
அப்போது இருந்த சந்தோசம் உங்களிடம் இப்போது இருக்கிறதா?

நானானி said...

நீங்களும் கல்லூரியில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகிட்டவர்தானா? சீனா?
தொளதொள உடையில் கையில் தூக்குச் சட்டியோடு சிறுவன் சீனாவை கற்பனை செய்து பார்க்க முடிகிறது.
பள்ளி, கல்லூரிக் காலங்கள் வாழ்வின் வசந்த காலங்கள்தான் சீனா!!

சதங்கா (Sathanga) said...

சீனா ஐயா,

மீள் பதிவா ? ஏன்னா, திரும்ப படிக்கற மாதிரியே ஒரு எண்ணம்.

மதுரையை அப்படியே ஒரு சுற்று சுற்றி வந்தது போல இருக்கு. உங்கள் நினைவாற்றாலுக்கு (ஆசிரியர்களின் பெயர்கள்) வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

முன்பே சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன் சீனா ஐயா. நீங்கள் மதுரையில் படித்து முடித்த 1972ம் வருடத்தில் தான் மதுரையில் நான் பிறந்தேன். :-)

இந்த இடுகையை ஏற்கனவே படித்த மாதிரி இருக்கிறதே ஐயா. மறுபதிவா?

NewBee said...

//1963ம் ஆண்டு மதுரையில் அடி எடுத்து வைத்தேன். //

1963--ஹி..ஹி..ஹி..மன்னிக்கவும், எனக்கு (அவ்ளோ) அந்தக்காலம் தெரியாது.:D

NewBee said...

//அப்புறம் அவசர அவசரமா எல்லா வேலையும் முடிச்சிட்டு பள்ளி செல்லும் பாலகன் நானே - பள்ளிக்கூடம் போகனும்.
//

என்ன மாதிரியே பொறுப்பா இருக்கீங்க சீனா ஸார்!:D :D

பி.கு.:இதத் தங்கமணிகிட்ட கண்டிப்பா, சொல்லுங்க.;)

NewBee said...

//கணித ஆசிரியராக திரு நரசிம்மன் ஒன்பதாம் வகுப்பிலே முழு ஆண்டுத்தேர்விலே 100 மதிப்பெண் கொடுத்து பத்தாம் வகுப்பினிலே அல்ஜீப்ரா கணிதம் எடுக்க வைத்து கணிதத்தின் மேல் ஒரு காதலை ஏற்படுத்தியவர்.//

கணிதத்திலும் புலியா? அப்ப ஒரு கணிதப் பதிவும் உண்டா,இப்பத் தமிழ்ப் பதிவு போடுற மாதிரி?

பி.கு.:சீனா ஸாரிடம் அடிவாங்கத் தயாராக இல்லாததால், நான் இப்ப எஸ்........:D :D

cheena (சீனா) said...

சதங்கா,

வருகைப்பதிவிற்கு நன்றி

cheena (சீனா) said...

அருமை நண்பர் சுப்பையா அவர்களே

அந்தக் காலம் திரும்ப வராது - வருமா என ஏங்கியதின் விளைவே இப்பதிவு. மலரும் நினைவுகளாக அசை போட்டு ஆனந்தித்து எழுதியது, அப்பொழுது அக்கால கட்டத்தில் அந்த வயதில் இருந்த மகிழ்ச்சி இல்லை என்பது உண்மைதான்,

cheena (சீனா) said...

நானானி,

படித்த காலங்கள் வசந்த காலங்கள் தான். சிறுவன் சீனாவினைக் கற்பனை பண்ணிப் பார்ப்பதில் நானும் பங்கேற்கிறேன். மகிழ்ச்சி தான்

நன்றி நானானி

cheena (சீனா) said...

சதங்கா

இது ஒரு மீள்பதிவு தான். மதுரை மாநகரம் என்ற குழுப் பதிவினில் சென்ற அக்டோபரில் இப்பதிவு வந்திருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதங்கா

cheena (சீனா) said...

குமரன்,

இது ஒரு மீள்பதிவு தான். மதுரை மாநகரம் என்ற குழுப் பதிவினில் சென்ற அக்டோபரில் இப்பதிவு வந்திருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமரன்

cheena (சீனா) said...

புது வண்டே - அக்காலத்தில் நீ பிறக்கவே இல்லையே

cheena (சீனா) said...

பொறுப்பு - பள்ளி சென்றது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

புது வண்டே நீயும் அப்படி இருப்பதில் மக்ழ்ச்சி அடைகிறேன், தங்க்ஸூவிடம் சொல்லி விடுகிறேன்

cheena (சீனா) said...

புது வண்டே

கணிதப் பதிவு வேண்டுமா - போட்டால் ஆயிற்று

மெளலி (மதுரையம்பதி) said...

//மறுபடி சிறு பையனாக மாறி பள்ளி செல்ல வேண்டும்.//

எல்லோருக்கும் இருக்கும் ஒரு ஆசை :)

மதுரையை சுற்றிய கழுதை அப்படின்னு பாட்டி-எங்கப்பா அவங்களைச் சொல்லிக்குவாங்க...அதாவது மதுரை தவிர வேற எந்த இடமும் செட்டாகாதாம் அவர்களுக்கு....பதிவை படிக்கையில் அவர்களுடன் பேசியது போன்ற ஒரு நினைவு :)

நன்றி ஐயா!

மெளலி (மதுரையம்பதி) said...

//நீங்கள் மதுரையில் படித்து முடித்த 1972ம் வருடத்தில் தான் மதுரையில் நான் பிறந்தேன். :-)//

இதுக்கு நானும் ஒரு ரீப்பீட்டே போட்டுக்கறேன். :-)

அப்படியே, குமரனை விட நான் சிறியவன் அப்படிங்கறதையும் இங்கே பதிவு செய்கிறேன் :)

கோகுலன் said...

அட அட.. என்ன அருமையான நினைவுகள்.. வாசிக்கும் போதே என்னையும் மதுரைக்கு அழைத்து செல்கிறீர்கள்..

//சிவானந்தம், பவானந்தம், நித்யானந்தம், பரமானந்தம் //

ஆனந்தமான நண்பர்கள் :))

அந்த கூட்டாஞ்ச்சோறு ஆசை என்னிடம் அதிகம் ஒட்டிக்கொண்டது சீனா!!

இன்னும் தொடருங்கள்..

cheena (சீனா) said...

மௌளி,

பாட்டியை நினைவு படுத்தியதாக உணர்ந்தது பாராட்டத்தக்கது

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

மௌளி மதுரையில் நான் இருந்த சமயம் அங்கு பிறந்தது எனக்கு மகிழ்வினைத் தருகிறது. குமரனுக்குச் சிறியவன் என்பதும் பெருமையே

cheena (சீனா) said...

கோகுலன்,

கூட்டாஞ்சோறு உண்மையிலேயே நல்ல சோறு. பள்ளி வாழ்க்கை நினைக்கவே நன்றாயிருக்கும்.

நிஜமா நல்லவன் said...

சீனா சார் உங்க கூடவே மதுரையை சுத்தி பார்க்கிற மாதிரி இருக்கு நீங்க எழுதி இருக்கிறதை படிக்கும் போது. இப்ப என்னோட பள்ளி நாட்கள் நினைவுல ஓடிட்டு இருக்கு.

குசும்பன் said...

//நான் தஞ்சையிலிருந்து Third form படித்து விட்டு//

டிரையின் ரிசர்வேசன் பார்ம் தெரியும், அப்ளிகேசன் பார்ம் தெரியும் அது என்னா தேர்ட் பார்ம்?

நிஜமா நல்லவன் said...

