ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday, 3 January 2010

அன்ன தான மகிமை

அன்பின் பதிவர்களே

கர்ணனைப் பற்றி பல கதைகள் கேட்டிருக்கலாம் - படித்திருக்கலாம்

இதோ ஒன்று

அன்னதான மகிமையை விளக்கும் கதை

கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட - தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சுவர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன்.

அங்கு சென்று சகல வசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனான். பிறகு சுவர்க்கத்தின தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் - எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை - எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.

தலைவனோ - கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும் தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் - எப்போழுதாவது யாருக்காகவாது அன்ன தானம் செய்திருக்கிறாயா - எனக் கேட்டான்.

கர்ணனுக்கு அன்ன தான செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுது வயிற்றுப்பசி அடங்க வில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்கு என்ன தான் வழி எனக் கேட்ட போது - தலைவன் கூறினான் - உனது வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் - பசி அடங்கி விடும் என்றான்.

கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா - என்ன இது என ஐயப்பாடு இருந்தாலும் - வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சப்ப - பசி உடனே அடங்கிற்று.

ஒன்றும் புரியாத கர்ணன் - இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க - தலைவன் கூறினான் - அன்பின் கர்ணா - நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க - நீயும் உனது வலது கை ஆள்காட்டி விரலால் இதோ இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல் - நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை உணர்ந்தான்.

பதிவர்களே - நாமும் பிறந்த நாள் - திருமண நாள் - என்று கொண்டாடும் போதெல்லாம் - முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள் - அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள் - வறியோர் இவர்களுக்கெல்லாம் அன்ன தானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கும் மகிழ்ச்சியினையும் புண்ணியத்தைனையும் தரும் .

வாருங்கள் அன்ன தானம் செய்வோம் - இனிய புத்தாண்டில் இச்செயலைச் செய்வோம்

அனைவருக்கும் இனிய இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அன்புடன் - நட்புடன் சீனா


59 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான இடுகை..தானத்தில் சிறந்தது அன்னதானம்தான்

cheena (சீனா) said...

அன்பின் டிவிஆர்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

karthick said...

அருமையான இடுக்கை. நான் இதற்க்கு முன் இதை கேட்டதில்லை. தானத்தில் சிறந்தது அன்னதானம்தான்!

cheena (சீனா) said...

அன்பின் கார்த்திக்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

ஸ்வாமி ஓம்கார் said...

நல்லதொரு கதை நினைவு படுத்தினீர்கள்.

உங்கள் இடுக்கை அன்னதான சிறப்பை அருமையாக கூறுவதாக இருக்கிறது.

இக்கதையை கர்ணனுக்கு பதில் ஒரு கஞ்சன்(கருமி)யை வைத்து சொல்லுவதுண்டு.

சொர்க்கத்தின் தலைவன் விரலை வாயில் வைக்க சொல்லும் பொழுது அதன் காரணம் அறிந்த கஞ்சன் பின்வருமாறு புலம்பினானாம்...

“இப்படி நடக்கும்னு தெரிஞ்சா..விரலால் வழிகாட்டுவதற்கு பதில் உடலையே வளைத்து அங்கே சத்திரம் என காட்டியிருப்பேனே...காசா..பணமா போகப்போகுது..”

துளசி கோபால் said...

தானத்துலே சிறந்ததா ரெண்டு தானங்கள் இருக்கு.

1. அன்னதானம். தானம் கொள்பவர் திருப்திப்படுத்திப் போதும் போதுமுன்னு சொல்லும்வரை கொடுக்கலாம்.

2. இது நமக்கே, நாம் கொடுத்துக்கும் தானம். இதனால் நமக்கும் நல்லது, நம்ம மக்களுக்கும் நல்லது. அதன்பெயர் 'நிதானம்'

இதுவே பிரதானம்,!

லதானந்த் said...

”அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி”்

அருமையான இடுகை. வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் ஓம்கார்

வருகைக்கும் கருத்துக்கும் கதைக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் துளசி

தானம் நிதானம் பிரதானம் - கலக்கறீங்க

இதுதான் துள்சி - எனக்கெல்லாம் வரமாட்டேங்குதே

அப்பப்ப எழுதலாம்னு இருக்கேன் - அப்பப்ப வந்துட்டுப் போங்க

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் லதானந்த்

வருகைக்கும் கருத்துக்கும் குறளுக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

கலகலப்ரியா said...

அருமை சீனா..! துளசி பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்..!

cheena (சீனா) said...

அன்பின் கலகலப்ரியா

வருகைக்கும் வழிமொழிதலுக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

Ashok D said...

தெரிந்த கதைதான், அருமையான நினைவூட்டல், நன்றிங்க :)

cheena (சீனா) said...

அன்பின் அஷோக்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகல் அஷோக்

கண்மணி/kanmani said...

ஆமாம் சார் இது அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
அன்னதானம் மட்டுமின்றி அதோ அங்கே என்று தண்ணீர்ப் பந்தல் நோக்கி விரல் சுட்டியவனுக்குக் கூட சொர்க்கம் கிடைத்ததாம்

cheena (சீனா) said...

அன்பின் கண்மணி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள் கண்மணி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல கதையை நினைவுறுத்தினீர்கள்..
புத்தாண்டுவாழ்த்துக்கள் :)

நிகழ்காலத்தில்... said...

ஓர் உயிருக்கு உணவிட்டு மகிழ்வதைவிட வேறு எது உயர்வு,


தினமும் பறவை இனங்கள், ஊர்வன ஆகியவற்றிற்கும் இயன்றதைச் செய்வோம்

வாழ்த்துகள் நண்பர் சீனா அவர்களே
அருமையான கருத்தினை பகிர்ந்தமைக்கு..

cheena (சீனா) said...

அன்பின் முத்துலெட்சுமி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் சிவசு

அருமையான சிந்தனை - பறவை இனங்கள் ஊர்வன - ஆகியவற்றுக்கும் தினமும் உணவளிக்கலாமே

நல்வாழ்த்துகள் சிவசு

செல்விஷங்கர் said...

நல்ல சிந்தனை - நாளும் வளரட்டும் ! நாடும் வளரும் தானே ! நற்செயல்கள் செய்வோம் !

நசரேயன் said...

நல்ல சிந்தனை ஐயா

கண்மணி/kanmani said...

தமிழ் கற்றவனின் நினைவுகள் ஞாபகத்தில் வரும்போது
வலைப்பக்கம் பேர் மட்டும் ஏன் அசைபோடுவது இல்லாமல் asaipoduvadhu?

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வி ஷங்கர்

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நசரேயன்

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் கண்மணி

வலைப்பூவின் பெயர் தமிழில் மாற்றப்பட்டு விட்டது. ஏதேனும் வரிச் சலுகை உண்டா

நல்வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

அண்ணே அன்னதான மகிமையைப் பற்றி அழகுற எடுத்துரைத்தீர்கள். நன்றி.

cheena (சீனா) said...

அன்புத் தம்பி இராகவன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அரவிந்த் படிக்கிறாரா இதெல்லாம்

நல்வாழ்த்துகள்

shanevel said...

புதிய ஆண்டில் இதை செய் அதை செய்யலாம் என அறிவுறுத்தாமல், ஒரு கதை வழியே அன்னதானம் செய் என்று வாழைப்பழத்தில் ஊசி செருகினது போல அருமையா சொல்லிருக்கீங்க. கர்ணன் கொடுத்து உயர்ந்தவன். அன்னதானத்தை செய்யாதவன் என்பது புதிதாக இருக்கிறது. எல்லா தானமும் செய்தவன் அன்னதானமும் செய்திருக்க முடியாதா? யோசிக்க வைக்கிறது.

இந்தியாவில் பிச்சை எடுப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு காசு போடுவதைக்காட்டிலும், குறைஞ்சது 2 அ 3 இட்லி வாங்கி குடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் வேல்

கர்ணன் அன்ன தான்ம் செய்திருப்பானா - இல்லையா என்பதல்ல இவ்விடுகையின் நோக்கம்

இவ்விடுகை அன்னதானம் செய்வதின் சிறப்பினைச் சொல்லும் இடுகை

ஆராயக்கூடாது அனுபவிக்கணும்

புலி போலப் பாய்ந்தான் என்றால் வாலெங்கே எனக் கேட்கக்கூடாது

புத்தாண்டில் இட்லி வாங்கிக் கொடுக்கிறென் என்றாயே - நல்ல மனது வாழ்க

நல்வாழ்த்துகள் வேல்

அன்புடன் மலிக்கா said...

தாங்களின் இடுகை சிறந்த
அருமையான இடுகை..தானத்தில் சிறந்தது அன்னதானம்தான்


நேரம்கிடைகும்போது இதையும் பாருங்கங்கள்.

http://niroodai.blogspot.com/

http://fmalikka.blogspot.com/

வால்பையன் said...

கரையான் இனங்கள் கூட்டம் கூட்டமாக கோடி கணக்கில் வாழக்கூடியவை! அவைகள் சிறு சிறு மக்கிய மரதுண்டுகளை உணவாக கொள்கிறது, அதன் கழிவுகள் சிரந்த உரம், காடுகள் செழித்த வளர அதுவே காரணம், பல உயிர்கள் உயிர் வாழ சிறு கரையான் காரணமாயிருகிறது,

நாம அதை விட சின்னபுள்ள தனமா அன்னதான கதையை பெசிகிட்டு இருக்கோம்! ஒருவருக்கு உணவு கொடுத்து புண்ணியம் எதிர்பார்த்தால் அது வியாபாரம்! அன்னதானம் சொல்லக்கூடாது! அன்னவியாபாரம்!

ஹுஸைனம்மா said...

அருமையான கதை சீனா சார்.

இஸ்லாத்திலும் நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு, அதைச் செய்யும் உடல் பாகமும் சாட்சி சொல்லும் என்று கூறப்பட்டிருக்கிறது.

பாதைகள் வேறானாலும், போகுமிடம் ஒன்றுதானே!!

cheena (சீனா) said...

அன்பின் மலிக்கா

வருகைக்கு நன்றி

நீரோடை அருமையான கவிதைகள் நிறைந்த பதிவு - 112 பதிவர்கள் பின் தொடர 120க்கும் அதுகமான இடுகைகளைக் கொண்ட பதிவு

வாழ்க மலிக்கா

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் வால்

அன்ன தானம் செய்யும் எவரும் எதையும் எதிர்பார்த்துச் செய்வது கிடையாது - அது அன்ன தானமே தவிர அன்ன வியாபாரம் இல்லை

கரையான் கூட காடு வளர உரம் அளிக்கிறது - அது ஏன் காடு வளர வேண்டுமென் நினைக்கிறது - அதற்கு மக்கிப்போன மரத்துண்டுகள் உணவாக - வேண்டி இருக்கிறது.

உலகில் எந்த ஒரு நிகழ்வும் ஒன்றினை ஒன்று எதிர்பார்த்துத்தான் நிகழ்கிறது

நல்வாழ்த்துகள் வால்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வால்

cheena (சீனா) said...

அன்பின் ஹூசைனம்மா

நன்று நன்று - அனைத்து மதங்களுமே இறுதியில் ஒரே இடத்தைத்தான் அடையாளம் காட்டுகின்றன - செல்லும் வழிகள் பலப்பல - அவ்வளவுதான்

நல்வாழ்த்துகள் ஹூஸைனம்மா

வால்பையன் said...

//உலகில் எந்த ஒரு நிகழ்வும் ஒன்றினை ஒன்று எதிர்பார்த்துத்தான் நிகழ்கிறது//


அன்னதானம்?

cheena (சீனா) said...

உலகில் எந்த ஒரு நிகழ்வும் ஒன்றினை ஒன்று எதிர்பார்த்துத்தான் நிகழ்கிறது

அன்னதானம் செய்தால் பலர் பசி நீங்குவர் - அன்னம் விளைவிப்பவருக்கு வேலை கிடைக்கும்
இத்தொழில் சம்பந்தப்பட்ட பலர் பயனடைவர்

ஒன்றை ஒன்று நம்வித்தான் நிகழ்வுகள் நிக்ழ்கின்றன - டிபண்டண்ட் என்பதன் தமிழ்ச் சொல் எது

சரியா வாலு

இரசிகை said...

thangalukkum anbin puththaandu vazhthukal... iyaa:)

cheena (சீனா) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இரசிகை

Thenammai Lakshmanan said...

மிக அருமையான பகிர்வு சீனா சார் அன்னதானமே என்றும் சிறந்தது

cheena (சீனா) said...

அன்பின் தேனம்மை

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

ஜோதிஜி said...

தமிழர் திரு நாள் வாழ்த்துகள். கர்ணன் எண்ணெய் தேய்த்து குளித்த போது கையில் இருந்த தங்க கிண்ணத்தை வலது கையால் தர்மம் செய்ததும் போன்ற பல கதைகள் நிணைவுக்கு வருகிறது.

நல்வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

அன்பின் ஜோதிஜி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) said...

பசின்னு ஒருவன் வீடுத் தேடி ( நம் எதிரியாக இருந்தாலும் ) வந்தால் வயிறார உணவளிக்க வேண்டும் . அவரிடம் இருந்து போதும் போதும் என்ற வார்த்தை வரவேண்டும் .

அன்ன தானம் தானத்திலே சிறந்தது .

அருமையான விளக்கத்துடன் கூடிய அருமையான கதை சீனா சார் .

cheena (சீனா) said...

வாங்க அன்பின் ஸ்டார்ஜன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டார்ஜன்

நல்வாழத்துகள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

சீனா அய்யா உங்கள் மெயில் முகவரி கொஞ்சம் தாங்களேன் . உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் .

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டார்ஜன்

என் முகவரி : cheenakay@gmail.com

நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்

இரவுப்பறவை said...

நல்ல கருத்துள்ள கதைங்க... நினைவூட்டலுக்கு நன்றி!

cheena (சீனா) said...

அன்பின் இரவுப்பறவை

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

புகழன் said...

அன்னதானமே அகமகிழ்வை ஏற்படுத்தும்.
வேறு எந்த தானத்திலும் திருப்தி என்பதை ஏற்படுத்தி விட முடியாது.
நல்ல பதிவு.

பனித்துளி சங்கர் said...

அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !

cheena (சீனா) said...

அன்பின் புகழன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் சங்கர்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

priyamudanprabu said...

நல்ல கருத்துள்ள பதிவு

cheena (சீனா) said...

அன்பின் பிரபு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள்

Joe said...

சொர்க்கம், நரகம் இருப்பதாக நான் நம்பவில்லை. இருப்பினும் நல்லதொரு நீதிக் கதை!

cheena (சீனா) said...

அன்பின் ஜோ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோ

நல்வாழ்த்துக்ள் ஜோ