ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 27 January 2008

வலைப் பதிவர் மாநாடு.

மதுரையில் ஒரு பிரமாண்டமான வலைப் பதிவர் மாநாடு.

சர்வசித்து ஆண்டு தைத்திங்கள் 12 மற்றும் 13ம் நாட்களில் மதுரையில் ஆரப்பாளையம், டி.டி. சாலை, 69ம் எண்ணுள்ள சிவபாக்கியம் திருமண மகாலில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகள், மங்களூர் சிவாவின் தலைமையில், அவருடைய கடும் உழைப்பின் பேராலும், பெரும் முயற்சிகளாலும் அமர்க்களமாக, செய்யப்பட்டிருந்தன.

வலைப்பதிவர்கள் 5 பேர் ( 5000 பேருக்குச் சமம்) சந்தித்தனர். சீனா, அவரது மறு பாதி ( வேற யாருங்க என் துணைவி, மனைவி தானுங்க), மங்களூர் சிவா, நிலாக்குட்டி, நந்து ( இவரு நிலாக்குட்டியோட அப்பாங்க) சந்திச்சாங்க. முக்கிய பார்வையாளரா நிலா அம்மா, சசி வந்திருந்தாங்க. ( நந்துவுக்கு பாதுகாப்பு. அவரு மத்தவங்க ( அதாங்க பொண்ணுங்க) பின்னாடி ஜொள்ளு விட்டுட்டுப் போய்டாமெயும், அவரெ வேற யாரும் கடத்திட்டுப் போய்டாமெயும் பாத்துக்கறதுக்கு). டைட் செக்கூரிட்டிங்க. பாவம் நந்து.

முதல் நாள் மாலையில் நிலா, சசி மற்றும் நந்து வரலே. நாங்க மூணு பேரும் மாநாட்டை எப்படி வெற்றிகரமா நடத்தறதுன்னு ரூம் போட்டு, பேசித் தீர்மானிச்சோம். ராத்ரி ஹல்வா, வடை, கிச்சடி, காப்பியோட எல்லோருக்கும் அருமையான விருந்து.

இரண்டாம் நாள், வாண வேடிக்கைகளோடு, பாண்டு வாத்தியம் முழங்க மேள தாளத்துடன் மாநாடு தொடங்கியது. Full attendance ங்கோ! வாழை மரங்கள் வாசலிலே கட்டப் பட்டிருந்தன. திருமண மகால் முழுவதும் மாவிலைத் தோரணங்கள். பொதுவான வலைப் பதிவுகள், வலைப் பூக்கள், தமிழ் மணம், தேன்கூடு மற்றும் இணையம், இணையத்தில் பாதுகாப்பு பற்றி எல்லாம் விரிவாக விவாதித்தோம். சைடிலே, சிவா திருமணம் பற்றியும் பேசினோம். நாட்டிலே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே போவது பற்றி வருத்தத்துடன் விவாதித்தோம். பாவம் சிவா இல்ல, பொண்ணு கிடைக்கணுமே அதான்.

சக வலைப் பதிவர்கள் ( தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் மட்டுமே) பற்றியெல்லாம் கலாச்சிட்டு, கிண்டல் பண்ணிட்டு இருந்தோம். சிவாவோட வீக் எண்டு ஜொள்ளு பற்றி ரொம்ப நேரம் விவாதிச்சோம். நிலாக்குட்டியோட சிரிச்சி சிரிச்சிப் பேசினோம். தோழி அனுராதாவைச் சந்திக்கணும்னு முடிவு பண்ணினோம். சந்தர்ப்ப சூழ்நிலை சரியா வரலே.

அப்புறம் என்னங்க - காலை டிபன், மதிய சாப்பாடு. அவ்ளோ தான். எல்லாம் மங்களூர்க்காரரு ஏற்பாடு. காலைலே அல்வா, இட்லி, வடை, ஊத்தப்பம், பொங்கல் ( அபி அப்பா பொங்கள் இல்லீங்க), காப்பி மற்றும் குடிக்க தண்ணி. (மினரல் வாட்டர் தானுங்க). மதியம், சாப்பாடு - பாயசம், பூந்தி, தயிர் பச்சடி, ஃப்ரூட் சாலட், ( சூடா இருந்திச்சி), பருப்பு உசிலி, முட்டக்கோஸ் துவட்டல், மொச்சைக் குழம்பு, மலையாள அவியல், பருப்பு, நெய், வடை, சாதம், சாம்பார், மோர்க் குழம்பு, ரசம், தயிர் etc etc etc. எல்லா ஏற்படுகளும் சூப்பரு போங்க.

மாநாட்டைப் பயன்படுத்தி, சிவா அவங்க அண்ணணோட கல்யாணத்தேயும் இந்த நாட்களில், இதெ மண்டபத்தில் நடத்திக்கிட்டாருங்க. மாநாட்டு வேலயோட வேலயா, இருக்கற பிஸியிலே, அந்தக் கல்யாணத்திலேயும் கலந்து கிட்டோம். கல்யாணத்துலே கொடுத்த தாம்பூலப் பை கொடுத்தாங்க. அந்த செலவெ எல்லாம் மாநாட்டுச் செலவு கணக்குலே எழுதலீங்கோ!

மத்தபடி வேற ஒண்ணும் செய்திகள் இல்லங்க.

மாநாட்டை வெற்றி கரமா நடத்திக் காட்டிய எங்களுக்கு நாங்களே நன்றி தெரிவிச்சிக் கிட்டு கலஞ்சு போனோமுங்க.

அம்புட்டுத்தானுங்கோ!!

45 comments:

cheena (சீனா) said...

சோதனை மறு மொழி.

வடுவூர் குமார் said...

தொடரும் என்று நினைத்தேன்!!
:-)

cheena (சீனா) said...

எது மாநாடா - கல்யாணமா - கல்யாணம் தொடரும் சிவாவோட கல்யாணம் இன்னும் இருக்கு இல்ல

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மாநாட்டுக்கு பெயர் போன மதுரையில் மாநாடு கண்ட மாவீரர்கள் ன்னு சொல்லுங்க.... :)

ஜமாலன் said...

//வலைப்பதிவர்கள் 5 பேர் ( 5000 பேருக்குச் சமம்) சந்தித்தனர்//

ஒரு பதிவர் வந்தா ஆயிரம் பதிவர் வந்த மாதிரி......:-))))))

cheena (சீனா) said...

வாங்க முத்துலசுமி - வருகைக்கும் பட்டத்திற்கும் நன்றி.

cheena (சீனா) said...

வாங்க ஜமாலன். நன்றி கருத்துக்கும் வருகைக்கும். அடடே முன்னாடியே தோனாமப் போச்சே ! நானே போட்டிருக்கலாமே

Anonymous said...

முன்னமே சொல்லி இருந்தா மாநாட்டை கிராண்டா செஞ்சிருக்கலாம்.
ம் செலவே இல்லாத முதல் பதிவர் மாநாடு.
கல்யாண சாப்பாடு நல்லாதான் இருந்தது போல.

TBCD said...

இதுல உள்குத்து இல்லையே...

///
சர்வசித்து ஆண்டு தைத்திங்கள் 12 மற்றும் 13ம் நாட்களில்
///

வாழ்த்துக்கள்..சிவா...

மதுரை மண்ணில்.நடந்த மாநாட்டிற்கு மதுரை மண்ணின் மைந்தனின் வாழ்த்துக்கள்..

pudugaithendral said...

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சிருக்கீங்க.

மாநாடு, சிவா அண்ணன் கல்யாணம் ரெண்டுலயும் கலந்துகிட்டதா சொல்றேன்.

நடத்துங்க.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரைக்காரன் - இனிமே முன்னரே சொல்லிடறோம் - வந்துடுங்க

cheena (சீனா) said...

வ்ருக TBCD - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி . மதுரை மண்ணின் மைந்தனா - எங்கே இருக்கீங்க

cheena (சீனா) said...

வருக புதுகை தென்றல் - வருகைஇக்கும் கருத்துக்கும் நன்றி -2 மாங்காயும் இனிச்சுது - சுவைச்சு சாப்பிட்டோம்

TBCD said...

நானும் மதுரையயைச் சேர்ந்தவன்..

இப்போதைக்கு மலேசியா..

cheena (சீனா) said...

விளக்கத்திற்கு நன்றி TBCD - ஒரு முறை கோவி கண்ணனின் பதிவில் உங்களைச் சந்தித்தது பற்றி எழுதி இருந்தார். படித்திருக்கிறேன்.

துளசி கோபால் said...

//காலைலே அல்வா,.....//

காலையிலேவே அல்வா கொடுத்துட்டாரா? :-)


ஆமாம். மூணு வேளையும் வடை(யா?????)

ஹும்.............நல்லா இருங்க.

cheena (சீனா) said...

துளசி, வாங்க வாங்க - அல்வா வடை தான் தெரிஞ்சுதா ?? - ம்ம்ம் - ஏதோ புகையற மாதிரி இருக்கே

மொத நாள் வடை இல்லையாம் - அது போண்டாவாம் - தப்பா எழுதிட்டேன் - ஆக 2 வேளை தான் வடை.

குசும்பன் said...

//சசி வந்திருந்தாங்க. ( நந்துவுக்கு பாதுகாப்பு. அவரு மத்தவங்க ( அதாங்க பொண்ணுங்க) பின்னாடி ஜொள்ளு விட்டுட்டுப் போய்டாமெயும்,///

ஆமாம் நந்து அம்புட்டு மோசமா?
இருக்கும் இருக்கும்:)

குசும்பன் said...

//TBCD said...
நானும் மதுரையயைச் சேர்ந்தவன்..///

ஆமா இவரு அப்படியே விஜயகாந்து அடுத்த தேர்தலில் நின்னு ஜெயிக்க போறாரு:)))

TBCD said...

வந்துட்டூரய்யா கருத்து கந்தசாமி.. ;)


///
குசும்பன் said...

//TBCD said...
நானும் மதுரையயைச் சேர்ந்தவன்..///

ஆமா இவரு அப்படியே விஜயகாந்து அடுத்த தேர்தலில் நின்னு ஜெயிக்க போறாரு:)))

///

cheena (சீனா) said...

வருக வருக - சரவணன் - வந்த உடனே குசும்பே ஆரம்பிச்சாச்சா - இருக்கட்டும் இருக்கட்டும்

ஆமா ஆமா நந்து ரொம்ப மோசமாம்

Sanjai Gandhi said...

முதல் நாள் காலை 6.00 மணிக்கு( வாழ்க்கையில் முதன் முறையாக)எழுந்து 6.30 மணியிலிருந்து கோவை ரயில் நிலையத்தில் காத்திருந்து சிவா மாம்ஸை சந்தித்து மாநாட்டை துவக்கி வைத்தது சஞ்சய் தான்( இப்போ தெரியுதா மாநாட்டுக்கு ஏன் அவ்ளோ கூட்டம் வந்ததுனு?:P) என்ற உண்மையை இருட்டடிப்பு செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன் :)

...சனிக்கிழமை காலை முதல் இப்போது வரை காய்ச்சலால் அவதிப படுவதற்கு சிவா மாம்ஸை சந்தித்தது காரணம் இல்லை என்பதை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்....:P

cheena (சீனா) said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

வாங்க சஞ்செய் - திரை மறைவில் ( அல்லது திரைக்குப் பின்னால்) செய்யும் செயல்கள் அவ்வளவாக வெளி உலகத்திற்குத் தெரியாது. இருப்பினும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய டியூ கிரெடிட் தங்களுக்கு உண்டு என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடம்பெப் பாத்துக்கங்க - டாக்டரேப் பாருங்க

ரசிகன் said...

//சக வலைப் பதிவர்கள் ( தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் மட்டுமே) பற்றியெல்லாம் கலாச்சிட்டு, கிண்டல் பண்ணிட்டு இருந்தோம்.//

அவ்வ்வ்வ்வ்...... சீனா சார்..என் தலையை உருட்டலையே :P ஹிஹி....

ரசிகன் said...

//சிவா அவங்க அண்ணணோட கல்யாணத்தேயும் இந்த நாட்களில், இதெ மண்டபத்தில் நடத்திக்கிட்டாருங்க. //

//மங்களூர் சிவாவின் தலைமையில், அவருடைய கடும் உழைப்பின் பேராலும், பெரும் முயற்சிகளாலும் அமர்க்களமாக, செய்யப்பட்டிருந்தன.//

அப்போ மங்களூர் மாமுவுக்கு லைன் கிளியர் ஆகிடுச்சுன்னு சொல்லுங்க:P

ரசிகன் said...

//குசும்பன் said...

//சசி வந்திருந்தாங்க. ( நந்துவுக்கு பாதுகாப்பு. அவரு மத்தவங்க ( அதாங்க பொண்ணுங்க) பின்னாடி ஜொள்ளு விட்டுட்டுப் போய்டாமெயும்,///

ஆமாம் நந்து அம்புட்டு மோசமா?
இருக்கும் இருக்கும்:)//

மாம்ஸ் உங்களுக்கு தெரியாதா?.. சசி அக்கா வீட்டுல இல்லாத சமயமா பாத்து, மொத வேளையா வீக் எண்டுக்கு கும்மியடிக்க வந்துடறாருல்ல :)))))))

cheena (சீனா) said...

ரசிகன், உங்க தலை தான் உருட்டறதுக்கு வசதியா ரவுண்டா இருக்காம் - மங்களூரார் சொன்னாரு. நிலா ஆம்மா சொல்லிச்சு - உருட்டிடிடோம்ல

cheena (சீனா) said...

ரசிகன், மங்களூரு ஒரு மாதிரித்தான் சுத்தி சுத்தி வந்தாரு -பொண்ணுக பின்னாடி - வீக் எண்ட்டு வேறெயா - நிலா தான் மாமுக்கு நல்ல அத்தையா தேடிகிட்டு இருதுச்சு - லைனு ரூட்டு எல்லாம் கிளீயரா இருக்கு - சிக்னல் பச்ச தான் - சீக்கிரமே மாட்டிக்குவாரு- வீக் எண்டு எல்லாம் குமரன் கேயாரெஸ் கூட சேந்து பக்திப் பாடல்கள் பாடப் போறாராம்.

cheena (சீனா) said...

ரசிகன், நிலா தான், நந்துவெப் பாவம்னு, சசிக்குத் தெரியாம வீக் எண்டிலே அங்கே இங்கே போறதெ , சசி கிட்டே சொல்றது இல்ல.

நிலா said...

நான், எங்கப்பா, சிவா மாமா, சீனாத்தாத்தா, மொத்தம் நாலு பேர்தானே கணக்கு வருது,

5 பேர்னு சீனாதாத்தா சொல்லி இருக்காரு. அந்த 5வது பதிவர் யாருன்னு யாருமே கேக்கலியே?

எல்லொருக்கும் தெரிஞ்சு எனக்கு மட்டும்தான் தெரியலையா?

தாத்தா எனக்கு மட்டுமாச்சும் சொல்லுங்க ப்ளீஸ்

நிலா said...

அப்புறம் அப்பா சிவா மாமாக்கு ஏத்த பொண்ணு எதாச்சும் கண்ணுல படுதான்னுதான் எல்லாரயும் உத்து உத்து பாத்துகிட்டு இருந்தாராம். :P

பாச மலர் / Paasa Malar said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..பெருமூச்சுதான் விட முடியும்...சரி..சரி..அடுத்த மாநாட்டில் கலந்துக்கிட்டாப் போச்சு..

cheena (சீனா) said...

நிலாக்குட்டி, நீ புத்திசாலி ஆச்சே - கண்டு பிடி - பதிவே சரியாப் படிக்கணூம். அப்பா கூட சேந்துகிட்டு அங்கே இங்கே வேடிக்கை பாக்க கூடாது.

//வலைப்பதிவர்கள் 5 பேர் ( 5000 பேருக்குச் சமம்) சந்தித்தனர். சீனா, அவரது மறு பாதி ( வேற யாருங்க என் துணைவி, மனைவி தானுங்க), மங்களூர் சிவா, நிலாக்குட்டி, நந்து ( இவரு நிலாக்குட்டியோட அப்பாங்க)
சந்திச்சாங்க. முக்கிய பார்வையாளரா நிலா அம்மா, சசி வந்திருந்தாங்க.//

நிலா நீ பாக்கலே - இரண்டாம் நாள் நீ வந்தப்ப என்னோட தங்க மணி - ம.பா - மனைவி - துணைவி ( பதிவர்தான் கண்ணு) வரலே - மொத நா வந்துட்டுப் போய்ட்டாங்க.

உங்கம்மா சசி பார்வையாளருன்னு சொல்லிட்டேன்லே - உங்க பாட்டி பத்தி ஒண்ணுமே சொல்லலியே - அவங்களும் பதிவர் தான் - கண்டு பிடி கண்டு பிடி -

cheena (சீனா) said...

நிலா, அப்புறம் நந்துவுக்கு நீ என்ன சர்டிபிகேட்டு கொடுக்குறே ? எங்களுக்குத் தெரியாதா அவரெப் பத்தி - மங்களூருப் பையனுக்குப் பொண்ணு பாத்தாரா - கதெ வுட்டாரா உன் கிட்டே - நம்பாதே நம்பாதே

cheena (சீனா) said...

மலர், வருத்தப் பட வேண்டாம். அடுத்த மாநாட்டை சீக்கிரமே கூட்டிடுவோம். கலக்கிடுவோம்ல.

கப்பி | Kappi said...

/ராத்ரி ஹல்வா, வடை, கிச்சடி, காப்பியோட //

/காலைலே அல்வா, இட்லி, வடை, ஊத்தப்பம், பொங்கல் ( அபி அப்பா பொங்கள் இல்லீங்க), காப்பி மற்றும் குடிக்க தண்ணி. (மினரல் வாட்டர் தானுங்க). மதியம், சாப்பாடு - பாயசம், பூந்தி, தயிர் பச்சடி, ஃப்ரூட் சாலட், ( சூடா இருந்திச்சி), பருப்பு உசிலி, முட்டக்கோஸ் துவட்டல், மொச்சைக் குழம்பு, மலையாள அவியல், பருப்பு, நெய், வடை, சாதம், சாம்பார், மோர்க் குழம்பு, ரசம், தயிர் etc etc etc. //


எத்தன!! :))))

இப்பல்லாம் மாநாடு, பேரணில ஹாஃப் சிக்கன் பிரியாணிக்கே அழுவறானுங்க..கூட்டமும் அதிகமாயிடுச்சு..போட்டியும் அதிகமாயிடுச்சு..

அடுத்த தபா மாநாடு நடத்தும்போது சொல்லுங்க..இந்த மெனுவுக்காகவே வந்துடலாம் :)))

cheena (சீனா) said...

வாங்க கப்பி பய - நன்றி - வருகைக்கு - மெனு என்னாங்க மெனு - மாநாட்டுக்கு சொல்லி அனுப்புறேன் - வந்துடுங்க - தூள் கெளப்பிடலாம்

Baby Pavan said...

சொல்லவே இல்ல, இருக்கட்டும் சிவா மாமா வரட்டும் கவனிச்சிக்கரேன்

cheena (சீனா) said...

பவன், உனக்கு சொல்லவே இல்லியா - எனக்குத் தெரியாது - எல்லாம் சிவா மாமா தான் -சும்மா விடாதே - டின்னு கட்டிடு

பிரேம்ஜி said...

மிக்க மகிழ்ச்சி. பதிவர்கள் சந்தித்து குலாவுவது சுவாரஸ்யமாக உள்ளது.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரேம்ஜி

Unknown said...

அன்பின் சீனா, இப்படிக் கூடும்போது அதில் நானும் ஒருவனாய் இருக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவேன்.

cheena (சீனா) said...

அன்பின் புகாரி - தாங்கள் கூட இருந்தால் மகிழ்வது நாங்கள் தானே - வருகைக்கு நன்றி

Geetha Sambasivam said...

இத்தனை அமர்க்களமா ஒரு மாநாடு நடந்திருக்கு, சக பதிவரான நமக்கு ஒரு அழைப்புக் கொடுக்காம அல்வா கொடுத்துட்டீங்களே? ம்ம்ம்ம்ம் சரி, சரி, போகட்டும், விடுங்க! :P மதுரைக்கு வரதுனாலே இப்போ எல்லாம் பயமா இல்ல இருக்கு? :(