ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday, 2 November 2010

பணி ஓய்வு - வாழ்த்து மடல்

எனது இனிய துணைவியார் திருமதி மெய்யம்மை அவர்கள் சென்னையில் ஒரு புகழ் பெற்ற பள்ளியில் தலைமைத் தமிழாசிரியையாய் 33 ஆண்டுகள் பணியாற்றி = பணி நிறைவு செய்த போது - அவரின் சக ஆசிரியை வாசித்தளித்த வாழ்த்து மடல்.
--------------------------------------------------------------------

எம்முடன் பணியாற்றிய எங்களில் ஒருவர்
எழுத்தும் சொல்லும் (மாணவ) மனங்களில் விதைத்தவர்
இத்திங்களில் எம்மைப் பிரிந்திட நேரும் - உன்
பணி நிறைவாலே வந்தது இந்நேரம்.

பணிகள் செய்ய நீ சளைத்தாய் இல்லை
இன்னமும் நீ களைத்தாய் இல்லை
பாரில் தமிழ் வளர்த்தோர் உண்டு - நீ எம்
பள்ளியில் தமிழ் வளர்த்த அம்மை - இது மெய்

வள்ளுவனும் பாரதியும் சொன்ன சொல்லை
உன் போல் சொல்ல எவரும் இல்லை
பள்ளியில் ஆற்றும் பணிகள் செய்யப்
பயின்றோம் நாங்கள் உன்னைப் பார்த்து.

கடலின் ஆழம் அமைதியைப் போல - உன்
கருத்தின் ஆழம், அமைதியாய் இருப்பாய்
மௌனமாய் இருந்து பணிகள் செய்வாய்
புன்னகையால் எம்மைப் புரிய வைப்பாய்.

வாய் திறந்தாலோ தமிழ் மடை வெள்ளம்
மகிழ்வுடன் நிறையும் கேட்பவர் உள்ளம்
தமிழுக்கு நீ சிறப்பு செய்தாய் அந்தத்
தமிழாலே நீ சிறப்பும் பெற்றாய்.

மூன்று ஆண்டுகள் பணி புரிந்தாலும்
முணுமுணுப்புடன் பணி செய்பவர் உண்டு
முப்பத்து மூன்றை முடித்த பின்னாலும்
முகந்தனில் மலர்ச்சி மறையவில்லை.

உன்னில் சிறியவர் நாங்கள் எனினும்
வாழ்த்துகிறோம் உன்னை நன்னலம் பெறவே
மதுரை மீனாட்சி திருவருளாலே
மண்ணில் மகிழ்வுடன் வாழ்க பல்லாண்டு.

ஆக்கம் : ஆங்கில ஆசிரியை



28 comments:

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

என்னது நானு யாரா? said...

கவிதை அருமையாக இருக்கிறது நண்பரே! அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!

ஜோதிஜி said...

வளர்க நலமுடன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புன்னகையால் எம்மைப் புரியவைப்பாய்//

அருமை.. அன்பினால் ஆண்டிருக்கிறார்கள் போல.. :)

CS. Mohan Kumar said...

அடடா சென்னையிலா இருந்தார்கள்; தெரியாமல் போயிற்றே. அவருக்கு அன்பும் வணக்கமும். தாங்கள் இருவரும் நல்ல ஆயுளுடன் மகிழ்ச்சியாய் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன்

பரிசல்காரன் said...

எனது வணக்கங்களையும் தெரிவியுங்க சீனா ஐயா..

நானானி said...

பணியிலிருந்துதானே ஓய்வு?

தமிழுக்கான பணியிலிருந்தல்லவே!!!

தொடரட்டும் உம் தமிழ் பணி.
சேரட்டும் தமிழுக்கு அணி.

வாழ்த்துக்கள் செல்வி!!!

இது உங்களுக்கான வாழ்த்து மடல் என்று நினைத்தேன்...அன்பு சீனா!!!

அன்பரசன் said...

வாழ்த்துக்கள் அய்யா.

தேவன் மாயம் said...

பணி ஓய்வுக்கு வாழ்த்துகள்!!

தேவன் மாயம் said...

அம்மாவிடம் என் அன்பான வாழ்த்துளைச் சொல்லவும்!

தாராபுரத்தான் said...

" மற்றவர்களின் பார்வையில் நாம் எப்படித் தெரிகின்றோம் என்பதை அறியும் போது மிகவும் மகிழ்சியாகவே இருக்கும்
.

'பரிவை' சே.குமார் said...

ஆங்கில ஆசிரியையின் தமிழ்க் கவிதை அருமை. ரொம்ப நல்லாயிருக்கு வாழ்த்து மடல்.

cheena (சீனா) said...

அன்பின் அருணா - பூக்களுக்கு பாகான நன்றி - செல்வி ஷங்கர்

cheena (சீனா) said...

எ.நா.யாரோ - கனிவான கருத்துக்கு அன்பின் நன்றிகள் - செல்வி ஷங்கர்

cheena (சீனா) said...

ஜோதிஜி - நன்றி வாழ்த்துகள் - செல்வி ஷங்கர்

cheena (சீனா) said...

அன்பின் முத்துலெட்சுமி - அனிபிற் சிறந்த தவமில்லை ! - இல்லையா ? வாழ்த்துகள் - செல்வி ஷங்கர்

cheena (சீனா) said...

மோகன் குமார் : சென்னையில் தான் 1972 - 2006 இருந்தோம். ஓடி ஓடி உழைப்பதற்கு அதுதானே ஏற்ற இடம் - வாழ்த்திற்கு நன்றி - செல்வி ஷங்கர்

cheena (சீனா) said...

பரிச்ல்காரன் - அன்பான வணக்கத்திற்கு அகம் சார்ந்த நன்றி - செல்வி ஷங்கர்

cheena (சீனா) said...

அன்பின் நானானி : தமிழ்ப் பணி தாய்ப் பணி அல்லவா ? எப்படித் தொடர்பு விடும் ? வாழ்த்த அருமையான ம்ழொஇ தமிழ் தானே ! வாழ்க ! வளர்க ! - செல்வி ஷங்கர்

cheena (சீனா) said...

அன்பரசன் : வாழ்த்திற்கு நன்றி : செல்வி ஷங்கர்

cheena (சீனா) said...

அன்பின் தேவன் மாயம் : வாழ்த்திற்கு நன்றி - கூறிவிட்டேன் : சீனா /r

தேவன் மாயம் : அன்பு வாழ்த்திற்கு அகம் சார்ந்த நன்றி. - செல்வி ஷங்கர்

cheena (சீனா) said...

தாராபுரத்தான் : நம் பணியின் பண்பே நம்மைப் பிறரின் பாராட்டுக்கு ஆளாக்கி விடும். ஈடுபாட்டோடு செயல்களைச் செய்யும் போது எதிர் பாராமல் கிடைக்கும் பாராட்டுகள் நமக்கு ஊக்கம் அல்லவா ! கருத்துக்கு நன்றி : செல்வி ஷங்கர்

cheena (சீனா) said...

சே.குமார் : மதுரைத் தமிழ் அல்லவா - ஃபாத்திமா கல்லூரி ஆங்கிலப் புலமையும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும். அழகான் சொற்களுக்கு நன்றி : செல்வி ஷங்கர்

சென்னை பித்தன் said...

ஓய்வென்பது பணிக்குத்தானே, மனதுக்கல்லவே?அவர்கள் நிறைந்த ஆயுளுடன்,வளமான இல்லறத்தில் உங்களுடன் துணை நிற்க,உங்கள் சதாபிஷேகத்திலும் நான் வாழ்த்த வேண்டும்!

cheena (சீனா) said...

அன்பின் பித்தன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - வாழ்த்துக சதாபிஷேகத்திலும் - நன்றி - நட்புடன் சீனா

ஆமினா said...

அம்மாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லிடுங்க சார்....

cheena (சீனா) said...

ஆமினா - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி - செல்விஷங்கர்

வார்த்தை said...

வாழ்த்துக்கள். உங்களுக்கும். இனி எந்நேரமும் துணைவியார் உடனிருப்பாரே. ரகளையாக பொழுதுகள் செல்ல வாழ்த்துக்கள்.