ஒரு குழும நண்பர்கள் சந்திப்பில் - சந்தித்தவர்கள் பற்றிய ஒரு இடுகை இட்ட போது - சீனா என்பவரைப் பற்றிய ஒரு அறிமுகமாக இது எழுதப்பட்டது.
சீனா .... சீனா
எப்போது இடி இடிக்கும் ?
இல்லை !
எப்போது மின்னல் மின்னும் ?
இல்லை !
எப்போது காற்றடித்து மழை பெய்யும் ?
இயற்கை யாருக்குத் தெரியும் ?
தெரிந்தாலே தேவ இரகசியம் இல்லை !
இதைப் போல சீனா !
அது என்ன சைனா
என்று அவ்வப்போது
கேட்கத் தோன்றும் !
சிரித்த முகம் - சிந்தும் புன்னகை - சிறப்பே !
இருந்தாலும் இந்தச் சினம்
அவ்வப்போது தலை காட்டும் !
அந்தி மலைச் சாரலாய் !
எவர்க்கும் தெரியாது
என்ன மனநிலை என்று !
செய்வதெல்லாம் செயலே ! ஆம்
செயல்களே வழி பாடாய் சீரிய வழியில் !
நான் படித்தேன் குறள் ! ஆனால்
அதன் பாதை எல்லாம் அவர் செயல் !
கொடுப்ப தென்றால் பிடிக்கும் !
கோபுரமாய் கொடுக்கவே
உள்ளம் இனிக்கும் !
இருந்தாலும் எவர்க்கும்
தெரியாது இயக்கம் !
மனதுக்கு மட்டுமே தெரியும் !
மலர்ந்து மணப்பதுவே பயன் !
சொல்லாமல் செய்கின்ற
சோர்வற்ற வேலைகள் பல !
சோதனையை சாதனையாக்கும்
தத்துவம் தெரியும் !
வளர் தொழிலில் வழி காட்டும் பாங்கு !
வருவார் முகத்தில் தெரிகின்ற நம்பிக்கை !
வாங்குகின்ற பெயரெல்லாம்
வலக்கரம் செய்கின்ற வலிமையால் !
இதற்கு இலக்கணம் இல்லை !
இலக்கியம் உண்டு !
ஊரறிந்த உவகையினை
உளமறிந்து உவந்ததுண்டு !
தூக்கி விட்டுத் துணையாகி !
எடுத்தியம்பி எளிமையாய் !
ஏற்றமுற போற்றுமொழி
சொல்லி எங்கும் இனிக்கவே
இதயம் விரும்பும் !
கடிதோச்சி மெல்ல நகும்
காரியந்தான் அனைத்தும் !
சொல்லச் சிறந்த வழி
எளிமை ! எதிலும் இயல்பு !
இனிப்பதுவோ இதய மொழி !
எப்படியும் செயலாற்றும் ஏகலைவன் !
ஏக்கங்கள் ! தூக்கங்கள்! எதிர்த்தாலும்
ஏணியை விடாத ஐங்கரன் துணை !
ஆளும் ஆனைமுகன் அன்பன் !
அனைத்திலுமே அடக்கி வாசிக்கின்ற ஆற்றல் !
இரக்கத்திற்கும் ! இதயத்திற்கும் !
இறைமைக்கும் ! இலகுகின்ற
இன்முகம் இந்தச் சீனா !
---------------------------------
31 comments:
வாழ்த்துக்கள் ஐயா!
சீனா அய்யாவுக்கே அறிமுகமா...சிந்தனை வழிச்செயலும் சிந்தும் புன்னையும் என்றும் தொடர வாழ்த்துக்கள்.
தலைப்பை பார்த்தவுடன் சீனா அய்யா உங்களுக்கு அறிமுகம் தேவையா
என்று தான் கேட்க தோன்றியது
வாழ்த்துக்கள் அய்யா
அருமை. அறிமுகம் என்பதை விட அறியப்பட்டவருக்கு அன்பு கலந்த மரியாதை செய்துள்ளார் என்பது சரியாக இருக்குமோ? எழுதியவர் யார் என அறியத் தாருங்களேன்:)!
