ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Saturday 6 September 2008

மதுரை மாநகரில் அன்பர்கள் - பதிவர்கள் சந்திப்பு

அன்பின் சக பதிவர்களே

கடந்த வியாழனன்று, செப்டம்பர்த் திங்கள் நான்காம் நாள், மதுரை மாநகரில், அண்ணா நகரில், ஒரு புதுமனை புகு விழாவில், நடை பெற்ற ஒரு மாபெறும் பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு இது.

மதுரையில் வசிக்கும் சீனா ( யாருப்பா அது ?) , செல்வி ஷங்கர் ( இது யாரு ?), புது வண்டு, நாடிக்கண்ணா, சிவமுருகன், நிலா, நந்து ஆகிய பதிவர்களும் மற்றும் நண்பர்களும் ( இவங்க எல்லாம் யாரு - பதிவர் ஆகப் போறாங்களா ? ) இனிய காலைப் பொழுதில் 11 மணி அளவில் சந்தித்தனர்.

சிவ முருகன் சற்றே தயக்கத்துடன் இருந்த படியாலும் (Reserved Type in first time meeting) - முன் அறிமுகம் இல்லாத படியாலும் அதிகம் பேசவில்லை. அவரது எழுத்துகள் பேசுமளவுக்கு அவர் பேச வில்லை. பொறுமையின் சிகரம். உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர்து பதிவுகளைப் பற்றிய பேச்சு வந்த போது கலந்து கொண்டார்.

புது வண்டு, சீனா, செல்வி ஷங்கர், நந்து - இவர்கள் வழக்கம் போல் அதிகம் பேசினர். நந்து திறந்த வாய் மூட வில்லை. புகைப்படக் கருவியை இயக்குவது எப்படி என்று அவரது நிக்கான் கருவியினை இயக்கி - ஒரு சிறு பூவினை எப்படி படம் எடுக்க வேண்டுமென தரையில் முழங்காலிட்டு குனிந்து கருவியைத் தரையில் வைத்து நேரிடையாகவே கற்றுக் கொடுத்தார். ( பெரிய புகைப்பட நிபுனர் என நினைப்பு - ஒரு தடவை PIT ல் பரிசு வாங்கி விட்டார் என நினைக்கிறேன்)

புது வண்டின் மழலைகளுக்கான கதைகள் பற்றி நிலாவும் நந்துவும் பேசினர். குழந்தைகள் அதிகம் விரும்புவதாக அனைவரும் கூறினர்.

அருமையான மதிய விருந்துடன் சந்திப்பு இனிதே முடிந்தது.

ஆமா வலைப்பதிவர்கள் சந்திப்பு என்றால் என்ன ? அதைப்பற்றி எப்படிப் பதிவு போட வேண்டும் ? யாராவது சொல்லுங்களேன்.

நல்வாழ்த்துகளுடன் சீனா

31 comments:

cheena (சீனா) said...

சோதனை ஓட்டம்

cheena (சீனா) said...

தமிழ்மணத்தில் வர மாட்டேன் என அடம் பிடிக்கிறது

TBCD said...

பதிவர் சந்திப்பு எழுதியே பதிவர் திலகம் ஆன கோவி.கண்ணன் பதிவுகளைப் பாருங்கோ...படமில்லாமல் ஒரு பதிவர் சந்திப்பா...

படத்தைப் போடுங்கப்பா...(ஐயா...)

KARTHIK said...

// படமில்லாமல் ஒரு பதிவர் சந்திப்பா... //

??

// படத்தைப் போடுங்கப்பா...(ஐயா...)//

:-))

மங்களூர் சிவா said...

ஐயா வாழ்த்துக்கள், வணக்கங்கள்.

கலந்துகொள்ள முடியவில்லை :(

நிலா said...

//ஆமா வலைப்பதிவர்கள் சந்திப்பு என்றால் என்ன ? அதைப்பற்றி எப்படிப் பதிவு போட வேண்டும் ? யாராவது சொல்லுங்களேன்.//

இப்படித்தான்...

குமரன் (Kumaran) said...

அன்பர்கள் சந்திப்புன்னே போடுங்க ஐயா. அதுவே சரின்னு நினைக்கிறேன். நான் இதுவரைக்கும் சந்திச்ச பதிவர்கள் எல்லாரும் அன்பர்கள் தான். பதிவர்கள் சந்திப்புன்னு எதுக்கு பெரிசா பில்டப்புன்னு இது வரைக்கும் அதைப்பத்தியே எழுதலை. :-)

நிஜமா நல்லவன் said...

/நிலா said...

//ஆமா வலைப்பதிவர்கள் சந்திப்பு என்றால் என்ன ? அதைப்பற்றி எப்படிப் பதிவு போட வேண்டும் ? யாராவது சொல்லுங்களேன்.//

இப்படித்தான்.../


அட...நிலா செல்லம் சரியா தான் சொல்லி இருக்கு...:)

Thamiz Priyan said...

வலைப்பதிவர்களின் சிறந்த சந்திப்பு இது! வாழ்த்துக்கள்!

Thamiz Priyan said...

/// TBCD said...

...படமில்லாமல் ஒரு பதிவர் சந்திப்பா...

படத்தைப் போடுங்கப்பா...(ஐயா...)///
மறுக்கா கூவிக்கிற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்றேன்

சிவமுருகன் said...

//முழங்காலிட்டு குனிந்து கருவியைத் தரையில் வைத்து நேரிடையாகவே கற்றுக் கொடுத்தார்.//

இதெல்லாம் நேர்ல பார்க்க குடுத்து வச்சுருக்கனும் :-).

//திறந்த வாய் மூட வில்லை.//

இப்படி இருந்தா நான் எப்போ பேசுறது. (அப்பாடி, எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு) :-).

//ஆமா வலைப்பதிவர்கள் சந்திப்பு என்றால் என்ன ? அதைப்பற்றி எப்படிப் பதிவு போட வேண்டும் ? யாராவது சொல்லுங்களேன்//

சந்திப்பிற்க்கு நடுவில் எங்கள் வீட்டு புதுமனை புகுவிழாவும் நடந்து விட்டது என்று முடிக்க வேண்டும், அது தான் பதிவர் சந்திப்பு ஒரிருவர் எழுதியுள்ளனர்.

நாலுபேர் சந்தித்து கொண்டாலும் நாலாயிரம் பேர் இருந்திருப்போங்கற தோணியில பதிக்கனும், வேணும்னா ஒருவர் ஆயிரம் பேருக்கு சமம்ன்னு ஒரு ’திஸ்கி’ போட்டுக்கலாம் :-).

சிவமுருகன் said...

அதோட, நம்ம நந்து வைகையில இருந்த ஒரு நாயை படமாக்கினார்! அதுவும் சூப்பர் படம்! முடிஞ்சா பதிவேற்றுங்க! :-)

Sanjai Gandhi said...

//நிலாவும் நந்துவும் பேசினர்//
ஓ.. இப்போ இவளும் இதெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாளா? நல்லது.. நடக்கட்டும்.. :))

NewBee said...

ஆமா! ஆமா! நானும் இருந்தேன் :)
என் முதல், பதிவர் சந்திப்பு :)

நிலாக்குட்டி, படங்களில் பார்த்த மெதிரியே very expressive :)

//ஆமா வலைப்பதிவர்கள் சந்திப்பு என்றால் என்ன ? அதைப்பற்றி எப்படிப் பதிவு போட வேண்டும் ? யாராவது சொல்லுங்களேன்//

எனக்குத் தெரியாதே :(

சிவமுருகன், நந்து, நிலா, நிலா அம்மா, சீனா சார், செல்வி அம்மா..அனைவரையும் நேரில் சந்தித்ததில் மிக மிக மகிழ்ச்சி :))) ... ;)

Sanjai Gandhi said...

//சீனா சார், செல்வி அம்மா..அனைவரையும் நேரில் சந்தித்ததில் //

கொஞ்சம் ஓவராத்தான் போறாங்கப்பா.. :P

சிவமுருகன் said...

////சீனா சார், செல்வி அம்மா..அனைவரையும் நேரில் சந்தித்ததில் //

கொஞ்சம் ஓவராத்தான் போறாங்கப்பா.. :P//

வழிமொழிந்து கொள்கிறேன்.

tamilraja said...

இதை படிக்கும் பொது நம்மால் kalanthu கொள்ள முடிய வில்லையே என்று மனம் வருந்துகிறது அடுத்தமுறை முடிந்தால் கலந்து கொள்கிறேன் நானும் மதுரைக்காரன்தான் கே.புதூர்.சினிமாத்துறையில் இருக்கிறேன் நன்றி!
என் வலைபூ www.tamilraja.tk

புகழன் said...

அன்று நானும் மதுரையில்தான் இருந்தேன்.
இது போன்ற பதிவர் சந்திப்புகளில் கலந்து கொள்ள ஆசைதான்.
ஆனால் பதிவர்களில் ஒருவரைக்கூட இதுவரை சந்தித்ததில்லை.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிபிசிடி = படம் தானே போட்டுடலாமே

cheena (சீனா) said...

கார்த்திக்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் சிவா

வாழ்த்துகளுக்கு நன்றி

வீட்டில் மனைவி உட்பட அனைவரும் நலம் தானே

cheena (சீனா) said...

ஆகா நிலாச்செல்லம் பதிவு போடச் சொல்லிக் குடுக்கறியா - வெரி குட் வெரி குட் -

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமரன்
அன்பர்கள் சந்திப்பென்று கூடக் கூறலாம்

cheena (சீனா) said...

ஹேய் நி.ந - வருகைக்கு நன்றி

cheena (சீனா) said...

தமிழ் பிரியன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - படம் தானே - போட்டுடுவோம்

cheena (சீனா) said...

ஆகா சிவ முருகன் - நந்து படம் எடுத்ததை ரசிச்ச ஆளு தானே நீ - சரி சரி ஒரு டிஸ்கி வேறயா ? புதுமனை புகுவைழா சிறப்புற நடந்தது சந்திப்பின் நடுவே ....

பதிவுலே போடறமோ இல்லையோ மறுமொழியிலே போட்டாச்சு

cheena (சீனா) said...

ஹ்ஹேய் சிவ முருகன் - வைகை - நாய் - படம் தனி மடல்லே அனுப்பறேன் - இங்கே போடணும்னாலும் போட்டுடுவோம்ல

cheena (சீனா) said...

ஹேய் சஞ்செய்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

ஹேய் புது வண்டு அழகா மறுமொழி சொல்றே - பின்னாலே பாரு - சஞ்செய் தமிழ் பிரியன் எல்லாம் ஓவர் பில்டப் சொல்றாங்க

cheena (சீனா) said...

வருகைஇகும் கருத்துக்கும் நன்றி நியூ சினிமா - புகழன்

சிவா சின்னப்பொடி said...

பாராட்டுக்கள்
http://sivasinnapodi1955.blogspot.com/