ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday 28 August 2007

அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 4

திலகர் திடலை அடுத்து தஞ்சையின் புகை வண்டி நிலையம் இருந்தது. அது தஞ்சை சந்திப்பு என அழைக்கப் பட்டாலும் அங்கு வந்து போகும் புகை வண்டிகளின் எண்ணிக்கை அக்காலத்தில் குறைவு தான். நான் தஞ்சையில் இருந்த வரை புகை வண்டியில் சென்றதாக நினைவு இல்லை.


நகரில் நகரப் பேருந்துகளும், ஒற்றை மாட்டு வண்டிகளும் நகர் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும். நகரில் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு வசதியாக இருக்கும். அம் மாட்டு வண்டியில் வைக்கோல் விரித்து அதன் மேல் ஒரு விரிப்பும் போடப்பட்டிருக்கும். எத்தனை பேர் வேண்டுமானாலும் செல்லலாம். பின் புறம் அமர்ந்து காலைத் தொங்க விட்டுக் கொண்டு பயணம் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.


நகரின் அரசு பொது மருத்துவ மனையின் விபத்து மற்றும் அவசரப் பிரிவு இருந்த கட்டடத்தின் பெயர் தாமஸ் ஹால். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தஞ்சையை விட்டு செல்லும் வரை அதனை நானும் மற்றவர்கள் சொல்லிக் கொடுத்தபடி தாஜ் மகால் என்று தான் அழைத்தேன். அங்கு பல தடவை சென்ற அனுபவம் உண்டு. அடிக்கடி எங்கள் வீட்டில் யாரையாவது ஏதாவது பூச்சி அல்லது தேள் கடித்துவிடும். உடனே தாஜ் மகாலுக்குத் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். அந்த மருத்துவ மனையைச் சார்ந்த மருத்துவர்களின் நட்புடன் கூடிய மருத்துவ சிகிச்சை முறை எனக்குப் பிடித்த ஒன்று. தற்கால பொது மருத்துவ மனைகளைச் சார்ந்த மருத்துவர்கள் மருத்துவம் செய்யும் முறை தற்காலச் சூழ்னிலைக்கேற்ப பல மாற்றங்களை அடைந்து விட்டது.


நகரின் பேருந்து நிலையம் நகரின் மையப் பகுதியில் இருந்தது. நகரப் பேருந்துகளும் மற்ற வெளி இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் ஒரே நிலையத்தில் தான் வந்து சென்றன. சில தடவைகள் தஞ்சையில் இருந்து மதுரைக்குப் பேருந்தில் தனியாகச் சென்றதுண்டு. மதுரையின் புகழ் வாய்ந்த பேருந்து டிவிஎஸ் தஞ்சை-மதுரைக்கு 5 மணி நேரத்தில் செல்லும். தஞ்சை - கந்தர்வகோட்டை - புதுக்கோட்டை - திருப்பத்தூர் - மேலூர் - மதுரை என அப் பேருந்து செல்லும். கந்தர்வ கோட்டையில் முந்திரிப் பருப்பு வாங்கிச் சாப்பிடவதற்கென்றே எங்கள் வீட்டில் தனியாக காசு கொடுப்பார்கள். முந்திரிப் பருப்பைத் தவிர வேறு ஒன்றும் வாங்கிச் சாப்பிட மாட்டேன்.

நகரில் காய்கறி அங்காடிகள் பழ அங்காடிகள் மற்ற அங்காடிகள் நிறைந்த பகுதியும் உண்டு. வாரம் ஒரு முறை வீட்டில் உள்ள பெரியவர்களுடன் அவ்வங்காடிகளுக்குச் சென்று தேவையானவற்றை வாங்கி வருவதுண்டு.


நகரில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு யாகப்பா தியேட்டர் மற்றும் ஞானம் தியேட்டர் சென்றதுண்டு. சம்பூர்ண ராமாயணம் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பரதனாக நடித்த படம். என் டி ராமாராவ் அமைதியாக அழகாக அருமையாக இராமபிரானாக நடித்த படம். பாடல்கள் நிறைந்த படம்.

அக்காலத்தில் கல்கண்டு மறைந்த தமிழ்வாணன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட வார இதழ். பல துணுக்குகள் நிறைந்த இதழ். மிகக் குறைவான பக்கங்கள் கொண்ட மிக மலிவான இதழ். வாரம் தவறாமல் படிப்பதுண்டு. தமிழ் வாணண் எழுதிய சங்கர்லால் என்ற துப்பறியும் நாவல் மற்றும் சில நாடகங்கள், மற்ற துப்பறியும் நாவல்கள், சிறுகதைகள் என நிறையப் படித்ததுண்டு.


துப்பறியும் நிபுனர் சங்கர்லால் மற்றும் அவரது உதவியாளர் கத்தரிக்காய் ஆகியோர் சங்கர்லாலின் மனைவியுடன் சேர்ந்து துப்பறியும் கதைகள் பல தடவைகள் படித்ததுண்டு. அக்காலத்தில் தமிழிலும் ஆசிரியர்கள் பலர் எழுதிய துப்பறியும் கதைகள் படிப்பதுண்டு. தெருவிளக்கு என்ற மர்மங்கள் நிறைந்த தொடர் கதை ஒரு வார இதழில் தொடர்ந்து படித்ததுண்டு.


வைகுண்ட ஏகாதசி மற்றும் சிவராத்திரி அன்று பரமபத சோபனம், தாயக்கட்டம், ஆடு புலி ஆட்டங்கள் ஆடி மகிழ்ந்ததுண்டு.


அக்காலத்தில் தான் ஆங்கில முறையைப் பின்பற்றி அளவு முறைகள் மாற்றப்பட்டன. அங்குலம், அடி, கஜம், பர்லாங், மைல் என்ற அளவு முறைகள் மில்லி மீட்டர், சென்டி மீட்டர், மீட்டர், கிலோ மீட்டர் என்று தசம முறைக்கு மாறி அந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் பட்ட பாடு - புதிய முறைக்கு மாறுவதற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.


நாணயங்கள் பைசா அணா ரூபாய் என்பது நயா பைசா ரூபாய் என தசம முறைக்கு மாறியதும் அந்த கால கட்டம் தான். ஒரூ ரூபாய் என்பது 100 நயாபைசா என்றும் கால் ரூபாய் என்பது 25 பைசா என்றும் ஒரு அணா என்பது 6 பைசாவாகவும் மாறியது. கால் ரூபாய் எனில் 25 பைசா கொடுக்க வேண்டும். ஆனால் அதே கால் ரூபாய்க்கு நிகரான 4 அணா என்பது 24 பைசா வாகவும் ஒரு குழப்பம் நிலவியதும் அக்காலத்தில் தான். அக் காலத்தில் ஒரு பைசா இரண்டு பைசா அய்ந்து பைசா பத்து பைசா இருபத்துஅய்ந்து பைசா அய்ம்பது பைசா ஒரு ரூபாய் என நாணயங்கள் புதியதாக வந்து பழைய நாணயங்களான காலணா (அதிலும் இரண்டு வகை - ஓட்டைக்காலனா என்பது மிகப் பிரசித்தம்) அரையணா ஒரு அணா இரண்டணா நாலணா எட்டணா ஒரு ரூபாய் ஆகியனவற்றை மாற்றம் செய்தன.


தொடரும்


சீனா - 28082007

22 comments:

தருமி said...

my stay at tanjore was from 1966-70 at mission mettu street.

why dont you go thru this too?

cheena (சீனா) said...

அய்யா தருமி அவர்களே !! நன்றி - தங்கள் பதிவு படித்தேன் - அருமையாக விளக்கமாக இருந்தது.
அந்தக் காலத்தில் அஞ்சலகம் சென்று பல தடவை புதுப் புது காசுகளாக வாங்கி வந்து செலவு செய்யாமல்
பதுக்கி வைத்தது எல்லாம் நினைவில் வருகிறது. பழைய காசுகளை சீக்கிரமே மாற்றி விட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் (இருந்ததா ??) வேறு.

நான் ஒரு பத்தியில் சொல்லி இருந்ததை தாங்கள் ஒரு
பதிவில் சொல்லி இருக்கிறீர்கள். பதிவு அனுபவம் பேசுகிறது. நகைச்சுவை - விளக்கம் - நையாண்டி என எல்லாம் உள்ள தங்கள் பதிவை நான் முன்பே படித்திருந்தால் என் பதிவு வந்தே இருக்காது. ஆனால் நான் இன்னும் எழுதுவதற்கு நிறைய இருக்கிறது - பார்க்கலாம்

மீண்டும் நன்றி

Subbiah Veerappan said...

///ஒற்றை மாட்டு வண்டிகளும் நகர் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும். நகரில் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு வசதியாக இருக்கும். அம் மாட்டு வண்டியில் வைக்கோல் விரித்து அதன் மேல் ஒரு விரிப்பும் போடப்பட்டிருக்கும். எத்தனை பேர் வேண்டுமானாலும் செல்லலாம். பின் புறம் அமர்ந்து காலைத் தொங்க விட்டுக் கொண்டு பயணம் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும///

இந்த சுகமெல்லாம் இப்போது கிடையாது.
இருந்தால் அது எழுத்து வடிவில்தான்
அதுவும் உங்களைப் போல் ஒரு நல்ல ஊள்ளம் கொண்டவர் எழுதி வைத்தால்தான் உண்டு

ந்ன்று! சிறப்பாக உள்ளது!

cheena (சீனா) said...

அய்யா சுப்பையா அவர்களே
வருகைக்கு நன்றி

சதங்கா (Sathanga) said...

உங்கள் எழுத்துக்களும் இயல்பாகவும், எளிமையாகவும் இருக்கின்றன.

சுப்பையா வாத்தியாரின் ஜோதிடப் பக்கத்தில் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து வந்திருக்கிறேன்.

தஞ்சை, மதுரை - இவையிரண்டும் எனக்கும் பிடித்த ஊர்கள். மதுரையில் பள்ளிக் கல்வியை ஆரம்பித்து, பின்னர் ப்ராஜக்ட் சமயத்தில் சில மாதங்கள் தஞ்சையில் வசித்த அனுபவம் உண்டு.

தினமும் ஒரு முறையாவது பெரியகோவிலுக்குச் செல்வது வழக்கம். அதன் பிரமிப்பு, சொல்லில் அடங்காது. இந்தத் தாக்கத்தில் வைராக்கியம் என்று ஒரு கதை எழுதி எங்கள் தமிழ் சங்க வலையில் பதிந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள். தஞ்சையின் நினைவுகள் ஒரு பதினைந்து ஆண்டுகள் முன்பு.

cheena (சீனா) said...

சதங்கா ....
நன்றி - நல்லதொரு கருத்துக்கு
தங்களின் கதை படித்துப் பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். மற்ற பதிவுகளையும் படிக்கிறேன் நேரம் கிடைக்கும் போது

jeevagv said...

இப்போதுதான் பார்த்தேன் - பதிவின் முகவரியை குறித்துக் கொள்கிறேன்.

தமிழ்வாணன் பற்றியதொரு பதிவு இங்கே - பார்க்கவும்.

cheena (சீனா) said...

நன்றி ஜீவா அவர்களே !! தமிழ்வாணனைப் பற்றிய பதிவினைப் பார்த்து படித்து பின்னூட்டமும் இட்டு விட்டேன்.

லெனின் பொன்னுசாமி said...

நல்ல பதிவு ஐயா. அதிக விசயங்கள் தெரிந்துக்கொண்டேன்.

cheena (சீனா) said...

வருகைக்கு நன்றி பூக்குட்டி - அடிக்கடி வாருங்கள் - நிறைய எழுதுகிறேன்

குமரன் (Kumaran) said...

நீங்கள் மாட்டு வண்டியைப் பற்றி சொன்ன போது நாங்கள் பழனிக்குச் சென்ற போதெல்லாம் பேருந்து நிலையத்திலிருந்து அடிவாரத்திற்கு குதிரை வண்டியில் சென்றது நினைவிற்கு வந்தது. இப்போதும் பழனியில் குதிரை வண்டிகள் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.

சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தை இந்த முறை மதுரைக்குச் சென்ற போது கீஷ்டு கானத்தில் வாங்கி வந்தேன். மகளுடன் உட்கார்ந்து இரு மாதங்களுக்கு முன் முழுப்படத்தையும் பார்த்தோம். :-)

என் தந்தையார் இன்றைக்கும் மைல், பர்லாங்க் என்று தான் சாலையின் தூரங்களைச் சொல்லுவார். அம்மாவழி பாட்டியும் அப்படியே.

25 நயா பைசாவை நாலணா என்றும் 50 நயா பைசாவை எட்டணா என்றும் நானும் சிறு வயதில் சொல்லியிருக்கிறேன். இன்றும் மதுரையில் அந்த வழக்கம் உண்டு என்று நினைக்கிறேன்.

ரசிகன் said...

உங்க எழுத்த படிக்கும் போது ,எனக்கும் மலரும் நினைவுகள் வருகிறது.காரணமே தெரியாமல் 25 பைசாவ 4 அணா இன்னு நானும் சொல்லியிருக்கேன்.செய்திக்கு நன்றி.

cheena (சீனா) said...

நண்ப குமரா !
மாட்டு வண்டி குதிரை வண்டி எல்லாம்
இப்பொழுதும் இருக்கிறதா தெரியவில்லை. அந்தக் காலத்தில் அது ஒரு இனிய அனுபவம்.

மைல் பர்லாங், நாலணா, எட்டணா, சம்பூர்ண ராமாயணம் எல்லாம் மலரும் இனிய நினைவுகள் - முந்தைய தலைமுறையினருக்கு !

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

cheena (சீனா) said...

ரசிகன் said...
//உங்க எழுத்த படிக்கும் போது ,எனக்கும் மலரும் நினைவுகள் வருகிறது.காரணமே தெரியாமல் 25 பைசாவ 4 அணா இன்னு நானும் சொல்லியிருக்கேன்.செய்திக்கு நன்றி.//

வருக்கைக்கு நன்றி!

மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாமே !

மங்களூர் சிவா said...

///ஒற்றை மாட்டு வண்டிகளும் நகர் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும். நகரில் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு வசதியாக இருக்கும். அம் மாட்டு வண்டியில் வைக்கோல் விரித்து அதன் மேல் ஒரு விரிப்பும் போடப்பட்டிருக்கும். எத்தனை பேர் வேண்டுமானாலும் செல்லலாம். பின் புறம் அமர்ந்து காலைத் தொங்க விட்டுக் கொண்டு பயணம் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும///

நான் சின்ன பையனாக இருக்கும் போது என் கிராமத்திலும் இருந்தது. இப்போது என் கிராமமே மாறிப்போய்விட்டது.

cheena (சீனா) said...

ஆமாம் சிவா. காலங்கள் மாற மாற கிராமங்களூம் மாறுகின்றன

குட்டிபிசாசு said...

//காலணா (அதிலும் இரண்டு வகை - ஓட்டைக்காலனா என்பது மிகப் பிரசித்தம்) அரையணா ஒரு அணா இரண்டணா நாலணா எட்டணா ஒரு ரூபாய் ஆகியனவற்றை மாற்றம் செய்தன.//

என்னோட அப்பாவும் இவைப்பற்றிக் கூறியுள்ளார்

cheena (சீனா) said...

வருகைக்கு நன்றி அருண்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நான பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ..... பாடல் நினைவுக்கு வந்தது.

நான் சொல்லவந்தவற்றையெல்லாம் நீங்களே அழகாகச் சொல்லிவிட்டீர்கள், ஐயா.

எனக்கும் முந்திரிப்பருப்பு சாப்பிடப்பிடிக்கும். நானும் தமிழ்வாணன் கல்கண்டு படித்துள்ளேன்.

சங்கர்லால் துப்பறிகிறார் படித்துள்ளேன்.

நானும் அந்தக்கால சிவாஜி ரசிகராக இருந்தவன் தான்.

மாட்டுவண்டி குதிரை வண்டி பயணங்கள் மேற்கொண்டுள்ளேன்.

அணா பைசா, மெட்ரிக் அளவு முதலிய எல்லாக்குழப்பங்களிலும் நானும் சிக்கித்தவித்து வந்தவனே.

நமக்குள் இவ்வாறு நிறைய பொருந்த்தங்கள் இருப்பது ஆச்சர்யமாகவே உள்ளது.

நல்ல பதிவுக்கும், பகிர்வுக்கும் நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் வை.கோ - நமக்குள் இவ்வளவு ஒற்றுமையா - ஆச்சர்யம் - கிரேட் மென் திங்க் அலைக் - அல்லது செல்டம் ஃபூல்ஸ் டிஃபர் - எப்படியாயினும் சரி . நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

தி.தமிழ் இளங்கோ said...

அன்பின் சீனா அவர்களுக்கு வணக்கம்! ஏற்கனவே இந்த பதிவையும் இதனைச் சார்ந்த உங்கள் தஞ்சையில் இருந்த மலரும் நினைவுகளையும் படித்து இருக்கிறேன். இந்தவார வலைச்சரம் பொறுப்பு ஆசிரியை ”கோவையிலிருந்து அகிலா” அவர்களால், இன்று மறுபடியும் படிக்க ஒரு வாய்ப்பு.
இந்த பதிவில் தஞ்சை புகைவண்டி நிலைய்ம், ஒற்றை மாட்டு வண்டி, அந்தக்கால பேருந்துகள், தஞ்சை பொது மருத்துவமனை, தாமஸ் மகால் > தாஜ் மகால், பெருந்து நிலையம், கந்தர்வகோட்டை முந்திரி பருப்பு, யாகப்பா மற்றும் ஞானம் தியேட்டர்கள், சங்கர்லால், காலணா அரையணா ஒரு அணாக்கள் – என்று நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள். இதில் தாஜ்மகால் தவிர மற்ற எல்லாம் எனக்கும் சந்தோஷமான விஷயங்கள்தான். நீங்கள் என்னைவிட மூத்தவர் என்று நினைக்கிறேன். நான் பிறந்தது 1955. நன்றி!

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் இளங்கோ - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - தாமஸ் மகால் இல்லை அது தாமஸ் ஹால் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா