ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Friday 7 January 2011

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

புத்தாண்டு வாழ்த்துகள்
------------------------------

ஓட்டமும் நடையுமாய்
பயணிக்கும் வாழ்வில்...........

வயதுகள் கடந்தாலும்
விரல்கள் முடி கோத
தாயின் மடியில் தவழும்
ஒரு சுகம்...................

பதவிகளைக் கடந்து
ஆசிரியரைப் பார்த்ததும்
எழுந்து பணிந்து வணங்கும்
ஒரு கணம்................

பிரசவிக்கும் தாய்க்கு
பிரசவம் பார்க்கும் தாய்
பற்றக் கொடுக்கும்
ஒரு விரல் ................

நித்தமும் வெயிலில் காய்ந்து
ஒட்டிய வ்யிறோடு உலாவரும்
கட்டடத் தொழிலாளியின்
ஒரு கை...................

உள் வயிறு பசித்திருக்க
ஊர் வயிறு நிறைக்க
போராடும் விவசாயியின்
ஒரு பார்வை .............

இறப்பின் பொழுது
ஆதரவு இல்லாதவரை
அடக்கம் செய்ய முன்வரும்
ஒரு தோள்...............

சார்ந்த நிறுவனம்
சாதனை புரிவதில்
தான் உயர்ந்ததாய் நெகிழும்
ஒரு உணர்வு.............

என
நாதம் மீட்டும் நரம்புகளை
காலம் முழுவதும் சேர்ந்திசைப்போம்
மனிதம் என்பது வெளியில் இல்லை !
மனமே அதுவெனக் கொண்டாடுவோம் !!


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
---------------------------------------------

புத்தாண்டு தினத்தன்று அஞ்சலில் வந்த ஒரு வாழ்த்து இது.

13 comments:

அருண் பிரசாத் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருண் பிரசாத் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் - செளம்யன்

cheena (சீனா) said...

அன்பின் சௌம்யன் - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான பகிர்வு சார்.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

dheva said...

மனிதம் செழிக்கவேண்டும்...வரிகளி தெரிகிறது ஐயா...மனதின் வெளிப்பாடு....!

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கும் நம் குடும்பத்தினருக்கும்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//மனிதம் என்பது வெளியில் இல்லை !
மனமே அதுவெனக் கொண்டாடுவோம்//

அருமையான வரிகள்... புத்தாண்டு வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

அன்பின் தேவா - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் வெறும்பய - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் அப்பாவி தங்கமணி - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா