அன்பின் நண்பர்களே !
அருமை நண்பர் தி.தமிழ் இளங்கோ என்னை எனது முதல் கணினி அனுபவம் என்ற தொடர் பதிவினில் எழுத அழைத்திருந்தார். ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆகி விட்டனவே - ஒன்றும் நினைவில் இல்லையே எனச் சிந்தித்தேன். பிறகு மலரும் நினைவுகளாக இருந்த நிகழ்வுகளை அசை போட்டு ஆனந்தித்து எழுதலாமெ என நினைத்தேன் . சிந்தித்து சிந்தித்து - தலையைச் சொறிந்து சொறிந்து எழுத ஆரம்பித்தேன்.
வங்கியில் 1974 - 2010 பணி புரிந்து 2010ல் பணி நிறைவு செய்து தற்போது ஓய்வாக, மதுரையில் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு இருக்கிறேன்.
வங்கியில் கணினி அறிமுகப் படுத்த வேண்டும் என்ற கொள்கையினை எடுத்து பல்வேறு கணினி நிபுணர்களிடம் ஆலோசித்து வங்கி ஒரு முக்கியமான முடிவினை எடுத்தது.
எந்த ஒரு வங்கியிலும் இல்லாத புதிய கொள்கையினை எங்கள் வங்கி எடுத்தது. 1984ல் எடுத்த கொள்கை இன்று வரை கடைப் பிடிக்கப் படுகிறது.
அக்கொள்கை என்னவெனில் - கணினியில் பயன் படுத்தப் படும், வங்கி கணினி மயமாக்கப்படத் தேவைப்படும் மென்பொருட்களை சந்தையில் கொடி கட்டிப் பறந்த பல் நிறுவனங்களிடம் இருந்து, மற்ற வங்கிகளைப் போல, விலைக்கு வாங்கிப் பயன் படுத்துவது இல்லை என்ற முக்கியமான கொள்கை.
அதற்குப் பதிலாக வங்கிக்குத் தேவைப்படும் மென்பொருட்களை, வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பணியாளர்களை வைத்துத் தயாரிப்பது என்ற முக்கியமான கொள்கையும் எடுக்கப் பட்டது.
அதன் படி வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பணியாளர்களை ஒரு தேர்வு வைத்துத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சியினை 90 நாட்களுக்கு அளித்து, பிறகு மென்பொருள் எழுதும் பொறுப்பினை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
அப்படித் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் 25 அலுவலர்களீல் நானும் ஒருவன்.
இந்த 25 அலுவலர்களில் ஒரிருவரைத் தவிர மற்றவர்களுக்கு கணினி பற்றிய ஸ்னானப்ராப்தி கூட கிடையாது.
முதல் மூன்று மாதங்களுக்கு - சென்னையில் நடக்கும் கணினித்துறையின் மென்பொருள் / வன்பொருள் கண்காட்சிகள், கணினி நிறுவனங்கள் நடத்தும் கூட்டங்கள், கணினித்துறையில் பணியாற்றும் நிபுனர்கள் வங்கிக்கு வந்து நடத்தும் கூட்டங்கள், அததனையிலும் இந்த 25 அலுவலர்கள் கலந்து கொண்டு கணினி பற்றிய அறிவு பெற வங்கி ஏற்பாடு செய்தது.
முதல் 90 நாட்களில் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சி - கோபால் புரொகிறாம் எழுதுவது எப்படி என்பது தான். அனைவருக்கும் கோபால் பற்றிய புத்தகம் வழங்கப் பட்டது - ராய் & தஸ்திதார் எழுதிய புத்தகம்.
பிறகு கப்யூட்டர் வாங்கும் பணி நடந்தது - அதுவும் இந்த முதல் மூன்று மாதங்களீலேயே நடந்தது. 25 பேருக்கு முதல் மாதம் 4 அல்லது 5 கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது. போட்டா போட்டி. CPM - ஆபரேட்டிங்க் சிஸ்டம், கறுப்பு வெள்ளை மானிட்டர் ஸ்கிரீன், எட்டு இன்ச் ஃப்ளாப்பி ட்ரைவ், தோசைக்கல் மாதிரி ஃப்ளாப்பி, இத்துடன் இருவிரல் மட்டுமே பயன் படுத்தி அக்கணினியினைப் பயன் படுத்தி ப்ரொகிராம் எழுதினோம்.
10 விரலும் பயன்படுத்த தட்டச்சு தெரியாது - இப்பல்லாம் புகுந்து வெளயாடுவோம்ல.
கோபாலில் புரொகிறாம், லோட்டஸ் தற்போதைய எக்செல் ஷீட்டின் முன்னோடி, டிபேஸ் தற்போதைய டேட்டா பேஸ்களீன் முன்னோடி, இப்பொழுது நினைத்துப் பார்த்தால் கூட சிரிப்பு வருகிறது. செக்ரட்டரி என்றொரு வேர்ட் பிராஸஸர். ஸ்விட்ச் தட்டிய உடன் 5 நிமிடங்களுக்கு " லோடிங் செக்ரட்டரி - பிளீஸ் வெயிட் " அப்படின்னு ஒரு மெசேஜ் ஸ்கீரின்ல நிக்கும் - நாம பொறுமையாக் காத்துக் கிட்டு இருக்கணூம்.
இப்ப இருக்கற மெயின் ஃப்ரேம் கம்பியூட்டர் அக்காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா ? 9 / 10 அடி உயரம் 3 /4 அடி அகலம் - டேப் ட்ரைவ் - கார்ட் ரீடர்..... இப்படி என்னவெல்லாமோ இருக்கும் - முழுவதும் குளிரூட்டப் பட்ட பெரிய அறையில் இருக்கும்.
அனைத்துப் புரொகிராம்களும் கார்டில் எழுதப்படும். கார்ட் பஞ்சிங் மெஷினில் ப்ரொகிராம் எல்லாம் கட்டளை கட்டளையாக பஞ்ச் செய்யப்பட்டு - கார்ட் ரீடரில் படிக்கப் பட்டு மெயின் ஃப்ரேம் கம்பியூட்டருக்கு அனுப்பப் படும். கணினி அறை கர்ப்பக் கிரகம் மாதிரி - குறிப்பீட்ட 3 அல்லது 4 அலுவலர்கள் தான் உள்ளே செல்லும் தகுதி பெற்றவர்கள். பல வண்ண விளக்குகள் மின்சாரத்தின் உதவியால் மின்னிக் கொண்டு இருக்கும்.
இது போதும்னு நினைக்கிறேன். போரடிக்கக் கூடாது.
இந்தியாவிலேயே எங்கள் ஒரு வங்கிதான் துணிந்து முடிவெடுத்து - கணினியின் மென்பொருள் - வங்கியின் அலுவலர்களால் எழுதப்பட்டு - 2650 கிளைகள் முழுவதையும் கணினி மயமாக்கி - அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து எந்தக் கிளையில் வேண்டுமானாலும் - மற்ற ஒரு கிளையில் கணக்கு வைத்திருப்பவர் இங்கு பரிமாற்றம் செய்து கொள்ள வசதி செய்து வாடிக்கையளர்களுக்குப் பல வித வசதிகள் செய்து கொடுத்திருக்கிறது.
எங்கள் வங்கி கணினி மயமானதில் - இன்றைய முன்னேற்றத்திற்குக் காரணமானவர்களீல் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
விடை பெறுகிறேன் நண்பர்களே !
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
69 comments:
//எங்கள் வங்கி கணினி மயமானதில் - இன்றைய முன்னேற்றத்திற்குக் காரணமானவர்களீல் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.//
அது.
நல்லா அசை போட்டு இருக்கிங்க.
இப்பல்லாம் புகுந்து வெளயாடுவோம்ல.///
ஐயா, இப்பவும் ரெண்டு விரல்ல தானே ஜாலம்....
நீங்களெல்லாம் அப்பவே அப்படியா? சூப்பர் மலரும் நினைவுகள்!
உங்கள் அனுபவ பகிர்வு அருமை ஐயா....
Neenga dbase la,work panni irukinganu ninaikarapa malaipa iruku . Oracle 6 la work panave kastapattutu oracle 10g la than work pannivenu velaiyellam vittu iruken man .
