ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday 3 June 2008

வைகையில் வந்திறங்கிய வள்ளல் அழகர்

ஐயிரண்டு அவதாரம் அவணியில் எடுத்த

அழகரவர் ஆடிவருவார் !

அரிதாரம் பூசிவரும் அன்பர்களின்

கூட்டத்திலே அழகரவர் ஆடிவருவார் !நான்மாடக் கூடலிலே திருமணமாம் !

நாள்தோறும் வீதியிலே தேர்வருமாம் !

அழகர்மலை அழகனவன் சீர்வருமாம் !

அதைக்காண கோடிசனம் ஊர்வருமாம் !வாராறு வாராறு மலையை விட்டு

வாராறு வாராறு அழகரவர் வாராறு !தங்கையவள் திருமணத்தை

தமையனவர் நடத்திவைக்க

தங்கக்குதிரையிலே வாராறு !

அடவாராறு அழகரவர் ! வாராறு !சித்திரையில் வைகறையில்

வைகைநதி பொன்கரையில்

பொற்பாதம் நனைக்க வாராறு !

அடவாராறு அழகரவர் ! வாராறு !தீவினைகள் அத்தனையும்

தீர்த்துவைக்க அழகரவர்

தீர்த்தங்கள் கொண்டு வாராறு !

அடவாராறு அழகரவர் !

வாராறு ! வாராறு !


http://www.imeem.com/people/opAOIMP/music/Epo8etQv/cheena3wave/

சீனா .... (Cheena)----------------------37 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

முதலில் ஆரம்பம் ஒருமாதிரி இருந்தாலும், பின்னாடி ஒரு பிடி பிடிச்சுட்டீங்க சீனா சார்

வாராரு, ஆஹா வாராரு
அழகரவர் வாராரு
வாராரு எங்க சீனா-வாராரு, பாடலுடன் வாராரு
எம்பெருமான பாடிக்கிட்டு வாராரு
ஹே ஹே வாராரு, சீனா வாராரு.

கலக்கல்...

மிகுந்த ஆர்வத்துடன் நீங்க இவ்வளவு முயற்சி எடுத்து பாடி, பதிவு செய்து, அப்லோட் செய்தது எல்லாம் என் போன்றவர்களுக்கு மிக பெரிய கிரியா ஊக்கி..

மிக்க நன்றி சீனா சார்.

cheena (சீனா) said...

மௌளி

ஊக்கம்தாங்க உடைமை - தெரியாமயா வள்ளுவர் இந்த அழுத்தம் கொடுத்துச் சொல்லி இருப்பாரு !!

ஊக்கம் உடைமை உடைமை - மற்றதெல்லாம் இதன் பின்னே தான் என்கிறார்.

நன்றி மதுரையம்பதி

ஆயில்யன் said...

//மிகுந்த ஆர்வத்துடன் நீங்க இவ்வளவு முயற்சி எடுத்து பாடி, பதிவு செய்து, அப்லோட் செய்தது எல்லாம் என் போன்றவர்களுக்கு மிக பெரிய கிரியா ஊக்கி..//
ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))

S.Muruganandam said...

கலக்கிட்டாரு கலக்கிடாரு சீனா ஐயா கலகிட்டாரு

என்னங்கோ வைகையையா?

இல்லீங்கோ பாட்டுல.

நன்றி சீனா சார்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ வாராரு அட வாராரு ன்னு குஷியாத்தான் பாடி பதிவு செய்திருக்கீங்க.. ஆரம்பத்துல தயக்கமா பாடினீங்க போல..

எம்பெட் செய்திருந்தாஇங்கயே கேட்டிருக்கலாமே...

குமரன் (Kumaran) said...

பாடித் தந்ததற்கு நன்றிகள் சீனா ஐயா. உங்கள் குரலையும் இப்போது கேட்டு மகிழ்ந்தேன். நல்ல அழுத்தமான பலுக்கல்கள். :-)

cheena (சீனா) said...

ஆயில்யன் - நன்றி - ரிப்பீட்டிற்கு

cheena (சீனா) said...

நன்றி கைலாஷி வருகைக்கும் கருத்துக்கும்

cheena (சீனா) said...

முத்துலட்சுமி- எம்பெட் செய்வது பற்றித் தெரிய வில்லை - விளக்கினால் நலமாக இருக்கும்.

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

cheena (சீனா) said...

நன்றி குமரன் - வருகைக்கும் கருத்துக்கும்

சதங்கா (Sathanga) said...

உங்கள் ஈடுபாட்டுக்கும், சரியான உச்சரிப்புக்கு கொடுத்த முக்கியத்துவத்துக்கும் வாழ்த்துக்கள் ஐயா

cheena (சீனா) said...

முத்துலட்சுமி

எம்பெட் செய்து விட்டேன் - சதங்காவிற்கு நன்றி - உதவியதற்கு

cheena (சீனா) said...

சதங்கா

உச்சரிப்பு என் உடன் பிறந்தது

நன்றி சதங்கா

எம்பெட் செய்ய உதவியதற்கு

நிஜமா நல்லவன் said...

