ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Friday, 19 October 2007

மனத்தில் தோன்றிய எண்ணங்கள்

உன்னையே நீ அறிந்து கொள் !
உன்னால் முடியும் தம்பி !!
நம்மால் முடியாதது என்று ஒன்று உண்டா என்ன ??
அகந்தையா ?
நம்முடைய பலம் என்ன ?
நம்முடைய பலவீனம் என்ன ?
பலவீனத்தை பலமாக மாற்றுவது எப்படி ?
குடும்பம்-அலுவலகம்-சமுதாயம்-
சந்திக்கும் மனிதர்கள் எத்தனை பேர் ?
எததனை விதமான எண்ணங்கள் கொண்டவர்கள் ?
மாற்றுக் கருத்தை சந்திக்க மன வலிமை வேண்டும் !
மாற்றுக் கருத்தை சந்திக்க மறுக்காதே !
ஆய்ந்து பார்த்து முரண்படு !
நல்ல கருத்தெனில் நழுவாமல் ஏற்றுக்கொள் !
ஏற்கத் தக்கதல்ல எனில் தள்ளிப் போடு !
காலம் மாறினால் கருத்துகள் மாறும் !
காய் கனியாகும் ! அல்லது வெம்பிப் போகும் !
சுய சோதனை செய் ! சத்திய சோதனை செய் !
செய்வது எல்லாம் பயன் தரும் செயல்கள் தானா ?
நட்ட விதைகள் அனைத்தும் முளைப்பதில்லை !
அதனால் நடாமலேயே இருக்கலாமா ?
முயற்சிகள் தவறலாம் ! முயல்வது தவறலாமா ?
விரும்பியது கிடைக்க வில்லை !
கிடைத்ததை விரும்பலாமா ?
வேண்டியது வேண்டிய நேரத்தில் கிடைப்பதில்லை !
மற்ற நேரத்தில் கிடைத்தால்
மறுக்கலாமா ?? வெறுக்கலாமா ?
கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !
பலனில்லாத கடமை செய்யத்தான் வேண்டுமா ?
எல்லாக் கடமைகளுக்கும் பலன் உண்டு !
நேரிடையாக மற்றும் மறை முகமாக !
நாம் இன்று மரம் நட்டால்
நாளை மற்றொறுவன் அனுபவிப்பான் !
அதனால் மரம் நடாமலேயே இருக்கலாமா ?
நாம் அனுபவிக்கும் இன்பம் நம்மால் விளைந்ததா ?
யார் நட்ட மரத்தில் யார் பழம் சாப்பிடுவது ?
நடுவதற்கே பிறந்தவர்கள் பலர் !
அனுபவிப்பதற்கே பிறந்தவர்கள் சிலர் !
விழுக்காடு வித்தியாசம் பார்ப்பது அழகல்ல !
நட்டுக்கொண்டே இருப்போம் !
அனுபவித்துக் கொண்டே இருப்போம் !
மனம் மகிழ, பிறர் மகிழ வேண்டும் !
ஒவ்வோர் அரிசியிலும்
பெயர் எழுதப் பட்டிருக்கிறதாம் !
தேட வேண்டும் ! அதுவாக வாராது !

-----------------------------------------------------------------
மனதில் எழுந்த எண்ணங்களை கிறுக்கி விட்டேன்
தொடர்புடைய எண்ணங்களா ??
தொடர்பில்லாத எண்ணங்களா ??
தெரிய வில்லை !!!!!
சுற்றிச் சுற்றிப் பார்த்தால் தலை சுற்றும்.
-----------------------------------------------------------------

42 comments:

cheena (சீனா) said...

சோதனைப் பின்னூட்டம்

Geetha Sambasivam said...

ஒவ்வோர் அரிசியிலும்
பெயர் எழுதப் பட்டிருக்கிறதாம் !
தேட வேண்டும் ! அதுவாக வாராது !

நாம் தாங்க முறத்திலே வாரணும், அதுவாக வாராதுங்கறது ரொம்பச் சரி! :P
:P ஹிஹிஹி, இதுக்கு அர்த்தம் கண்டு பிடிச்சாச்சா?

cheena (சீனா) said...

:p - ஸ்மைலீன்னு சொன்னீங்க - சரி - அது ஸ்மைலீயா எப்பொ ம்மறும் :p ன்னுதானெ வருது

மதுமிதா said...

///சுய சோதனை செய் ///

///நட்ட விதைகள் அனைத்தும் முளைப்பதில்லை !
அதனால் நடாமலேயே இருக்கலாமா///

யாரோ நட்ட மரங்களின் கனிகளை நான் உண்கிறோம். நாம் நடும் மரத்தின் கனிகளை நம் சந்ததியினர் உண்ணட்டும்.

கிறுக்கல்கள் நன்று சீனா:-)
மனதைக் கீறி பண்படுத்தட்டும்.

மங்களூர் சிவா said...

என் வலைப்பதிவை பார்த்து பின்னூட்டமிட்டதுக்கு நன்றி.

ரசிகன் said...

//ஒவ்வோர் அரிசியிலும்
பெயர் எழுதப் பட்டிருக்கிறதாம் !
தேட வேண்டும் ! அதுவாக வாராது !//
ரசிக்கும் படியான,அதே சமயம் ரத்தின சுருக்கமான யதார்த்தம்.
கடைசி வரியில...கலக்கிட்டிங்க ஜயா..

மதுமிதா said...

இதற்கு நான் எழுதிய பின்னூட்டம் கிடைக்கவில்லையா சீனா?????

cheena (சீனா) said...

தாமதமான மட்டுறுத்தலுக்கு வருந்துகிறேன் மதுமிதா. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

cheena (சீனா) said...

சிவா - நன்றிக்கு நன்றி.

cheena (சீனா) said...

ரசிகனின் ரசிப்புத் தன்மை அருமை. நன்றி

நாகை சிவா said...

//மாற்றுக் கருத்தை சந்திக்க மன வலிமை வேண்டும் !//


//செய்வது எல்லாம் பயன் தரும் செயல்கள் தானா ?
நட்ட விதைகள் அனைத்தும் முளைப்பதில்லை !//

:))))

cheena (சீனா) said...

வருகைக்கு நன்றி நாகை சிவா

ரசிகன் said...

// ஆய்ந்து பார்த்து முரண்படு !// இங்க நெறய பேரு எது சொன்னாலும் ஆராயாம முரண்படராய்ங்களே..

ரசிகன் said...

// ஏற்கத் தக்கதல்ல எனில் தள்ளிப் போடு !
காலம் மாறினால் கருத்துகள் மாறும் !//

ரொம்ப உண்மை.ஜயா.. எனக்கும் கூட இந்த "ஆறப் போடும்" உத்தி பல சமயங்களில் பலன் கொடுத்திருக்கு..

ரசிகன் said...

// மாற்றுக் கருத்தை சந்திக்க மன வலிமை வேண்டும் !//.இது இல்லாமத்தா வன்முறைக்கு தாவராய்ங்க..

ரசிகன் said...
This comment has been removed by the author.
ரசிகன் said...

// முயற்சிகள் தவறலாம் ! முயல்வது தவறலாமா ?// சிந்தனையை தூண்டும் கேள்வி..நல்லா சிந்திச்சிருக்கிங்க..

cheena (சீனா) said...

ரசிகன்,

நன்று - வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி

தூக்கம் வராமல் கிறுக்கியது அது - மனதில் பல குழப்பங்கள் வரும் போது சில சமயம் சிந்தனைகள் தெளிவாக இருக்கும். கடைப் பிடிக்க முடியுமா ?

பனிமலர் said...

நல்ல தொகுப்பு

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பனிமலர்

மங்களூர் சிவா said...

//
ஒவ்வோர் அரிசியிலும்
பெயர் எழுதப் பட்டிருக்கிறதாம் !
தேட வேண்டும் ! அதுவாக வாராது !
//
you r very correct

cheena (சீனா) said...

நன்றி சிவா - கடும் உழைப்பினால் தான் அந்த அரிசி கிடைக்கும்.

Sanjai Gandhi said...

நமஷ்கார்..
நான் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிப் படி தமிழ்மணம் கருவிப் பட்டையை நான் நிறுவிய உடன் உங்களுக்கு தெரியப் படுத்த வந்திருக்கிறேன்.

விதயா கலைவானி ஆண்ட்டியின் வழிகாட்டுதலின் பேரில் குழலி அவர்களின் பக்கத்துக்கு சென்று நோகாமல் நோம்பி கும்பிட்டுவிட்டேன்.

http://kuzhali.p.googlepages.com/ இந்த பகத்திற்கு போங்க.. ரொம்ப சுலபமா சோழிய முடிச்சிடலாம். :)

Geetha Sambasivam said...

நீங்க கேட்டதுக்காக ஸ்மைலி நம்பர் 1 :D :D : D நம்பர் 2 :)))))))))))))
போதுமா? :)))))))

cheena (சீனா) said...

கீதா இந்த ஸ்மைலீ எப்டி போடுறது -நீங்க போடுற ஸ்ம்மைலீ எல்லாம் வர்ரது இல்லே

cheena (சீனா) said...

நன்றி பொடியன் - நானும் போட்டுடறேன் - வித்யா இருக்க கவலை ஏன்

ambi said...

//தொடர்புடைய எண்ணங்களா ??
தொடர்பில்லாத எண்ணங்களா ??
//

நீங்க அடிக்கடி கீதா பாட்டியின் எண்ணங்களுக்கு விசிட் செயறீங்கனு நல்லா தெரியுது. :p

cheena (சீனா) said...

ஆகா ஆகா நன் அடிக்கடி கீதா வூட்டுக்குப் போறது அம்பிக்கே தெரிஞ்சுடுச்சா ? ம்ம்ம்ம்ம்ம்ம்

ரசிகன் said...

சீனா சாருக்கும்,குடும்பத்திற்க்கும் ,நண்பனின் "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்"
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

cheena (சீனா) said...

அன்பு நண்பன் ரசிகனுக்கு - இனிய மனங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள். வாழ்த்துகளுக்கு நன்றி.

Divya said...

கிறுக்கல்கள் கலக்கல்ஸ்!!
என் வலைப்பதிவிற்கு வந்தமைக்கு மிக்க நன்றி!!

நானானி said...

ஹையோ!!கொஞ்சம் கண்ணைக்கட்டுதே, சீனா! தத்துவங்களும் புத்திமதிகளும் சுவை.
அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்!!

cheena (சீனா) said...

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி திவ்யா - நானானி

சதங்கா (Sathanga) said...

சீனா,

ஆழ்ந்த கிறுக்கல்கள் ... மன்னிக்கவும் கருத்துக்கள் =:)

ஓவ்வொரு தலைப்பைப் பற்றியும் நிறைய எழுதலாம். எல்லாவற்றையும் ஒருங்கே சுருக்காகத் தொகுத்தமை பாராட்டத்தக்கது.

cheena (சீனா) said...

நன்றி சதங்கா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

//delphine said...
Nice kavithai.//

I do not understand
the post relates to some thoughts emerged from my mind. Its not a KAVITHAI.

do u understand tamil ??

குமரன் (Kumaran) said...

அருமை சீனா ஐயா. மிக அருமையான கருத்துகளைத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். வாழ்க்கையில் நினைவில் வைத்திருந்து செயல்படுத்த வேன்டிய சிந்தனைகள். மிக்க நன்றி.

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமரன்

நிஜமா நல்லவன் said...

/நடுவதற்கே பிறந்தவர்கள் பலர் !
அனுபவிப்பதற்கே பிறந்தவர்கள் சிலர் !/


கிறுக்குவது சில பேர்
படிப்பது பல பேர்
ரொம்ப நல்ல பதிவு தான்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நல்லவன் ( அதென்ன நெஜமாவே ? யாரும் சந்தேகப் படுறாங்களா என்ன)

குட்டிபிசாசு said...

சீனா ஐயா,

நம்ம NTR-ஐ இந்த வசனங்களைப் பேசச்சொல்லி கேட்டால், கீதோபதேசம் போல இருக்கும்தானே? :)

இப்ப எல்லாம் நிறைய சுயமுன்னேற்றப் புத்தகங்கள் வருகிறது. அவருக்கான மொத்த தலைப்புகளையும் அடுக்கிவிட்டீர்கள்!!

cheena (சீனா) said...

நன்றி குட்டி பிசாசு - என்.டி.யார் பேசுவது எல்லாமே கீதோபதேசம் தான். அவரது மந்தகாசப் புன்னகைமறக்க முடியுமா என்ன