ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday 15 January 2008

புத்தாண்டு ( தை முதல் தேதி ) சபதம்.

சகோதரி நானானி 2008ம் ஆண்டு சனவரித் திங்கள் ஆறாம் நாள், புத்தாண்டுச் சபதப் பதிவில், என்னைத் தொடர் பதிவிட அழைத்திருந்தார்.
அதன்படி இப்பதிவு சர்வசித்து ஆண்டு தைத்திங்கள் முதல் நாளில் ( புத்தாண்டு இது தான் எனச் சிலர் சொல்கின்றனர்) இடப்படுகிறது.

இது புத்தாண்டுச் சபதமோ பொங்கல் சபதமோ எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். பொதுவாக நான் என்றுமே சபதங்கள் எடுத்ததில்லை. ஏனெனில் அதைப் பற்றி இது வரை சிந்திக்க வில்லை. சில ஆண்டுத் தொடக்கங்களில் சிலவற்றைச் செய்ய வேண்டும் எனவும் சிலவற்றை செய்ய வேண்டாம் எனவும் நினைப்பது உண்டு.

செய்ய வேண்டும் என்பது ஆண்டு முழுவதும் அல்லது வாழ்வு முழுவதும் கடைப் பிடிக்க வேண்டிய செயலாக பொதுவாக இருக்காது.
ஒரு நிகழ்வினை நிகழ்த்த வேண்டும் எனவோ, ஒரு செயலைச் செய்ய வேண்டும் எனவோ, ஒரு முறை செய்யக் கூடிய செயலாகத்தான் இருக்கும். அதை நிச்சயம் முதல் மாதமே செய்து விடுவேன். ஆகவே அதைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை.

செய்ய வேண்டாம் என்பது உடனடியாக நிறுத்தப் பட வேண்டிய செயலாக இருக்கும். அதையும் உடனடியாக நிறுத்தி விடுவேன். அச் செயலை மறுபடியும் செய்ய வேண்டிய கட்டாயம் நிச்சயமாக வராது. தேவை எனில் மறு பரீசீலனைக்குப் பிறகு செய்வேன்.

ஆகவே இந்த சபதம் என்ற சொல்லெல்லாம் எனக்கு ஒத்து வராது. இருப்பினும் சகோதரி கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப சில சபதங்களை எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

மங்களூர் சிவாவின் நண்பர் ரூபஸ் தன்னுடைய பதிவில் ( http://rufezarul.blogspot.com/2008/01/blog-post.html) ( கண்ணாடி) சில சபதங்கள் எடுத்திருந்தார். அப்பதிவினைப் படிக்கும் போது அவர் எடுத்த சபதங்கள் எனக்கும் ஒத்து வரும் போல ஒரு சிந்தனை தோன்றியது. இச்சிந்தனையை அப்பதிவினில் மறு மொழியாகவும் தெரிவித்தேன். அதன்படி அச் சபதங்களையே வாழ்வில் முதன் முறையாக எடுக்க விரும்புகிறேன். கடைப் பிடிக்கவும் ஆசைப் படுகிறேன்.

1. கடன்வாங்கி யாருக்கும் உதவி செய்யக்கூடாது. குறிப்பாக சொந்தக்காரர்களுக்கு. ( இது வரை கையைச் சுட்டுக் கொள்ளவில்லை)

2.போதும் என்ற மனம் சிறந்ததுதான். ஆனாலும் இறைவன் கொடுத்த திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மேன்மேலும் உயரவேண்டும்.
(எனது தற்போதைய உயரம் 165 செ.மீ தான்)

3. அவ்வப்போது தோன்றும் கவிதைகள், கதைகள் மற்றும் சிறுசிறு எண்ணங்களை வலைப்பதிவில் எழுத வேண்டும். ( எதை எழுதினாலும் மறு மொழி தருவதற்கு ஏற்பாடு பண்ணிடலாம்). யார் வேண்டுமானாலும் படிக்கலாம் - அது அவர்கள் ஹெட் லெட்டர்.

4. படிப்பதற்கு சிரமப்படும் மாணவ, மாணவிகளுக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும். ( மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இப்போது அதிகம் வருகிறது)

5. மற்றவர்க்கு விட்டுக் கொடுத்து, மற்றவர் மனமகிழ, நாமும் மகிழ வேண்டும்.

6. 2007ல் மறு மொழிகள் அதிகம் எழுதியாகி விட்டது. பதிவுகள் மிகக் குறைவாகவே எழுதி இருக்கிறேன். இக்குறையை களைய வேண்டும்.

7. தொலைபேசிக் கட்டணம் மாதம் 2000 வருகிறது ( இணையத்தில் அதிக நேரம் செலவிடுவதால்). சக பதிவர், எனது துணைவி, ( வலை மொழியில் தங்கமணி) இது அதிகம் எனவும், குறைக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். கவனிப்போம்.

8. போதாதா ஏழு - சபதமில்லாமல் ஒன்று. துளசி தளம் முழுவதும் படித்து விட வேண்டும்.

பி.கு: சுட்டி கொடுக்கத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தனி மடலில் உதவலாம்.

அப்பாடா - பதிவு போட்டாச்சு. நானானி மற்றும் ரூபஸ் படிக்கணும்.

30 comments:

பாச மலர் / Paasa Malar said...

சபதங்களில் வெற்றி பெற்ற வாழ்த்துகள் சீனா சார்..

cheena (சீனா) said...

நன்றி பாசமலர்

ரூபஸ் said...

சீனா சார், முதலில் உங்களுக்கு எனது தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
எனது கருத்துக்களை ஆதரித்ததற்காகவும், ஏற்றுக்கொண்டதகாகவும் மிக்க நன்றி.
//செய்ய வேண்டாம் என்பது உடனடியாக நிறுத்தப் பட வேண்டிய செயலாக இருக்கும். அதையும் உடனடியாக நிறுத்தி விடுவேன்.//
இதை நான் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
//(எனது தற்போதைய உயரம் 165 செ.மீ தான்)//
உங்களிடமிருந்து இன்னும் வளர்ச்சியை எதிர்பார்க்கிறேன்.
நிறைய பதிவுகள் எழுதுங்கள்..

காட்டாறு said...

சூப்பர் சபதமெல்லாம்... என்னாங்க இது. நம்மாளால இதுமாதிரியெல்லாம் சபதம் எடுக்க முடியாதப்போவ்..

//(எனது தற்போதைய உயரம் 165 செ.மீ தான்)//
சூப்பர்... தமிழ்மணத்துல புகுந்து விளையாடுறீங்கன்னு தெரியுது. ;-)

cheena (சீனா) said...

நன்றி ரூபஸ் = வருகைக்கும் வாழ்த்துக்கும்

cheena (சீனா) said...

காட்டாறு - தங்களின் அணை கட்டாத காட்டாற்று வெள்ளத்தினை ரசிக்கிறேன்.வருகைக்கு நன்றி

கண்மணி/kanmani said...

பார்ப்போம் 2009 தைத் திங்கள் அன்று சீனாசார் கிட்ட கேக்கப் போறேன் எத்தனை தூரம் சபதங்களை கடை பிடிச்சிருக்கீங்கன்னு.

பிஸ்.என்.எல்.டேட்டா1 பிராட்பேண்ட் மோடம் ஃப்ரீ டைப் 2 ஸ்கீம் போடுங்க.180 லோகல் கால்ஸ் ஃபிரீ + 1ஜிபி டவுன் லோடு செய்யலாம்.
மாசம் 500 தான்.வேறு பல ஸ்கீம் இருக்கு.
நேரில் விசாரிக்கவும்.

cheena (சீனா) said...

கண்மணி, 2009 லே கேப்பீங்களா - பயமா இருக்கு - சும்ம சொன்னா உடனே ஃபாலோ பண்றது - அய்யே - வேணாமே - ( இருந்தாலும் MIS - monthly anuppattaa)

அகலக்கற்றை ஆரம்பித்த உடனே, சென்னையில், BSNL அதிக விலை கொடுத்து மோடம் வாங்கினவன் நான். அதற்கான டிரைவர் சிடி கூட அப்பொழுது கிடைக்க வில்லை. ம்ம்ம் அது அந்தக் காலம். இப்போது மதுரை வந்த வுடன் அதே மோடம் தான். முதலில் ஹோம்500 - 3 மாத ஆராய்ச்சியில் அதிகம் எனத் தீர்மானித்து ஹோம்250க்கு மாறினேன். ஒழுங்காகப் போனது. இப்ப வலைப்பூக்கள் பாக்கப் போய் பில் எகிறுது. திரும்ப ஹோம்500க்கு அப்ளை பண்ணிட்டேன். பாக்கலாம்.
தகவலுக்கு நன்றி கண்மணி

ஷைலஜா said...

சபதம்ன்னாலே உறுதிமொழி போலத்தான்..அதை நிறைவேத்த நினைப்பதே சாதனை....உங்களுது எல்லாம் வெற்றி பெறணும் சீனா!

cheena (சீனா) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஷைலஜா

ஜீவி said...

// 2007ல் மறு மொழிகள் அதிகம் எழுதியாகி விட்டது. பதிவுகள் மிகக் குறைவாகவே எழுதி இருக்கிறேன். இக்குறையை களைய வேண்டும்.//

உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.
ஜீவி

மங்களூர் சிவா said...

இந்த கதை எல்லாம் வேண்டாம் தினமும் காலைல 7 மணில இருந்து 8 மணி வரைக்கும் வாக்கிங் போகறதா சபதம் எடுத்துக்கங்க

இது கட்டளை... ட்டளை... டளை... ளை!!

cheena (சீனா) said...

நண்பர் ஜீவி, தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் மிக்க நன்றி. மனம் அடுத்தவர் பதிவுகளைப் படிப்பதில் அதிகம் ஈடுபட்ட காரணத்தால் சொந்தப் பதிவுகள் இட முடியவில்லை. 2008ல் நிச்சயம் பதிவுகளின் எண்ணிக்கையைக் கூட்டுகிறேன். நன்றி

cheena (சீனா) said...

//இந்த கதை எல்லாம் வேண்டாம் தினமும் காலைல 7 மணில இருந்து 8 மணி வரைக்கும் வாக்கிங் போகறதா சபதம் எடுத்துக்கங்க

இது கட்டளை... ட்டளை... டளை... ளை!!//

சிவா, அன்புக் கட்டளையை மீற முடியுமா என்ன . புத்தாண்டு தொடக்கம் முதலே ( தை முதல் தேதி அல்ல - சனவரி முதல் தேதி) காலை 7 மணி முதல் 8 மணி வரை நடைப் பயிற்சி மேற்கொள்கிறேன். நன்றி சிவா கட்டளைக்கு

துளசி கோபால் said...

ஓஓஓஓஒ....இது சிவகாமியின் சபதம் போல 'சீனாவின் சபதம்'

வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.

குறிப்பாக எண் எட்டில் :-)))

கோவி.கண்ணன் said...

//6. 2007ல் மறு மொழிகள் அதிகம் எழுதியாகி விட்டது. பதிவுகள் மிகக் குறைவாகவே எழுதி இருக்கிறேன். இக்குறையை களைய வேண்டும். //

அதிக மறுமொழிகள் எழுதி இருக்கிறீர்கள் என்றால் அதிக பதிவர்களை ஊக்கப்படுத்தி இருக்கிறீர்கள் அவர்களை எழுத்துக்களை கவுரவ படுத்தி இருக்கிறீர்கள் என்றுதான் பொருள்.
:)

இது குறையல்ல நிறை !

சென்னையில் என்ன வேலை செய்து கொண்டிருன்ந்தீர்கள் சென்னை வாழ்க்கை இதைப்பற்றியெல்லாம் சுவாரசியமாக எழுதலாமே.

cheena (சீனா) said...

துளசி, எட்டாம் எண்ணை சீக்கிரம் நிறைவேற்றுகிறேன். நிச்சயம். கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ் - மீஜிக் ?
நன்றி

cheena (சீனா) said...

கண்ணன், வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி கண்ணன். எதையுமே ஆக்க பூர்வமாகச் சிந்திக்கிறீர்கள். உண்மை - அதிகப் பதிவுகளைப் படித்தேன். அதிகம் தெரிந்து கொண்டேன். குறையெனக் கருதியதை நிறையென விளக்கினீர்கள். மிக்க நன்றி

ரசிகன் said...

ஆஹா.. பொதுவாகவே எல்லாருமே கடைப் பிடிக்க வேண்டிய உறுதிமொழிகள்... எல்லாமே.. சூப்பரு.
என்னையும் நம்ம புதுகைத்தென்றல்&ஸ்ரீராம் அண்ணா, பதிவு போட சொல்லியிருக்காங்க..
விரைவில் செய்யனும்..

ரசிகன் said...

//1. கடன்வாங்கி யாருக்கும் உதவி செய்யக்கூடாது. குறிப்பாக சொந்தக்காரர்களுக்கு. ( இது வரை கையைச் சுட்டுக் கொள்ளவில்லை)//

ரொம்ப முக்கியமான விசயம்
தனக்கு மிஞ்சியதுதானே தானமும் தர்மமும்..:)

ரசிகன் said...

//2.போதும் என்ற மனம் சிறந்ததுதான். ஆனாலும் இறைவன் கொடுத்த திறமைகளை நன்றாகப் பயன்படுத்தி மேன்மேலும் உயரவேண்டும்.
(எனது தற்போதைய உயரம் 165 செ.மீ தான்)//

ரொம்பவே ஒவரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்......ஹிஹி.

cheena (சீனா) said...

ரசிகன் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ரசிகன். படித்ததைத் திரும்பப் படிப்பதென்றால் அது பிடித்திருக்கிறதென்று பொருள்.

cheena (சீனா) said...

கடன் கொடுப்பது என்பதே சரியான கொள்கை அல்ல.. அதிலும் கடன் வாங்கி உதவி செய்வது என்பதூ தவிர்கப்படவேண்டிய ஓன்று......

cheena (சீனா) said...

மேன் மேலூம் உயர வேண்டாமா ரசிகன் ??????????

குமரன் (Kumaran) said...

நல்ல சபதங்கள் சீனா ஐயா. ஒவ்வொன்றும் கட்டாயம் நிறைவேறும்.

இனி நிறைய இடுகைகளை இடுங்கள்; சில தேர்ந்தெடுத்த பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டங்கள் இடுங்கள் - படிக்கும் எல்லா பதிவுகளுக்கும் இட வேண்டிய தேவை இல்லை. நான் அப்படித் தான் செய்து கொண்டிருக்கிறேன். நிறைய பதிவுகள் படித்தாலும் எல்லாவற்றிற்கும் பின்னூட்டம் இடுவதில்லை. சிலவற்றிற்குத் தொடர்ந்து இடுவேன்; சிலவற்றிற்கு எழுதப்பட்டதைக் குறித்து சொல்லியே ஆகவேண்டும் என்றிருந்தால் இடுவேன். நீங்கள் சில பதிவுகள் என்று குறித்து வைத்துக் கொண்டால் அதில் என் பதிவுகளும் இருக்கும் என்று நம்புகிறேன். :-) ஆனால் கோவி.கண்ணன் சொன்னதைப் போல் பின்னூட்டம் இட்டால் எழுதியவர்களுக்கு ஒரு தனி மகிழ்ச்சியும் ஊக்கமுமாகவும் இருக்கும் என்பது உண்மையே. பின்னூட்டம் இல்லாவிட்டால் ஒருவர் படித்தாரா இல்லையா என்பதை உறுதியாக அறிந்து கொள்வது எப்படி? நமது நேரம், அடுத்தவருக்கு ஊக்கம் என்று வரும் போது சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய தேவை வந்துவிடுகிறது.

தொலைத்தொடர்பு கட்டணத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும் தான். முடிந்தால் பதிவுகளைக் வெட்டி ஒட்டி இணையத் தொடர்பைத் துண்டித்துவிட்டுப் படியுங்கள். அந்த வகையில் உங்கள் பொழுதும் நன்கு செல்லும்; இணையத் தொடர்பு கட்டணமும் எகிறாது.

துளசி தளம் முழுவதையும் படிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஒரு நல்ல சபதம் தான். ஆயிரக்கணக்கில் இருக்கும் இடுகைகளைப் படித்துப் பார்த்தால் யாரையும் குத்தாமல் குதறாமல் சொல்ல நினைத்ததை எல்லோருக்கும் பிடிக்கும் படி எப்படி சொல்வது என்பதை கற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நானும் அவருடைய தொடர்களை எல்லாம் கூகுள் ரீடரில் இட்டுப் படிக்கிறேன். ஆனால் பின்னூட்டம் இடுவதற்குள் அது பழைய இடுகையாகிவிடுகின்றது. :-)

துளசி தளம் படிக்க நினைத்தது போல் என்னுடைய 'கோதை தமிழ்', 'விஷ்ணு சித்தன்' பதிவுகளையும் முடிந்தால் படித்துப் பார்க்கவும். கோதையின் கதையையும் பெரியாழ்வாரின் கதையையும் சொல்லியிருக்கிறேன். திருப்பாவையையும் பெரியாழ்வாரின் பாசுரங்களையும் சொல்வதற்காக என்று தொடங்கப்பட்ட பதிவுகள் அவை. அபிராமி அந்தாதி நிறைவு பெற்றவுடன் அவற்றைத் தொடரவேண்டும்.

cheena (சீனா) said...

குமர, நீண்டதொரு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி குமரன்.

மறுமொழிகளைப் பற்றிச் சிந்திக்கிறேன்.

துளசி தளம், தங்களின் பதிவுகள் அனைத்தையும் படிக்க முயல்கிறேன். கோதை தமிழ், விஷ்ணு சித்தன் படிக்கிறேன்.

அதிகமாக பதிவுகள் அதுவும் ஆன்மீகப் பதிவுகள் எழுதும் த்ங்களுக்கு நல்வாழ்த்துகள்.

நானானி said...

சகோதரர் சீனா அவர்களுக்கு,
என் வேண்டுகோளை ஏற்று அருமையான சபதங்கள் எடுத்தற்கு என் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். முதலிடண்டும் எங்க வீட்டு ரங்கமணியின் கொள்கை போல் தொனிக்கிறது. ஐந்தாவது என்னுது. ஹாத்வே வலைத்தொடர்பு வாங்கிக்கொண்டால் மூன்று மாதம் ஒரு முறை ஆயிரத்துஐநூறு செலுத்தினால் போதும்..ஆக மாதம் ஐநூறு ரூபாய்தான் செலவு. நல்லாயில்லே? தங்கமணிக்கும் திருப்தி. உங்கள் சபதங்களெல்லாம் சறுக்காமல் நிறைவேற வாழ்த்துக்கள்!! மறுபடியும் நன்றி. உடம்பும் வலைத்தொடர்பும் ஒருசேர சறுக்கியதால் உடன் பதிவிடமுடியவில்லை.

குசும்பன் said...

தாத்தா யாமிருக்க பயம் ஏன் உங்கள் சபதங்களை நீங்கள் நிறைவேற்ற நான் இருக்கிறேன்!

cheena (சீனா) said...

சகோதரி நானானி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொலைபேசிச் செலவு குறைப்போம் - வழி முறைகளை ஆராய்வோம். மீண்டும் நன்றி சகோதரி

cheena (சீனா) said...

குசும்பா, பேராண்டி, நான் நிறைவேற்ற நீ துணையா - சரியாப் போச்சு - நீ சும்மா இருந்தாலே போதும் - நான் நெறெவேத்திடுவேன் -தெரியுதா