//பாடம் நடத்தும் பொழுது திடீரென "பள்ளிதனில் தூங்கியவன் கல்வி இழந்தான்" என்று கூறினாரென்றால் - எவனோ ஒரு மாணவன் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று பொருள்//

அடடா எங்க பள்ளியிலும் இப்படித்தான் எங்க தமிழய்யா பாடுவாரு.

குசும்பன் said...

//புதூர் பஸ் ஸ்டாண்டில் அனைவரும் கூடி அரட்டை அடித்துவிட்டு அழகர் //

9வது படிக்கும் பொழுதே பஸ் ஸ்டாண்ட் போய் அரட்டை...ம்ம்ம்
ரொம்ப நல்லா இருக்கு.

குசும்பன் said...

//சில சமயம் பேச்சிலே சண்டை வந்து காய் விட்டுட்டு//

இந்த காய்யை உங்க காய்கறி கடையில் விற்க முடியுமா?

நிஜமா நல்லவன் said...

ஆஹா குசும்பன் வந்துட்டாரு. வரிக்கு வரி கமெண்ட் போடாம போக மாட்டார் போல.

குசும்பன் said...

//திரு அலங்காரம் அவர்கள் நடத்திய ந-சூ (நன்னூல் சூத்திரம்) //

அவருக்கு சொ.சூ தெரியுமா என்று கேட்டு சொந்த செலவி சூன்யம் வைப்பது எப்படின்னு கத்து கொடுங்க

நிஜமா நல்லவன் said...

///கோசாகுளம் புதூர் எனப்படும் கே.புதூரில், 3, மாரியம்மன் கோயில் தெரு என்னும் முகவரியில் வசித்தோம்.///


பழைய முகவரி யாருக்கு வேணும். இப்ப எந்த முகவரி அத சொல்லுங்க. அப்பத்தானே வசதியா இருக்கும்.

குசும்பன் said...

//நிஜமா நல்லவன் said...
சீனா சார் உங்க கூடவே மதுரையை சுத்தி பார்க்கிற மாதிரி இருக்கு நீங்க எழுதி இருக்கிறதை படிக்கும் போது.//

காரில் சுத்தி காட்டி இருந்தா இன்னேரம் 3000 ஆகி இருக்கும் ஆகையால் அதில் பாதி 1500 அவருக்கு அனுப்பி வைக்கவும்.

நிஜமா நல்லவன் said...

///குசும்பன் said...
//திரு அலங்காரம் அவர்கள் நடத்திய ந-சூ (நன்னூல் சூத்திரம்) //

அவருக்கு சொ.சூ தெரியுமா என்று கேட்டு சொந்த செலவி சூன்யம் வைப்பது எப்படின்னு கத்து கொடுங்க///



யாரோ ஒரு பொய்யா கெட்டவன் கூட சொந்த செலவுல சூனியம் வைக்கிறது எப்படின்னு சொல்லி கொடுக்கிறதா பேசிக்குறாங்க. உங்களுக்கு தெரியலைன்னா பொய்யா கெட்டவன் கிட்ட கேட்டு சொல்லிக்கொடுங்க.

குசும்பன் said...

// SP.VR. SUBBIAH said...
அப்போது இருந்த சந்தோசம் உங்களிடம் இப்போது இருக்கிறதா?//

கல்யாணம் ஆனவரிடம் கேட்கும் கேள்வியா இது?:)))))))))))))))

நிஜமா நல்லவன் said...

///குசும்பன் said...
//சில சமயம் பேச்சிலே சண்டை வந்து காய் விட்டுட்டு//

இந்த காய்யை உங்க காய்கறி கடையில் விற்க முடியுமா?///



காய் விட்டு அப்புறம் பழம் விடுவாங்களே அந்த பழத்தை சாப்பிட முடியுமா குசும்பன்?

குசும்பன் said...

நிஜமா நல்லவன் said...
பழைய முகவரி யாருக்கு வேணும். இப்ப எந்த முகவரி அத சொல்லுங்க. அப்பத்தானே வசதியா இருக்கும்.//

எதுக்கு ஆட்டோ அனுப்பவா?

