வலை உலகில் வாரந்தோறும் தொடர்ச்சியாகப் பதியப் பட்ட பதிவுகள் வலைப் பதிவர்கள் பலரை அறிமுகப் படுத்தி வலைப்பூவாக மலர்ந்தது. பூக்களைக் கொண்டு தொடுக்கப்படுகின்ற பூமாலை போல் வலைக் கதம்பமாக வலைஞன் என்ற பதிவரால் 11.11.2006ல் பொது என்ற பிரிவில் வலைப் பூக் கதம்பம் தொடங்கப் பட்டது.
2007 பிப்ரவர் 22ல் தமிழ்ப் பதிவுகள் என்ற தலைப்பில் பொது என்ற பிரிவில் சிந்தா நதி தமிழ் வலைபதிவுலகம் பற்றி பதிவிட்டிருக்கிறார். அதில் 2003 ஜனவரி முதல் நாள் கார்த்திக் ராம் என்ற பதிவரால் துவங்கப் பட்ட தமிழ் வலைப் பதிவுலகம் 2007ல் சில ஆயிரம் பதிவுகளுடன் முன்னேறி இருக்கிறது.
ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு எழுதிக் கொண்டிருந்த பதிவர்கள் தமிழிலும் எழுதலாம் என்று தெரிய வந்த உடன் ஆர்வத்துடன் எழுதத் தொடங்கினர்.
26.02.2007ல் வலைச்சரம் தொடங்கப்பட்டது.
தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பக் காலத்தில்வலைப்பதிவுகளின் பட்டியலை உருவாக்கி தமிழ் வலைப் பதிவாளர்களை ஒருங்கிணைத்த சந்திரமதி கந்தசாமி இன்னொரு அற்புதமான முயற்சியையும் செய்திருந்தார். அதுதான் வலைப்பூ இதழ். இதில் வாரம் ஒரு வலைப்பதிவர் வலைப்பூ ஆசிரியராகப் பங்கேற்று மற்றவர்களுடைய வலைப்பதிவுகளை விமர்சனம் செய்து அறிமுகம் செய்து வைப்பார்கள். நிறைய புதிய வலைப்பதிவாளர்கள் அதன்மூலம் அறிமுகப் படுத்தப் பட்டனர்.
இந்த முயற்சியின் முதல் கட்டமாக வலைச்சரத்தின் முதலாவது ஆசிரியர் பொறுப்பை பதிவர் பொன்ஸ்மேற்கொண்டார்.
வலைச்சரத்தின் 50வது பதிவினை முத்து இலட்சுமி எழுதி இருக்கிறார்.
அதன் சுட்டி : http://blogintamil.blogspot.in/2007/05/50.html
தொடரும்.......... பகுதி : 02
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
15 comments:
சோதனை மறுமொழி
வரலாறுகளின் துவக்கம் வாசிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
தொடரட்டும் இந்தப்பணிகள்.
வலைச்சரத்தின் வரலாறு சுவையாக இருக்கிறது.
அடுத்த பகுதிக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
வலைச்சர வரலாற்றிமை ஆர்வமுடன் தொடர்கிறேன் அய்யா!
அறியத் தருகின்றமைக்கு நன்றி!
தொடருங்கள்! நன்றி!
நன்றி ஐயா
தொடருங்கள்
அன்புடையீர்,
வணக்கம்.
http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html
மேற்படி பதிவினில் அறிவிக்கப்பட்டுள்ள தங்களுக்கான பரிசுத்தொகை இன்று 10.11.2014 திங்கட்கிழமை தங்களின் வங்கிக்கணக்கினில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களுக்கான பணம் கிடைக்கப்பட்ட விபரத்தை தாங்கள் உறுதிசெய்து மேற்படி பதிவினில் ஓர் பின்னூட்டம் கொடுத்தால் மேலும் மகிழ்ச்சியடைவேன்.
அவசரம் இல்லை. தங்களால் முடிந்தபோது, செளகர்யப்பட்டபோது உறுதி செய்தால் போதுமானது.
அன்புடன் கோபு [VGK]
பொன்ஸ் முதலில் செய்த பொன்னான வேலையை இன்றும் பலர் தொடர்வது மகிழ்ச்சி தருகிறது !
த ம +1
வலைச்சர வரலாற்றினை விரிவாகத் தருகின்றமைக்கு மகிழ்ச்சி.. தொடர்கிறேன் ஐயா!
வரலாறுகளைப் புரட்டிப் பார்ப்பது என்பதும் ரசிக்க வைக்கும் ஒன்று.
அதுவும் வலைச்சரத்தின் வரலாறை தங்கள் மூலமாக படிக்க ஆரம்பிப்பது சிறப்பு...
தொடருங்கள் ஐயா... தொடர்கிறோம்...
வலைச்சரம் வரலாற்றுத் தொடரினை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.
த.ம.4 (நேற்று நான் இட்ட இந்த கருத்துரை தொழில்நுட்பம் காரணமாக வரவில்லை)
மேலும் அறிய காத்திருக்கிறேன்...
வலச்சரம் எப்படித் தொடங்கியது தொடர்ந்தது வெற்றி நடை போடுகிறது எனபதை அனைவரும் அறியும் வண்ணம் பதிவிடுவதற்கு நன்றி
எந்த ஒரு சாதனையையும் வரலாற்று கோணத்தில் பார்க்கும்போது மனது நிறைவாக இருக்கும். அவ்வாறே வரலாற்றின் துவக்கம் அருமையாக உள்ளதை அறிகிறேன். அதனைத் தாங்கள் பகிரும் விதம் அதை விட சிறப்பாக உள்ளது.
அருமையான ஆரம்பம், தொடருங்கள் ஐயா....
Post a Comment