அன்பின் ராமலக்ஷ்மி - உண்மை - மிக மிக நெருங்கியவர் தான் எழுதினார். படிக்கும் போதெ புரிந்து விடும். நட்புடன் சீனா
அன்பின் பீர், கலாநேசன் மற்றும் சரவணன் = வருகைக்கும் கருத்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஆம், புரிந்ததை உங்கள் பதில் உறுதி செய்து விட்டது:)! எழுதியவருக்கும் தங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!
அருமை எழுதியவருக்கு வாழ்த்துக்கள்
//சீனா அய்யாவுக்கே அறிமுகமா//
ரிப்பீட்டு!
அன்பு சீனாவுக்கான அழகான அறிமுகம்.
உங்களை அருமையாக காட்டியிருக்கிறது.
நெல்லை பதிவர் சந்திப்பு போனீர்களா?
எனக்கு கலந்துக்க மிக ஆசை, ஆனால் உடல் நிலை இடம் கொடுக்கவில்லை.
எப்படியும் செயலாற்றும் ஏகலைவன் !
ஏக்கங்கள் ! தூக்கங்கள்! எதிர்த்தாலும்
ஏணியை விடாத ஐங்கரன் துணை !
ஆளும் ஆனைமுகன் அன்பன் !
அனைத்திலுமே அடக்கி வாசிக்கின்ற ஆற்றல் !//
சீனா - ஒரு அறிமுகம்"--வாழ்த்துக்கள் ஐயா!
சிவயசிவ
http://sivaayasivaa.blogspot.com
மிக அருமை. வாழ்த்துக்கள் சீனா சார். உங்களைப் பற்றி சரியாத்தான் சொல்லி இருக்காங்க.:)
”சீனா-அறிமுகம்” படித்தேன்.
தமிழ் வாசிக்கத்தெரிந்திருக்கும் பெரும்பாலானோர் அறிந்த முகத்திற்கும் அறிமுகம் தேவையாய் இருக்கிறதோ என நினைத்துக் கொண்டேன்.
//அறிஞன் இல்லை
கவிஞன் இல்லை
புலவன் இல்லை
தமிழ் கற்றவன் - அவ்வளவு தான்! //
இந்த “அடக்க” வரிகளில் தான் சீனா அய்யா இன்னும் பிரகாசமாக ஒளிர்வதாய் உணர்கிறேன்.
பிரபபஷ்கரன், ஜீவா, நானானி, இராஜராஜேஸ்வரி, ஜானகி ராமன் , தேனம்மை - அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் சத்ரியன் - இவ்வறிமுகம் ஒரு இணையக் குழுமத்தின நண்பர்கள் சந்திப்பில் - அவர்களது கட்டாயத்தின் பெயரில் - எனது துணைவியாரால் எழுதப்பட்ட ஒரு சிறு அறிமுகம். அவ்வளவே ! எனக்கு அறிமுகம் தேவை இல்லை - இருப்பினும் புதிய நண்பர்கள் குழுமத்தில் இணைந்த பொழுது தேவைப்பட்டது. ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நன்றி சத்ரியன் - நட்புடன் சீனா
சீனா அறிமுகம் கண்டேனே-நல்
செந்தமிழ்ச் சுவையை உண்டேனே
தேனாய் இனிக்கும் முக்கனியே-குளிர்
தென்றலே! முத்தே!பொன்மலரே!வானாய் விரிந்த வலைச்சரத்தில்-பலர்
வாழவும் வளரவும் தம்தரத்தில்
தானாய் அழைத்துத் தருகின்றீர்-நம்
தமிழை வளர்த்து வருகின்றீர்
புலவர் சா இராமாநுசம்
அன்பின் புலவர் சா இராமாநுசம் - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி - வலைச்சரத்தில் வாரம் ஒரு ஆசிரியரைத் தேர்ந்தெடுத்து, பொறுப்பளிக்கும் சாதாரண செயலுக்கு இவ்வளவு பெரிய பாராட்டா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
எப்படி சொல்ரதுன்னு தெரியல்லே.
அழகா உங்களைபற்றி சொல்லியிருக்காங்க அது உன்மையிலும் உண்மைதான் ஐயா. மேலும் தெரிந்து
கொண்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
கடிதோச்சி மெல்ல நகும்
காரியந்தான் அனைத்தும் !
சொல்லச் சிறந்த வழி
எளிமை ! எதிலும் இயல்பு !
இனிப்பதுவோ இதய மொழி !
எப்படியும் செயலாற்றும் ஏகலைவன் !
ஏக்கங்கள் ! தூக்கங்கள்! எதிர்த்தாலும்
ஏணியை விடாத ஐங்கரன் துணை !
ஆளும் ஆனைமுகன் அன்பன் !
அனைத்திலுமே அடக்கி வாசிக்கின்ற ஆற்றல் !
இரக்கத்திற்கும் ! இதயத்திற்கும் !
இறைமைக்கும் ! இலகுகின்ற
இன்முகம் இந்தச் சீனா !
புலவரே கவிதை அருமை வாழ்த்துக்கள் .நம்ம கடைக்கு வந்து காப்பி ரீ குடிச்சிற்றுப் போங்க .....
எழுதின களைப்புத் தீரும்.மிக்க நன்றி பகிர்வுக்கு ...
''..சீனா என்பவரைப் பற்றிய ஒரு அறிமுகமாக ...''மிக்க மகிழ்ச்சி இதை வாசிக்க கிடைத்துள்ளது. நன்றி
வேதா. இலங்காதிலகம்.
உங்களைப்பற்றிய கவிதை... உங்களது உள்ளம் பிரதிபலிப்பதாய் இருக்கிறது... பதிவுலகில் உள்ள பதிவர்களை தங்களது வ்லைசரம் மூலம் அறிமுகப்படுத்தி அவர்கள் மேலும் வளர்வதற்கு உறுதுணையாக இருக்கிறீர்... உங்களது இந்த சேவை தொடர்ந்து இந்த பதிவுலகத்துக்கு தேவை...அதற்கு ஆனைமுகனான ஐங்கரன் உங்களுக்கு எப்பொழுதும் பக்கபலமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.... வாழ்த்துக்கள்...அன்புடன் ராஜேஷ்
அன்பின் லக்ஷ்மி மேடம் - வருகைக்கும் கௌருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் அம்பாளடியாள் - வருகிறேன் உங்கள் வீட்டிற்கு - டீ சாப்பிட - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் கோவைக்கவி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் ராஜேஷ் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
மனிதர்களின் பெருமையானவர்களில் முக்கியமானவர் நீங்க. காரணம் இன்னும் 50 வருடங்கள் கழித்து வலைதளம் அறிமுகம் வேண்டும் என்று வருபவர்களுக்கு வலைச்சரம் ஒன்றே போதுமானது. அதற்குள் நுழைந்தால் படித்து முடிக்கவே அடுத்த பத்து வருடங்கள் தேவைப்படும்.
எல்லாப்புகழும் சீனா அவர்களுக்கே.
அன்பின் ஜோதிஜி - நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை தந்தமைக்கு நன்றி - இன்னும் 50 வருடம் - அடேயப்பா - ஆசைக்கு அளவே இல்லை ஜோதிஜி - ம்ம்ம்ம் கருத்துகும் நன்றி ஜோதிஜி - நல்வாழ்த்துகள் ஜோதிஜி - நட்புடன் சீனா
புரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி ஐயா
//இருந்தாலும் இந்தச் சினம்
அவ்வப்போது தலை காட்டும் !//
இந்த விசயத்தை மட்டும் துணைவியாரல்தான் உறுதியாக சொல்லமுடியும்.
ஐயா தங்களின் பதிவுகள் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.நன்றி.
அன்பின் ராம்வி - அறிமுகத்திற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment