சென்ற ஞாயிறு காலை ஒரு தினசரியின் இணைப்பில் படித்த செய்தி. பகிர வேண்டுமெனத் தோன்றியது.
அன்னிய செலாவணியை ஈட்டித் தருவதில் முன்னிலையில் இருக்கிறது பனியன் நகரமான திருப்பூர். அதே நேரத்தில் சுகாதாரத்திலோ பின் தங்கிக் கிடக்கிறது. வணிக அரங்கில் ஒரு குட்டித் தமிழகமாகத் திகழும் திருப்பூரைச் சுகாதாரத்திலும் முண்ணனிக்குக் கொண்டு வர முயற்சி எடுத்திருக்கிறது ஓர் அமைப்பு. அந்த அமைப்பின் பெயரே "முயற்சி" என்பது தான்.
முயற்சி அமைப்பின் புதுமையான முயற்சி தான் - ஒரு முறை இரத்த தானம் செய்தால் 1.5 இலட்சத்திற்கு ஆயூள் காப்பீடு இலவசமாக வழங்கும் திட்டம்.
திருப்பூர் அரசு மருத்துவ மனையில் குழந்தை திருட்டைத் தடுக்க மருத்துவ மனையில் , இவ்வமைப்பு சி சி டி வி பொருத்தியிருக்கிறது. தொடர்ந்து 1.5 இலட்சத்தில் அரசு மருத்துவ மனையினைச் சுத்தம் செய்திருக்கிறது.
இரத்தம் பற்றாற்குறையினால் சில அறுவைச் சிகிச்சைகள் தள்ளிப் போடுவது அறிந்து இவ்வமைப்பு இரத்த தான முகாம் நடத்தி இரத்தம் தங்கு தடையின்றி கிடைக்க வழி செய்திருக்கிறது.
இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் 640 பேரினை உறுப்பினராக்கி - முகாம்கள் நடத்தி, 500க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து இரத்தம் பெறப்பட்டு உள்ளது. இப்பொழுது இரத்த தானம் செய்பவர்களீன் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
இரத்த தானம் செய்பவர்களுக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டுமென எண்ணி, பணமோ பொருளோ கொடுத்தால் தானம் செய்பவர்களை அவமதிப்பது போல ஆகிவிடுமே என நினைத்து அவர்களுக்கு ஒரு ஆண்டிற்கான இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கான பாலிசி வழங்க முன்வந்தனர் முயற்சி அமைப்பின் நிர்வாகிகள்.
இரத்த தானம் செய்பவர்கள் ச்மூகத்தில் மிகவும் குறைவு. அதே நேரத்தில் தானம் செய்பவர்கள் விபத்துகளில் பாதிக்கப்பட்டால் வறுமை காரணமாக உயிர் இழக்கும் சூழல் ஏற்படுகிறது. அதே போல் சிலர் நோயின் கொடுமையாலும் துயரப்படுகின்றனர். எனவே இவர்களுக்கு 1.25 இலட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு பாலிசியும் 25 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவக் காப்பீடு பாலிசியும் இவ்வமைப்பினர் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
ஒரு முறை இரத்த தானம் செய்தாலே போதும். இந்தக் காப்பீடு வசதி அளிக்கப்படும். மருத்துவ மனைகளில் 24 மனி நேரம் தங்கி செஇகிசை பெறும் நோய்களுக்கு மருத்துவக் காப்பீடு பாலிசி கை கொடுக்கும். இரத்த தானம் செய்யும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஊரிலும் ஒரு "முயற்சி" அமைப்பு தோண்றினால் போதும் - இரத்த தானத்தில் தமிழகம் முதலிடத்துக்கு வந்து விடும்.
நண்பர்களே ! இரத்த தானம் செய்யுங்கள் !
நல்வழ்த்துகள்
நட்புடன் சீனா
32 comments:
'முயற்சி' இயக்கத்தின் செயற்பாடுகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்! சீனா, இதனை இங்கு அறிமுக படுத்திய உங்களுக்கு ஒரு கை குலுக்கல் :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தெக்ஸ்
நல்ல ’முயற்சி’! நமக்கும் வருடத்தில் ஒருமுறையேனும் இரத்த தானம் செய்யும் வழக்கம் இருக்கின்றது... இந்த ஆண்டு இன்னும் செய்யவில்லை... விரைவில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை இப்பதிவு ஏற்படுத்தி விட்டது.
அன்பின் தமிழ் பிரியன்
வருகைக்கும் கொள்கைக்கும் நன்றி
நல்வாழ்த்துகள்
நானும் இருக்கேன் முயற்சியின் ரத்ததான குழுவில். :-)
நல்ல கருத்துக்கு பகிர்தலுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இந்த முயற்சி அமைப்பு பற்றி ஆறு மாதங்களுக்கு முன்பு பழைய இடுகையின் மூலம் பகிர்ந்து உள்ளேன்.
நல்வாழ்த்துகள்.
மிக்க மகிழ்ச்சி அன்பின் சீனா அவர்களே.
திருப்பூரின் முயற்சி அமைப்பின் முயற்சியைப் பாராட்டியமைக்கு..
வாழ்த்துகள்.
அன்புள்ள சீனா ஐயாவிற்கு,
உங்கள் பாராட்டு என்னை உற்சாகப்படுத்தியுள்ளது. அதுவும் நான் வலையுலகிற்கு வந்த போது எழுதிய இடுகை அது. நீங்கள் பொறுமையாகப் படித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்று தோன்றுகிறது...
கடலையூர் செல்வம்
மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி!
ஐயா . நான் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் கொடுத்துவிடுவேன் . இப்பொழுதுக்கூட இரண்டு தினங்களுக்கு முன்பு கொடுத்து இருக்கிறேன் . நமது ரத்தமும் பிறரின் உயிர் காக்க பயன்படுகிறது என்பதை நினைத்து அவ்வப்பொழுது பெருமையாக நினைத்துக்கொள்வேன் .
முயற்சி இயக்கத்தினை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சீனா சார்
'முயற்சி' இயக்கத்தின் செயற்பாடுகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!
முயற்சியின் குழுவில் முரளி - நல்ல செயல் - தொடர்க - முரளி - நல்வாழ்த்துகள்
அப்படியா கணேசன் ( ஜோதிஜீ) - வருகைக்குக் நன்றி நண்பா - நல்வாழ்த்துகள்
அன்பின் சிவசு - நன்றி வாழ்த்துகளுக்கு
அன்பின் செல்வம் - திறமையை வளர்க்க இன்னும் எழுதுக - வெற்றி நிச்சயம் - நல்வாழ்த்துகள்
அன்பின் சங்கர்
இரத்த தானம் சிறந்த தானம் - கடைப்பிடிப்பது பற்றி மிக்க மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள்
அன்பின் தேனு - மகிழ்ச்சிச் அடைந்தமை நன்று - நல்வாழ்த்துகள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி குமார்
பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு)
அனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் இப்போது இப்பதிவு குறித்து தொடர்பதிவு எழுதிட கீழ்கண்ட 10 நண்பர்களை நட்புடன் அழைக்கின்றேன் உங்களின் காதல் நினைவுகளை மறைவின்றி இந்த தொடர் பதிவின் வாயிலாக பகிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
Cheena (சீனா)
கேபிள் சங்கர்
ஈரோடு கதிர்
Butterfly சூர்யா
இராகவன், நைஜிரியா
விக்னேஷ்வரி
சேட்டைக்காரன்
வெற்றி
பிரேமா மகள்
பிரவின்குமார்
நீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்.
http://wwwrasigancom.blogspot.com/2010/03/blog-post_23.html
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு)
அனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் இப்போது இப்பதிவு குறித்து தொடர்பதிவு எழுதிட கீழ்கண்ட 10 நண்பர்களை நட்புடன் அழைக்கின்றேன் உங்களின் காதல் நினைவுகளை மறைவின்றி இந்த தொடர் பதிவின் வாயிலாக பகிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
Cheena (சீனா)
கேபிள் சங்கர்
ஈரோடு கதிர்
Butterfly சூர்யா
இராகவன், நைஜிரியா
விக்னேஷ்வரி
சேட்டைக்காரன்
வெற்றி
பிரேமா மகள்
பிரவின்குமார்
நீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்.
http://wwwrasigancom.blogspot.com/2010/03/blog-post_23.html
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
முயற்சி திருவினை ஆகட்டும்!
கார்த்திக்.
புதிய தொடர் என் வலை பூவில். படியுங்குங்கள். கருத்தை பகிருங்கள்.
http://eluthuvathukarthick.wordpress.com/
முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்..
சீனா அய்யா, உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.
அன்பின் பனித்துளி ஷங்கர்
வருகைக்கும் அழைப்புக்கும் நன்றி ஷங்கர்
நல்வாழ்த்துகள்
அன்பின் கார்த்திக்
வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி
நல்வாழ்த்துகள்
வருகைகு நன்றி கண்ணகி
நல்வாழ்த்துகள்
வருகைக்கும் விருதிற்கும் நன்றி ஸ்டார்ஜன்
நல்வாழ்த்துகள்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
பூங்கொத்து!
அன்பின் அருணா
வருகைக்கும் பூங்கொத்திற்கும் நன்றி
நல்வாழ்த்துகள் அருணா
நட்புடன் சீனா
நல்ல ’முயற்சி’!
அன்பின் பிரபு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Post a Comment