Neenga dbase la,work panni irukinganu ninaikarapa malaipa iruku . Oracle 6 la work panave kastapattutu oracle 10g la than work pannivenu velaiyellam vittu iruken man .
நல்ல அனுபவம்....
அருமை ஐயா... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
அந்த நாள் முதல் இந்த நாள் வரை நன்றாகவே அசை போட்டிருக்கிறீர்கள், ஐயா!
நாங்களும் அந்தக் காலத்துக் கணணி பற்றி (நீள அகலங்கள், பிளாப்பி) தெரிந்து கொண்டோம்.
நாங்கள் எல்லாம் தொடர் பதிவு என்று தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர் பதிவு எழுதியபோது நீங்கள் உங்கள் அனுபவங்களை சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் தந்திருக்கிறீர்கள். அருமை.
ஐயா...
முதல் கணினி அனுபவத்தை அழகாக அசைபோட்டிருக்கிறீர்கள்....
மலரும் நினைவுகளாய்...
அந்த நாள் ஞாபகம் அருமையாக எழுதியுள்ளீர்கள். கார்ட் பஞ்சிங் சிஸ்டம். ஓட்டைபோட பல உதவியாளர்கள். 10 அடி உயர 4 அடி அகல முரட்டு மெஷின்கள். தோசைக்கல்போல டிஸ்க்.
ஆஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா
இன்று பாருங்கள். தோசையின் ஒரு விள்ளல் போல கையில் வைத்துக்கொண்டு, எங்கு போனாலும் எதாவது ரகசியமாக தகவல்களைப் பரிமாற முடிகிறது.
எவ்வளவு மாற்றங்கள். ;)
பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
அன்பின் சீனா அவர்களுக்கு வணக்கம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களிடமிருந்து ஒரு பதிவு.
//அப்படித் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் 25 அலுவலர்களீல் நானும் ஒருவன். //
உங்கள் வங்கிக்குத் தேவைப்படும் மென்பொருட்களை உங்கள் வங்கியிலேயே உருவாக்குவது என்ற குழுவில் நீங்களும் இருந்தீர்கள் என்று அறியும்போது மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது. உங்கள் வங்கி வரலாற்றில் நீங்கள் செய்த பணி நிச்சயம் இடம் பெறும். சுருக்கமாக உங்கள் அனுபவக் கட்டுரையை தந்தீர்கள். பதிவுக்கு நன்றி!
உங்கள் கணினி அனுபவம் மிக அருமையாக அசைபோட்டு இருக்கிறீர்கள்
அட அருமை ஐயா உங்கள் அனுபவம்
தங்கள் காலத்து கணினியும், செயல்படும் முறையையும் அறிந்துகொள்ள முடிந்தது.
வங்கிக்காக நிரல் எழுதும் குழுவில் நீங்கள் இடம்பெற்றதைப் படிக்கும்பொழுது ஆச்சர்யமாக இருந்தது.
அப்படியானால் நீங்களும் ஒரு நிரலாளரா?
இன்னும் எத்தனை ஆச்சர்யமிக்க தகவல்கள் வைத்திருக்கிறீர்கள்?
சுவையான தகவல்கள் இருப்பின் அவற்றையும் பகிரலாமே!!
தங்களுடைய முதல் கணினி அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.
சுருங்க சொன்னாலும் விளங்கும்படி சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் வங்கியின் கணினிமயமாக்கத்தில் நீங்களும் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறீர்கள் எனக் கேட்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!
1984 லிலேயே கணிணி பயின்ற தாங்கள் எங்களின் முன்னோடிதான்! சுவையான அனுபவங்கள்! பகிர்வுக்கு நன்றி!
"இன்றைய முன்னேற்றத்திற்குக் காரணமானவர்களீல் நானும் ஒருவன்.." வாழ்த்துகள்.
நல்ல அனுபவம்.
கணினி அனுபவம் நன்றாக இருந்தது
சுவையான அனுபவம். சிறப்பாக இருந்தது
கோபால் எனக்கு மிகவும் அலர்ஜியான புரோகிறாம்... ஆயிரம் வரிகள் எழுதினாலும் ஒரு புள்ளி இல்லையென்றால் ஆயிரம் முறை திட்டும்....
எங்கள் வங்கி கணினி மயமானதில் - இன்றைய முன்னேற்றத்திற்குக் காரணமானவர்களீல் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
பெருமை மிகு பகிர்வுகள்.பாராட்டுக்கள்..!
\\எங்கள் வங்கி கணினி மயமானதில் - இன்றைய முன்னேற்றத்திற்குக் காரணமானவர்களீல் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.\\
ஆத்மார்த்தமான பகிர்வு. அந்நாளைய கணினி பற்றியும் அதில் தங்கள் செயல்பாடுகள் பற்றியும் விரிவாகவே அறியத் தந்துள்ளீர்கள். நன்றி ஐயா.
வங்கியின் மென்பொருள் தயாரிப்புக் குழுவிலேயே, தாங்களும் ஒரு அங்கத்தினர் என்ற ஒரு பெருமை போதும் ஐயா. வங்கியின் வரலாற்றில் தங்களுக்கும் ஒரு இடம் உண்டு, வலைப் பூவிலும் ஓர் இடம் நிச்சயமாய் இப்பொழுதே உண்டு. நன்றி
அன்புடையீர்!.. வணக்கம்!.. எனது தளத்திற்கு வருகை தந்து முதல் பதிவான விநாயகர் வணக்கத்தினை முன்னிட்டு என்னையும் வாழ்த்திய தங்களின் மேலான பெருந் தன்மையினை என்றும் என் நெஞ்சில் கொள்வேன்!.. தங்களின் வரவும் வாழ்த்தும் மேலும் சிறப்பினுக்கு என்னை இட்டுச் செல்லுமாக!... இன்று தங்களின் வலைத்தளத்திற்கு வந்தேன். நிறைவான நினைவு கூரல். பண்பட்ட அனுபவத்தின் அழகான அலங்கரிப்பு!... நன்றி ஐயா!.. நல்லதொரு அனுபவத்தினை வழங்கியமைக்கு!..
அன்பின் கோவி கண்ணன் - வருகைக்கும் கரத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் தமிழ்வாசி பிரகாஷ் - வருகைக்கும் கரத்தினிற்கும் நன்றி - இரகசியத்த எல்லாம் பப்ளீக்குல பேசாதே - சரியா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் நாமக்கல் சிபி - வருகைக்கும் கரத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் கண்ஸ் - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - ஆரகிள் பத்தா - ஹா ஹா ஹா ஹா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் நக்ஸ் - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் தனபாலன் - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் ரஞ்சன் நாராயணன் - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் ஸ்ரீராம் - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் குமார் - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் வை கோ -
அட - கார்ட் சிஸ்டம் - ஓட்டை போட ஒரு பட்டாளம் - நீள அகலம் - தோசைக் கல்லு -
உங்க பிரீயட்லேயே பாத்திருக்கீங்களா /
வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் தமிழ் இளங்கோ - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - எங்கள் வங்கியில் 1984 முதல் இன்று வரை வங்கியின் 2500 கிளைகளையும் இணைத்து - அனைத்துக் கிளைகளிலும் வங்கியாளர்களால் எழுதப்பட்ட மென்பொருளே பயன் படுத்க்தப் படுகிறது. 22 ஆண்டுகள் அத்துறையில் பணி யாற்றி இருகிறேன்.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் ஜலீலா கமால்- வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் பிரேம் - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் தங்கம் பழனி - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை - 22 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன் கணினித் துறையில் - கணினி கற்றுக் கொடுக்க ஏற்பாடுகள் செய்த வங்கிக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் சுரேஷ் - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் சுரேஷ் - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் மாதேவி- வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் சக்கரகட்டி - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் முரளிதரன் - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் ஸ்கூல் பையன் - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் இராஜ இராஜேஸ்வரி வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் கீத மஞ்சரி - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் ஜெயக் குமார் - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் நடன சபாபதி - வருகைக்கும் கருத்தினிற்கும் நன்றி -
எங்கள் வங்கி ஒன்றுதான் - 1984 முதல் இன்று வரை - 2500 கிளைகளையும் இணைத்து அனைத்துக் கிளைகளீன் தேவைகளையும், வங்கியாளர்களால் எழுதப்பட்ட மென்பொருளைப் - கணினியினைப் பயன் படுத்தி, பூர்த்தி செய்கிறோம்.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
oh super.
ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கூறி
சிறப்பித்ததற்கு மனம் நிறைந்த
இனிய அன்பு நன்றிகள் ஐயா..
மிகவும் ரசித்துப்படித்தேன்
//போட்டா போட்டி. CPM - ஆபரேட்டிங்க் சிஸ்டம், கறுப்பு வெள்ளை மானிட்டர் ஸ்கிரீன், எட்டு இன்ச் ஃப்ளாப்பி ட்ரைவ், தோசைக்கல் மாதிரி ஃப்ளாப்பி, இத்துடன் இருவிரல் மட்டுமே பயன் படுத்தி அக்கணினியினைப் பயன் படுத்தி ப்ரொகிராம் எழுதினோம்.
10 விரலும் பயன்படுத்த தட்டச்சு தெரியாது - இப்பல்லாம் புகுந்து வெளயாடுவோம்ல.//
அக்கால கணினிகளை நாங்கள் பார்த்ததில்லை,உங்கள் அனுபவம் மூலம் அறிந்தேன் நன்றி அய்யா !!
இன்று (02.09.2013 திங்கட் கிழமை) நாற்பதாவது ( 40 ) திருமண நாள். காணும் அன்பின் சீனா அவர்களுக்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். தங்கள் அனுபவத்தை படித்தேன். ஒரு முன்னோடியின் அனுபவம் இளையோருக்கும் பாடம் என்ற வகையில் அருமை
மிகத் தாமதமாகி கருத்துரைக்கிறேன் என்றாலும் இப்படி ஒரு அருமையான அனுபவப் பகிர்வினை வாசிக்கக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் எதிர் பார்க்கிறோம்.
அருமையானதோர் பதிவு
மதிப்பிற்குரிய சீனா அவர்களுக்கு வணக்கம். தங்களின் வலைப்பூவினைக் கண்டேன். அருமையான பின்னோக்கிய நினைவுகள். பதிந்த விதமும் அருமை. வலைச்சரத்தில் எனது வாழி நலம் சூழ வலைப்பூ பற்றிய அறிமுகம் வந்திருக்கிறது. அனைவருக்கும் எனது நன்றி.
அஷ்வின்ஜி.
Inviting you to the following blogs for your esteemed visit and comments:-
வாழி நலம் சூழ...
www.frutarians.blogstpo.in
வேதாந்த வைபவம்:
www.vedantavaibhavam.blogspot.in
வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக அருமை சார். என் அப்பாவும் வங்கி மேலாளர்தான். 2004 இல் ரிட்டயரானாங்க. அவங்களும் முதன் முறைய கணினியப் பார்த்துப் பயந்தாங்க.
ஆனா இப்ப என் அம்மா கணினியில் வெளுத்து வாங்குறாங்க. ஃபேஸ்புக், ப்லாக், ஷேர் ட்ரேடிங். பாடல்கள் வீடியோக்கள் எடுத்து அப்லோட் பண்றதுன்னு. :)
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : அ.பாண்டியன் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : அரும்புகள் மலரட்டும்
வலைச்சர தள இணைப்பு : சூரியனுக்கு டார்ச் அடிச்சு பார்த்திடலாமா!
வணக்கம்
ஐயா
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
அறிமுகம் செய்தவர்-மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன்
பார்வையிடமுகவரி-வலைச்சரம்
அறிமுகம்செய்த திகதி-18.07.2014
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் இந்த முதல் பதிவை மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன் மூலமாகத்தான் அறிந்தேன். முதல் பதிவே தங்களின் பெருமையை உணர்த்துகிறது. வாழ்த்துக்கள்.
Valuable information. Thanks for sharing the article
Villas in Trivandrum
Villas for sale in Trivandrum
Builders in Trivandrum
flats in Trivandrum
apartments in Trivandrum
Villas in Trivandrum near me
Post a Comment