ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 26 October 2008

மலரும் தீபத் திருநாள் நினைவுகள்

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

என்னுடைய சிறு வயது ( 1963-66 - வயது : 13-16) தீபாவளியை, தமிழ்ச்சங்கம் வளர்ந்த தன்னிகரில்லா மதுரையில், கொண்டாடிய மலரும் நினைவுகளை வலை உலக அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தீபாவளி என்பது சிறுவர்களுக்கு மகிழ்வைத் தரும் ஒரு விழா. அன்றைய தினம் அதிகாலை எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்தி, சர வெடிகள் வெடித்து, பலகாரங்கள் உண்டு, கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுது, இன்பமாக இருக்க ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.

எங்கள் வீடு ஒரு கூட்டுக் குடும்பம். தாத்தா, பாட்டி, தாய், தந்தை, தமயன், தம்பியர், தங்கையர் எனப் பலரும் கூடி வாழ்ந்த ஒரு பெரிய குடும்பம். தீபாவளி அன்று, தாயும் பாட்டியும் அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து பலகாரம் செய்ய ஆரம்பிப்பார்கள். முடிப்பதற்கு மதியம் ஒரு மணி ஆகி விடும். நாங்கள் சிறுவர்கள் மெதுவாக ஒருவர் பின் ஒருவராக, காலை நான்கு மணியிலிருந்து, எழுந்து எண்ணெய் தேய்த்து, தூக்கக் கலக்கத்துடன் சுடு தண்ணீரில் குளித்து விட்டு துண்டைக் கட்டிக்கொண்டு காத்திருப்போம்.

எங்கள் அப்பா எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, மலை போல் குவிந்திருக்கும் புத்தாடைகளுக்கு, மஞ்சள் வைத்து, பூசை செய்து, பலகாரங்கள் படைத்து, இறை வணக்கம் செய்துவிட்டு ஒவ்வொருவராக கூப்பிட்டு புத்தாடைகள் கொடுப்பார்கள். காலில் விழுந்து வணங்கி பெருமையுடன், பொறுமையாக பெற்றுக் கொள்வோம். அவைகளை அணிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயார் ஆவோம்.

அப்பாவும் புத்தாடை அணிந்து, ஒரு பெரிய சரவெடியினைக் கொளுத்தி, வெடித்து கொண்டாட்டங்களை அடையாள பூர்வமாக ஆரம்பித்து வைப்பார்கள். பின் நாங்கள் அனைவரும் வெடிகளை வெடிப்போம். காலை ஆறு மணி வரை, முடிந்த வரை வெடிப்போம். பின் அனைவரும் அமர்ந்து பலகாரங்கள் சாப்பிட்டுவிட்டு, கோவிலுக்குச் செல்ல தயாராவோம். அப்பா அனைவரையும் அழைத்துக் கொண்டு ( தாயார், தாத்தா, பாட்டி நீங்கலாக) புதூரிலிருந்து சிம்மக்கல் வரை பேருந்தில் அழைத்துச் செல்வார்கள்.

பழைய சொக்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பிறகு மீனாட்சி அம்மன் கோவில் செல்வோம். அங்கு, விபூதிப் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, முக்குறுணிப் பிள்ளளயாருக்கு துண்டு சார்த்தி, வழி பட்டு, அம்மன் சன்னதி சென்று அர்ச்சனை செய்வோம். இப்போதிருக்கும் கூட்டமெல்லாம் அப்போது இல்லை. அனவரின் சார்பிலும், அப்பா கம்பீரமாக, அர்ச்சனை சுவாமி பெயருக்கே செய்யச் சொல்வார்கள். பிற்காலத்தில் தான் தெரிந்தது அத்தனை பேரின் பெயர்களும் நட்சத்திரங்களும் நினைவில் வைத்துக் கொள்வதின் சிரமம் கருதித்தான் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்தோம் என்பது. ஆனால் அந்தப் பழக்கம், என் குடும்பம் அளவான குடும்பமாக இருப்பினும், இன்னும் தொடர்கிறது.

அடுத்து சுவாமி சன்னதி. வெளியில் வந்து சனீஸ்வரர், அனுமார், காலைத் தூக்கி ஆனந்த நடனம் புரியும் சிவ பெருமான், அன்னை உமையவள் அனைவரையும் வழி பட்டு திரும்புவோம். நடனம் புரியும் இறைத் தம்பதிகளின் மேல் வெண்ணை சாத்துவது என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்று. சிலைகளின் உயரத்திற்கும் எங்கள் உயரத்திற்கும் சம்பந்தமே இருக்காது. வெண்ணையைத் தூக்கி சிலைகளின் மீது எறிவோம். அது எங்கு வேண்டுமானாலும் இலக்கின்றி பறந்து சென்று அமர்ந்து கொள்ளும். இன்று வரை சரியாக சிலைகளின் மீது எறிந்ததாக சரித்திரம் இல்லை. தற்போது வெண்ணை சாத்தும் பழக்கம் நிறுத்தப் பட்டு, நெய் விளக்கு ஏற்றும் பழக்கம் கடைப் பிடிக்கப் படுகிறது.

மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் வாங்கி அனைவரும் தலைக்கு கொஞ்சமாக உண்டு மகிழ்வோம். பின் அங்கிருந்து கிளம்பி நகரத் திரை அரங்கு ஒன்றில் காலைக் காட்சி (10 மணிக் காட்சி) அனைவரும் பார்த்துவிட்டு மதியம் சாப்பாட்டிற்கு வீடு திரும்புவோம். முன்பதிவு என்பதெல்லாம் இல்லாத காலமது. நினைவில் நிற்கும் திரை அரங்குகள் தங்கம் (மிகப் பெரிய அரங்கு), ரீகல் ( பகலினில் நூலகம் - இரவினில் திரை அரங்கம்), இம்பீரியல், கல்பனா, சிந்தாமணி, செண்ட்ரல், நியூ சினிமா, பரமேஸ்வரி முதலானவை.

இதில் பரமேஸ்வரியில் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரை இடப்படும். தீபாவளி அன்று திரைப் படம் பார்க்கும் பழக்கம் பல ஆண்டுகளுக்கு நீடித்தது. எங்கள் அனைவருக்கும் புத்தாடை எடுப்பது என்பது ஒரு பெரிய நிகழ்வு. அப்பா, அம்மா, தமயன், நான், நால்வர் தான் செல்வோம். அக்கால ஜவுளிக் கடை - அல்ல - கடலில் ( ஹாஜிமூசா) தான் பெரும்பாலும் துணி எடுப்போம். ஆண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி, சட்டைக்கும், அரை ட்ராயருக்கும் துணி எடுப்போம். பனியன் மற்றும் உள்ளாடைகள், பெண்களுக்கு சேலை, பாவாடை, தாவணி, மற்றும் உள்ளாடைகள் ஆகியவை வாங்குவோம்.

ஒரு மாத காலம் முன்பாகவே துணி வாங்கும் படலம் தொடங்கும். கடையில் இருந்து வீட்டிற்கு வருவதற்கு முன்னாலேயே, கோரிப்பாளையத்தில் கோல்டன் தையலகத்தில் தைக்கக் கொடுத்து விடுவோம். தைத்து வந்த பிறகு தான் மற்றவர்கள் பார்க்க முடியும். தீபாவளி அன்று மட்டும் தான் அத்துணிகள் அவரவர்க்குச் சொந்தம். பிறகு எந்தத் துணி யாருடையது என்று யாருக்குமெ தெரியாது. பொதுவாக அனைத்துமே ஒரே அளவில் தான் இருக்கும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டு மானாலும் போட்டுக் கொள்ளலாம்.

வெடிகளும் இனிப்புப் பலகாரங்களும் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னரே அப்பா வாங்கி வருவார்கள். என்ன வாங்கி வந்தார்கள் என்பது பரம ரகசியம். தீவாவளிக்கு முந்தைய இரவு அனைவருக்கும் சமமாக வெடிகள் பிரித்துக் கொடுக்கப் படும். அவ்வெடிகளைப் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் ரகசியமாக பத்திரமாக பாதுகாப்போம். ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் கொள்ளை அடிப்பதும், சண்டை போடுவதும், களவு போனதா இல்லையா என்பது கூடத் தெரியாமல் அடித்துக் கொள்வதும், பின் சமாதான உடன்படிக்கை செய்வதும் நினைக்க நினைக்க இன்பம்.

ஒருவரை ஒருவர் நம்ப மாட்டோம். கணக்குத் தெரியாது. யார் தீபாவளி யன்று வெடி வெடித்தாலும் அனைவருமே அவ்வெடி தன்னுடைய பங்கிலிருந்து தான் திருடப்பட்டது என்று மனப்பூர்வமாக நம்புவோம். உடனே அடி தடி சண்டை தான். பெரியவர்கள் குறுக்கிட்டு இரண்டு போடு போட்டு இருவருமே அழத் தொடங்கி அவரவர்களுக்குப் பிடித்த பெரியவர்களிடம் சென்று ஆறுதல் பெற்று, அவர்களின் பங்கிலிருந்து (???), நிவாரணம் பெற்று மகிழ்ந்ததும் அக்காலமே.

மறு நாள் அனைவருமே அம்மஞ்சள் மாறாத புத்தாடைகளை பெருமையுடன் அணிந்து, ராஜ நடை போட்டு பள்ளிக்குச் சென்று நண்பர்களுக்குக் காண்பித்து, ஒப்பு நோக்கி, உயர்வு தாழ்வு கண்டு, மகிழ்ந்தது தற்கால மழலையர் முதல் இளஞர் வரை இழந்த ஒன்று. அக்காலத்தில், விழாக்களின் கொண்டாட்டங்கள், அதனால் விளையும் மகிழ்ச்சிகள், குதூகலமாக, கூட்டமாக திரைப் படம் பார்த்தது, ஒன்றாக உண்டது, ஒன்றாக விளையாடியது, ஒன்றாக உறங்கியது, அனைத்துமே இக்காலத்தின் கட்டாயத்தில் இழந்த நட்டங்கள்.

தீபாவளி அன்று வீட்டிற்கு வரும் உறவினர்களில் பெரியவர்கள் அனைவரின் காலிலும் விழுந்து கும்பிட்டு, ஆசிகள் பெற்று, அத்துடன் காசுகளும் பெற்றதும் உண்டு. காசுக்காகவே சும்மா சும்மா காலில் விழுவோம். பரிசுகளோ ஆசிகளோ பெரியவர்களிடம் பெறும் போது காலில் விழுந்து வணங்கும் நல்ல பழக்கம் இன்றும் தொடர்கிறது.

மலரும் நினைவுகளாக அசை போட்ட நிகழ்வுகள், திரும்ப இளமைப் பிராயத்திற்குச் செல்லும் வசதி இல்லையே என நினைக்கத் தூண்டுகிறது.

---------------------------------------------

98 comments:

cheena (சீனா) said...

மலரும் நினவுகளை சக பதிவர்களும் எழுதலாமே !

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

ஜோசப் பால்ராஜ் said...

அருமையான நினைவுகள் .
இனிய தீபாவளி வாழ்த்துக்கள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.

புதுகை.அப்துல்லா said...

மலரும் நினவுகளை சக பதிவர்களும் எழுதலாமே !

//
நான் எழுதிவிட்டேனே உங்களுக்கு முன்னாடியே :)

தீபாவளி வாழ்த்துகள்

geevanathy said...

///மறு நாள் அனைவருமே அம்மஞ்சள் மாறாத புத்தாடைகளை பெருமையுடன் அணிந்து, ராஜ நடை போட்டு பள்ளிக்குச் சென்று நண்பர்களுக்குக் காண்பித்து,///

பழசையெல்லாம் அசைபோடவைக்கிறது உங்கள் வரிகள்.

உங்களுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

அன்புடன் ஜீவன்.

cheena (சீனா) said...

வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி ஜோசப் பால்ராஜ்

cheena (சீனா) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அப்துல்லா

cheena (சீனா) said...

அன்பின் தங்கராசா ,

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்க்கும் நன்றி

ஆயில்யன் said...

இப்பத்தான் உக்காந்து நினைச்சுக்கிட்டிருந்தேன்! மாறி மாறி தீபாவளி நினைவுகளில் திளைக்கவைத்தது!
நன்றி
அய்யா!


இனிய தீபாவளி வாழ்த்துக்களுடன்...!

அன்புடன்,
ஆயில்யன்.

cheena (சீனா) said...

ஆயில்ஸ்,

வருக்கைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

தீபாவளி நல்வாழ்த்துகள்

மெளலி (மதுரையம்பதி) said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் சீனா ஐயா.

மிக அருமையா கொசுவத்தி சுத்தியிருக்கீங்க...நீங்க சொன்ன பல விஷயங்களை நானும் அனுபவித்திருக்கிறேன்..அவற்றை உங்களுடன் இந்த இடுகையை படித்து நானும் அசை போடுகிறேன். :))

மாதவராஜ் said...

தீபாவளி வாழ்த்துக்கள் !

வல்லிசிம்ஹன் said...

//மலரும் நினைவுகள் சக பதிவர்களும் எழுதலாமே//
உண்மைதான் சீனா ஐயா.

ஒவ்வொரு பண்டிகையும் போல அல்ல தீபாவளி. எல்லாக் குதூகலமும் கலந்தது.
நீங்கள் சொல்லி இருக்கும் அதே ஹாஜிமூசாதான் எங்களுக்கும் துணிமணி எடுக்கும் இடம். இரும்புத்திரை சினிமா பார்த்ததும் தங்கம் தியேட்டரில்தான்.

பள்ளிப்பயணமாக திருமலை நாயக்கர் மஹால் வந்து போனதும் நினைவுக்கு வருகிறது.

ராமநாதன் நகைக்கடையில் வாங்கின காசுமாலை இன்னும் இருக்கிறது.

நாலரைப் பவுன் மாலை முன்னூறு ரூபாய் மட்டுமே:)
நன்றி ,நல்ல நினைவுகளில்
ஆழ்த்தியதற்கு.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நன்னாள் வாழ்த்துகள்.

சதங்கா (Sathanga) said...

சீனா ஐயா,

அருமையான நினைவுகள். மீண்டும் அசைபோட்டு எழுதி எங்களையும் அந்த நாட்களுக்கு கூட்டிச் சென்றீர்கள்.

உங்களுக்கும், செல்வி அம்மாவுக்கும், உங்கள் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுக்கும், இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் மதுரையம்பதி ( மௌளி ) -
மலரும் நினைவுகளைத் தூண்டுவது தான் இப்பதிவின் நோக்கம் - மகிழ்ச்சி - கொசு வத்தி சுத்தியதற்கு

தீபாவளி நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் மாதவராஜ்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

ஹாஜி மூசா, தங்கம் - கொசுவத்தி சுத்த வைச்சிட்டேனா வல்லிம்மா -

நாலரைப்பவுன் மாலை 300 ரூபய் தானா ? ம்ம்ம் எனக்கு அக்கால விலைகள் நினைவில்லை,

மலரும் நினைவுகளில் மூழ்கி மகிழ்ந்தது கண்டு மகிழ்கிறோம்

நேரமிருப்பின் படியுங்களேன்

http://cheenakay.blogspot.com/2008/10/blog-post_12.html

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

சதங்கா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சதங்கா

மனைவி, மகன், மகளிடம் அன்பினையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கவும்

ச.பிரேம்குமார் said...

மலரும் நினைவுகள் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மீண்டும் அந்த காலத்துக்குப் போக முடியாது என்பது பெரும் வருத்தம் தான்.எனக்கு ம் அந்த நாளைய ஞாபகங்களை நினைத்தால் ஆசையாகத்தான் இருக்கிறது.

உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..

துளசி கோபால் said...

ஹைய்யோ......... அருமையான கொசுவத்தி.

மிகவும் ரசிச்சேன்.

தருமி said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Thamiz Priyan said...

மலரும் நினைவுகள் அருமை... பண்டிகை முடிந்ததும், புதுத் துணிகளை உடுத்திக் கொண்டு பள்ளிச் செல்லும் அந்த நாட்கள் என்றும் மறக்க இயலாதவை.. :)

cheena (சீனா) said...

அன்பின் பிரேம்,

வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி பிரேம்

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் முத்துலட்சும்

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் தருமி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் பிரியன்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே !

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ் பிரியன்

cheena (சீனா) said...

அன்பின் சிவம்,

வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி

anudivya said...

Hey Cheena, thanks for your comments on my blog. You have a nice blog yourself...

NewBee said...

ரைட்டு...இந்தா வாரேன் :)

NewBee said...

முதலில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! :)

மூணு நாளைக்கப்புறமும் வெடி வெடிக்க முடியும், தீபாவளிப் பலகாரம் உண்ண முடியும், வாழ்த்துகளும் சொல்ல முடியும் :D

NewBee said...

//எங்கள் அப்பா எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, மலை போல் குவிந்திருக்கும் புத்தாடைகளுக்கு, மஞ்சள் வைத்து, பூசை செய்து, பலகாரங்கள் படைத்து, இறை வணக்கம் செய்துவிட்டு ஒவ்வொருவராக கூப்பிட்டு புத்தாடைகள் கொடுப்பார்கள். காலில் விழுந்து வணங்கி பெருமையுடன், பொறுமையாக பெற்றுக் கொள்வோம். //

ஹா..ஹி..ஹூ...மீ த ஸேம் (Same) :P

NewBee said...

//வெண்ணையைத் தூக்கி சிலைகளின் மீது எறிவோம். அது எங்கு வேண்டுமானாலும் இலக்கின்றி பறந்து சென்று அமர்ந்து கொள்ளும். இன்று வரை சரியாக சிலைகளின் மீது எறிந்ததாக சரித்திரம் இல்லை//

ஹி..ஹி..நான், எறிந்தது, சிலையின் முன் இருந்த ஐயர் தலையில் விழுந்தது..:D

NewBee said...

//தீபாவளி அன்று திரைப் படம் பார்க்கும் பழக்கம் பல ஆண்டுகளுக்கு நீடித்தது. //

க்கும்...க்கும்...எல்லாரும் கேட்டுங்க....செல்வி அம்மா, நல்லாக் கேட்டுங்க....

பல ஆண்டுகள் நீடித்ததுன்னா...இப்ப, சில (பல) ஆண்டுகளா நீடிக்கல தானே ..... யூ டூ சீனா ஸார் ;)

NewBee said...

//ஒரு மாத காலம் முன்பாகவே துணி வாங்கும் படலம் தொடங்கும்.//

(எனக்கெல்லாம்) சொல்லவே இல்ல :கோபம்: :(

NewBee said...

//பெரியவர்கள் குறுக்கிட்டு இரண்டு போடு போட்டு இருவருமே அழத் தொடங்கி //

ஹி..ஹி..சீனா ஸார், 'டொம்' வாங்கியிருக்கீங்களா....கிக்கிகீகீ :P

NewBee said...

//பரிசுகளோ ஆசிகளோ பெரியவர்களிடம் பெறும் போது காலில் விழுந்து வணங்கும் நல்ல பழக்கம் இன்றும் தொடர்கிறது.//

ரைட்டு...பாயிண்டி நோட்டட். :))

NewBee said...

//திரும்ப இளமைப் பிராயத்திற்குச் செல்லும் வசதி இல்லையே என நினைக்கத் தூண்டுகிறது.
//

யூ ஆர் ஆல்வேஸ், யங் அட் ஹார்ட்...ஒய் வொரீஸ்...நோ வொரீஸ்...

ஹாப்பி திவாலி :)))

NewBee said...

இப்பதைக்குப் போயிட்டு வரேன். :)

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். செல்வி அம்மாகிட்டட்யும் சொல்லிடுங்க :))

cheena (சீனா) said...

அனு திவ்யா

நன்றி - நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

துளசி

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

//ரைட்டு...இந்தா வாரேன் :) //

புது வண்டே ! மெதுவாக வேலை எல்லாம் முடித்துவிட்டு வா

cheena (சீனா) said...

புது வண்டே !

மூணு நாளென்ன ? எப்ப வேணுமானலும் வெடி வெடிக்கலாம் - பலகாரம் திண்ணலாம் - வாழ்த்துச் சொல்லலாம் - தப்பில்ல

cheena (சீனா) said...

"மீ த ஸேம் " - அதான் தெரியுமே புது வண்டு

cheena (சீனா) said...

வெண்ணெயே அய்யர் தலையில் எறிந்த வீராங்கனையே வாழ்க - புது வண்டிற்கு குறி தப்பும் - இல்லையா ?

cheena (சீனா) said...

இப்ப சில ஆண்டுகளாக இல்லன்னு கண்டு பிடிச்ச புது வண்டிற்கு பாராட்டுகள். அதென்ன செல்வி அம்மாவிற்கு பிரத்யேக விண்ணப்பம் . - புதுவண்டே குடும்பத்துலே குழப்பத்தே உண்டு பண்ணாதே

cheena (சீனா) said...

புது வண்டே ! எங்கப்பா துணி வாங்குன படலத்தேச் சொன்னா - உன் கிட்ட சொல்லலன்னா என்ன அர்த்தம் ? புது வண்டே நீ எங்கிருந்தாய் அப்பொழுது ?

cheena (சீனா) said...

புது வண்டே !! டொம் வாங்கி வாங்கி பழகிய பழக்கம் தான் எங்க பிள்ளைகளுக்கு டொம் கொடுக்க உதவியது

cheena (சீனா) said...

புது வண்டெ ! நல்ல பழக்கங்களை நோட் செய்த பண்பு நன்று

cheena (சீனா) said...

//யூ ஆர் ஆல்வேஸ், யங் அட் ஹார்ட்...ஒய் வொரீஸ்...நோ வொரீஸ்...//

ஆம் புது வண்டே ! இன்னும், இளமையாக இருப்பினும், மேன்மேலும் இளமையாக இருக்க ஆசைகள் - நன்று நன்று

cheena (சீனா) said...

சென்று வா புது வண்டே !! செல்வி அம்மா கிட்டே சொல்லிடறேன்

Noddykanna said...

தீபாவளி, தீபாவளி, பல நாள் தீபாவளியா? இப்போ எல்லாம் ஒரு நாள் அவசர தீபாவளியா இருக்கு!

காலையிலிருந்து மாலை வரை எத்தனை களிப்பு? உண்மை! உண்மை!
அக்காலம் போல் எக்காலமும் இராது!

படித்துக் களித்தேன்! அருமையான மலரும் நினைவுகள்! வாழ்த்துகள்!

-- நாடிக்கண்ணா

Dammam Bala (தமாம் பாலா) said...

சீனா அய்யா,
தீபாவளி வாழ்த்துக்கள்!
துளசிதளம் வழியா இங்கே வந்தேன்.
தீபாவளி நினைவுகளை ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. நேரம் கிடைக்கும் போது எங்க (வலை)வீட்டுக்கும் வாங்க

http://bala-win-paarvai.blogspot.com/2008/10/blog-post_26.html

சிவமுருகன் said...

வாழ்த்துக்கள் சீனா ஐயா!

ரொம்ப சந்தோஷமா இருந்தது! பட்டாசு வெடித்தது, சண்டை போட்டது!
ஹ்ம்
"மதுரையில் நாமும் வெடி... வெடித்த, அந்தநாளும் வந்திடாதோ!"

அப்பறம் அந்த தீவாளி காசு சம்பவத்தை விட்டுடீங்க?

ஒவ்வொரு டீச்சரும் ரொம்ப அழகா பசங்களோட டிரஸ் பத்தி சொல்ல சொல்வாங்க.

அதிலும் ஒருவர் மினி பேச்சு போட்டி வச்சு பரிசுகளும் தருவாங்க ("பூங்கோதை டீச்சர்" எங்க இருக்கீங்க?-என்னோட ஆறாம் வகுப்பு ஆசிரியர்).

Geetha Sambasivam said...

நல்லாத் தான் அசை போட்டிருக்கீங்க! ம்ம்ம்ம்ம்?? நானும் அசை போட்டுட்டுத் தான் இருக்கேன், முடிஞ்சா எழுதறேன் அதையும்! ரொம்ப நன்றி பதிவுக்கு வந்ததுக்கும், வாழ்த்தியதற்கும். உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் விழாக்கால வாழ்த்துகள்.

நானானி said...

பத்து நாளா ரொம்ப பிஸீ! அதான் லேட். நல்ல கொசுவத்தி!!பல நிகழ்வுகள் எங்கள் குடும்பத்தில் நடப்பது போலவே உள்ளது. இக்கால இளசுகள் இழந்த ஒன்று என்று சொன்னது முற்றிலும் சரி. புது வண்டு சுத்திசுத்தி வந்து கலாய்த்தது சுவை.
எனோட கொசுவத்தியையும் சீக்கிரமே
ஏத்துகிறேன். சேரியா?

நானானி said...

அது சரி...காலையில் எழுந்து, குளித்து, புத்தாடையணிந்து, பெரியோரை வணங்கி, பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து, சொந்தங்களை சந்தித்து, கோவிலுக்குப் போய்....இவ்வளவும் முடித்து காலை 10 மணி காட்சிக்குப் போவது எங்ஙனம் சாத்தியம்? ம்ம்?

cheena (சீனா) said...

அன்பின் நாடிக்கண்ணா

தீபாவளி அன்று இருந்த மாதிரி இன்று இல்லை - அவசரத் தீபாவளி ஆகி விட்டது - உண்மை

மலரும் நினைவுகள் என்றுமே மகிழ்ச்சியைத் தரும்

தருமி said...

தீபாவளி அன்னைக்கே இங்க வந்துட்டு அப்துல்லா பதிவுக்குப் போனேனா...அங்க இருந்து இங்க திரும்பி வர முடியாமப் போச்சு ..

காலந்தாழ்த்திய தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமாம் பாலா !

உங்க வூட்டுக்கும் வந்துட்டேனே ! பாத்து நல்லா இருக்கு சொல்லிட்டேனே !

cheena (சீனா) said...

ஹாய் சிவமுருகன்,

வெட் வெடிச கதெயச் சொல்றது தானே !

தீவாளிக் காசு - என்னாது அது ? சொல்லேன் - கேட்போம்

அது யாருப்பா பூங்கோதை டீச்சர் - இத்தனை ஆண்டுகள் கழித்துத் தேடுகிறாய் ?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கீதா

அசை போட்டதை அப்படியே எழுதுங்க - நாங்கல்லாம் தெரிஞ்சிக்கணூம் இல்லயா

வால்பையன் said...

படிச்சு முடிக்கிறதுகுள்ள அடுத்த தீபாவளி வந்துரும் போலருக்கே சார்

வால்பையன் said...

//"மதுரையில் நாமும் வெடி... வெடித்த, அந்தநாளும் வந்திடாதோ!"//

எனக்கும் இப்படி போட ஆசை தான்
ஆனா சின்ன வயசுலேயே சவுண்ட் அலர்ஜி வந்துட்டதால பட்டாசு நான் வெடிக்கிறதில்ல

cheena (சீனா) said...

அன்பின் வால்பையன்

படிப்பா - அடுத்த தீபாவளி வரை படி - சவுண்டு அலர்ஜியா - ம்ம்ம்ம்ம்ம்ம்

மங்களூர் சிவா said...

காலந்தாழ்த்திய தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

நீங்க சொன்ன பல விஷயங்களை அனுபவித்திருக்கிறேன். இப்ப அதெல்லாம் மிஸ் பண்ணுறோம் உண்மைதான் :(

மங்களூர் சிவா said...

//
cheena (சீனா) said...

புது வண்டே !! டொம் வாங்கி வாங்கி பழகிய பழக்கம் தான் எங்க பிள்ளைகளுக்கு டொம் கொடுக்க உதவியது
//

ஹிஹி
பாயிண்ட் நோட்டட் ஃப்யூச்சர்ல யூஸ் ஆகும்ல

:))

cheena (சீனா) said...

அன்பின் சிவா,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

இக்கால நண்பர்கள் பலவற்றை இழந்து விட்டனர். பல புதிய செயல்கள் தற்பொழுது உண்டு சிவா.

cheena (சீனா) said...

சிவா,

டொம் விஷயம் வூட்ல தங்க்ஸ்கிட்டே கேட்டுக்கிட்டு கடைப்பிடி - ஆமா அனாவசியமா நீ டொம் வாங்காதே

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தருமி அண்ணே !

cheena (சீனா) said...

அன்பின் நானானி,

தாமதமான மறுமொழிக்கு வருந்துகிறேன்

கொசுவத்தி சுத்துங்க - காத்துக்கிட்டு இருக்கோம் கேக்கறதுக்கு

புது வண்டு சும்மா கலாய்க்குதுல்ல

ம்ம்ம் ரொம்ப நன்றி நானானி

cheena (சீனா) said...

//அது சரி...காலையில் எழுந்து, குளித்து, புத்தாடையணிந்து, பெரியோரை வணங்கி, பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து, சொந்தங்களை சந்தித்து, கோவிலுக்குப் போய்....இவ்வளவும் முடித்து காலை 10 மணி காட்சிக்குப் போவது எங்ஙனம் சாத்தியம்? ம்ம்? //

அன்பின் நானானி - இதற்கு ஒரு முழுப் பதிவு போட்டு பதில் சொல்றேன் - சேரியா

cheena (சீனா) said...

படித்தேன் அகமகிழ்ந்தேன்
பால்ய நினைவுகள் என்னை எங்கோ கொண்டு சென்றது

ராதா

கார்த்திகைப் பாண்டியன் said...

ஐயா. உங்க காலத்து தீபாவளி பத்தி சொல்லி இருக்கிறது சந்தோசம்.. இப்பவும் நிறைய விஷயங்கள் இதேமாதிரித்தான் இருக்குது.. அப்படியே கல்யாணத்துக்கு முந்தைய காலத்து நினைவுகளையும் சொல்லி இருக்கலாம்ல.. நாங்க அப்பத்தானே உங்களை ஓட்டுறதுக்கு, அம்மாகிட்ட போட்டுக் கொடுக்கறதுக்கு எல்லாம் வசதியா இருக்கும்..;-))))

cheena (சீனா) said...

யோவ் காபா

என்கிட்டேயே வாங்கி என்னையேவே ஓட்டுறதா - அதுலயும் அம்மா கிட்டப் போட்டுக் கொடுக்கறதா - சரி சரி - உன்னைய மாதிரி எத்தனை பேரைப் பாத்துருப்பேன் நானு

ம்ம்ம்ம்ம்ம்ம்

Thekkikattan|தெகா said...

ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் கொள்ளை அடிப்பதும், சண்டை போடுவதும், களவு போனதா இல்லையா என்பது கூடத் தெரியாமல் அடித்துக் கொள்வதும், பின் சமாதான உடன்படிக்கை செய்வதும் நினைக்க நினைக்க இன்பம்///

ஹா ஹா ஹா... சீனா, செம க்யூட் போங்க, நினைச்சுப் பார்க்கவே சந்தோஷமா இருக்கிதுங்கோவ்வ்வ்...

இந்தப் பின்னூட்டத்தை வர்ற தீவாளிக்கு வைச்சிப் படிச்சிக்கோங்க... அவ்வளவு நாட்கள் கழிச்சி இந்தப் பதிவ படிச்சிருக்கேன். :)) சூப்பர்ப்!

cheena (சீனா) said...

அன்பின் பிரபா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா

நல்வாழ்த்துகள் பிரபா

நட்புடன் சீனா

ஜோதிஜி said...

அதென்ன மலைபோல் குவித்து வைத்திருக்கும் புத்தாடைகளில் இருந்தது..........

நம்ம வீட்டில் போலவே உங்க குடும்பத்திலும் கூட்டுக் குடும்பமா?

priyamudanprabu said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

ம்ம்ம்ம் எங்களை பொல வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு மலரும் நினைவுகள் மட்டுமே தீபாவளி
ம்ம்ம்ம்ம்ம்

லதானந்த் said...

இனிமையான பகிர்வு. திப்பாவளி வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

வாங்க ஜோதிஜீ - ஆமா ஆமா ஒரே குடும்பம் தான் - கூட்டுக்குடும்பம் எல்லாம் இல்ல - வூட்ல தாத்தா பாட்டி உட்பட உறுப்பினர்கள் அதிகம் - இப்ப இருக்கற மாதிரி எல்லாம் ஒண்ணே ஒண்ணு - இல்லன்னா - போனாப்போவுதுன்னு இன்னொன்னு - அப்படி எல்லாம் கட்டுப்பாடு இல்லாத காலம் அது - இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

பிரபு - தாயகத்தில் இல்லை என்றாலும் = அங்கும் மகிழ்வாக நட்புடன் சுற்றத்தோடும் கொண்டாடலாமே ! இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

லதானந்த் - நன்றி வருகைக்குக்ம் வாழ்த்துக்கும்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

மலர்ந்த நினைவுகள் ...
அருமை ...

Avargal Unmaigal said...

Wishing you and your family
a very happy and prosperous
Diwali

இப்போதுதான் நாங்கள் இங்கே தீபாவளி கொண்டாடுகிறோம். அதனால் தான் லேட் வாழ்த்துக்கள்

shanevel said...

அன்பின் சீனா ஐயா... நீங்க மலரும் நினைவில் தீபாவளி கொண்டாடியது, ரொம்ம்ம்ம்ம்ம்ப நீளமா எழுதிருந்தாலும் ரொம்பவே சுவாரஸ்யமா இருந்துச்சு... பழசுன்னா நினைச்சு நினைவுல நின்னதை அழகா செதுக்கி கண்ணு முன்னால நிறுத்துற அளவுல எழுதிருக்கீங்க...வாரே வாவ்... னு சொல்ல தோணுது... இனி பதிவுகளில் கலக்குங்க... தீவாளி நாங்களும் பழைய நினைவுல நல்லா கொண்டாடினோம்...:)

cheena (சீனா) said...

அன்பின் நண்டு - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

சீனா சார், நடு எண்பதுகளுக்கு, என் தாத்தா பாட்டியுடன் இருந்த காலத்துக்குக் கொண்டு போயிட்டீங்க. நீங்க சொல்லியிருந்ததுல பல விஷயம் எங்க வீட்டிலயும் நடந்திருக்கு.

cheena (சீனா) said...

அன்பின் அவ்ரகள் உண்மைகள் - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் வேல் - சில பால்ய கால நினைவுகள் எத்த்னை ஆண்டுகள் ஆனாலும் மனதிலிருந்து அகலாது - அசை போட்டு ஆனந்தித்து மகிழ்வது இதமாக இருக்கும் - நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ராமலக்ஷ்மி said...

இனிமையான நினைவுகள்.

//சிலைகளின் உயரத்திற்கும் எங்கள் உயரத்திற்கும் சம்பந்தமே இருக்காது. வெண்ணையைத் தூக்கி சிலைகளின் மீது எறிவோம். அது எங்கு வேண்டுமானாலும் இலக்கின்றி பறந்து சென்று அமர்ந்து கொள்ளும். இன்று வரை சரியாக சிலைகளின் மீது எறிந்ததாக சரித்திரம் இல்லை. //

:))!

// மலரும் நினைவுகளாக அசை போட்ட நிகழ்வுகள், திரும்ப இளமைப் பிராயத்திற்குச் செல்லும் வசதி இல்லையே என நினைக்கத் தூண்டுகிறது.//

ஆம், எல்லோருக்கும் இந்த ஏக்கத்தில்தான் வந்து முடிகின்றன மலரும் நினைவுகள்.

cheena (சீனா) said...

அன்பின் விஜய்கோபால்சாமி - நன்று நன்று எல்லார் வீட்டிலும் ந்டப்பது தானே ! கொசு வத்தி சுத்தி மகிழுங்க !

cheena (சீனா) said...

அன்பின் ராமலஷ்மி , மலரும் நினைவுகள் ..... என்ன செய்வது - நினைத்து நினைத்து ஆனந்தப்பட வேண்டியது தான் - வருகைக்கும் கருத்துக்கும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சேலம் தேவா said...

//காசுக்காகவே சும்மா சும்மா காலில் விழுவோம். பரிசுகளோ ஆசிகளோ பெரியவர்களிடம் பெறும் போது காலில் விழுந்து வணங்கும் நல்ல பழக்கம் இன்றும் தொடர்கிறது.//

நீங்க சொன்னதுல நான் நோட் பண்ண விஷயம் இதுதான்...வாழ்த்துகள் அய்யா..!! :)

வெற்றிவேல் said...

எப்போதுமே பண்டிகை என்றால் நம் கிராமத்தில் கொண்டாட்டங்களுக்கு குறைவே இருக்காது! நீங்கள் கூறிய அனைத்து செய்திகளும் இப்போது பலவற்றை நாம் இழந்துவிட்டோம் என நினைக்கும் போது, கொஞ்சம் கசக்கிறது...அழகான கொண்டாட்டங்கள். அனைவரும் அசைபோட வேண்டியது...

Thenammai Lakshmanan said...

தீபாவளி பற்றிய மலரும் நினைவுகள் அருமை சார் . :)

Bdfy said...

betzest casino
casino reloadbet