ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 18 November 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 5

நீண்ட நாட்களுக்குப் பிறகு, இடுகை இட வந்திருக்கிறேன். நேரமின்மையும், மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்திக்கும் சூழ்நிலையும் வரவில்லை. நண்பர் ஜீவியின் பதிவுகளைப் படித்த பின்னர் நானும் தொடர வேண்டும் என்று நினைத்தேன்.


என்னுடைய ஆரம்பப்பள்ளி வாழ்க்கை :


அக்காலத்தில் பள்ளியில் சேர்வதென்பது நவராத்திரி முடிந்து விஜயதசமி அன்று தான். எனவே ஒண்ணாங்கிளாஸ் என்பது குறைப்பிரசவம் தான். அக்டோபர் மாதம் தான் சேருவோம். முழு ஆண்டு படிக்காமலேயெ, அக்டோபர்-மார்ச்சு ஒண்ணாங்கிளாஸ் பாஸ்.


பள்ளியில் சேரும் வைபவம் மறக்க முடியாது. புதுச் சட்டை, புது டிராயர், புது சிலேட்டு, புது குச்சி ( இப்போ பல்பம்னு சொல்றானுங்க சென்னைலே), புதுப் பை (ஜமக்காளப் பை) எல்லாம் மொத நாளு எங்க தாத்தா வாங்கிக் கொடுப்பாங்க. எங்கம்மா, தலை, எண்ணே வழிய வழிய, அழுந்தச் சீவி விட்டு, புட்டாமா ( Powder) போட்டுவிட்டு, நெத்திலே விபூதி பூசி விட்டு என்னெத் தயார் பண்ணி, வீட்லெ ரெடியா இருப்போம். தஞ்சையிலே மேல ராஜ வீதியின் கோடியில் ஒரு சந்து - நாயணக்காரத் தெரு - அங்கு D.K.சுப்பையா நாயுடு தொடக்கப் பள்ளி - அங்கிருந்து அய்யங்கார் வாத்தியார் எங்க வீட்டுக்கு வந்து, என்னெக் கூட்டிட்டுப் போவார். (ராகு காலம், எம கண்டம், சுத்திப் போட்டு திட்டி கழிக்கறது - எல்லாம் உண்டு). அய்யங்கார் வாத்தியார் குடுமி வைச்சிருப்பார். முன் மண்டையிலே ஒன்னுமிருக்காது. தார்ப் பாய்ச்சி வேட்டி கட்டியிருப்பார். அவர் என்னெக் கூட்டிட்டுப் போகும் போது. எங்கப்பா, எங்கம்மா, எங்க தாத்தா, எங்க பாட்டினு ஒரு பட்டாளமே எங்கூட வரும். நான் அழுவாமெ பள்ளிக்கூடம் போவேனாம். எங்கண்ணன் ரெண்டு பேரு எனக்கு முன்னாடி அதே பள்ளியிலே படிச்சிட்டு இருந்தானுங்க ( மரியாதை இல்லையா - கேட்காதீர்கள் - இன்று கூட வா போ தான். பெயரெச் சொல்லித் தான் கூப்புடறது). பள்ளிக்கூடம் கூட்டிச் சென்று, அங்கு பெரிய சரஸ்வதி படத்துக்கு மாலை போட்டு, சுண்டல் பொறி மிட்டாய் எல்லாம் வைச்சு , படத்துக்கு முன்னாலே உக்காந்து சிலேட்லே கையப் பிடிச்சு "அ" பெரிசா எழுதி அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்த தெய்வம் எங்க அய்யங்கார் வாத்தியார் தான். அன்னிக்கு அரை மணி நேரம் தான் பள்ளி. எங்க அம்மாவோட பாட்டி - புள்ளே பாவம் பசிக்கும், சாப்பிட வேண்டாமானு கூட்டிட்டு வந்துட்டாங்க. அன்னிக்கு பள்ளிக்கூடத்துலே இருந்த அத்தனை பேருக்கும் மிட்டாய் வழங்கி எங்க தாத்தா மகிழ்ச்சியைக் கொண்டாடினாங்க. சாயங்காலம் வாத்தியார் வீட்டுக்கு வந்து இன்னும் கொஞ்சம் எழுத்தெல்லாம் சொல்லிக் கொடுத்துட்டுப் போனார்.


அப்போ அய்யங்கார் வாத்தியாருக்கு எங்க வீட்லே பயங்கர மரியாதை. நல்லது கெட்டது எல்லாத்துக்குமே அவர் தான். எங்கப்பா எங்க தாத்தா எல்லோருமே அவர் கிட்டெ மரியாதையா நடந்துப்பாங்க. அவரும் செட்டியாரையா ன்னு ரொம்ப மரியாதையா நடந்துப்பார். அன்னிக்குப் பொழுது அப்படிக் கழிஞ்சுதா - மறு நா காலைலே எந்திரிச்சி பள்ளிக்கூடம் போவனும்னு அடம் புடிச்சி ( எங்கண்ணனுங்கெல்லாம் தூங்கிட்டு இருக்கறப்போவே நான் எந்திரிச்சிடுவேனாம்) பள்ளிக்கூடம் போவேன். எங்க அம்மாவொட பாட்டி தான் என்னெத் தெனமும் பள்ளிக்குடம் கூட்டிட்டுப் போய் வகுப்பறைலே விட்டுட்டு, மத்யானம் சப்பாட்டுக்குக் கூட்டிட்டுப் போய், திரும்பக் கொண்டாந்து விட்டு, சாயங்காலம் வீட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. திங்கறதுக்கு எல்லாம் அவங்களே வாங்கித் தந்துடுவாங்க. வஞ்சனை இல்லாம எந்தக் கவலையும் இல்லாம ஆரம்பப் பள்ளி வாழ்க்கை அமைந்தது.


படிப்பெல்லாம் நான் சூரப் புலி - கணக்கெல்லாம் சூப்பராப் போடுவேன். எங்கண்ணன் வேற ரெண்டாம் கிளாஸ் லேந்து டபுள் பிரமோசன் வாங்கி நாலாவது போய்ட்டான் ( இப்பொ கனடாலெ இருக்கான்)- அப்பவே நான் ட்ரிப்ள் பிரமோசன் வாங்கி ரெண்டுல்லேந்து அஞ்சு போகனுன்னு ஒரே லச்சியம். நிறைவேறலேன்னு வைச்சிக்கங்க.


ஒண்ணாங்கிளாஸ்லே அரையடி ஒயரத்துலே ஒரு பெஞ்சு போட்டிருப் பாங்க. நீளமான மனெப் பலகை. அவ்ளோ தான். அஞ்சு பேரு உக்காந்துருப்பொம். சுவத்துலே சாஞ்சுப்போம். ஒரு 25 பேரு இருந்திருப்போம். அந்த சுகம் இப்போ வருமா ?


வாத்தியாரெல்லாம் வேட்டி சட்டை தான். கைலே எப்பவும் பிரம்பு இருக்கும். போர்டுலே சாக்பீசால எழுதித் தான் பாடம் நடத்துவாங்க. நாங்க ஆனா ஆவன்னா இனா ஈயன்னானு உயிரெழுத்துப் பூரா சத்தம் போட்டு கோரசா கத்துவோம். தெருவே அதிரும்ல. எனக்காக காத்துட்டு இருக்கற எங்க பாட்டி பேரப்புள்ளே நல்லா படிக்குறான்னு எங்க வீட்லே சொல்லி, எனக்கு தனிச் செல்லம் எங்க வீட்லே.


அஞ்சு வருசம் அங்கே தான் படிச்சேன். ஒரு நாளைக்கு நான்கு தடவை பள்ளிக்கும் வீட்டுக்குமா நடந்து போய் படிச்ச காலமது. பாட்டி கதெ சொல்லிக்கிட்டே பையைத் தூக்கிக்கிட்டு கூடவே வருவாங்க. பாதி தூரம் கால் வலிக்குதுன்னு அழுகுணி ஆட்டம் ஆடி தூக்கச் சொல்லி, பாட்டி தூக்கிகிட்டு வருவாங்க. அந்தச் சுகம் இப்ப பேத்திய, பேரனைத் தூக்கிக் கிட்டு வெளியே போறதுலே இருக்கு.


ஒரு கோனார் வீட்டுப் பையன் (அப்பல்லாம் யாதவர்னு சொல்றது இல்ல) தான் எனக்கு ரொம்ப பிரண்டு. ரெண்டு பேருமா கொட்டம் அடிப்போம். பாட்டியெ ஏமாத்திட்டு அழ வைச்சிட்டு பக்கத்துலே பார்க்குலே போய் விளையாடுவோம். அப்புறம் அவங்களும் எங்களெப் பத்தி தெரிஞ்சுக்கிட்டாங்க. வாத்தியார் கிட்டெ கோள் மூட்டுவாங்க. மணி அடிக்கற பையனெ காக்கா பிடிச்சி கரெக்டா மணி அடிக்கும் போது கிளாஸ் வாசல்லே நின்னு கோழி அமுக்கற மாதிரி அமுக்கிக் கூட்டிட்டுப் போய்டுவாங்க. அவங்க இந்த கோனார் வூட்டுப் பய தான் நம்ம புள்ளெயேக் கெடுக்குறான்னு ஸ்கூல் பூரா ஒரே கம்ப்ளைண்ட். அந்தப் பய அம்மா வந்து எங்க பாட்டி கிட்டே சண்டை போடுவாங்க. ஆனா நாங்க பிரெண்ட்ஸ் தான்.


ரெண்டாம் கிளாஸ் வாத்யார் ராசமாணிக்கம்னு இருந்தாரு. அதுந்து பேச மாட்டார். அவர் அளவாப் பேசுறது வகுப்புக்கு மட்டும் தான் கேக்கும். எல்லாப் பாடமும் ( தமிழ், கணக்கு- வேற என்னா ?? அவ்ளோ தான்) அவர் தான் எடுப்பாரு.


மூனாங்கிளாஸ்லேயும் நாலாங்கிளாஸ்லேயும் சின்ன அமல்தாஸ், பெரிய அமல்தாஸ் னு ரெண்டு வாத்யாருங்க. ரெண்டு பேரோட பேரும் அமல்தாஸ்ங்கறதாலே சின்ன அமல்தாஸ் பெரிய அமல்தாஸ்னு சொன்னாங்க.


அஞ்சாம் கிளாஸ்லே பாட்டு வாத்யார். அவர் பேரு தெரிலே . அவர் பாட்டு வாத்யார் அவ்ளோ தான்.


ஹெட் மாஸ்டர் சுந்தர் ராஜுன்னு இருந்தார். அவர் சைடு பிசினஸ் கெடிகார ரிப்பெர் கடை வைச்சிருந்தார். ஆரம்பப் பள்ளியில் கற்ற கல்வி தான் அஸ்திவாரம். அங்கு கற்ற கல்வியும், கடமைகளும், ஒழுக்கமும், பாடல்களும் ஒரு நல்ல வாழ்க்கை அமைய உதவின என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.


அஞ்சாம் கிளாஸ்லே மருது பாண்டியர் என்று ஒரு நாடகம் போட்டோம். சின்ன மருதுவாக, நண்பன் பாலசுப்பிர மணியன், பெரிய மருதுவாக நண்பன் சண்முக சுந்தரம், ராஜா முத்துவிஜய ரகுநாதராக நண்பன் முகுந்தன், ராணி வேலு நாச்சியாராக நண்பன் ............ ( நினைவில்லையே) நடித்து பள்ளி ஆண்டு விழாவில் அரங்கேற்றப்பட்ட நாடகம். தஞ்சை அரண்மனை அரங்கத்திலே நாடகம். நான் என்ன வேசமுன்னு கேக்குறீங்களா ?? சொல்ற மாதிரி இல்ல - அவைக் காவலன் ( வாழ்க வாழ்க - சொல்லணும்), மக்களில் ஒருவன் ( மகராஜா காப்பாத்துங்க, காப்பாத்துங்க), கள்வர் கூட்டத்தில் ஒருவன் ( கத்தியெல்லாம் வைச்சிக்கிட்டு, மீசை யெல்லாம் வரைஞ்சிக்கிட்டு, முண்டாசு கட்டி, மூக்குலே ஒரு பெரிய மச்சம் வைச்சிக்கிட்டு ( டேய் கழட்டுடா எல்லா நகையெயும், பணமெல்லாம் குடுடா), போர் வீரன் ( போர் போர்) - வேற என்ன பண்ணேன் - நினனவில்லே.


பள்ளியிலேயே விளையாட்டுத் திடல், அந்த வயதுக்கு உரிய அத்தனை விளையாட்டுகளையும் விளையாடியது, ராட்டையிலே பஞ்சு வைத்து நூல் நூற்றது, தக்ளியிலே நூல் நூற்றது, சிட்டம் போட்டது, மாலை யாக்கினது, இன்ஸ்பெக்டர் வந்த போது ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம், அறஞ்செய விரும்பு என அத்தனை மனப்பாடப் பாடல்களையும் ஒப்பித்து, வகுப்பிலே நல்ல மாணவனெனப் பேரெடுத்தது, குறளிலே 65ம் அத்தியாயம் சொல் வன்மை - பத்துப் பாடல்களையும் மனனம் செய்து ஒப்புவித்து போட்டியில் முதல் பரிசு ( பிளாஸ்டிக் சோப் டப்பா) வாங்கியது இதெல்லாம் இன்னும் மனதிலே மலரும் நினைவுகளாக அசை போடுவதற்கு இன்பமாக இருக்கிறது.

ஆக ஆரம்பப் பள்ளி வாழ்க்கை அடிப்படைக் கல்வியை கற்றுத்தந்தது. ஆசிரியப் பணியே அறப்பணி - அரும்பணி எனத் தங்களை அதற்கே அர்ப்பணித்துக் கொண்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியப் பெருமக்களை மறக்க இயலாது.

82 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

கோவி.கண்ணன் said...

ஆரம்ப பள்ளி வாழ்கை அழகான நினைவுகள்.

சரி ஐயா, பெண் பிள்ளைகள் பக்கத்தில் உட்கார்ந்து படித்தது இல்லையா ?
:)

நந்து f/o நிலா said...

பழைய நினைவுகளில் பள்ளி நாட்களின் நிகழ்வுகள்தான் இனிமை.உங்கள் மலரும் நினைவுகளும் அப்படித்தான் இருக்கிறது.

இம்சை said...

இப்போதைக்கு மூணாம் கிளாஸ் வரை வந்து இருக்கென், மூச்சி வாங்குது...கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு மறுக்கா வாரென்ங்க...

மெளலி (மதுரையம்பதி) said...

இவ்வளவு ஞாபகம் வைத்திருக்கிறீர்களே ஐயா.....மிக்க சுவாரஸ்யமாக இருக்கு....தொடருங்கள்.

ரசிகன் said...

// அவர் என்னெக் கூட்டிட்டுப் போகும் போது. எங்கப்பா, எங்கம்மா, எங்க தாத்தா, எங்க பாட்டினு ஒரு பட்டாளமே எங்கூட வரும்.//
// அரை மணி நேரம் தான் பள்ளி. எங்க அம்மாவோட பாட்டி - புள்ளே பாவம் பசிக்கும், சாப்பிட வேண்டாமானு கூட்டிட்டு வந்துட்டாங்க. //

அந்த காலத்துல இருந்த இம்புட்டு பாசமும்,இந்த அவசர உலகத்துல மழலைகளுக்கு கெடைக்காம போகுதுங்க சார்.

ரசிகன் said...

// அந்த சுகம் இப்போ வருமா ?//
// பாட்டி கதெ சொல்லிக்கிட்டே பையைத் தூக்கிக்கிட்டு கூடவே வருவாங்க. பாதி தூரம் கால் வலிக்குதுன்னு அழுகுணி ஆட்டம் ஆடி தூக்கச் சொல்லி, பாட்டி தூக்கிகிட்டு வருவாங்க. அந்தச் சுகம் இப்ப பேத்திய, பேரனைத் தூக்கிக் கிட்டு வெளியே போறதுலே இருக்கு///
நெசந்தேன் ஜயா.. இதை படிக்கும்போது என்னோட நினைவுகளும் மலருகின்றன..
அடுத்த ஜெனரேஷனுல இப்பிடி பேரப்பிள்ளைகளை கூட இருந்து கொஞ்சி மகிழும் பாக்கியம் எங்களுக்கு கிடைக்குமா?.

ரசிகன் said...

// அவைக் காவலன் ( வாழ்க வாழ்க - சொல்லணும்), மக்களில் ஒருவன் ( மகராஜா காப்பாத்துங்க, காப்பாத்துங்க), கள்வர் கூட்டத்தில் ஒருவன் ( கத்தியெல்லாம் வைச்சிக்கிட்டு, மீசை யெல்லாம் வரைஞ்சிக்கிட்டு, முண்டாசு கட்டி, மூக்குலே ஒரு பெரிய மச்சம் வைச்சிக்கிட்டு ( டேய் கழட்டுடா எல்லா நகையெயும், பணமெல்லாம் குடுடா), போர் வீரன் ( போர் போர்) - வேற என்ன பண்ணேன் - நினனவில்லே.//
அஹா..அப்பவே.. சகலகலா வல்லவரா இருந்திருக்கிங்களா?..

ரசிகன் said...

// ஆக ஆரம்பப் பள்ளி வாழ்க்கை அடிப்படைக் கல்வியை கற்றுத்தந்தது. ஆசிரியப் பணியே அரும்பணி எனத் தங்களை அதற்கே அர்ப்பணித்துக் கொண்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியப் பெருமக்களை மறக்க இயலாது.//

இந்த கருத்துக்கு நா சொல்ல விரும்புவது ஒரு மெகா
ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...
சூப்பருங்கோ..

வித்யா கலைவாணி said...

இப்ப தான் ஆரம்பப் பள்ளியா? நல்லா தான் இருக்கு. ம் தொடருங்க

cheena (சீனா) said...

வருக மருத்துவர் டெல்பைன் அவர்களே !! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ! அந்த சோப்பு டப்பா சந்தோஷமே தனி தான்

cheena (சீனா) said...

அது பெண் பிள்ளைகள் சேர்ந்து படிக்கும் பள்ளி அல்ல - ஆண்கள் பள்ளி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி கண்ணன்

cheena (சீனா) said...

நந்து - முதல் முறையாக வருகை புரிந்திருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிலாவிடம் சொல்லுங்கள்

cheena (சீனா) said...

வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி இம்சை - மெதுவா வாங்க ஒண்ணும் அவசரமில்ல - மூச்சு ஏன் வாங்குது இந்த வயசிலே - பவன் கிட்டே சொல்லுங்க

cheena (சீனா) said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

வாங்க மதுரையம்பதி - கருத்துக்கும் வருகைக்கும் நன்றி - இன்னும் நெரெய எழுதணும் - எழுதுறேன்

cheena (சீனா) said...

ரசிகன், காலம் எதுவாயினும், பாசம் ஒன்று தான். அது கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். கவலை வேண்டாம்.

cheena (சீனா) said...

ரசிகன், பேரப் பிள்ளைகள் கூட இருந்து கொஞ்சும் பாக்கியம் எல்லோருக்கும் எப்போதும் கிடைக்க வாழ்த்துகள்

cheena (சீனா) said...

ரசிகன், சகல் கலா வல்லவன் தான் நான் என்றைக்குமே

cheena (சீனா) said...

ரசிகன், ரிப்பீட்டேய்க்கு நன்றி - உண்மை யான கருத்து அது

வித்யா கலைவாணி said...

//எங்க அம்மாவோட பாட்டி - புள்ளே பாவம் பசிக்கும், சாப்பிட வேண்டாமானு கூட்டிட்டு வந்துட்டாங்க//
//அஞ்சு பேரு உக்காந்துருப்பொம். சுவத்துலே சாஞ்சுப்போம்.//
இன்ஸ்பெக்டர் வந்த போது ஓதாமல் //ஒரு நாளும் இருக்க வேண்டாம், அறஞ்செய விரும்பு என அத்தனை மனப்பாடப் பாடல்களையும் ஒப்பித்து, வகுப்பிலே நல்ல மாணவனெனப் பேரெடுத்தது,//

நல்ல அனுபவங்கள்

cheena (சீனா) said...

வித்யா - கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

jeevagv said...

தொடக்கம் முதல் கடைசி வரிவரை சிரித்துக்கொண்டே படித்தேன்,
பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

cheena (சீனா) said...

ஜீவா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவா - ஆமா என் பொழப்பு சிரிப்பாச் சிரிக்குதா என்ன - ம்ம்ம் = கவனிக்குறேன் ( சும்மா சும்மா)

தருமி said...

எனக்கு ஒண்ணாங் க்ளாஸ் மாணிக்கம் சார் பெயரும், அஞ்சாங் க்ளாஸ் லூக்காஸ் சார் பெயரும் மட்டுமே ஞாபகத்தில் இருக்கு. நீங்க என்னடான்னா .. எல்லா பெயரையும் அழகா நினைவில வச்சி எழுதியிருக்கீங்க ...

ஆயில்யன் said...

//மறு நா காலைலே எந்திரிச்சி பள்ளிக்கூடம் போவனும்னு அடம் புடிச்சி ( எங்கண்ணனுங்கெல்லாம் தூங்கிட்டு இருக்கறப்போவே நான் எந்திரிச்சிடுவேனாம்) பள்ளிக்கூடம் போவேன். ///
ம்ம்ஹும்ம்ம்ம்( பெருமூச்சு பீலிங்க்ஸ்ஸ்ஸ்ஸ்)

ஆயில்யன் said...

//கோவி.கண்ணன் said...
ஆரம்ப பள்ளி வாழ்கை அழகான நினைவுகள்.

சரி ஐயா, பெண் பிள்ளைகள் பக்கத்தில் உட்கார்ந்து படித்தது இல்லையா ?
//
கோவியார் கேட்கறது
ஆர்வத்துலயா?
ஆதங்கத்துலயா?
இல்ல வர போற பதிவுகளில் ஆமாம் படிச்சேன்னு அனுபவத்த சொன்ன வரப்போற ஆத்த்திரத்திலயா???????????

Unknown said...

//பள்ளியில் சேரும் வைபவம் மறக்க முடியாது. புதுச் சட்டை, புது டிராயர், புது சிலேட்டு, புது குச்சி ( இப்போ பல்பம்னு சொல்றானுங்க சென்னைலே), புதுப் பை (ஜமக்காளப் பை) எல்லாம் மொத நாளு எங்க தாத்தா வாங்கிக் கொடுப்பாங்க. எங்கம்மா, தலை, எண்ணே வழிய வழிய, அழுந்தச் சீவி விட்டு, புட்டாமா ( Powder) போட்டுவிட்டு, நெத்திலே விபூதி பூசி விட்டு என்னெத் தயார் பண்ணி, வீட்லெ ரெடியா இருப்போம். //

நாங்களும் புட்டாமாவு ரெண்டு கோட்டிங்லாம் அடிச்சுட்டு, எண்ணெ வழிய வழிய போயிருக்கோம்ல :)

பள்ளிப் பருவம், பசுமையான பருவம்!!

ஜீவி said...

//நான் என்ன வேசமுன்னு கேக்குறீங்களா ?? சொல்ற மாதிரி இல்ல - அவைக் காவலன் ( வாழ்க வாழ்க - சொல்லணும்), மக்களில் ஒருவன் ( மகராஜா காப்பாத்துங்க, காப்பாத்துங்க), கள்வர் கூட்டத்தில் ஒருவன் ( கத்தியெல்லாம் வைச்சிக்கிட்டு, மீசை யெல்லாம் வரைஞ்சிக்கிட்டு, முண்டாசு கட்டி, மூக்குலே ஒரு பெரிய மச்சம் வைச்சிக்கிட்டு ( டேய் கழட்டுடா எல்லா நகையெயும், பணமெல்லாம் குடுடா), போர் வீரன் ( போர் போர்) - வேற என்ன பண்ணேன் - நினனவில்லே.//

அருமை நண்பர் சீனா,

சிரித்துச் சிரித்து கண்களில் நீர் தளும்பி விட்டது. உங்களுக்கு நகைச்சுவை கைவந்த கலையாக இருக்கிறது.உங்களுக்குக் கிடைக்கப்பெற்ற வரமாகவும் தெரிகிறது. அந்த உணர்வும், முழுமையான ரசனையும் இருந்தால் தான் இது சாத்தியப்படும் என்பது என் எண்ணம். எழுத்தில்,இது கலந்து எழுதுவது கஷ்டமான விஷயம். அது இயல்பாக இருந்தால் தான்,மற்றவர்களையும் சிரிக்க வைக்க முடியும். அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது. மற்றவர்களை மகிழ்விப்பது என்பது ஒரு புனிதமான கைங்கரியம். வாழ்த்துக்கள்.

உங்கள் பதிவைப் பார்த்து,எனக்கு தஞ்சை ராணி வாய்க்கால் தெருவும்,பூக்காரத் தெருவும் நினைவுக்கு வந்து விட்டது.

உங்கள் மதுரை மலரும் நினைவுகளைப் படித்து, உற்சாகமடைந்து எனது மதுரை நினைவுகளை எழுதத் தலைப்பட்டேன். அதை இன்று நி
றைவு செய்து விட்டேன். வந்து பாருங்கள். அந்த மதுரைப் பதிவுகள் என்னிடமிருந்து வெளிப்பட்டதற்கு நீங்கள் தான் காரணம். மிக்க நன்றி.

cheena (சீனா) said...

தருமி, நினைவாற்றல் என்பது - மனதுக்குப் பிடித்தவைகள் சட்டென நினைவுக்கு வரும். இன்றைய தினம் அலுவலில் முக்கியமானவை எல்லாம் மறந்து விடுகிறதே !! குறிப்பு எழுதி வைத்தும் To do things to day மறக்கிறதெ ஏன் - ஈடுபாடில்லையா என்ன - ம்ம்ம் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

ஆயில்யன், பெருமூச்செல்லாம் நல்ல இருக்கு - எல்லோருக்கும் ஒரு பள்ளிப் பருவம்னு ஒண்ணு இருக்கு - அது மறக்க முடியாதது

cheena (சீனா) said...

ஆயில்யன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கோவியார் நண்பர் - ஏதேனும் கேள்வி கேட்டு விளக்கம் பெற்று ( அவருக்குத் தெரிந்திருந்தாலும் கூட மற்ற தெரியாதவர்களுக்காக இவர் கேட்பார்)புதுப் புது செய்திகள் வெளி வர வழி வகுக்கும் ஒரு கிரியா ஊக்கி அவர். கோவிக்கும் நன்றி

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தஞ்சாவூரான். தஞ்சாவூர்க்காரணுங்ள்ளாம் புட்டாமா போட்டு எண்ணே வழிய விட்டுத்தான் போவானுங்களா ? ஆமா நீங்க எங்கே படிச்சீங்க

cheena (சீனா) said...

நண்பா, ஜீவி, நகைச்சுவை என்பதற்கும் எனக்கும் காத தூரம். இருப்பினும் வலைப்பூக்களில் மேய்ந்து மேய்ந்து நானும் எழுத ஆரம்பித்தேன். பல பின்னூட்டங்களில் கலாய்த்ததின் விளைவு.

மலரும் நினைவுகளை அசை போட்டு, ஆனந்த்தித்து, இனிய துணைக்கு எடுத்துரைத்து, விவாதித்து, மகிழ்ந்து, இடுகையாக இட்டு, இரண்டு மணி நேரம் சென்றதே தெரியாமல் இனிய மாலைப் பொழுதை கழித்தோம்.

நண்பரே, தங்களின் மலரும் நினைவுகளைத் தூண்டியவர்களில் நானும் ஒருவன் என்று கூறியதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இவ்விடுகைக்கு வித்திட்டவர் தாங்கள் தானெ

மதுரை பதிவுகள் அருமையாகச் சென்று கொண்டிருக்கின்றன.

துளசி கோபால் said...

// அவைக் காவலன் ( வாழ்க வாழ்க - சொல்லணும்), மக்களில் ஒருவன் ( மகராஜா காப்பாத்துங்க, காப்பாத்துங்க), கள்வர் கூட்டத்தில் ஒருவன் ( கத்தியெல்லாம் வைச்சிக்கிட்டு, மீசை யெல்லாம் வரைஞ்சிக்கிட்டு, முண்டாசு கட்டி, மூக்குலே ஒரு பெரிய மச்சம் வைச்சிக்கிட்டு ( டேய் கழட்டுடா எல்லா நகையெயும், பணமெல்லாம் குடுடா), போர் வீரன் ( போர் போர்) - வேற என்ன பண்ணேன் - நினனவில்லே.//

அப்ப(வே) நீங்க 'ஆல் இன் ஆல் அழகுராஜா'ன்னு சொல்லுங்க:-))))

நாங்களும் டபுள் புரமோஷன் ஆளுங்கதான்:-)

சோப்பு டப்பாவை வேற யாரும் தொட விடலைதானே?

cheena (சீனா) said...

துளசி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஒத்துமையேப் பாத்தீங்களா ? பரிசு வாங்கின சோப்பு டப்பா எத்தனை நாள் எங்கிட்டே ( நானும் தொடாம, மத்தவங்களெயும் தொட விடாம ) பத்ரமா இருந்திச்சி தெரியுமா ? ம்ம்ம் - டபுள் பிரமோஷனுக்கு வாழ்த்துகள் -- ட்ரீட் எங்கே ??

கோவி.கண்ணன் said...

//cheena (சீனா) said...
அது பெண் பிள்ளைகள் சேர்ந்து படிக்கும் பள்ளி அல்ல - ஆண்கள் பள்ளி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி கண்ணன்
//

சீனா ஐயா,

எங்களுக்கெல்லாம் 6 வகுப்பில் இருந்து தான் அந்த தண்டனை. ஒண்ணாம் வகுப்பில் எல்லோரும் ஒன்றாகத்தான் உட்கார்ந்திருப்போம்.
பெண் பிள்ளைகளை கிள்ளிவிட்டு வம்பு வளர்த்து டீச்சரம்ம்மாவின் பிரம்பில் வாங்கியதெல்லாம் இனிய அனுபவம்.

அதைவிடுங்க ஐயா, அம்மா - அப்பா விளையாட்டுகள் 5 வயதில் ஆடிய அனுபவம் உண்டா ?
:)

cheena (சீனா) said...

கோவி, ஒன்று தெரியுமா - ஒண்ணாப்புலேந்து அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் தான் ஆண்கள் பள்ளி - பர்ஸ்ட் பார்ம் ( ஆறாங்கிளாஸ்) முதல் தேர்ட் பார்ம் வரை (எட்டாம் கிளாஸ்) சேர்ந்து தான் படிச்சோம்.

அஞ்சு வயசிலே பாண்டி, ஓடிப்பிடிச்சு, கண்ணாமூச்சி எல்லாமே ஆடி இருக்கோம். அப்பா அம்மா விளையாட்டு ஆடி இருக்கலாம் - நினைவில்லே

கபீரன்பன் said...

ஒருவருக்கு உலகின் பெரிய விஞ்ஞானிகள் தெரியாமல் போகலாம். கண்டுபிடிப்புகள் பிடிபடாமல் போகலாம். ஆனால் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மனதில் பிடித்து விட்ட இடத்தை மட்டும் யாராலும் அசைக்க முடியாது. உவப்பளிக்கும் நினைவுகூர்வுகள். தொடரட்டும் இந்த அழகிய நடை.

குமரன் (Kumaran) said...

நல்லா சுவையா எழுதியிருக்கீங்க ஐயா. பல இடங்கள்ல நகைச்சுவையால் புன்னகை வந்தது. :-)

cheena (சீனா) said...

வருக வருக கபீரன்பரே !!!

வருகைக்கும் கருத்துக்கும்ம் நன்றி

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் உண்மையிலேயே போற்றுதலுக்குறியவர்கள்.

cheena (சீனா) said...

நண்வ குமர,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

செல்விஷங்கர் said...

ஆரம்பப் பள்ளியின் அனுபவங்கள் எல்லோருக்குமே இனிமையான ஒன்று. நல்ல நினைவாற்றல். தொடர்க

cheena (சீனா) said...

நன்றி செல்வி ஷங்கர்

வித்யா கலைவாணி said...

// செல்விஷங்கர் said...ஆரம்பப் பள்ளியின் அனுபவங்கள் எல்லோருக்குமே இனிமையான ஒன்று. நல்ல நினைவாற்றல். தொடர்க//
ஆகா வீட்ல இருந்தே பாராட்டு வருதா. அப்ப நல்ல பதிவு தான்.

Anonymous said...

நல்ல நினைவுகள். தொடருங்கள்.

Divya said...

உங்கள் ஆரம்ப பள்ளி அனுபவம் அருமை!

\\ஆக ஆரம்பப் பள்ளி வாழ்க்கை அடிப்படைக் கல்வியை கற்றுத்தந்தது. ஆசிரியப் பணியே அறப்பணி - அரும்பணி எனத் தங்களை அதற்கே அர்ப்பணித்துக் கொண்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியப் பெருமக்களை மறக்க இயலாது. \\

நிச்சயம் அவர்களை மறக்க இயலாது,

cheena (சீனா) said...

பாண்டியன், திவ்யா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Geetha Sambasivam said...

முன்னாலே வந்து பின்னூட்டம் போட்டால், உங்க வலைப் பக்கமே இல்லைனு சத்தியம் பண்ணிடுச்சு, இப்போ என்ன செய்யப் போகுதோ தெரியாது,

அருமையான, நினைவோட்டம், சோப் டப்பா பரிசு கூட நினைப்பிலே இருக்கே? ம்ம்ம்ம்ம்., என்ன இருந்தாலும் பள்ளி நாட்களின் சுகமே தனி தான் இல்லையா?????

cheena (சீனா) said...

கீதா - வருகைக்கு நன்றி - சோப் டப்பா ரொம்ப நாள் வச்சிருந்தேன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இப்போ பல்பம்னு சொல்றானுங்க சென்னைலே//

சீனா சார்; அதெல்லாம் போயே போச்சு!
இப்போ ஸ்லேட் பென்சிலாம்!:-)

//நான் என்ன வேசமுன்னு கேக்குறீங்களா ?? சொல்ற மாதிரி இல்ல - அவைக் காவலன் ( வாழ்க வாழ்க - சொல்லணும்), //

அட எவ்ளோ பெரிய வேசம்!
நீங்க வாழ்க ன்னு சொல்லும் ஆசிர்வாதத்துல தான் மன்னரே வாழறாருன்னு பில்டப்பு கொடுத்துக்குங்க!

மிகவும் ரசித்தேன் ஐயா!
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தான் ஒழுக்கம் வளர்க்கின்றனர். அது தான் பின்னாடி கூடவே வருது!
ஆனா வெகு ஈசியா மறக்கப்படுவதும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தான்!

எனக்கு ஷீலா, ஜெயந்தி மிஸ்ஸைத் தவிர யாருமே ஞாபகத்துக்கு வரலை! உறுத்தல்! :-(

cheena (சீனா) said...

வருக, ரவி, நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

ஓஓ ஸ்ல்லேட்டுப் பென்சில் = பில்டப்பு = இதெல்லாம் எனக்குத் தெரியாதவை ரவி

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களைப் பற்றிய கருத்து உண்மையான ஒன்று

மங்களூர் சிவா said...

ஆரம்ப பள்ளி வாழ்கை அழகான நினைவுகள்.

எல்லா ஆசிரியர் பேரும் ஞாபகம் வைத்திருக்கீங்க க்ரேட்.

மங்களூர் சிவா said...

//
cheena (சீனா) said...
அது பெண் பிள்ளைகள் சேர்ந்து படிக்கும் பள்ளி அல்ல - ஆண்கள் பள்ளி -
//
என்ன கொடுமை சார் இது!!!!

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா

cheena (சீனா) said...

பெண்களுடன் சேர்ந்து படித்தது மூன்றாண்டுகள் - ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை. சிவா

Anonymous said...

அடடா.. சுகமான திரும்பிப் பார்த்தல்.

cheena (சீனா) said...

சேவியர், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குட்டிபிசாசு said...

//படிப்பெல்லாம் நான் சூரப் புலி - கணக்கெல்லாம் சூப்பராப் போடுவேன்.//

இம்சை பதிவில் பார்த்தேன்!!

//( டேய் கழட்டுடா எல்லா நகையெயும், பணமெல்லாம் குடுடா), போர் வீரன் ( போர் போர்) - வேற என்ன பண்ணேன் - நினனவில்லே.//

சே! என்னமா பேசி நடிச்சி இருக்கிங்க! அனியாயமா ஒரு ஓ.ஏ.கே.தேவர்-2-வை தமிழ்சினிமா இழந்துடுச்சே!! :))

உங்க அனுபவங்கள் எல்லாம் எனக்கும் பொருந்துகின்றன. நானும்் பாட்டி செல்லம் தான். உங்க ஜமக்காளப்பைக்கு பதில் மஞ்சள் பை கொண்டு போவேன்.

59 கருத்துகள் வந்து இருக்கு, ஏன் மேலும் எழுதவில்லை! அனுபவத்தை மொக்கைப் பதிவின் வடிவில் கலகலப்பாக எழுதி இருக்கிங்க!! தொடருங்கள் உங்கள் அனுபவத்தை...!!!! :)

cheena (சீனா) said...

ஓ.ஏ.கே தேவரா - எஸ்.வி.சுப்பையா - உங்க வயது என்ன - கல்யாணம் ஆகலேன்னு கேள்விப்பட்டேன். ம்ம்ம்ம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குட்டிபிசாசு said...

இப்ப என்னோட வயசு 27! எங்க அப்பா ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர். அதனால் எனக்கு MKT, PUC, TRM படங்களிலிருந்து...எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி,SSR என எல்லா படமும் பார்த்ததுண்டு.

cheena (சீனா) said...

அருண் கொடுத்து வைத்தவர் - தந்தை சரியான வழியில் அழைத்துச் சென்றிருக்கிறார்

பாச மலர் / Paasa Malar said...

இது ஏற்கனவே படித்துவிட்டேன் சீனா சார்..இன்றூ மீண்டும் படித்தேன்..நன்றாக இருக்கிறது..ஆரம்பப் பள்ளி வாழ்க்கை
சுகமே தனிதான்...

cheena (சீனா) said...

மீண்டும் மீண்டும் படிப்பதற்கு நன்றி மலர்

புதுகை.அப்துல்லா said...

சீனா அண்ணே ரியலி சூப்பர்ணே!
ஒவ்வொரு மனுசனுக்கும் பேசாம ஸ்கூல் வயசுலேயே இருந்துருக்க கூடாதாங்கிற நினைப்பு ஒவ்வொரு நாளும் வராம இருக்காதுண்ணே.

cheena (சீனா) said...

அப்துல்லா - கொசுவத்தி அப்பப்ப சுத்தினாத்தான் வாழ்க்கைலே இன்பமே
வருகைக்கு நன்றி

சித்திரவீதிக்காரன் said...

அய்யா! தங்கள் இளமைக்கால நினைவுகள் என்னையும் என் பள்ளி வாழ்க்கையை நினைக்க தூண்டிவிட்டது. மதுரை அண்ணாநகரில் தான் தொடங்கியது என் பள்ளி வாழ்க்கை. நாங்க எட்டாம் வகுப்பு படிக்கையில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் போட்டோம். அதில் பெரிய கூத்து என்னன்னா நான் தான் ஜாக்சன் துரை. மேலும், எனக்கு வசனங்கள் கம்மி என்பதால் பகுமானமா நடித்தேன். ஒரு முறை பாரதியாக "சிந்துநதியின்மிசை நிலவினிலே" பாடலுக்கு நடித்ததிலிருந்து பாரதி மேல் பெரிய ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. நல்ல பகிர்வு. நம்மை இயக்கி கொண்டிருப்பதே இளமைக்கால நினைவுகள் தானே. நன்றி ஐயா.

cheena (சீனா) said...

அன்பின் சித்திரக்காரன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி = துவக்கப் பள்ளி வாழ்க்கை அவ்வளவு எளிதில் மறக்க இயலாது - நல்வாழ்த்துகள் = நட்புடன் சீனா

MANOHARAN C N said...

U CAN TRANSLATE IN TAMIL PL
after reading your site i started gathering my old rememberence from school days and started writing the same.
Now only i felt one should create a habit of writing diary from the childhood which will be more useful

Thenammai Lakshmanan said...

மிக அருமை.. மலரும் நினைவுகள்.. சீனா சார்..:)

cheena (சீனா) said...

அன்பின் தேனம்மை - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Kousalya Raj said...

சுவையான நினைவுகள்...இன்றும், என்றும் நினைக்கும் போதெல்லாம் ஆனந்தம் தருபவை !

சிறு வயது பள்ளி மாணவன் சொல்லியதை போன்றே நீங்கள் எழுதிய விதம் மிக ரசிக்க வைத்தது.

உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம் போலிருக்கே :))

அருமை அருமை மிக அருமை

cheena (சீனா) said...

அன்பின் கௌசல்யா

வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நினைவாற்றல் மிகவும் குறைவு - சில நின்னைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, அவ்வளவுதான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

seenivasan ramakrishnan said...

அருமையாய் மலர்ந்து மணம் பரப்பி மனம் நிறைத்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள் ஐயா..

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான மலரும் நினைவுகள். ரஸித்துப்படித்தேன் ஐயா!

நானும் இது ப்ற்றி இப்போது 9.3.12 முதல் 14.3.12 வரை மொத்தம் 6 சிறு சிறு பதிவுகள் போட உள்ளேன்.

தொடர்ந்து வருகை தாருங்கள்.

முதல் பதிவுக்கு தாங்கள் வருகை தந்து பல வித கருத்துக்கள் கூறி வாழ்த்தி வரவேற்றுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

தொடர்ந்து தினமும் வாருங்கள், ஐயா.

அன்புடன்
vgk

cheena (சீனா) said...

அன்பின் ஸ்ரீனிவாசன் ராமகிருஷ்ணன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் வை.கோ - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கதம்ப உணர்வுகள் said...

லிங்க் பார்த்துட்டேன்.. படித்து கருத்திடுவேன் அண்ணா....

திண்டுக்கல் தனபாலன் said...

கால் வலிக்குதுன்னு சொல்லி அழுகுணி ஆட்டம் நானும் ஆடி இருக்கிறேன்... இன்றும் அதை என் துணைவியிடம் எனது சகோதரிகள் சொல்லி 'கலாய்ப்'பார்கள்...

சொல் வன்மை - மலரும் நினைவுகளை அறிந்தேன்...

முதல் பதிவில் (அப்படிச் சொல்லுங்க) சொன்னது போல் உண்மையிலிலேயே ஒரு உரையாடல் கேட்டிருந்தார்... பிறகு எழுதியது எல்லாம் அனுபவங்கள் தான்... அதைப்பற்றி இன்னொரு அதிகாரம் எழுதிய பின் எழுதலாம் என்று உள்ளேன்...

இன்னும் ஒரு பகிர்வு தான் எழுத முடியும் என்று நினைக்கிறேன்... பிறகு இட மாற்றம்... தொழிலும் மாற்றம்... விரைவில் உங்கள் தளத்திலும் மாணவனாக வருவேன்...

நன்றி ஐயா...

cheena (சீனா) said...

அன்பின் தனபாலன் - இட மற்றும் தொழில் மாற்றமா ? அதனாலென்ன - மறுமொழிகள் இடுவதும் - பதிவர்களூக்கு உதவுவதும் ( தமிழ மணம் - வாக்கு ) தொடரட்டும். இட மாற்றமோ தொழில் மாற்றமோ - இப்பொழுது படிப்பது போலத் தொடர்க. நல்வாழ்த்துகள் தனபாலன் - நட்புடன் சீனா

Asiya Omar said...

மலரும் நினைவுகள் மிக அருமை ஐயா.அமல்தாஸ் என்ற பெயருள்ள வாத்தியார் தான் எனக்கு 9-10 அறிவியல் பாடம் எடுத்தார்.உங்க சின்ன அமல்தாஸ்- பெரிய அமல்தாஸ் பற்றி வாசிக்கும் பொழுது அவர் நினைவு வந்துவிட்டது.பள்ளிக்கூட நினைவுகள் அசைபோட மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.

'பரிவை' சே.குமார் said...

ஐயா...

மலரும் நினைவில் எங்களையும் உங்களுடன் பயணிக்க வைத்து விட்டீர்கள்...

ராஜமாணிக்க வாத்தியார் எங்களுக்கு 5வது வகுப்பில் வந்த அதே ஆசிரியரின் குணம்...

சின்ன அமலதாஸ், பெரிய அமலதாஸ் நான் படித்த தேபிரித்தோவிலும் இருந்தார்கள். மேலும் நெட்டை சூசை குட்டை சூசை இப்படி நிறைய...

கோனார் வீட்டுப் பையன் நண்பனா... அதுதான் எங்க குடும்பத்தின் மீதும் ஐயாவின் பாசம் அதிகமா இருக்கு போல...

நாடகத்தில் நீங்க செய்த காவலம் வேலைதான் பள்ளி நாடகத்தில் எனக்கும்... ஹா... ஹா... தலையில புட்டாமாவை அடிச்சு நரை முடியாக்கி ஒரு கம்பை கொடுத்து நிக்க வச்சிட்டாங்க....

உங்கள் மலரும் நினைவுகள் என்னையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.... அருமை ஐயா....