ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Thursday 1 January 2009

சென்ற ஆண்டின் சபதமும் இந்த ஆண்டின் சபதமும்

அன்பின் சக பதிவர்களே !

சென்ற ஆண்டு - சர்வசித்து ஆண்டு தைத்திங்கள் முதல் நாள் - இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு சனவரித் திங்கள் பதினைந்தாம் நாள் - செவ்வாய்க்கிழமை மாலை 17:17 மணி அளவில் 2008ம் ஆண்டின் புத்தாண்டு சபதமாக என்ன எல்லாம் 2008ம் ஆண்டு செய்ய வேண்டும் என ஒரு பதிவு போடிருந்தேன். முப்பத்து ஒரு மறு மொழிகள் வந்திருந்தன. அப்பதிவினை தற்செயலாக ( நம்புங்க அய்யா !!! ) படித்ததில் ஒரு சுய பரிசோனை - ஒரு ஆய்வு செய்தாலென்ன என ஒரு எண்ணம் தோன்றியதன் விளைவு இப்பதிவு.

முதலில் அச்சபதம் எடுக்கக் காரணமாயிருந்த சகோதரி
நானானிக்கும், நண்பர் ரூபஸ் அருளுக்கும் நன்றி தெரிவித்து, அவர்களுக்கு என்னுடைய சபதத்தின் இன்றைய நிலை என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டிய கடமை - கட்டாயத்தில் இருப்பதினால் இப்பதிவினை இங்கு இடுகிறேன்.

மேலும் அப்பதிவினில் என்னை 2009ம் ஆண்டு, சபதம் நிறைவேறியதா இல்லையா எனச் சோதித்துப் பார்ப்பேன் எனப் பயமுறுத்திய கண்மணி அவர்களுக்கும் இப்பதிவினில், நிலை என்ன என்பதை அறிவிக்க வேண்டி இருப்பதால் இப்பதிவினை இங்கு இடுகிறேன்.

மேலும் அப்பதிவினில் எனக்கு அன்புக் கட்டளை ...ட்டளை ......டளை .........ளை இட்ட மங்களூர் சிவாவினிற்கும் இப்பதிவினில் நிலை என்ன என்பதை அறிவிக்க வேண்டி இருப்பதால் இப்பதிவினை இங்கு இடுகிறேன்.

பில்டப் போதுமா - பதிவைத் தொடரலாமா வேணாமா ( எல்லோரும் வேணும் வேணும்னு கேக்கறது எனக்குக் கேக்குது ) - கட்டாயம் தொடர்வேன் - நாளைக்குப் பாக்கலாமா .......

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நினைத்தவை நடக்கவும், விரும்பியது கிடைக்கவும், மகிழ்வுடன் இருக்கவும், சிறப்புடன் வாழவும் நல்வாழ்த்துகள்.

நட்புடன் ....... சீனா




16 comments:

cheena (சீனா) said...

ஹல்லோ - எல்லொர்ரும் ஒரு வோட்டுப் போடுங்களேன் மேலே தமிழ் மணத்துலே

RAMYA said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சீனா!!!

cheena (சீனா) said...

நன்றி ரம்யா

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ரம்யா

சதங்கா (Sathanga) said...

//எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நினைத்தவை நடக்கவும், விரும்பியது கிடைக்கவும், மகிழ்வுடன் இருக்கவும், சிறப்புடன் வாழவும் நல்வாழ்த்துகள்.//

எங்க பக்கம் இருந்தும் வாழ்த்துக்கள் சீனா ஐயா.

cheena (சீனா) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சதங்கா

வல்லிசிம்ஹன் said...

என்ன சீனா சார். சஸ்பென்சில நிறுத்தி இருக்கீங்க:)

அன்பின் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

வல்லிம்மா - ரொம்ப நன்றி - சஸ்பென்ஸ் இன்னிக்கு உடைச்சிடுவோம் - தொடர்ந்துடுவோம்ல

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

VIKNESHWARAN ADAKKALAM said...

உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

cheena (சீனா) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விக்கி

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

cheena (சீனா) said...

நன்றி நண்பர் ராதாகிருஷ்ணன் - வருகைக்கு

cheena (சீனா) said...

நன்றி நண்பர் ராதா கிருஷ்ணன் வாழ்த்திற்கு

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நானானி said...

சஸ்பென்ஸ் என்ன சஸ்பென்ஸ் வல்லி..? என்ன சபதம் எடுத்தேன் என்பதே மறன்னு போச்சுங்கப் போறார் நண்பர் சீனா அவர்கள். அப்படித்தானே...சீனா?
நாம்பளும் தப்பிச்சுருவோம்.

சகாதேவன் சொன்னது போல்
:ஹாப்பி டே!!: சீனா, செல்வி சங்கர் மற்றும் புது வண்டு!!!

cheena (சீனா) said...

அன்பின் நானானி

அதெல்லாம் இல்லை - அடுத்த பதிவு அன்றே போட்டு விட்டேன் - படியுங்கள் -கருத்துக் கூறுங்கள்

வாழ்த்திற்கும் வர்ருகைக்கும் அனைவர் சார்பிலும் நன்றி சகோதரி நானானி

வால்பையன் said...

சென்ற ஆங்கில புத்தாண்டுக்கும்
வரவிருக்கும் தமிழ் புத்தாண்டுக்கும் வாழ்த்துக்கள் ஐயா!

cheena (சீனா) said...

வால்பையா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - வாழ்த்துக்கும் நன்றி வால்பையா