நிஜமா நல்லவன் said...

///குசும்பன் said...
// SP.VR. SUBBIAH said...
அப்போது இருந்த சந்தோசம் உங்களிடம் இப்போது இருக்கிறதா?//

கல்யாணம் ஆனவரிடம் கேட்கும் கேள்வியா இது?:)))))))))))))))/////


குசும்பண்ணா அப்ப நீங்க சந்தோஷமா இல்லையா?

குசும்பன் said...

நிஜமா நல்லவன் said...

காய் விட்டு அப்புறம் பழம் விடுவாங்களே அந்த பழத்தை சாப்பிட முடியுமா குசும்பன்?//

என்னிடம் ஏன் ஒய் கேட்குறீர் அவரிடம் கேளுங்கோ!!!

குசும்பன் said...

நிஜமா நல்லவன் said...
///குசும்பன் said...
// SP.VR. SUBBIAH said...
அப்போது இருந்த சந்தோசம் உங்களிடம் இப்போது இருக்கிறதா?//

கல்யாணம் ஆனவரிடம் கேட்கும் கேள்வியா இது?:)))))))))))))))/////


குசும்பண்ணா அப்ப நீங்க சந்தோஷமா இல்லையா?//

நான் எங்கயாவது கல்யாணம் செய்தால் சந்தோசம் போய்விடும் என்று சொல்லி இருக்கேனா? நீங்கள் ஏன் அப்படி தப்பா முடிவு செஞ்சீங்க.

குசும்பன் said...

நிஜமா நல்லவன் said...

குசும்பண்ணா அப்ப நீங்க சந்தோஷமா இல்லையா?///

அப்ப சந்தோசமா இல்ல, இப்ப சந்தோசமா இருக்கேன்..

உஷ் உஷ்... அப்பா என்னாமா சமாளிக்க வேண்டி இருக்கு.

நிஜமா நல்லவன் said...

///குசும்பன் said...
நிஜமா நல்லவன் said...

காய் விட்டு அப்புறம் பழம் விடுவாங்களே அந்த பழத்தை சாப்பிட முடியுமா குசும்பன்?//

என்னிடம் ஏன் ஒய் கேட்குறீர் அவரிடம் கேளுங்கோ!!!////


நான் உங்களிடம் Y கேட்கவில்லையே? கேள்வி தானே கேட்டேன்.

மங்களூர் சிவா said...

இத்தனை வருடங்களுக்கு பிறகும் அனைத்து ஆசிரியர்களின் பெயரையும் நினைவில் இருத்தி பதிவில் இட்டிருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி.

மற்றபடி மதுரையில் பெரும்பாலான இடங்களை இனிமேல்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

மிக நன்றாக இருக்கிறது பதிவு.

மங்களூர் சிவா said...

குசும்பா, நி.நல்லவன் உங்க அன்புக்கு அளவில்லாம போச்சுப்பா!!

இன்னும் நல்லா கும்முங்க. நிறைய நிறைய எதிர்பார்க்கிறேன்.

Sanjai Gandhi said...

அட... ரொம்ப நல்லாதான் அசை போட்டிருக்கி்ங்க.. :)

cheena (சீனா) said...

நிஜமா ....,

மதுரையைச் சுத்திப் பாக்கற மாதிரியே இருக்கா - ந்ல்லாது - மயக்கம் போட்றப் போறே - பாத்துக்க

cheena (சீனா) said...

குசும்பா

தேர்ட் பார்ம் தெரியாதா ? நீ எல்லாம் என்னத்த குப்பை கொட்டறே அங்கே

ஒட்டகம் வளக்குற இடத்துக்குப் பேரு பார்ம் - அதுல பார்ம் நம்பர் தேர்ட். ஆக தேர்ட் பார்ம். நீ எந்த பார்ம்லே வேலை செய்யுறே

cheena (சீனா) said...

நிஜமா....

பொய் சொல்லக்கூடாது

பள்ளிதனில் ......

உங்அ தமிழய்யா பாடினாரா ? அப்ப நீ முழிச்சிக்கிட்டா இருந்தே ?

பொய் பொய் பொய்

cheena (சீனா) said...

குசும்பா,

9வது படிக்கும் போது அரட்டை அடிக்காம உன்னெ மாதிரி சைட் அடிக்க எல்லாம் அந்தக் காலத்துலே வசதி இல்ல

cheena (சீனா) said...

குசும்பா,

எல்லாக் காயையும் நாங்க விப்போமுல

cheena (சீனா) said...

குசும்பா,

நாங்க படிச்ச காலத்துலே சொ.சூ எல்லாம் கிடையாது. ந.சூ மட்டும் தான்

cheena (சீனா) said...

நிஜமா ...

உன்னெ நம்பி இப்பொ இருக்கற முகவரி தர முடியாது. வந்து டேரா போட்டேன்னா நான் என்ன பண்றது ?

cheena (சீனா) said...

குசும்பா

நிஜமா.... கிட்டே இருந்து 1500 வாங்கி தர வேண்டியது உன் பொறுப்பு - போனாப் போகுது நீ 150 எடுத்துக்க

cheena (சீனா) said...

நிஜமா ....

அந்த பொய்யாக் கெட்டவன் குசும்பனா ?? ஓப்பனா சொல்லுய்யா

cheena (சீனா) said...

நிஜமா ....

அந்த பொய்யாக் கெட்டவன் குசும்பனா ?? ஓப்பனா சொல்லுய்யா

cheena (சீனா) said...

குசும்பா,

அதென்னது கல்யாணம் ஆனா சந்தோசம் போயிடுமா என்ன - வேற மாதிரி சந்தோசம் வரும்ல ... என்ன கொஞ்சம் குறையலாம் - அவ்ளோதான்

cheena (சீனா) said...

நிஜமா ,,,,,


எல்லாப் பழத்தயும் சாப்டலாமே

cheena (சீனா) said...

குசும்பா

நிஜமா .... என்ன ஆட்டோ டிரைவரா - தேவைப்படற இடத்துக்கு எல்லாம் ஆட்டோ அனுப்பறதுக்கு

cheena (சீனா) said...

நிஜமா......

குசும்பன் சந்தோசமா இருக்காரா இல்லையான்னு அவர் கிட்டே கேக்கறதுக்கு என் பதிவு தான் கிடைச்சுதா - என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க

cheena (சீனா) said...

குசும்பன் சமாளிக்கறாரு - ஆத்துக்காரி கிட்டே இருந்து அலை பேசி அலறுச்சாம்

இப்போ சந்தோசம் சந்தோசம் சந்தோசம்னு இவரு இங்கே அலருறாரு

cheena (சீனா) said...

சிவா,

கும்மிக்குப் பதில் அருமையான மறுமொழி - நன்றி

cheena (சீனா) said...

சிவா - இதானே வேணாம்றது

குசும்பனையும் நிஜமா நல்லவனையும் ( உண்மையா இது ? ) சூடேத்துறியே - கும்மச் சொல்றே

cheena (சீனா) said...

பொடியா - நல்லா அசை போடறேனா - போட்டுப் பாரு - மகிழ்ச்சி தெரியும் - நன்றி

ராமலக்ஷ்மி said...

அசை போட்டிருக்கும் அனுபவங்கள் அருமை. அடுத்த இடுகையை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.

//இன்றும் இந்தி தெரியாமல் துயரப் படுவதற்கு வழி வகுத்த காலம்.//

உண்மைதான் சீனா சார்! இன்னொரு மொழியைக் கற்றதால் குறைந்து போயிருக்க மாட்டோம். அந்த வயதில் கற்பதும்[தலைக்குள் நுழைவதும்:-)] எளிதாகவும் இருந்திருக்கும்! ஹூம்!

cheena (சீனா) said...

ராமலக்ஷ்மி - வருகைக்கு நன்றி. இளைய வயதில் இன்னொரு மொழி கற்பது எளிமை தானே !!

ரசிகன் said...

அந்தகால சிறுவயது சூழலின் அருமையை இந்தகால சிறார்கள் இழந்திருக்கிறார்கள்ன்னு தோனுது.

அருமை..

ரசிகன் said...

//வகுப்புத் தோழர்களுடன் அடித்த கூத்துகள் மறக்க முடியாதவை.

தொடர்கிறேன் அடுத்த இடுகையாக//

மலரும் நினைவுகளை ரசனையா கொடுத்திருக்கிங்க.. தொடருங்க:)

cheena (சீனா) said...

வாப்பா ரசிகா

உண்மை - இக்காலச் சிறுவர்கள் மகிழும் முறையே வேறு - அதற்கான சூழ்நிலையும் வேறு

எங்கள் காலம் வேறு - அது இக்காலச் சிறார்களுக்குக் கிடைக்காது. அதே போல் இப்பொழுதிருக்கும் சூழ்நிலை அப்பொழுது கிடையாது

cheena (சீனா) said...

ரசிகன்,

தொடர்கிறேன்

நந்து f/o நிலா said...

சூப்பரா இருக்கு உங்கள் அசை. இன்னும் அந்தகாலத்து பாவாடை தாவனி பற்றி ஒண்ணும் காணோமே? :P

அடுத்த பார்ட்ல எதிர் பார்க்கிறோம்

( மங்களூர் சிவா சார்பாக கேட்டுட்டேன்)

cheena (சீனா) said...

வாங்க நந்து, சிவா கேட்டாலும் சரி - நந்து கேட்டாலும் சரி - அந்தக்கால பாவாடை தாவணிகளைப் பற்றி எழுத மாட்டேன். ( எழுத வேண்டும் என்று தான் மனம் சொல்கிறது )

எழுதலாமா - வேண்டாம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான பதிவு ஐயா.
மிகவும் ரஸித்துப்படித்தேன்.
நல்ல மலரும் நினைவுகள்.
அந்த நாட்கள் திரும்பி வராது தான்.

பெரிய பங்களாவிலும் attached western toilet இலும் கிடைக்காத சுகம் கண்மாய்களில் கிடைத்துள்ளது அருமை. ;)))))

//அப்புறம் தான் ஒரு நா அவர் தான் பெரிய, மதுர ஜில்லாக் கலெக்டர்னு தெரிஞ்சுது. (T.N.Seshan).//

நமது தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்த சேஷன் ஐயாவா! அடடா, மிக்க மகிழ்ச்சி.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றிகள்
ஐயா. அன்புடன் vgk

cheena (சீனா) said...

அன்பின் வை,கோ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - தேர்தல ஆணையராக இருந்த அதே சேஷன் தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

இராஜராஜேஸ்வரி said...

மதுரையைச்சுற்றி
மதுரமான
மலரும் நினைவுகள்
மனதை மகிழ்வித்தன..
பாராட்டுக்கள் ஐயா..

இராஜராஜேஸ்வரி said...

நன்னூல் சூத்திரம் எத்தனை எளிமையாக மனதில் பதியும்
வண்ணம் பாடம் நடத்தினார்கள்..
வண்ணமயமான
வாழ்த்துகள் பகிர்வுக்கு..

இராஜராஜேஸ்வரி said...

ஹிந்தி கற்றுக்கொள்ளாதது மிகப் பெரிய இழப்பாக தோன்றுகிறது...

இந்தி எதிர்ப்புப் போராட்ட ஊர்வலத்தில் வேறு கட்டாயப்படுத்தி மாணவ மாணவிகளை ஊர்வலத்தில் கலந்து கொள்ளச்செய்தார்கள்..

cheena (சீனா) said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும் நன்றி இராஜ இராஜேஸ்வரி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா