அருமை நண்பர் சதங்கா மா உருண்டை எப்படிச் செய்வதென்று ஒரு பதிவு அவரது செட்டி நாட்டுக் கிச்சன் என்ற வலைப்பூவினில் போட்டிருந்தார். நானும் மாஉருண்டை செய்வதில் எங்க அம்மாவுக்கு உதவி இருக்கேன். இப்ப என்ன பண்றது - எப்படிப் பண்றதுன்னு பாக்கலாமா
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - சீனி - நெய்
செய்முறை :
பாசிப்பருப்பையும் சீனியையும் மிஷினில் கொடுத்து அரைத்து வாங்கணும் - அப்பல்லாம் வீட்லெ மிக்ஸி எல்லாம் இல்லீங்கோ - மிஷின் காரன் சீனி பிளேட்ல ஒட்டிக்கும் - அதனாலே இப்ப அரைக்க முடியாது - கடசியா கட மூடும் போது அரைச்சுத் தரேன்னு சொல்லுவான் - சாயந்திரமா போய் காத்துக்கிட்டுருந்து அரைச்சுக்கிட்டு வரணும்.
அடுப்புலெ சட்டிய வச்சி - நெய் ஊத்தி காய வைக்கணும். இளஞ்சூடா இருக்கற நெய்யே எடுத்து அப்படியே மாவுலே ஒரு கரண்டி ஊத்தி - மாவையும் நெய்யெயும் சேத்து பதமா உருட்டி - மாவு உருண்டைக் கிண்ணம்னு ஒண்ணு இருக்கும் - சின்னதா அழகா - அதுலே வச்சி அமுக்கி - கிண்ணத்தெ தலை கீழா கவுத்தா மாவுறுண்டை ரெடி. அப்புறம் சாப்பிடலாம் . செய்யும் போதே மாவை அள்ளி அள்ளித் திங்கலாம்.
இப்படியே ஒவ்வொரு கரண்டியா நெய் விட்டு மாவுருண்டை பிடிச்சி - எல்லா மாவையும் உருண்டையாச் செய்யணும். ரொம்ப நல்லா இருக்கும்.
இப்பல்லாம் தங்க்ஸுக்கு இதுல எல்லாம் நான் உதவி செய்யறதே இல்லீங்கோ - அம்மாக்கு மட்டும் பட்டப்படிப்பு முதல் வருடம் படிச்சப்போ உதவி பண்ணுனதுங்கோ - ( அள்ளித் திண்ணது தான் ஜாஸ்தி - மெஷினுக்குப் போய் கால் கடுக்க நின்னு அரைச்சிட்டு வந்தேன்ல )
வர்ட்டா - நாளைக்குப் பாக்கலாம்
34 comments:
மா உர்ண்டை பிடிக்கக் கத்துக் கொடுத்துட்டேன்ல - செஞ்சு சாப்பிடுங்க
செஞ்சுறலாமுன்னு பார்த்தா......
இங்கே மாவு மில் இல்லை(-:
மீ த ஃபர்ஷ்ட்டுடுடுடுடுடு :))
ஆஹா மா உருண்டை ரவுண்டு கட்டி உருட்டிருக்கேன்னு சொல்லுங்க.
//மாவு உருண்டைக் கிண்ணம்னு ஒண்ணு இருக்கும் - சின்னதா அழகா - அதுலே வச்சி அமுக்கி - கிண்ணத்தெ தலை கீழா கவுத்தா மாவுறுண்டை ரெடி.//
அட அப்படியா? சூட்டில் உருண்டை பிடிக்கும் முன் கையெல்லாம் சிவந்து போகும்.[ஆகையால் இப்பவும் அம்மாதான் ஊரிலிருந்து வருகையில் செய்து எடுத்து வருவார்கள்:)!] எங்கு கிடைக்கும் இந்த கிண்ணம்? மா உருண்டையாக வருமா அல்லது அரை உருண்டை போல இருக்குமா?
// செய்யும் போதே மாவை அள்ளி அள்ளித் திங்கலாம்.//
இது நல்ல குறிப்பு:))! நன்றி:))!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இதுக்கு பேரு "உக்காரை" ன்னும் சொல்வாங்களா?
அய்யே துளசி - மாவு மில் இல்லன்னா - மிஸி - அப்புறம் அங்கே திருகை எல்லாம் இல்லியா - நொண்டிச் சாக்கேல்லாம் சொல்லப்படாது. வல்லவளுக்கு புல்லும் ஆயுதம் இல்லையா
சதங்கா - யூ த செகெண்டு
ஆமா சதங்கா - உர்ட்டன உருட்டு நானும் உருட்டிட்டேனே
ராமலக்ஷ்மி - சூடா நெய்யே ஊத்தப்டாது - இளம் சூட்டில் கை தாங்கக்கூடிய அளவில் ஊற்றி பிடிக்கணும் - எங்கம்மா எத்தனி வருசம் பிடிச்சித்ட் தந்தாங்க - நானும்ம் திண்ணுருக்கேன் - எனக்கும் செவக்கலே - அம்மாக்கும் செவக்க்கலே
அரை உரூண்டையா வரும் - படம் எடுத்துப் போட முயற்சி பண்றேன்.
நந்து - உக்காரையா - தெரியலேயே
:)
//சூட்டில் உருண்டை பிடிக்கும் முன் கையெல்லாம் சிவந்து போகும்.//
எங்களுக்கு திருமணமான புதிதில், இளஞ்சூடா வைக்கணும் என்கிற ட்ரிக் தங்க்ஸ்க்கு தெரியாது, வம்பா நான் தான் உருட்டித் தர்றேனு, கை சிவந்து, முகம் கறுத்து நிற்பேன் :))))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தூயா
ஆகா சதங்கா - கை சிவந்து முகம் கறுத்ததா ? பாவமே ! - உதவி செய்யப்போய் - அதுவும் தங்க்ஸூக்கு - முகத்தினைக் கறுப்பாக்கிக் கொண்டீர்களே !
பாவம் சதங்கா
ஆகா சதங்கா - கை சிவந்து முகம் கறுத்ததா ? பாவமே ! - உதவி செய்யப்போய் - அதுவும் தங்க்ஸூக்கு - முகத்தினைக் கறுப்பாக்கிக் கொண்டீர்களே !
பாவம் சதங்கா
சரி நானும் செஞ்சு பாத்துடறேன்...னு பின்னூட்டம் போட வந்தேன்.
பாசிப்பருப்பு, சீனி, நெய்க்கு அளவு சொல்லாததால், உருண்டை செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஹிஹி...
ஆமா, இந்த "மாவு உருண்டைக் கிண்ணம்" மருதையுலே மட்டும் தான் கிடைக்கு"மா"?
சதங்கா அப்படியெல்லாம் உதவி உதவித்தான் இன்று எக்ஸ்பெர்ட் ஆகி, ”செட்டிநாடு கிட்சன்” ஆரம்பித்துப் போடு போடு என்று போடுகிறார்:))!
துளசி மேடம் சொல்ற மாதிரி இதற்கு மாவு மில்லில் திரித்து வாங்கினால்தான் நன்றாக இருக்குமோ? மிக்ஸியில் அத்தனை நைஸா திரியுதா பார்க்கலாம். முயற்சியில் மிக்ஸிக்கு ஏதாவது ஆனால் ரிப்பேர் பில்லை ஐடியா கொடுத்த சதங்காவுக்கே நாம் அனுப்பிடலாமா:)?
கெக்கே பிக்குணி
அளவு - பாசிப்பருப்பும் சீனியும் ஒரே அளவு எடுத்துக்கணும். நெய் மாவுலே ஊத்தி உருட்டற வரைக்கும் இருக்கணும் - மிச்ச மிருந்தா மல்லீப்பூ இட்லிலே ஊத்திக்கலாம் - பச்சரிச்சாதத்துலே ஊத்தலாம் - பொங்கல்லே ஊத்தலாம் - அப்புறம் கொழுப்பு ஏறிச்சுன்னா என் கிட்டே வராதீங்க - ஆமா சொல்லிப்புட்டேன்
மாஉருண்டைக் கிண்ணம் எல்லா ஊர்லேயும் கிடைக்குமுங்க - இல்லேன்னா எந்தக் கிண்ணத்துலேயும் வச்சி அமுக்க வேண்டியது தான். கெக்கே பிக்குணி சேரியா
ராம லக்ஷ்மி - இப்படி எல்லாம் சாக்கு போக்கு சொல்லக் கூடாது - ஆமா - மாவு மில்லு இல்லன்னா மிக்ஸி - இல்லன்னா - திரிகை - இல்லன்னா உலக்க உரலு - ம்ம்ம்ம் பாத்துப்பண்ணுங்க ஆமா - சதங்காவுக்கு ஏதுக்கு பில் அனுப்பறீங்க - பாவம் அவரு என்ன பண்ணாரு ? கை சிவந்து முகம் கருத்து ...... பாவம் சதங்கா
மாவு உருண்டைக் கிண்ணம் புது விஷயமாக இருக்கிரதே..
அன்பின் பாசமலர்,
மாஉருண்டைக் கிண்ணம் என்று ஒன்று ஸ்பெஷலாக இல்லை - அது ஒரு சிறு கிண்ணம். பித்தளை / செம்ப்பில் செய்யப்பட்டிருக்கும். எங்கள் வீட்டுப் பெண்களுக்கு சீர் கொடுக்கும் போது இதுவும் கொடுக்கப்படும். ஆனால் இந்தத் தலைமுறையினர் எங்கு இதை எல்லாம் பயன் படுத்துகின்றனர்.
மகாராஷ்ட்ராவில் சின்னதாக் கைப்பிடி உள்ள கரண்டி (அழகா டிஸைன் போட்டுருக்கும்) கிடைக்குது பிரசாதமா ஹல்வா விநியோகிக்கன்னே. அதுலே அந்த ஹல்வா(இது நம்ம கேசரிதான் வேற புதுசா ஒன்னும் இல்லை)வை அமுக்கி திருப்பித் தட்டுலே தட்டுனா டிசைனோட கப்கேக் மாதிரி விழும். இதையே அந்த மாவு உருண்டைக்கும் வச்சுக்கலாம்.
அப்படி இதுக்காக மகாராஷ்ட்ரா போகவேணாமுன்னு இருந்தால்..... இருக்கவே இருக்குக் குழம்புக் கரண்டி:-))))))
ஆகா - துளசி - பலநாடுகள் - பல் ஊர்கள் - எங்கெங்கு என்ன என்ன பிரசித்தம் - என்ன என்ன கிடைக்கும் - அத்தனையும் நினைவில் வைத்து ஆங்காங்கே மறு மொழி இடுவதில் சிறந்தவர். நினவாற்றல் அபாரம். ஒண்ணும் இல்லன்னா இருக்கவே இருக்கு வூட்லே இருக்கற சின்னச் சின்னக் கிண்ணங்கள் - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
எனக்கும் கை சிவக்கும் சீனா!!!பொறுக்குற சூட்டில் பிடிப்பேன். அதுக்கு முன் கொதிக்கும் நெய்யைத்தான் ஊத்துவோம். ஊத்தி கிளறி பிறகு பிடிக்கலாம். ஆ...மா? இந்த உருண்டை பிடிக்க உன்னைப் பிடி என்னைப் பிடின்னு இத்தனை பாடா?
சீனா சார் எப்போதிருந்து கிச்சனுக்குள்
என்ரி ஆனார்? தங்ஸ் அனுமதி உண்டா? அடுத்து கலக்கப் போவது, கிண்டப் போவது, கிளறப் போவது என்னவோ? நா..நானானி வந்திருக்கேன்னு வெயிட்டிங்.
அன்பின் நானானி,
வருகைக்கு நன்றி
மாவுச் சட்டியில் - மாவின் நடுவில் கரண்டியால் நெய் ஊற்றி - அந்த மாவினை மட்டும் ஒரு உருண்டைக்காக - உருட்டி கிண்ணத்தில அடைத்து தலை கீழாக கவிழ்த்து ஒரு தட்டு தட்டி செய்தித் தாளில் வரிசையாக அடுக்கலாம்.
ஆமா நான் எண்ட்ரி ஆகலே - தங்க்ஸுக்கு பிடிக்காது - நானும் போக மாட்டேன். இது எங்கம்மா எங்கம்ம்மாவுக்கு உதவி செஞ்சது - ஆமா
நானானி - வருக வருக - கலக்குக - கிண்டுக - கிளறுக
அடுத்து நீங்க கிண்டி,கிளறி தட்டில் போடுவதற்காக, 'நா.. மாது வந்திருக்கேன்' ஸ்டைலில் நாஞ்சொன்னது. சேரியா?
எங்க பக்கத்துவீட்டு Boony வந்ததும் கோபால் இப்படிக் குரல் கொடுப்பார் 'நான் பூனி வந்துருக்கேன்'னு:-)))))
Cat food தட்டை எடுத்து வெளியில் வைக்கவேண்டியது என் வேலை. feeding time!!!
நானானி - ஓஒ - சாப்பிடத்தான் வந்தீகளா - வாங்க வாங்க - அன்பா கிண்டி கிளறி தலை வாழை இலை போட்டு பதினாறு வகையோட முழு விருந்தே போட்டுடுவோம். நா நானானி வந்துருக்கேன் - சூப்பர் வசனம் - எதிர் நீச்சல் போடக் கத்துக் கொடுத்த படத்தின் வசனம்
எதுவுமே துளசி வந்து சொனாத்தான் முழுமை அடைகிறது - எதை எழுதினாலும் அங்கு துளசியின் கருத்து இருக்கும். பூனை யானை எல்லாம் துளசியின் தாயன்பின் தயவுதான்
மாவுருண்டை செய்தது இல்லை, கெட்டி உருண்டை கிட்டதட்ட இதே போன்று தான், நெய்க்கு பதிலாக வெல்லப்பாகு, ஏலக்காய், வதக்கிய தேங்காய்பற்கள் போட்டு உருண்டையாக பிடிப்பார்கள். கடிக்க முடியாது. இப்ப கூட கைவசம் வச்சி கடிச்சிக்கிட்டு தான் இருக்கேன்.
நண்ப கோவி,
கடிச்ச்சாப் பத்தாது - ஒரு நாலஞ்சு பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
ஆஹ்... மாவுருண்டையின் ருசியே தனி...
Post a Comment