ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Thursday, 24 January 2008

இது மொக்கையா - இல்லை

வாழ்க்கை :
------------

வாழ்க்கை ஒரு கடமை என்றால் அதை நீ நிறைவேற்று
வாழ்க்கை ஒரு விளையாட்டென்றால் அதை நீ விளையாடு
வாழ்க்கை ஒரு ஆனந்தம் என்றால் அதை நீ அனுபவி
வாழ்க்கை ஒரு சோதனை என்றால் அதை நீ சமாளி
வாழ்க்கை ஒரு சோகம் என்றால் அதை நீ எதிர்த்து நில்
வாழ்க்கை ஒரு புதிர் என்றால் அதை நீ விடுவி
வாழ்க்கை ஒரு போராட்டம் என்றால் அதனுடன் நீ போராடு
வாழ்க்கை ஒரு சவால் என்றால் அதை நீ சந்தி
வாழ்க்கை ஒரு அன்பு என்றால் அதில் நீ இன்பம் காண்
வாழ்க்கை ஒரு கனவென்றால் அதை நீ நனவாக்கு
வாழ்க்கை ஒரு அழகென்றால் அதை நீ ரசி
வாழ்க்கை ஒரு சத்தியம் என்றால் அதை நீ கடைப்பிடி
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் என்றால் அதை நீ பயன்படுத்து
வாழ்க்கை என்பது கற்றுக்கொடுத்து வருபதல்ல
வாழ்க்கை என்பது வாழ்ந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்

28 comments:

cheena (சீனா) said...

சோதனை மறு மொழி

SP.VR. SUBBIAH said...

//வாழ்க்கை என்பது கற்றுக்கொடுத்து வருபதல்ல
வாழ்க்கை என்பது வாழ்ந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்//
u
உண்மைதான்! சிறந்த வரிகள் மிஸ்டர் சீனா!

சின்னப் பையன் said...

இதைப் பார்க்கும்போது எப்போதோ பார்த்த ஒரு நகைச்சுவைக் காட்சி நினைவுக்கு வருகிறது.
ஒரு மளிகைக் கடைக்காரர் காதல் கவிதை எழுதுவார் -
நீ ஒரு மல்லி - உன் அம்மாதான் எனக்கு வில்லி
நீ ஒரு தனியா - .......
இப்படியே சொல்லிக்கொண்டே போவார்.....:-)

ரசிகன் said...

அட..சீனா சார்..சொன்ன எல்லாமே வாழ்க்கைக்கு பொருத்தமா இருக்கே....
வாழ்க்கை..என்பது ஒரு ஆனந்த விளையாட்டு,சோகப் போராட்டம்,புதிரான அன்பு,சத்திய கடமை,அழகு சவால்,சந்தர்பக் கனவு...
ஆக மொத்தமா நாம...அதை ரசிச்சு அனுபவிச்சு,எதிர்த்துப் போராடி ,விளையாடி விடுவித்து,சந்தித்து இன்பம் கண்டு நனவாக்கி,கடைபிடிச்சு பயன்படுத்தனுங்கறிங்க,... கொஞ்சம் கஷ்டமான அட்வைஸ் தான் டிரைப் பண்ணி பாக்கறோம்ங்க சார்..

ரசிகன் said...

//வாழ்க்கை என்பது கற்றுக்கொடுத்து வருபதல்ல
வாழ்க்கை என்பது வாழ்ந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும//

இது சும்மா நச்சின்னு இருக்குங்க சார்..
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்........

cheena (சீனா) said...

நண்பர் சுப்பையா அவர்களே = வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

cheena (சீனா) said...

ச்சின்னப் பையன், வருகைக்கும் நகைச்சுவைக்கும் நன்றி

cheena (சீனா) said...

ரசிகன், வாழ்க்கையை சரியாக இதுவரை யாருமே Define செய்ய வில்லை. அவரவர் கோணத்தில் அனுகுகிறார்கள். அவ்வளவு தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown said...

கடைசி வரி அருமை!

இது மொக்கையா?? என்னங்க வெளயாடுறீங்களா?? :)

cheena (சீனா) said...

தஞ்சாவூர் ராசா - இது மொக்கையா - தெரியாது - இல்லன்னு சொன்னா சந்தோஷம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மெளலி (மதுரையம்பதி) said...

//வாழ்க்கை என்பது கற்றுக்கொடுத்து வருபதல்ல
வாழ்க்கை என்பது வாழ்ந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்//

மகா வாக்கியம். நன்றி சீனா சார்.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரையம்பதி - மௌளீ

கானா பிரபா said...

நல்ல சிந்தனை மொழிகள், நன்றி சீனா சார்

cheena (சீனா) said...

வருக வருக கானா பிரபா - முதல் வருகையா - நன்றி -

பாச மலர் / Paasa Malar said...

நல்ல வரிகள் சீனா சார்..கடைசி வரிகள்தான் உண்மையான உண்மை.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாச மலர்

காட்டாறு said...

இது மொக்கையா - இல்லைன்னு சொன்னதால தப்பிச்சிங்க. ஏற்கனெவே மொக்கைன்னா என்னான்னு தெரியாம திணறிகிட்டு இருக்கேன். ;-)

cheena (சீனா) said...

காட்டாறு - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - மொக்கன்னா என்னன்ன்ன்ன்னு எனக்கெ தெரியலெ இன்னும்

துளசி கோபால் said...

என்ன...........வெள்ளாடுறீங்களா?
இதா மொக்கை?

ஊஹூம்ம்ம்ம்ம்ம்

cheena (சீனா) said...

ஏனுங்கோ துளசி,அதான் மொக்கெ இல்ல இல்ல இல்லன்னு தலைப்பிலேயே சொல்லி இருக்கேனே !! அப்புறம் ஏங்க கோச்சுக்கிறீங்க .

Asiya Omar said...

http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.

Kavinaya said...

எல்லாமே சரிதான். நன்றாகச் சொன்னீர்கள் :)

வெற்றிவேல் said...

இது மொக்கை இல்லை...

வாழ்க்கை... அழகு...

இளமதி said...

வணக்கம் ஐயா!

வாழ்கை என்பது நல்வரமாம்
வாழ்ந்திட்டால் அது நம்வசமாம்!.

வாழ்க்கை பற்றி அழகிய வரிகள்ஐயா!

அருமை. ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

அன்பின் ஆசியா உமர் - வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கவிநயா - வரவிற்கும் கருத்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் இரவின் புன்னகை - வரவிற்கும் கருத்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் இளமதி - வரவிற்கும் கருத்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா