ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Saturday 24 July 2010

தப்பு

டிசம்பர் 1994 - கணையாழி மாத இதழில் வெளியான ஒரு சிறு கதை. எழுதியவர் எனது இளைய மகள் பிரியா - கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எழுதியது.

சிடுசிடுக்கிற அலாரம்.......
எட்டு மணி .......

எழுந்திருக்க மனசு வரலியா இன்னும் ........
ஃப்ரீப் கேஸில் தண்ணீர் பாட்டிலைத் திணித்துக்கொண்டே - அவருக்கு மட்டும் அது எப்படி சிந்தாமல் இருக்கிறதோ - ஆஃபீஸ் கிளம்புற அவசரத்தில் அப்பா .......

தடி தடியாக நான்கு கம்யூட்டர் புத்தகங்களை இரண்டு கைகளிலும் தூக்கிக் கொண்டு - எப்படி பஸ் ஏறுவாள் ? அக்கா ......

கிளம்பிக் கொண்டு - இல்லை இல்லை - பறந்து கொண்டிருக்கிறார்கள்.

அம்மா மட்டும் தான் பாக்கி. அவசரமாய் டிபன் பாக்ஸை பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

குட் மார்னிங் அம்மா

ஆமா இதுல ஒண்ணும் கொறச்சலில்ல - எட்டு மணிக்கு எழுந்திறதுக்கு என்ன அலாரம் வேண்டிக் கிடக்கு.

இல்லேனா பத்துக்குத்தானே எழுந்திருப்பேன்

ஆஹா என்ன ஒரு சுறுசுறுப்பு - சரி - ஒழுங்கா காலையும் மத்தியானமும் சாப்டுரு - வேஸ்ட் பண்ணாதே - சமச்சுவைச்சத - ஜூனூன் பாஷையில் அதட்டினார்.

சரி சரி - டாட்டா - சாயங்காலம் சீக்கிரம் வந்துரு

அம்மா செருப்பு மாட்டும் போதுதான் ஞாபகம் வந்தது

அம்மா - என் ஐடெண்டிடி கார்டுக்கு ஃபோட்டோ எடுக்கணும்

போய் எடு

நீயும் கூட வா - எனக்கு ரெண்டு மணிக்குத்தான் காலேஜ் - அதுக்குள்ளே வாங்கிடலாம்

ஏய் ! எனக்கு எட்டரைக்கு ஆஃபீஸ்

அம்மா ... அம்மா ... பர்மிஷன் போடும்மா ... ப்ளீஸ்

சரி வந்து தொலைக்கிறேன் - போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா - போ

குளித்து விட்டுக் கிளம்பும் போது மணி ஒன்பது. மறக்காமல் அம்மாவின் பர்மிஷன் லெட்டரை எடுத்துக் கொண்டு ஸ்டூடியோவுக்குப் போனோம். உள்ளே எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள் - ஃபோட்டோவில்.

பாஸ்போர்ட் சைஸ் எடுக்கணும்

கொஞ்சம் இருங்க போட்டோ எடுக்கறவர் வந்துருவார்

எவ்ளோ நேரம் ஆகும்

அரை மணி

இன்றுதான் கடைசி தினம் என்பதால் எனக்கு ஃபோட்டோ அவசியமாய்த் தேவைப்பட்டது...... சரிமா, நீ போ - நான் இருந்து வாங்கி வரேன்.

அம்மா முறைத்து விட்டுச் சென்றார். ஒரு ஸ்டூலில் அமர்ந்தேன்

கடைப்பையன் ஒவ்வொரு பொருளாய் தூசி தட்டிக் கொண்டிருந்தான். நான் ஒவ்வொரு ஃபோட்டாவாய்ப் பார்க்கத் தொடங்கினேன்.

ஒரு குழந்தை தன்னை விடப் பெரிய பந்து ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு முகம் முழுவதும் சிரிப்பாய் நின்று கொண்டிருந்தது. அதே குழந்தை பந்தில்லாமல் அம்மா மடியில் இருந்தது - சிரிப்பைத்தான் கானோம்.

இன்னும் நிறைய ஃபோட்டோக்கள். தம்பதி சகிதமாய், தனியாய், சிறியவர் முதல் பெரியவர் வரை என்று எல்லா விதமாயும். ஆனால் அவர்களுக்குப் பின்னால் இருந்த பூங்கா ஒரே விதமாய் இருந்தது. நடுநடுவே யாரோ வந்து நெகடிவ் கொடுத்து டெவலப் செய்யச் சொல்லி .. எப்பொழுது கிடைக்கும் என்று நேரம் கேட்டுச் சென்றார்கள்.

தெருவில், இரண்டு சேட்டுகளை எதிரும் புதிருமாக வைத்துக்கொண்டு, சோனி ரிக்ஷாக்காரன், வயிற்றை எக்கி, மிதித்துக் கொண்டு போனான். டப்பு எக்கட பம்பிஸ்தாரு ? உரத்த குரலில் பேசியபடி கையில் பிளாஸ்டிக் பையுடன் ஒரு கூட்டம் ஊர்ந்து சென்றது.

நான் அருகில் இருந்த செய்தித்தாளைப் படிக்கத் தொடங்கினேன். மணி ஒன்போதரை. என் ஜென்மத்தில் இப்படி ஒரே இடத்தில் உட்கார்ந்ததில்லை.

எப்ப வருவாரு ?

ஸாரி - இப்ப வந்துருவாரு - மென்மையாய்ப் பதில் சொல்லி வேகமாய் உள்ளே சென்றான் கடைப்பையன்.

அப்பொழுது பார்த்து இருவர் உள்ளே நுழைந்தார்கள். என்ன நினைத்தாரோ ஒருவர் இன்னொருவரைப் பார்த்து - சின்னப் பொன்னுகளை எல்லாம் வேலைக்கு வெச்சா இப்படித்தான் - பாரு பேப்பர் படிக்குது. அவர் என்னவோ மெதுவாகத்தான் சொன்னார் - என் காதில்தான் விழுந்து தொலைத்தது.

பாப்பா - என்றார்

இந்த மெட்ராஸில் "பாப்பா" என்று கூப்பிடுவதை எப்பொழுதுதான் நிறுத்துவார்களோ தெரியவில்லை. நான் - அவர் மறுபடியும் வாயைத் திறக்கும் முன்.....

கட ஆள் உள்ளே இருக்காரு - வருவாரு - உட்காருங்க - என்பதற்குள் பையன் வந்து விட்டான்.

என்ன சார் ? சொல்லுங்க ..

வந்தவர் என்னை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு - ப்ரிண்ட் போடனூம் - நெகடிவ் தந்தார்.

சீக்கிரம் வேணும்
எத்தனை காப்பி ?
நாலு
20 குடுங்க
நாலு நாலு பதினாறு தானே - என்ன ஐந்து ரூபாயா ஒண்ணு ?
அர்ஜெண்டுன்னு சொன்னீங்களா - அதான் ஐந்து - மென்மையாக
வேண்டாம் - திருப்பிக் கொடு - ஏதோ தெரிஞ்ச கடைன்னு வந்தா .... திருப்பி வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.

எப்ப வருவாரு - ஒம்பதே முக்கா ஆச்சே ,,,,
ஃபோன் பண்னி இருக்கேன் - பத்து நிமிஷத்துலே வந்துருவாரு
பக்க்த்துல வேற ஸ்டூடியோ இருக்கா ? முக்கால் மணி நேரம் காத்திருப்பு எரிச்சலாய்க் கேட்க வைத்தது.
ஊஹூம் .. திரும்பவும் நிதானமாய் - பக்கத்துல பியூட்டிஃபுல் ஸ்டூடியோ இருக்கு - ஆனா லீவு
எனக்கு வேணும் - வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்றதென்று வந்தேன் - பாரு - நல்லா வேணும். - சரி இன்னொரு பத்து நிமிஷம் தான் - பரவாயில்லை.

ஒரு குடும்பம் வந்து குரூப் ஃபோட்டோ எடுக்கணும் என்றது.
உக்காருங்க சார் - இப்ப வந்துருவாரு - எத்தன காப்பி ? என்ன சைஸ் ? அவர்களைக் கேள்வி கேட்டுக் காத்திருப்பை மறக்கடித்துக் கொண்டிருந்தான்.

அப்படி இப்படி என்று ஒரு வழியாய் பத்தே காலுக்கு வந்தார் ஃபோட்டோ எடுப்பவர். எனக்கு நேர் எதிரில் உட்கார்ந்தார். நிதானமாய் மூக்குப் பொடி டப்பாவைத் திறந்தார். கடை முதலாளி போல - அதுக்குன்னு இப்படியா ?

எனக்குக் கோபமாய் வந்தது

என்னமமா ?
பாஸ்போர்ட் சைஸ்
மேலே போங்க வரேன் . நீங்க சார்
குரூப் - நாலு காப்பி

நான் மேலே சென்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டு - கீழே வந்து பணம் கட்டினேன். குரூப்பும் எடுத்து முடித்து - பில்லுக்கு நின்றது. பில் போட்டுக் கொண்டிருந்தவர் திடீரென்று நிமிர்ந்து - ஒன்றரை மணி நேரம் ஆச்சு, சீக்கிரம் வாங்கன்னு சொல்லத் தெரியுது - இந்த ஃபானைத் தொடைக்கக் கூடாதா ? மாடு மாடு - சொல்லித் தெரியக் கூடாது - தானாத் தெரியனூம் - மாடு மாடு - என்று கத்தினார்.

யோவ், அவன் இருங்க, இருங்க சொல்லலேன்னா, உன் கடைக்கு ஒரு பய வரமாட்டான். வந்த வுடனே நேரா பொடி டப்பாவுக்குப் போயிட்டே - நீ பேசறியா - கொத்தாய் அவன் சொக்காயப் பிடித்துக் கத்த வேண்டும் போல இருந்தது.

எரிச்சலாய் வெளியில் வந்து எடுத்த ஃபோட்டோவைப் பார்த்தேன். அழகாய்ச் சிரித்துக் கொண்டிருந்தேன். கோபம் - எரிச்சல் - காத்திருந்த நேரம் எதுவும் அதில் தெரியவில்லை.

திரும்பிப் பார்த்தேன். பையன் ஃபேனைத் துடைத்துக் கொண்டிருந்தான். கடையின் பெயர்ப் பலகை அருகில் முதலாளி புகைப்படத்தில் முகமலர வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். கடைப் பெயரைப் படித்தேன்.
ரிஃப்லெக்ஷன் ஸ்டூடியோ - கடை வாசலில் நின்றிருந்த ஒரு சின்ன வாண்டு அருகில் இருந்த தன் அம்மாவிடம் = அமமா ரிஃப்லெக்ஷன்னா பிரதி பலிப்புத்தானே - என்றது.

வேகமாய் அதன் அருகில் சென்று - இல்ல இல்ல அது இல்ல அர்த்தம் - அது தப்பு என்றேன்.

கணையாழி - டிசம்பர் 1994சிடுசிடுக்கிற அலாரம்

99 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

ஜோசப் பால்ராஜ் said...

//ஒரு குழந்தை தன்னை விடப் பெரிய பந்து ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு முகம் முழுவதும் சிரிப்பாய் நின்று கொண்டிருந்தது. அதே குழந்தை பந்தில்லாமல் அம்மா மடியில் இருந்தது - சிரிப்பைத்தான் கானோம். //

ஒரு கதையில பார்கிற விசயங்கள அப்டியே சொல்லாம இந்த மாதிரி நுணுக்கமான குறிப்புகளோட சொல்றப்ப ஒரு புது அழகு கிடைக்குது. அருமையா சொல்லியிருக்காங்க. அக்கா இப்ப எழுதுறாங்களா இல்லையா ஐயா ?

Thekkikattan|தெகா said...

சீனா, கண்டிப்பா திரும்ப எழுத எப்படியாவது கூட்டி வரணும்ங்க. ஒரு தேர்ந்த எழுத்தாளினியின் டச் இருக்குங்க. பொறாமையா இருக்கு எப்படி இப்படி எண்ணங்களை கதைக்குள்ளர வைச்சு தைச்சிக் கொடுக்கிறதுன்னு... ம்ம்ம்ம் :)

சூப்பரா இருந்துச்சு! பகிர்ந்துகிட்டதிற்கு நன்றி உங்களுக்கு...

cheena (சீனா) said...

அன்பின் ஜோசப்

அக்காவுக்கு இப்ப குழந்தையப் பாக்கறதுக்கே நேரம் பத்தல = நாளைக்கு 25.07.2010 அக்காவோட குழந்தைக்குப் மொதப் பொறந்த நாள்

எழுதச்சொல்லிக் கிட்டே இருக்கென் - பாப்போம்

நல்வாழ்த்துகள் ஜோசப்
நட்புடன் சீனா

ஆயில்யன் said...

//சீனா, கண்டிப்பா திரும்ப எழுத எப்படியாவது கூட்டி வரணும்ங்க. ஒரு தேர்ந்த எழுத்தாளினியின் டச் இருக்குங்க.//

அதே!

சுற்றுபுற விசயங்களை சொல்லும் பாங்கும், கனிவு பொங்கும் கடைசி பத்தியும் அழகு!

geethappriyan said...

ஐயா நன்றாக இருக்கிறது,வாழ்த்துக்கள்.
1994க்குபின் எதுவும் எழுத வில்லையா?

cheena (சீனா) said...

அன்பின் தெ.கா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - எழுதச் சொல்கிறேன் - பார்ப்போம்

நல்வாழ்த்துகள் தெ.கா
நட்புடன் சீனா

Unknown said...

இயல்பாய் இருக்கிறது கதை...

Karthick Chidambaram said...

அருமையாக எழுதி உள்ளார்கள். அவர்களையும் ஏன் ஒரு வலைப்பூ தொடங்க சொல்லக்கூடாது ?

cheena (சீனா) said...

அன்பின் ஆயில்ஸ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்ஸ்

நல்வாழ்த்துகள் ஆயில்ஸ்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கிதப்ரியன்

வருகைக்கும் கருத்துகும் நன்றி கீதப்ரியன்

நல்வாழ்த்துகள் கீதப்ரியன்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கலாநேசன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலாநேசன்

நல்வாழ்த்துகள் கலாநேசன்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கார்த்திக் சிதம்பரம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அவர்களும் வலைப்பூ வைத்திருக்கிறார்கள் - ஆனால் எழுதுவது தான் இல்லை - இல்லறம் - குழந்தைகள் - எழுதுவார்கள் நிச்சயம்.

http://naanpudhuvandu.blogspot.com/

நல்வாழ்த்துகள் கார்த்திக் சிதமபரம்
நட்புடன் சீனா

கண்ணகி said...

புலிக்கு பிறந்தது பூனையாகுமா...நல்ல எழுத்துநடை...

cheena (சீனா) said...

அன்பின் கண்ணகி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணகி

நல்வாழ்த்துகள் கண்ணகி
நட்புடன் சீனா

கொல்லான் said...

//அமமா ரிஃப்லெக்ஷன்னா பிரதி பலிப்புத்தானே//

பிரதிபளிப்பேதான்.
அய்யா,
தொடர்ந்து எழுதச் சொல்லுங்க.

ஜோதிஜி said...

வாழ்த்துகள்.

ஜோதிஜி

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

புகைப்படக்கடை பற்றி புகைப்படமாய் சொற்சித்திரம் .நல்லாயிருக்குங்க ஐயா .

cheena (சீனா) said...

அன்பின் கொல்லான்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கொல்லான்

நல்வாழ்த்துகள் கொல்லான்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் ஜோதிஜி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜோதிஜி

நல்வாழ்த்துகள் ஜோதிஜி
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் நண்டு

வருகைக்குகும் கருத்துக்கும் நன்றி நண்டு

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

Ungalranga said...

அருமையான சிறுகதை..!!

ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல சிறுகதை படித்த திருப்தி..!!

Thamiz Priyan said...

கதை நல்லா இருக்கு! எழுதின கை சும்மா இருக்க முடியாது.. ஆனா இப்ப பிள்ளைகளை வைத்துக் கொண்டு ரெண்டு கையே போதாமல் இருப்பார்கள்.. கொஞ்சம் பசங்க பெரிதானதும் திரும்ப எழுத வரனும்னு சொல்லிக்கிறோம். :)

Unknown said...

இந்தக்கதை என் நினைவுகளை பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது.. ஒரு புகைப்படம் எடுப்பதற்கான காத்திருத்தலும் அந்த படம் வந்தவுடன் ரகசியமாய் நூறு முறை பார்த்து வியத்தலும் இயல்பே..

எத்தனை கோபம் எனினும் புகைப்படம் பார்த்தவுடன் தணிந்துவிடும் மனநிலை எதார்த்தம்..

சகோதரிக்கு என் பாராட்டுக்கள்

Unknown said...

நேர்த்தியாக நடை. நம்மைச் சற்றி நடக்கும் நிகழ்வுகளை கோர்வையாய்ச் சொல்லும் விதம் நம்மையும் 'அட ஆமால்ல!' என நினைக்கச் செய்கிறது. சொல்ல வந்ததை வாசகனின் மனதில் நிறைவாய் சொல்கிறார்கள்.

'பரிவை' சே.குமார் said...

சூப்பரா இருந்துச்சு! பகிர்ந்துகிட்டதிற்கு நன்றி உங்களுக்கு...


akka kuzhanthaikku PIRANTHANAAL vazhththukkal ayya.

Natpudan,
S.kumar.
Http://www.vayalaan.blogspot.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்.

Balakumar Vijayaraman said...

நுனுக்கமான விவரங்கள். நல்ல கதை. வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் ஐயா,..
கதை ஓட்டம் அழகு..

தொடந்து எழுத சொல்லுங்கள்...


அன்புடன்
ஆ.ஞானசேகரன்

அபி அப்பா said...

கதை ரொம்ப நல்லா இருக்கு சீனா சார்!

vasu balaji said...

ரொம்பவே நுணுக்கம், அழகு, முழுமை. திரும்ப எழுதச் சொல்லுங்க சார்:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவங்க வீடியோ கதையையும் அவங்க குரலையும் ரொம்ப மிஸ் செய்யறோம்.

cheena (சீனா) said...

அன்பின் ரங்கன்

வருகைக்குகும் கருத்துக்கும் நன்றி ரங்கன்

நல்வாழ்த்துகள் ரங்கன்

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் பிரியன்

அக்காவைப் பற்றித்தான் தெரியுமே ! இன்று அவரது இளைய மகளுக்கு முதலாவது பிறந்த நாள் - சுவரொட்டி - சங்கம் விஷஸ் பார்க்கவும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ் பிரியன்
நல்வாழ்த்துகள் தமிழ் பிரியன்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் செந்தில

சகோதரியின் கதையினை படித்து - க்ருந்து கூறியமைக்கு நன்றி - ஆம் - இயல்பான செய்லகள் தான் -

நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் சுல்தான்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுல்தான்
நல்வாழத்துகள் சுல்தான்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் குமார்

மின்னஞ்சல் முகவரி தருக
cheenakay@gmail.com

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும நன்றி குமார்
நல்வாழ்த்துகள் குமார்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் டிவிஆர்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டிவிஆர்

நல்வாழ்த்துகள் டிவிஆர்

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் பாலகுமார்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாலகுமார்

நல்வாழ்த்துகள் பாலகுமார்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் ஞானசேகரன்

வருகைக்கும் கருத்துக்கும் வேண்டுகோளுக்கும் நன்றி

எழுதச் சொல்லிக் கேட்கிறேன் - கொஞ்சம் குடும்பத்தில் பிஸி - எழுத வைப்போம்

நல்வாழ்த்துகள் ஞானசேகரன்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் அபி அப்பா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அபி அப்பா

நல்வாழ்த்துகள் அபி அப்பா

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் பாலா

நிச்சயம் எழுதச் சொல்வேன் -
அனைவரது எதிர்பார்ப்பினையும் நிறைவேற்றச் சொல்வேன்

கால நேரம் ஒத்துழைக்க வேண்டும்

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் முத்துலெட்சுமி

உண்மை உண்மை - ஒரு ஆண்டு காலமாக எழுதுவதில்லை - கொஞ்சம் பிஸி அவங்க - இன்று அவரின் இளைய மகளுக்கு முதல் பிறந்த நாள் - சுவரொட்டி - சங்கம் விஷஸ் பாருங்க - அதனால் தான் பிஸி - விரைவினில் எழுதச் சொல்வோம்

நல்வாழ்த்துகள் முத்துலெட்சுமி
நட்புடன் சீனா

Starjan (ஸ்டார்ஜன்) said...

கதை ரொம்ப நல்லாருக்கு சீனா அய்யா.. என்னோட வாழ்த்துகளை பிரியாவுக்கு சொல்லிடுங்க..

cheena (சீனா) said...

அன்பின் ஸ்டார்ஜன்

வருகைக்கும் கருத்துக்கும் நண்ரி ஸ்டார்ஜன்

நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்

நட்புடன் சீனா

செ.சரவணக்குமார் said...

சரளமான நடை, எளிய பேச்சு வழக்குகள் என்று மிளிர்கிறது கதை. கணையாழி எனும் ஒரு தரமான இதழில் வெளிவந்த சிறுகதை என்பதே இதன் சிறப்பை உணர்த்துகிறது.

சகோதரியை திரும்பவும் எழுதச் சொல்லுங்கள் ஐயா.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் சரவணக் குமார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

Unknown said...

16 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சிறுகத - உண்மையிலேயே சிறு கதை - அளவில் சிறியதாய் ஆனால் காண்பவற்றைத் தன் திறமையான கருத்தோட்டத்தோடு விவரிப்பதில் அற்புதமானதாய் - அதாவது ஒரு கவிதையாய் - அழுத்தமான முத்தாய்ப்போடு - பாராட்டாமல் இருக்க முடியாத துள்ளல் நடை - கதையில் உள்ள அவசரம் வாசிப்போருக்குள்ளும் ஏறிக்கொள்கிறதென்றால் எத்தனை வெற்றி - வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

அன்பின் புகாரி

கருத்து அருமை - பாராட்டுகள் அருமை - சிந்தனை அருமை
நல்வாழ்த்துகள் புகாரி
நட்புடன் சீனா

இராகவன் நைஜிரியா said...

பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கதையாக இருந்தாலும், இன்றும் பொருந்துவதாக அமைந்துள்ளது...

cheena (சீனா) said...

அன்பின் இராகவன்

மீ த ஃபிஃப்டி யா - வருகைக்கும் கருத்துகும் நன்றி இராகவன் - ஐம்பதாவது மறுமொழி

அரவிந்த் கதையினைப் பற்றி என்ன கூறினார்

நல்வாழ்த்துகள் இராகவன்
நட்புடன் சீனா

லதானந்த் said...

தேர்ந்த நடை. கூரிய பார்வை. இழையோடும் நகையுணர்வு. அற்புதம்

cheena (சீனா) said...

அன்பின் லதானந்த்


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லதான்ந்த்
நல்வாழ்த்துகள் லதானந்த்
நட்புடன் சீனா

துளசி கோபால் said...

அட! சூப்பர் கதை!!!!

இப்பவும் நேரம் கிடைச்சால் கொஞ்சம் எழுதச்சொல்லுங்க.

சுற்றிலும் நடக்கும் விஷயங்களைக் கவனிப்பது மனசில் வைப்பது எல்லாம் ஒரு வரம்!

Mohan.V.R. said...

story is so sweet and goes thro the daily routines of middle class family. It becomes a story only because you had said so but otherwise it chronicles the happenings in a family. our greetings for the nice presentation.

தருமி said...

LET HER COME OUT OF HER 'WRITERS' BLOCK'.

நானானி said...

புதுவண்டின் போட்டோ ஸ்டுடியோ விஜயம் ரொம்ப நல்லாருக்கு. மலருக்கு மலர் தேன் உறிஞ்சுவது போல் ஒவ்வொரு பகுதியாக நுணுக்கமாக ரசித்து உறிஞ்சியிருக்கிறது. பழைய ஜூனூன் பாஷையைக் கூட விடலை. யதார்த்தம் நிரம்பியிருக்கிறது. வாழ்த்துக்கள் வண்டே!!

உன் ரெண்டாவது குழந்தையின் முதல் பிறந்தநாளுக்கு என் தாமதமான வாழ்த்துக்கள் + ஆசிகள்.

நானானி said...

அன்பு சீனா,
கதைக்கான தொடர்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி. நானும் இதுபோல் லின்க் கொடுத்தால்தான் வருவீர்களோ? ச்சும்மா..தெரிஞ்சுக்கத்தான்!!

cheena (சீனா) said...

அன்பின் துளசி

எழுத நேரம் கிடைக்க வில்லையாம் - குடும்பத்தில் வேலை அதிகம் - இரு பிள்ளைகளைக் கவனிக்கவே நேரம் போத வில்லை - எழுத வைக்கிறேன் -
துளசியின் கண்ணும் காதும் எப்பொழுதும் திறந்தே இருப்பது போல இக் கதாசிரியருக்கும் வாய்த்திருக்கும் வரம் பாராட்டத் தக்கது.

நல்வாழ்த்துகள் துளசி
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் மோகன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன்

நல்வாழ்த்துகள் மோகன்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் அண்ணே தருமி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் நானானி

புது வண்டினைப் பற்றி நன்கு அறிந்த தங்களின் கருத்துக்கு நன்றி

வாழ்த்துகளையும் ஆசிகளையும் புது வண்டிடமும் சிறு வண்டிடமும் தெரிவிக்கிறேன்.

மிக்க நன்றி நானானி

நல்வாழ்த்துகள் நானானி

நட்புடன் சீனா

+Ve Anthony Muthu said...

மாபெரும் இலக்கியவாதிகள் பங்குபெற்ற கணையாழியில் சகோதரியின் படைப்பு என்பதே மன மகிழ்வைத் தருகிறது.

கதையும் மிக அருமை. முடித்திருந்த விதம், தேர்ந்த நடை, கதைக்கரு அற்புதம்.

வாழ்த்துக்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

மிக அருமையான கதை....கதையுடன் ஒன்றும்படியாக சிறு விஷயங்களைக் கண்ணுக்கு முன் கொண்டுவந்திருக்கிறார்கள்....வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க சீனா சார்.

Geetha Sambasivam said...

யதார்த்தமான கதை. கணையாழியில் 94-ல் வந்திருக்கா?? அப்போ குஜராத் வாசம் கணையாழி பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கலை. இப்போ கணையாழியே வருதானு தெரியலை!:))))))

பல வருடங்கள் கழிச்சு அழைத்ததற்கு நன்றி. :D

N Suresh said...

அன்பினிய சீனா ஐயா,

இளைய மகளின் சிறுகதையை வாசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி!

ஒரு சிறுகதை என்பதைத் தாண்டி தனது ஒரு நாளைய முக்கிய நிகழ்வை பதிவு செய்கின்ற ஒரு நாட்குறிப்பின் ரிப்ளக்ஷனாக இந்த படைப்பு எனக்குத் தெரிகிறது!

சாதாரணமா இளம்வயது பெண்கள் தங்களுடைய வீட்டில் தாய் தந்தையரோடு பேசுவது, காலைநேர அவசர குடும்ப இயந்திரத்தின் பதற்றம், இளைய மகளின் தாமதமான சூரிய தரிசனம் என அனைத்தையும் படம் பிடித்து தனது வார்த்தைகளாள் வர்ணனை செய்துள்ளது சிறப்பு.

சாமானியன் ஒற்றை வரியில் இதை.. "இளம் மகள் ஒருவள், பாஸ்போர்ட் சைஸ் நிழற்படம் எடுத்து வந்தாங்க" என்று சொல்லி முடிக்கக்கூடிய ஓர் உண்மையில் மறைந்திருக்கும் என்னென்ன உண்டோ அத்தனையும் அழகாக வர்ணனை செய்துள்ளார் - அருமை!

என்ன தான் மனநிலை பாழாய் படுத்தினாலும் புகைப்படம் எடுக்கையில் சிரித்துத் தான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தின் மனநிலை வழியே ஏவரும் கடந்திருக்ககூடும். ஆனால் அந்த மனநிலையை எல்லோரும் பொதுவாக ஞாபகம் வைப்பதில்லை, உங்கள் மகளின் பேனா அதையும் விட்டு வைக்கவில்லையே!


குடும்பம், பிள்ளைகள் என பொறுப்புகள் பல இருப்பினும் எழுதிகிறவர்களை நான் சந்தித்திருக்கிறேன். எழுதாமல் இருக்க முடியல என்று சொல்பவர்கள் தான் இவர்கள்!

அந்த பட்டியலில் உங்களினிய இளைய மகள் வரவேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன், வாழ்த்துகிறேன்.

ரெடிமேட் துணி வாங்குவதற்கு முன்னர் தையற்காரர்களிடம் (மூக்குப்பொடு ரிப்ளக்ஷன் பரவாயில்லை) நான் மாட்டி தவித்த கதைகள் எனக்கு நினைவிற்கு வருகிறது! " நாளைக்கு வா" - என்று சொல்லியே தீபாவளி/பொங்கள் முடிந்து ஓரிரு மாதம் கழித்து எனக்கு துணி தைத்து தந்த அவர்களை மன்னித்து விட இன்றைய மனநிலை உத்தரவிடுகிறது!

ஆனால் புத்தாடை இட ஆசைப்பட்டு அது நிறைவேராமல் போக காரணமாக இருந்த அன்றைய எனது மனநிலை குறித்து என்ன சொல்ல.... அது ஒரு வித்தியாச ரிப்ளக்ஷன் தான்!!!

பல்வேறு மாற்றங்கள் நமது வாழ்நாளில் கண்டு வருகிறோம். பல மாற்றங்களும் வியப்பும் சுதந்திரமும் சௌகரியமும் தருகிறது எனபதை மறுக்க இயலவில்லை.

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வேண்டுமெனில் எனது எந்த புகைப்படத்தை எடுத்துச் சென்றாலும் அதை ச்கேன் செய்து, அதிலிருந்து சில நொடிகளில் புகைப்படங்கள் எத்தனை பிரதிகள் வேண்டுமோ அத்தனையும் தர தயார் என்ற நிலையில் இன்று வளர்ந்துள்ள இந்த பரிணாமம் வியக்க வைக்கிறது!

இளைய மகளுக்கும் உங்கள் அன்புள்ளத்திற்கும் குடும்பத்தாருக்கு

எனது
அன்பு நன்றி வணக்கம்

வாழ்க! வளர்க!

பேரன்புடன்
என் சுரேஷ்

N Suresh said...

அன்பினிய சீனா ஐயா,

இளைய மகளின் சிறுகதையை வாசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி!

ஒரு சிறுகதை என்பதைத் தாண்டி தனது ஒரு நாளைய முக்கிய நிகழ்வை பதிவு செய்கின்ற ஒரு நாட்குறிப்பின் ரிப்ளக்ஷனாக இந்த படைப்பு எனக்குத் தெரிகிறது!

சாதாரணமா இளம்வயது பெண்கள் தங்களுடைய வீட்டில் தாய் தந்தையரோடு பேசுவது, காலைநேர அவசர குடும்ப இயந்திரத்தின் பதற்றம், இளைய மகளின் தாமதமான சூரிய தரிசனம் என அனைத்தையும் படம் பிடித்து தனது வார்த்தைகளாள் வர்ணனை செய்துள்ளது சிறப்பு.

சாமானியன் ஒற்றை வரியில் இதை.. "இளம் மகள் ஒருவள், பாஸ்போர்ட் சைஸ் நிழற்படம் எடுத்து வந்தாங்க" என்று சொல்லி முடிக்கக்கூடிய ஓர் உண்மையில் மறைந்திருக்கும் என்னென்ன உண்டோ அத்தனையும் அழகாக வர்ணனை செய்துள்ளார் - அருமை!

என்ன தான் மனநிலை பாழாய் படுத்தினாலும் புகைப்படம் எடுக்கையில் சிரித்துத் தான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தின் மனநிலை வழியே ஏவரும் கடந்திருக்ககூடும். ஆனால் அந்த மனநிலையை எல்லோரும் பொதுவாக ஞாபகம் வைப்பதில்லை, உங்கள் மகளின் பேனா அதையும் விட்டு வைக்கவில்லையே!


குடும்பம், பிள்ளைகள் என பொறுப்புகள் பல இருப்பினும் எழுதிகிறவர்களை நான் சந்தித்திருக்கிறேன். எழுதாமல் இருக்க முடியல என்று சொல்பவர்கள் தான் இவர்கள்!

அந்த பட்டியலில் உங்களினிய இளைய மகள் வரவேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன், வாழ்த்துகிறேன்.

ரெடிமேட் துணி வாங்குவதற்கு முன்னர் தையற்காரர்களிடம் (மூக்குப்பொடு ரிப்ளக்ஷன் பரவாயில்லை) நான் மாட்டி தவித்த கதைகள் எனக்கு நினைவிற்கு வருகிறது! " நாளைக்கு வா" - என்று சொல்லியே தீபாவளி/பொங்கள் முடிந்து ஓரிரு மாதம் கழித்து எனக்கு துணி தைத்து தந்த அவர்களை மன்னித்து விட இன்றைய மனநிலை உத்தரவிடுகிறது!

ஆனால் புத்தாடை இட ஆசைப்பட்டு அது நிறைவேராமல் போக காரணமாக இருந்த அன்றைய எனது மனநிலை குறித்து என்ன சொல்ல.... அது ஒரு வித்தியாச ரிப்ளக்ஷன் தான்!!!

பல்வேறு மாற்றங்கள் நமது வாழ்நாளில் கண்டு வருகிறோம். பல மாற்றங்களும் வியப்பும் சுதந்திரமும் சௌகரியமும் தருகிறது எனபதை மறுக்க இயலவில்லை.

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வேண்டுமெனில் எனது எந்த புகைப்படத்தை எடுத்துச் சென்றாலும் அதை ச்கேன் செய்து, அதிலிருந்து சில நொடிகளில் புகைப்படங்கள் எத்தனை பிரதிகள் வேண்டுமோ அத்தனையும் தர தயார் என்ற நிலையில் இன்று வளர்ந்துள்ள இந்த பரிணாமம் வியக்க வைக்கிறது!

இளைய மகளுக்கும் உங்கள் அன்புள்ளத்திற்கும் குடும்பத்தாருக்கு

எனது
அன்பு நன்றி வணக்கம்

வாழ்க! வளர்க!

பேரன்புடன்
என் சுரேஷ்

Anbu said...

கலக்கலாக இருக்கு சார்..
இன்று தான் படிக்க முடிந்தது..மன்னிக்கவும்

cheena (சீனா) said...

அன்பின் அந்தோணி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள் அந்தோணி

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

வருகைக்கும் கருத்துகும் நன்றி மௌளி

நல்வாழ்த்துகள் மௌளி
நட்ப்டுஅன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கீதா

அழைக்க வேண்டும் என நினைத்தோம் - அழைத்து விட்டோம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா
நல்வாழ்த்துக்ள் கீதா
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் சுரேஷ்

நீண்ட...................தொரு மறுமொழி - பொறுமையாகப் படித்தேன் - அலசி ஆய்ந்து எழுதப்பட்ட மறுமொழி

வருகைக்கும் கருத்துக்கும் சுரேஷ்

நல்வாழ்த்துகள் சுரேஷ்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

வருகைக்கும் கருத்துகும் நன்றி அன்பு

நல்வாழ்த்துகள் அன்பு

நட்புடன் சீனா

மங்குனி அமைச்சர் said...

அருமையான கதை சார்

சிவமுருகன் said...

//கலக்கலாக இருக்கு சார்..
இன்று தான் படிக்க முடிந்தது..மன்னிக்கவும்//


riiippiiitttuuu

cheena (சீனா) said...

அன்பின் சிவமுருகன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் மங்குனி அமைச்ச

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Iyappan Krishnan said...

நல்ல கதை :)

cheena (சீனா) said...

அன்பின் ஜீவ்ஸ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவ்ஸ்

நல்வாழ்த்துகள் ஜீவ்ஸ்

நட்புடன் சீனா

நட்புடன் ஜமால் said...

போட்டோ ஸ்டுடியோவில் என்னையும் கொஞ்சம் நேரம் உட்கார வைத்துவிட்டார் கதையாசிரியர்.

போட்டோ மட்டும் சிரித்து கொண்டிருக்கிறது மனம் இல்லை என்பதை நல்லா பதிய வச்சிருக்காங்க.

பகிர்வுக்கு நன்றி ஐயா!

Unknown said...

வணக்கம், திரு.சீனா. சகோதரியின் கதை அருமை. நல்ல நடை. கிட்டத்தட்ட பாதி முதலாளிகள் இப்படித்தான் இருக்காங்க!! கண்டிப்பா தொடர்ந்து எழுத சொல்லுங்க.

மதுரை சரவணன் said...

அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

bosem said...

இது கதை அல்ல, அதுவும் சிறு கதை ?. இது நிஜம். இதில் சிறு வயது எழுத்தாளர் தனக்கும் தாய், தந்தை, அக்கா அவர்களுக்கும் உள்ள உறவு, பாசம் மேலும் அவர்களுடைய ஆழ்ந்த கடமை உணர்வு, சென்னை பட்டினத்தின் சுறுசுறு வாழ்க்கை, அதிகாலையில் போட்டோ கடை பையனின் வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் அசாத்திய திறமை, கடைக்கு வந்த போட்டோ கூட்டம் , வந்த கடை உரிமையாளர் வாடிக்கையாளர்களை கையாண்ட விதம், முடிவில் தனக்கு பிடிதமதிரியாக வந்த போட்டோ,இவைகளை ஒருங்கிணைத்து பாத்திரங்களுக்கு வைர பட்டை தீட்டி உள்ளார். மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். வைரம் மேலும் மேலும் ஒழி வீசட்டும்.

போஸ் ஐ ஓ பி - சீனா/ கே. சி யின் பல திறமைகளையும் கடமையுனர்வுகளையும் கண்டு அவர் மேல் மரியாதையும் அன்பும் என்றும் கொண்டவர்.

bosem said...

இது கதை அல்ல, அதுவும் சிறு கதை ?. இது நிஜம். இதில் சிறு வயது எழுத்தாளர் தனக்கும் தாய், தந்தை, அக்கா அவர்களுக்கும் உள்ள உறவு, பாசம் மேலும் அவர்களுடைய ஆழ்ந்த கடமை உணர்வு, சென்னை பட்டினத்தின் சுறுசுறு வாழ்க்கை, அதிகாலையில் போட்டோ கடை பையனின் வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் அசாத்திய திறமை, கடைக்கு வந்த போட்டோ கூட்டம் , வந்த கடை உரிமையாளர் வாடிக்கையாளர்களை கையாண்ட விதம், முடிவில் தனக்கு பிடிதமதிரியாக வந்த போட்டோ,இவைகளை ஒருங்கிணைத்து பாத்திரங்களுக்கு வைர பட்டை தீட்டி உள்ளார். மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். வைரம் மேலும் மேலும் ஒழி வீசட்டும்.

போஸ் ஐ ஓ பி - சீனா/ கே. சி யின் பல திறமைகளையும் கடமையுனர்வுகளையும் கண்டு அவர் மேல் மரியாதையும் அன்பும் என்றும் கொண்டவர்.

Thenammai Lakshmanan said...

மிக அருமையான கதை சீனா சார்.. ப்ரியாவுக்கு வாழ்த்துக்கள்..

cheena (சீனா) said...

அன்பின் ஜமால்

வருகைக்கும் கருத்துக்கும் நண்றி ஜமால்

நல்வாழ்த்துகள் ஜமால்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் தஞ்சாவூரான்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தொடர்ந்து எழுதச் சொல்வோம்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள் சரவணன்

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் போஸ்

சிறுகதையினைப் படித்து, ரசித்து, மகிழ்ந்து, வரிக்கு வரி கருத்துத் தெரிவித்தமை நன்று நண்பரே !

ஆழ்ந்து படித்து, மனதில் இருத்தி, நினைத்ததை , கருத்தினை மறு மொழியாக எழுதியது மிக மிக நன்று. எங்கள் மனம் மகிழ்கிறது.

உணர்ச்சி பூர்வமாக எழுதப்பட்ட மறுமொழி.

மனமகிழ்வுடன் நன்றியும் நல்வாழ்த்துகளும் நண்பரே - போஸ் !

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் தேனம்மை

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகல் தேனம்மை

நட்புடன் சீனா

ரசிகன் said...

நல்ல கதை.சூழ்நிலையை வர்ணிக்கும் விதம் கவணிக்க தக்கதாய் இருக்கிறது சீனா சார்.

cheena (சீனா) said...

அன்பின் ரசிகன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரசிகன்

நல்வாழ்த்துகள் ரசிகன்

நட்புடன் சீனா

Starjan (ஸ்டார்ஜன்) said...

அன்புள்ள சீனா அய்யா... நலம் நலம்றிய ஆவல்..

உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html

cheena (சீனா) said...

அன்பின் ஸ்டார்ஜன்

வருகைக்கும் விருதுக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

priyamudanprabu said...

ஐயா நன்றாக இருக்கிறது,வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் பிரபு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள் பிரபு
நட்புடன் சீனா

RAVI said...

சீனா அண்ணா வணக்கங்க்னா!!. கொஞ்சம் அவசரமாக வருகை தாருங்கள்.நன்றி.

www.avasaramda.blogspot.com

Thenammai Lakshmanan said...

மிக அருமையான கதை சீனா சார்.

வாழ்த்துகள் ப்ரியா. !

bosem said...

Today I opened my computer. I clicked here and there to see what is in hidden in my taskbar.
To my surprise Cheena's post surfaced. When I saw "Asaipoduvathu......" my mind immediately reminded Cheena and his contribution to the bank, friends and the family.
I read again his daughter's small story not once but repeatedly.
In fond remembrance
bosem