உள்ளேன் ஐயா!

நிஜமா நல்லவன் said...

இருங்க பதிவ பார்த்துட்டு வர்றேன்.

நிஜமா நல்லவன் said...

உயிர் உரசும் ஒலி உற்சவம்(இது உங்க பதிவு படிச்சப்போ ஆஹா எப் எம் ல சொன்னது)

cheena (சீனா) said...

வருகைப் பதிவிற்கு நன்றி பாரதி

cheena (சீனா) said...

பதிவப் பாக்காமலேயே பின்னூட்டமா

நிஜமா நல்லவன் said...

//மிகுந்த ஆர்வத்துடன் நீங்க இவ்வளவு முயற்சி எடுத்து பாடி, பதிவு செய்து, அப்லோட் செய்தது எல்லாம் என் போன்றவர்களுக்கு மிக பெரிய கிரியா ஊக்கி..//
ரீப்பிட்டேய் :))

cheena (சீனா) said...

உயிர் உரசும் ஒலி உற்சவம் - நன்றி நன்று

பாரதி

நிஜமா நல்லவன் said...

பதிவு பார்த்துட்டு தான் இருக்கேன்.

cheena (சீனா) said...

பதிவெப் பாத்தது போதும். கருத்துச் சொல்லுப்பா

நிஜமா நல்லவன் said...

யூ ட்யுப் கொஞ்சம் சொதப்பிடுச்சி. அதான் கொஞ்சம் லேட்.

cheena (சீனா) said...

ரிப்பீட்டுப் போடுறது ரொம்ப ஈசியாச்சே

நிஜமா நல்லவன் said...

ரியலி சூப்பர்ப்! கலக்குறீங்க சீனா சார்.

நிஜமா நல்லவன் said...

கூட்டத்திலே அழகரவர் ஆடிவருவார்!
பதிவுகளிலே சீனா சார் பாடிவருவார்!

நிஜமா நல்லவன் said...

நாள்தோறும் வீதியிலே தேர்வருமாம் !
மறுநாளே அசைபோட்டு பதிவு வருமாம்!

cheena (சீனா) said...

நிஜமா நல்லவனே !!

யூ டியூப் சொதப்பல் எல்லாம் வேணாம் - சரி பண்ணிப் பாக்கண்ணும் - ஆமா

cheena (சீனா) said...

அட நிஜமா நல்லவன் நல்லாவே பாட்டு எழுதுறாரே !!

நல்லாத் தான் இருக்கு

ஆமா இதையும் பாடி ஒலி வடிவத்தில் அனுப்ப வேண்டியது தானே !!

சதங்கா (Sathanga) said...

சீனா ஐயா,

எதுக்கு இத்தன தடவ நன்றி ?? அப்புறம் அடுத்த தடவ எதுவும் சொல்ல மாட்டேன் !!! :)

நிஜமா நல்லவனின் வரிகளும், மக்கள்ஸின் மறுமொழிகளும் பதிவுக்கு மெருகு சேர்க்கின்றன. சூப்பர்.

இராம்/Raam said...

திருவிழா'க்கு வந்தப்போ இந்த பாட்டை டிவி'லே பார்த்தேன்.. ரொம்ப நல்லாயிருந்துச்சு....


உங்களுடைய வாசிப்பும் நல்லாதான் இருக்கு..... :)

cheena (சீனா) said...

சதங்கா

நன்றி சொல்லலே - கருத்தும் வருகையும் மகிழ்வைத் தருகின்றன

cheena (சீனா) said...

நண்பர் ராம்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராம்

மங்களூர் சிவா said...

வாவ் சூப்பர் முயற்சி!
வாழ்த்துக்கள் சீனா சார்!!

cheena (சீனா) said...

அப்பாடா - சிவாவுக்கு இப்பதான் வழி தெரிஞ்சிருக்கு - வாப்பா இனிமே ஒழுங்கா ரெகுலரா

Sanjai Gandhi said...

சூப்பரு... ரொம்ப அழகா இருக்கு... யூட்யூப்ல வெரும் காட்சிகள் தான் இருக்கும்னு நெனைச்சி இமீம்ல போய் கேட்டேன். பிறகு இதையும் பார்த்தேன்.. அட.. எவ்ளோ ஆர்வம்... உங்க வேலை பத்தி எனக்கு தெரியும். அதற்கு மத்தியில் இதர்கு எப்படி தான் நேரம் கிடைக்குதோ.. என்னை போன்ற சோம்பேறிகள் உங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கு.
வாழ்த்துக்கள்.. தொடரட்டும்..

cheena (சீனா) said...

சஞ்செய்

மொதல்லே பாட்டு பதிவாப் போட்டேன். மக்கள்ஸ் பாடச் சொல்லி வற்புறுத்துனாங்க - ஆச யாரெ விட்டது - பாடிட்டேன் - ஹா ஹா ஹா
அப்புறம் வேற என்ன வேலை - போட்டுட்டேன் அவ்ளோ தான்